மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

ஜி வி ஜோஷி


டைம்ளர் க்ரைஸ்லர் நிறுவனத்தின் இந்திய பகுதித் தலைவரான ஹான்ஸ் மைக்கல் ஹூபர் அவர்கள் இரண்டு மெர்ஸிடஸ் பென்ஸ் கார்கள் மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயைக்கொண்டு 3000 கிலோமீட்டர்கள் சிறப்பாக ஓடியிருக்கின்றன என்று தெரிவித்தார்.

புனே நகரில் ஆரம்பித்து பெங்களூர் கொச்சி கோயம்புத்தூர் சென்னை வழியாக ஹைதராபாத் வரும் இந்த கார்கள் சாதாரண டாஸல் எண்ணெயில் ஓடுவது போலவே ஓடுகின்றன என்று தெரிவித்தார். மேலும் ஆராய்ச்சிகள் நடக்க இருக்கின்றன.

இந்த கார்களில் சில மாற்றங்கள், உதாரணமாக பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பகுதிகளில் செய்யப்பட்டிருக்கின்றன. இது Council of Scientific and Industrial Research (CSIR) and the University of Hohenheim (Germany) என்ற இரண்டு நிறுவனங்கள் உதவியுடன் நடக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடாத ஒரு எரிபொருளைக் கண்டறியும் ஆர்வத்தின் காரணமாய் இந்த ஆராய்ச்சி நடக்கிறது.

டைம்ளர் கிரைஸ்லர் நிறுவனமும் ஒரு தனியார்- அரசு கூட்டு நிறுவனத்தை உருவாக்கி இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருளை உருவாக்கவும் வினியோகிக்கவும் முனைவுடன் இருக்கிறது.

துவர் நிலங்களில் மலை ஆமணக்கு பயிரை நட்டு அதிலிருந்து பயோடாஸல் என்ற இந்த எரிபொருளை உருவாக்கி இதனை உள்ளெரிபொருள் இயந்திரங்களில் (internal combustion engine) உபயோகப்படுத்த இந்த ஆராய்ச்சி நடக்கிறது. இதன் மூலம் அதிகமான வேலை வாய்ப்புக்களையும், டாஸலிருந்து குறைவான அளவில் வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவையும் எதிர்பார்க்கலாம்

இந்த ஐந்துவருட ஆராய்ச்சி பல தரப்பட்ட தலைப்புக்களில் நடக்கிறது. மலை ஆமணக்கு எண்ணெயை பயோடாஸலாக மாற்றுவது, இது காருக்கு உகந்த எரிபொருளாக நிலைப்பு இருக்குமா என ஆராய்வது, கார்பன் டை ஆக்சைடை பயிர்களில் இறுக்குவது, இந்த முறையிலிருந்து உருவாக்கும் உபரிப்பொருள்கள் உபயோகம், இந்த உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவை.

இந்த மலை ஆமணக்கு பயிர் வளர்வது மண் அரிப்பை கட்டுப்படுத்துகிறது. இந்த பயிரின் வேர்கள் காற்று மழை மூலம் மண் அரிப்பு நடப்பதை தடுக்கின்றன. இந்த எண்ணெயை உருவாக்கும் போது கிடைக்கும் உபரிப்பொருள் சிறப்பான தாவர உரமாக மண்ணின் வளத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

இந்த திட்டம் இந்தியாவின் புஞ்சை நிலங்களைப் பயன்படுத்த சரியான மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிறப்பாக இருப்பின் வெளிநாடுகளுக்கும் இந்த தொழில்நுட்பம் ஏற்றுமதி செய்யப்படலாம்.

மலை ஆமணக்கிலிருந்து லிருந்து கிடைக்கும் பயோடாஸல் சிறப்பான எரிகுணம் கொண்டதாக இருக்கிறது. இதில் சல்பர் இல்லாமல் இதர உபரி கனிமங்கள் இல்லாமல் சுத்தமாக எரியும் எரிபொருளாக இருக்கிறது.

