மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ்

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

கோச்சா


::: :::

தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலைக்கு ஒரே ஒரு காரணம் தான், ஜி.கே.மூப்பனார் இல்லாதது.
ஏன்…?

காமராஜார் மறைவுக்கு பின் ஸ்தாபன காங்கிரஸின் நிலை தமிழகத்தில் கேள்விக்குறி ஆன போது, நெடுமாறன், சிவாஜி கணேசன், மூப்பனார் ஊர் ஊராக சென்று காங்கிரஸாரின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.

பெரிவாரியான காங்கிரஸார் இந்திரா காங்கிரஸில் இணைவதையே விரும்பினர். மூப்பனாரும் மக்கள் மனநிலை ஒட்டியே முடிவெடுத்தார்.
சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ் இணைப்பு நடந்தது.
அதில், யாருமே எதிர்பாராத நிலையில் இந்திரா காந்தி,

மூப்பனாரை தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக்கினார். தொடர்ந்த நாட்களில் பல மாற்றங்கள்.

மூப்பனாரை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் ( அட்மினிஸ்ட்ரேஷன் ) பதவியில் கொண்டு அமர்த்தியது.
காமராஜர் காலத்திற்கு பின், காங்கிரஸில் பிரதமர்/தலைவர் வசமே , கட்சி அட்மினிஸ்ட்ரேஷன் பொறுப்பு இருந்தது. முதல் முதலாக பிரதமர்/காங் தலைவர் அல்லாமல் , அதுவும், 9 வருடங்கள் அந்தப் பொறுப்பில் அவர் இருந்தார்.

தமிழகத்தில் இவரது நிலைப்பாட்டிற்கு எதிர்நிலை எடுத்தவர்கள், “கொடி பிடிக்கும் தொண்டனே,,,, முடிவெடுக்க வா..” என்று எதுகை மோனை கண்டவர்கள் பின் சில வருடங்களில் இ.காங்கிரஸில் ஐக்கியமானது இவரது தொலைநோக்கு முடிவுத் திறனுக்கு சான்றானது…

சாமர்த்திய சமயோசித நிதர்சன நிலைப்பாடுகள் எடுக்க காரணமாயிருந்தார்.

1971 தேர்தலில் காமராஜர் தலைமையில் 21 சீட்டுகள் கண்டிருந்தது ஸ்தாபன காங்கிரஸ், திமுக 205 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

காமராஜர் இல்லாத காங்கிரஸை மக்களிடம் வெற்றிகரமாக எடுத்துச் செல்லும் நிலைக்கு மூப்பனார் பொறுப்பேற்றிருந்தார்.
ஒரு தேர்தலில், ஜெயகாந்தன், மாலன் போன்ற இலக்கியவாதிகள் காங்கிரஸில் மூப்பனாரால் ஈர்க்கப்பட்டு களப்பணியாற்றினார்கள்.
சங்கீத வித்வானகள், திரையுலகினர், சாமான்யர்கள் அவரை அணுக முடிந்தது.
டில்லியில் அவரது அலுவலகத்திற்கு சென்று உதவி கேட்ட பல தமிழர்கள் அவரது மேன்மையிலும் மென்மை… பரம்பரை பணக்காரராக இருந்தும் கனிவுடன் பணிவு என்ற குணங்களை கண்டு வியந்தார்கள்.
எந்த மனிதர் அறிமுகமும் இன்றி , இண்டர்வியூ வந்திருக்கிறேன்… ஏதாவது செய்யுங்கள் என்றவருக்கு தீன் மூர்த்தி பவனில் வேலை வாங்கித்தந்தார்.
ஜாதி மத இன பாகுபாடின்றி பழகுவது, கம்யூனிஸ்காரர்களிடம் நானும் கம்யூனிஸ்ட் என்று சொல்லாமல், அதே நிலையிலே பாசமுடன் பழகி வந்தார்.
ஒரு வடக்கத்திய பெண், தனது கிஃடாக வைர மோதிரம் கொடுத்ததை, சிரிந்தபடி புறந்தள்ளிய நிகழ்வை விகடன் குழும பத்திரிக்கை எழுதியது…

இந்திராவின் துர்மரணம் பின் எழுந்த அசாதரண சூழலில், ராஜீவ் வந்தார். மூப்பனார் முதல் மாலை போடுதலை இண்டியன் நீயூஸ் ரிவ்யூ காண்பித்தது.
மற்றவர்கள் தயங்கிய போது, இலங்கைத் தமிழர்களின் அனைத்து இயங்கங்களும் சம்மதிக்காத போது ஒப்பந்தம் வேண்டாம் என்று சொன்னார்.

