மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue


ஒரு காகம் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்திருந்தது. நாள் முழுவதும் அதே கிளையில் ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்தது. ஒரு சிறிய முயல் இந்த காகத்தைப் பார்த்து கேட்டது. ‘நானும் உன்னைப்போல ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கலாமா ? ‘

காகம் பதில் சொன்னது, ‘அதற்கென்ன தாராளமாக உட்கார்ந்திரு ‘

ஆகவே, முயலும் காகத்தின் கீழே, அந்த மரத்தின் வேரின் மீது ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்தது.

திடாரென்று ஒரு நரி அங்கு தோன்றி முயல் மீது தாவி சாப்பிட்டுவிட்டது

***

மேலாண்மையின் முதல் பாடம்:

நாள் முழுவதும் ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்திருக்க வேண்டுமெனில், நீ மிக மிக உயரத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்

***

Series Navigation

செய்தி

செய்தி