இந்திய அரசாங்கம் உள்நாட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஒரு எரிபொருளை உற்பத்தி செய்வதிலும், அது சுற்9றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறது. ஆமணக்கு தாவரம் இந்தியாவில் பல இடங்களில் காட்டுச்செடியாக விளைகிறது. இது உபயோகமற்ற உவர் நிலங்களிலும் நன்றாக வளர்கிறது. இரண்டு அல்லது 5 வருடங்களில் மிகக்குறைந்த அளவு உழைப்பிலேயே விதைகள் அதிகமாக கிடைக்கும் அளவுக்கு வளர்கிறது. இதன் கொட்டைகளில் சுமார் 60 சதவீதம் எண்ணெய் இருக்கிறது. இதில் இருக்கும் எண்ணெயை பயோடாஸலாக esterification முறை கொண்டு தயாரிக்கலாம்.

இந்த தாவரத்தின் வேறு வகை அதிக விளைச்சல் தாவரங்களை மெக்ஸிகோ மற்றும் ஆப்பிரிக்க நாடான மாலி-யில் ஹோஹென்ஹைம் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இவை தற்போது இந்தியாவில் உருவாக்கப்படுகின்றன. இவைகளை வெட்டி தோட்டங்களில் பயிர் செய்யலாம். புதிய ஆமணக்கு தாவரங்கள் வெட்டி பயிர் செய்யும் முறையில் உருவாக்கலாம்.

ஒரிஸ்ஸாவில் 20 ஹெக்டேர் பரப்பில் ஆமணக்கு தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தோட்டம் இந்தியாவின் மிக அதிகமாக தொழில் வளர்ச்சி பெற்ற குஜராத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு புஞ்சை நிலத்தில் 10 ஹெக்டேர் நிலத்தில் இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மலை ஆமணக்கு எண்ணெய் ஆஸ்திரியா நிகராகுவா ஆகிய நாடுகளில் டாஸலுக்குமாற்றாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை இந்தியாவின் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கி பரிசோதித்துப் பார்ப்பதே இந்த ஆராய்ச்சி.

டெல்லி இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, டெஹ்ராடூனில் இருக்கும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பெட்ரோலியம், பஞ்சாப் அக்ரிகல்சுரல் யூனிவர்ஸிடி ஆகியவற்றில் செய்யப்பட்ட பரிசோதனைகள் வெற்றி என அறிவித்துள்ளன.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸயன்ஸ் பெங்களூர், தினசரி ஒரு டன் பயோடாஸல் உருவாக்கும் ஒரு தொழிற்சாலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

மலை ஆமணக்கு தோட்டங்களுக்கு சராசரி 45 வருட வாழ்க்கை இருக்கிறது. நாடு தன்னுடைய அன்னியச்செலாவணியை இந்த எண்ணெய் மூலம் குறைக்கலாம் என்பது ஒரு உதவி. மற்றொரு உதவி இதன் மூலம் ஏராளமான கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

ஏராளமான வறண்ட நிலங்களுக்கு பச்சை போர்வையும் கிடைக்கும். ஆமணக்கு ஒரு கடினமான பயிர். இது எந்த ஒரு நிலத்திலும் நன்கு வளரக்கூடிய தாவரம். வெகு வேகமாக வளர்கிறது. இது மிகக்குறைந்த அளவு உழைப்பையே கோருகிறது. மிக மோசமான வறட்சியின் போதும் பஞ்சத்தின் போதும்கூட மிருகங்கள் இதனை உண்பதில்லை.

தமிழ்நாடு விவசாயப்பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டான் ஆக இருக்கும் டாக்டர் ஈ வடிவேல் இது போன்ற தாவர டாஸல் மற்றும் கிராம வேலைவாய்ப்பு பாதுகாப்பு துறைகளில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர். இவர் ஆமணக்கு தாவரத்தில் கடந்த பல வருடங்களாக ஆராய்ச்சி செய்துவருகிறார்.