” மூப்பன் ” என்று இவரது ஊர்க்கார தலைவர் எள்ளி நகையாடியபோது, இவருக்கு வந்த ஒரு அதீத வாய்ப்பிற்கு அவரே இடராக இருந்த போது, தனது மன அதிர்வுகளை காட்டாமல் கட்சி நலனிற்காக அதே தலைவருடன் ஒரு தேர்தலில் மக்களின் மனநிலை பிரதிபலிப்பாக கூட்டணி கண்டார். வென்றார்.

காங்கிரஸ்-அதிமுக மாறாத நட்பு என்ற நிலை இருந்த போது, தமிழகத்தில் மக்கள் அதிமுக எதிராக திரண்டு எழுந்த போது, ரஜினி ,மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் ஊர் ஊராக சென்று வேலை பார்ப்பேன் என்றதையும் புற்ந்தள்ளி ராவ் அதிமுக கூட்டு என்றவுடன், தோன்றியது தமாகா.
வென்றது வரலாறு.
அந்த தேர்தலில் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கடைசி நேரத்தில் வெளிசென்றார்.தோற்றார்…

காங்கிரஸில் மூப்பனார் ஒருவர் தான் மக்கள் மனநிலை பிரதிபலிக்கும் தலைவர் என்று புரிந்தது.

அதே நேரம் அடுத்த தேர்தலில், மக்கள் மனநிலை மருண்டு கிடந்த போது, பல விமர்சனங்களைப் புறந்தள்ளி மக்களுக்கு சாதகமாக இல்லை என்று அதிமுகவுடன் கூட்டணி கண்டார்.
வென்றது வரலாறு.
அந்த தேர்தலில் ப.சிதம்பரம் தமாகா விட்டு வெளி சென்றார். ஜனநாயக பேரவை என்று அமைத்தார். சன் டிவியில் மக்கள் வெள்ளம்வெள்ளமாக தனது இயக்கத்தில் இணைகின்றனர்… ஊருக்கு 7பேர் இணைந்து அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன… என்றெல்லாம் சென்னார்….. அப்படி எதுவும் இல்லை…. முடிவுகளில்… தோற்றார்….

மீண்டும் மூப்பனார் ஒருவரே சரியான முடிவெடுக்கும் தலைவர் என்று தெளிவானது….

மூப்பனாருக்கு பலரிடம், கட்சிக்காரர்கள் தாண்டி கலந்து பேசும் விசால மனது இருந்தது.
அவர் பத்திரிக்கைகாரர்களின் கருத்துக்களை கேட்டறிதல், கடைநிலை தொண்டனிடம் கட்சி பற்றி கேட்பது என்ற அற்புத குணம் இருந்தது.
அதுவும், ஒரு நிலைப்பாட்டுடன் முழு நேர அரசியல் பத்திரிக்கையை நேர்மையுடன் நடத்தும் சோ மேல் அபரிதமான மரியாதை இருந்தது.
எந்த திமுக விற்கு எட்டிக்காயாய் சோ இருந்தாரோ அதே திமுக சோவிற்கு அதன் கட்சி அலுவலகத்தில் மூப்பனார் தூதுவராக வரவேற்பு கிடைத்தது….

ஆனால், இப்போது இருக்கும் காங்கிரஸ்காரர் யாருமே சோ போன்றோரின் கருத்துக்களை கேட்டறியவில்லை..
ஏதோ 1+2+3=வெற்றி… என்று நினைத்து, காங்கிரஸிற்காக ஒரு மூளை சலவை செய்யப்பட்ட வாக்கு வங்கி இருப்பதாக கணக்கு போட்டனர்.

அது தான் அடிப்படை தவறு. அய்யர்கள் திமுகவிற்கு 1996-ல் போட்டது ஏன் என்று மறந்தார்கள். அது காங்கிரஸிடன் வைத்த கூட்டால் அல்ல… நிலைப்பாட்டால்….

