முட்டை சமைக்க சில வழிகள்

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue


சமைக்கத் தெரியாதவர்கள் கூட முட்டை சமைப்பதை எளிதாகச் செய்கிறார்கள். இருந்தும் சில உபாயங்களை செய்வதன் மூலம் முட்டையை நல்ல முறையில் சமைக்கலாம்

1) முட்டை வேக வைக்கும் முறை

தண்ணீரில் வேக வைக்கும் போது சுமார் பத்து நிமிடம் வரை மட்டுமே கொதியில் வைத்திருங்கள். அதன் பின்னர் தண்ணீர் கொதிப்பதை நிறுத்திவிட்டு, அந்த தண்ணீர் சூட்டில் மட்டும் வைத்திருப்பதாலேயே முட்டை நன்றாக வெந்துவிடும்.

உள்ளே வெள்ளைக்கருவுக்கும் மஞ்சள் கருவுக்கும் இடையே கருப்பு படிவம் வராமல் முட்டை வேகவைப்பதே நல்ல முறை.

2) முட்டை பொறியல்

முட்டைப் பொறியல் செய்யும்போது வாணலியில் சிறிதளவு நெய் விட்டு (எண்ணெய் அல்ல) சூடாக்கி அதில் பொறியுங்கள். அதிகம் நாறாது.

செய்முறை:

2 முட்டைகள்

1 வெங்காயம் சிறுதுண்டுகளாக அரிந்தது

2 பச்சை மிளகாய் சிறு துண்டுகளாக அரிந்தது

சிறு கொத்து கொத்தமல்லி இலைகள், இரண்டு கறிவேப்பிலை இலைகள்

சிறிதளவு தேங்காய்த்தூள்

உப்பு தேவையான அளவு (அரை தேக்கரண்டி)

ஒரு வாணலியில் நெய்விட்டு சிறிதளவு காய்ந்ததும், அதில் வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு உப்பு போட்டு வதக்கவும்.

இதில் முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு கரண்டி கொண்டு பிரட்டி பிரட்டி கிளறவும்.

தீயைக் குறைத்துவிட்டு அதில் தேங்காய்த் தூளைப் போட்டு மெல்லிய தீயில் கிளறிக்கொண்டிருந்தால் சிறு சிறு துண்டங்களாக வரும் போது நன்றாக வெந்துவிட்டது தெரிந்ததும் இறக்கி பரிமாறவும்.

3) முட்டை ஆம்லெட்

தேவையான பொருட்கள் மேற்கண்டவை

ஒரு சிறு கிண்ணத்தில் மேற்கண்ட பொருட்களைப் போட்டு, அதில் முட்டைகளை உடைத்து ஊற்றிக் கிளறி சேர்க்கவும்.

ஒரு தோசைக்கல்லில் நெய் தடவி காயவைத்து அதில் சிறு தோசை போல முட்டை கலவையை ஊற்றவும்.

ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வேகவைக்கவும்.

வேவதற்காக ஓரங்களிலும் நடுவிலும் சிறிதளவு நெய் ஊற்றி, மெல்லிய தீயில் வேகவைக்கவும்,

( முட்டை கொஞ்சம் அதிக தீயில் வேகவைத்தாலும் நன்றாக இராது)

Series Navigation

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை

(இருவருக்கு தேவையான அளவு)

முதல் வகை