முத்தம் போதும்

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

தியாகு



நீ வந்து சென்றதாலெயே
தலைகுனிந்த பூக்கள்
நிறைந்ததாய்
மாறிய காடு!
அன்னங்கள் எல்லாம்
பறக்க துவங்கின
நடைக்கும் உரிமை
உனக்கென சொல்லி!
நகைப்பதை நிறுத்தடி
நட்சத்திரங்கள்
சிதறி சில விபத்துகள்
நடக்கலாம்
வேல் விழி காயத்துக்கு
மருந்தில்லை எனவே
ஆயுத ஒழிப்பை
ஆதரிக்கலானேன்.
மொத்தமாய் தர உன்னை
வற்புறுத்த மாட்டேன் -ஒரு
முத்தம் போதும்
முகத்துடன் பிறந்த
நோக்கம் சிறக்க!
“தியாகு”

seewtypie2000@gmail.com

Series Navigation

தியாகு

தியாகு