படித்தவர்கள், இளைஞர்கள் அதிகவிற்கு போட மாட்டார்கள் என்றார்கள். அப்ப ஜேசிடி பிரபாகரன், மாஃபா தலைவர் இவர்கள் எல்லாம் என்ன ஒண்ணாங்கிளாஸ் பெயிலா…?
இதே ஜே சி டி பிரபாகரன் தமாகா நாட்களில் மூப்பனாருடன் இருந்தவர்.

வடசென்னை பொக்கிஷம் என்று திமுகவால் நினைக்கப்பட்ட சேகர்பாபு தோற்றது , தமாகா வில் இருந்த மூப்பனார் தளபதிகளில் ஒருவரான வெற்றிவேல் என்பவரால்…

தனியாக நின்றாலே ஜெயிப்பார் , பெரும் செல்வாக்கு என்று பிஜேபி யில் இருந்து அழைத்து வரப்பட்ட திருநாவுக்கரசர் தோற்றது ஏன்…?

அதிலும், ஊழலை ஒழிக்கப் போகிறோம், வாரிசு அரசியல் ஒழிக என்று நடைபாதை கண்ட, முன்னாள் பிரபல அரசியல் தலைவரின் வாரிசான இளைஞர் காங் தலைவர் திமுக அணியில் வேட்பாளர் ஆனதை மக்கள் ஆரத்தி எடுப்பார்கள் என்று நினைத்தார்கள்.
யார் யாரோ வேட்பாளர்கள்….
அதுவும் கட்சியில் உருட்டிக்கொண்டு இருக்கும் ஷோக்கு பார்ட்டிகள் தான் அதிகம்.

ஜீவி போன்ற தரமான, மக்களை இன்புளியன்ஸ் செய்யக்கூடிய (அதுவும் ஜீவிக்கென்று ஓட்டு வங்கியே உண்டு ) , சோ போன்று தர்மநிலை கோட்பாட்டுடன் பேசுபவர்கள், ஆட்சி மாறனும் என்கிறார்கள்…

இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை, காங்கிரஸ்.

ஆனால், மூப்பனார், கலைஞர் இருவரையும் சமமாக நினைத்து அவர்கள் தலைமையில் திருமணம் கண்டவர் கண்ணுற்றார்.

மூப்பனார் பாணியில் உறவுகள், பிரச்சனைகளை கையாளும் பாணி , எம் ஜி ஆரின் சில அணுகுமுறைகள் என்று தன்னை தயார்படுத்தி கொண்டும், பண்ருட்டி ராமசந்திரன் போன்ற விவரமாக முடிவெடுக்கும் ஆலோசகர் துணை கொண்டும் இருந்த விஜயகாந்த் , காங்கிரஸ் இழு இழுவென்று இழுப்பதை தாங்காமல் அதிமுகவுடன் கூட்டணி கண்டார்.

காட்சிகள் மாறியது…. கூட்டணி வலுவு புரிந்தவுடன், ஜெ நிமிர்ந்தார். கட்சிகள் அடங்கின….

வை கோ புறந்தள்ளப்பட்டார். வைகோவின் அளவறாத அன்பு நிலைக்கு தனது சகோதரனாக அவரை விமர்சனம் செய்யாமல் பிரிந்தார்.
ஆனால் வைகோ அவசரப்பட்டு ஜெவிற்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இன்று, வைகோ இல்லாத வெற்றி, வேறு ஒரு பரிமாணத்தை தருகிறது.
இந்திய தேசிய இறையான்மை பற்றிற்கு ஜெ என்றும் உறுதுணை என்றானது.
இதோ, சேனியாவிடமிருந்து பிரத்யேக தொலைபேசி…
மத்திய அரசுடன் ஜெயும் பல காரணங்களுக்காக இணக்கமாவார்.

வெற்றிக்கு கருணாநிதி அரசின் & குடும்ப நிலையும், ஜெ தான் மாற்று என்று மக்கள் நினைப்பதும் தான் என்றானது.
இது ஜெ எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் தோள் கொடுக்கும் நிலை..