இவரே இந்த தாவரத்திலிருந்து எண்ணெய் எடுப்பதையும் அதனை சுத்தமான எரிபொருளாக்கும் தொழில்நுட்பத்தையும் துல்லியமாக்கி இருக்கிறார். இவர் இந்த எண்ணெயை பல இயந்திரங்களில் எரிபொருளாகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஆராய்ந்திருக்கிறார்.

மலை ஆமணக்கு தாவரம் ரத்தன் கோட், பார்ஸி காஸ்டர், மொகல் காஸ்டர், சந்த்ரஜ்யோத், சந்திரகோடா, பாகிஎராண்ட் ஜமால்கோட்டா ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இதன் பழங்கள் கொட்டைப்பாக்கு அளவுக்குப் பெரியவை. இதற்குள் 3 அல்லது 4 விதைகள் இருக்கும். இவை டிஸம்பர் ஜனவரியில் காய ஆரம்பிக்கும். அப்போது இவை பிய்க்கப்பட்டு காயவைத்து தோலுரிக்கப்படுகின்றன. இதன் விதைகள் மிகவும் வழவழப்பான எண்ணெயைக்கொண்டிருக்கும். இதில்மிகவும் குறைவான அளவு விஷம் இருக்கிறது. அதுவே வயிற்றை சுத்தம் செய்யும் குணத்தை விளக்கெண்ணெய்க்கு வழங்குகிறது.

ஆகவே இந்த எண்ணெயைக்கொண்டு உண்ண உபயோகப்படுத்த முடியாது. இதனில் இருக்கும் விஷத்தை எடுக்கும் பல வழிகள் இருக்கின்றன. பிரேஸிலில் இருக்கும் சில தோட்டங்களில் விஷமற்ற ஆமணக்கு தயாரிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனர்கள் விளக்கெண்ணெயிலிருந்து வார்னீஷ் தயாரிக்கிறார்கள். இங்கிலாந்தில் இது கம்பளி சுற்றும் இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் விளக்கெண்ணெயை மாட்டுவண்டிகளின் அச்சில் வழவழப்பு தரவும் மற்ற இதர விவசாயப்பொருட்களிலும் பயன்படுத்துகிறார்கள்.

மலை ஆமணக்குப் புண்ணாக்கு மிகவும் சிறப்பான உரமாக பயன்படுத்தப்படுகிறது. மிக அதிகமான அளவில் இது உருவாக்கப்பட்டால் இறக்குமதி செய்யப்படும் உரங்களிலிருந்து ஓரளவு விடுதலையை விவசாயிக்கு வழங்கலாம்.

3 வருடத்தில் இது 3 மீட்டர்கள் ஆமணக்குச் செடி வளர்கிறது. மணல் மற்றும் கல் உவர் நிலங்களில் கூட இந்த தாவரம் வளமையாக வளர்கிறது. இதனை வேலியாகக் கூட வளர்க்கிறார்கள்.

காய்ந்த சூழ்நிலை இதில் மிக அதிக அளவு எண்ணெய் இருக்க உதவுகிறது. ஒரு மாதத்தில் 3 அல்லது 4 முறை கோடையில் பாசனம் செய்வது நன்றாக வளர உதவுகிறது.

கோடையில் இதன் இலைகளில் மெழுகு போன்ற படிவம் தோன்றி அதிக தண்ணீரை இழக்காமல் பார்த்துக்கொள்கிறது. மிக அதிகமான வறட்சியைக்கூட இந்த செடிகள் தாங்கும்.

பயோடாஸல் தயாரிக்கும் போது கிடைக்கும் உபரிப்பொருளான கிளிசரின் சோப்புகள் தயாரிக்கவும் உதவுகிறது.

—-

Series Navigation

ஜி வி ஜோஷி

ஜி வி ஜோஷி