ஆனால் , காங்கிரஸ் 5 இடங்கள்.
இதன் காரணம் காங்கிரஸ் எடுத்த நிலையே… அன்றி வேறெதும் இல்லை….
சில கேள்விகள்:
– பரபரப்பாக தமிழக முழுதும் வந்த ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் அமைப்பை பரப்பி ஒரு பரபரப்பை மட்டும் ஏற்படுத்தி அப்படியே அமைதியானது ஏன்…?
– திமுகவின் ஊழல் என்று பாதயாத்திரை கண்ட யுவராஜா, பின் திமுகவுடனே கூட்டணி என்றால் மக்கள் ஓட்டுபோடுவார்கள் என்று எப்படி நினைத்தார்…
– வாசன், ஈவிகே எஸ் போன்றோர் ஒதுக்கப்பட்டது ஏன்…?
– 60,61,63 என்றதும், திமுக அறிக்கைகளும், 2ஜி ஊழல் செய்யப்பட்டுள்ளது, அதை மறைக்க காங்கிரஸ் மிரட்டி சீட் கேட்கிறது என்று மக்கள் மனதில் பதிய பதிய அதுவே எதிராக வெறுப்பாக மாறுகிறது என்ற உண்மை ஒருத்தருக்கு கூடவா தெரியவில்லை… காங்கிரஸில்….
– யார் யாரோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ஏன்…? கட்சி மக்கள் இயக்கமல்ல, அது சில பேரின் கட்டளைகள் நிறைவேற்றப்பட ஒரு வழிமுறை என்றானது ஏன்…?

இதெற்கெல்லாம் ஒரே பதில், மூப்பனார் இல்லாததும்… மூப்பனார் போன்ற மனநிலை கொண்டோர் தோன்றாததும் தான்….

ஒரளவிற்கு ஈவிகே எஸ் இளங்கோவன் மக்கள் மனநிலையை பிரதிபலித்தார்….
மத்திய அமைச்சராக மட்டும் இருப்பதாலோ என்னவோ, வாசன் மக்கள் மனநிலைக்காக கட்சியுடன் போராடவில்லை….

மூப்பனார் இல்லாத தமிழக காங்கிரஸ் கானல்நீராக மாறுகிறது.

விஜயகாந்தை தனது அமைப்பில் உள்ள தவறுகளை களைதல், சரத்குமார் தனது பலம் புத்திசாலித்தனம் புரிந்து இயக்கம் விரித்தல், மாறா கம்யூ வாக்கு வங்கி மற்றும் காங்கிரஸிடன் அவர்கள் கூடமுடயாத நிலை… திருமா கட்சியின் முழுத்தோல்வியும் கிருஷ்ணசாமியின் வெற்றியும்.. என்று பல தமிழக விஷயங்கள் உள்ளன ….

இவர்கள் எல்லோரும் மூப்பனாருடன் கலந்து இருந்தவரகள் தான்….. ஆனால் இன்று இவர்களுக்கு காங்கிரஸிடன் எப்படி கலந்து இயங்குவது என்பதே புதிராக இருக்கிறது…
இதையும் காங்கிரஸ் சரி செய்ய வேண்டும்….

தற்போதைய தேவை, முதலில், ராகுல்காந்தி இளைஞர் காங்கிரஸ் தாண்டி அனைத்து பகுதியினரையும் இயங்க விட வேண்டும்.

ராகுல்காந்தி தனக்கு தேவையான பதிலை தருபவர்களை நம்புவதை விட, கசந்தாலும் கிடைக்கும் பதில்களிலிருந்து தனக்கு தேவையானவற்றை அடைவதற்கான வழிமுறைகள் கண்டு திட்டவடிவு கொண்டு செயல்பட்டால் நிச்சயம் காங்கிரஸிற்கு விடிவு உண்டு. தவறினால் உதய சூரியன் நாளை கிழக்கு கண்டாலும், கை விடப்பட்டது காங்கிரஸ் மட்டுமாக இருக்கும்……

மூப்பனாரின் தமிழ்மாநில காங்கிரஸில் இருந்தவர்களுக்கு ஒரு கேள்வி::: நீங்கள் காங்கிரசுடன் இணைத்தது தமிழ் மாநில காங்கிரஸை மட்டும் தானா…? அவர் உயிராய் நினைத்த தன்மானமும், ”வளமான தமிழகம் வலிமையான பாரதம்” – என்பது எங்கு போனது…?

இவண்:
காங்கிரஸ் அபிமானமுள்ள இந்தியத் தமிழன்.

Series Navigation

கோச்சா

கோச்சா