அறிவிப்பு
—-
இலக்கியத்தின்பால் ஆர்வமும் நேசமும் மிக்க நெஞ்சங்களால் நடத்தப்படும் இணையக் குழுமம் மரத்தடி. மனிதர்களை ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.
வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, ‘மரத்தடி ஆண்டு விழா – 2004 ‘ போட்டிகளை அறிவிக்கிறோம். இந்தப் போட்டி நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது:
1. சிறுகதை
2. கட்டுரை
3. மரபுக்கவிதை
4. புதுக்கவிதை
ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள், இந்திய ரூபாயில் வழங்க உள்ளோம்.
முதல் பரிசு ரூ. 2500
இரண்டாம் பரிசு ரூ. 1000
மூன்றாம் பரிசு ரூ. 500
ஒவ்வொரு போட்டிக்கும் பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஒரு நடுவர் என நான்கு நடுவர்கள் இசைந்துள்ளனர்.
அவர்கள்:
எஸ். ராமகிருஷ்ணன் – சிறுகதை
ஸ்ரீதரன் – கட்டுரை
இலந்தை ராமசாமி – மரபுக்கவிதை
மனுஷ்யபுத்திரன் – புதுக்கவிதை
போட்டி விதிகள்:
—-
1. மரத்தடி யாஹூ குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும். மரத்தடி யாஹூ குழுமத்தில் இதுவரை உறுப்பினராக இல்லாதவர்கள், போட்டியின் இறுதிநாளுக்குள் (செப்டெம்பெர் 4, 2004) உறுப்பினராகி, போட்டியில் கலந்து கொள்ளலாம் (http://groups.yahoo.com/group/maraththadi). மரத்தடியின் உறுப்பினர்கள் அல்லாதவர்களின் படைப்புகள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டா.
2. பரிசுகள் காசோலைகளாக அனுப்பப்படும் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களை குழுமத்தின் மட்டுறுத்துனரிடமோ அல்லது போட்டி ஒருங்கிணைப்பாளரிடமோ தரத் தயாராக இருக்கவேண்டும்.
3. போட்டிக்கு அனுப்பப்படும் எந்த ஒரு படைப்பையும் போட்டியின் முடிவுகள் தெரியும்வரை படைப்பாளிகள் வேறெங்கும் (இணையக் குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) பிரசுரிக்க அனுப்பக்கூடாது. படைப்புகள் மரத்தடி.காம் இணையதளத்தில்(http://www.maraththadi.com) பிரசுரிக்கப்படும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வேறு இடங்களில் பிரசுரிக்க படைப்பாளிகள் விரும்பினால் அனுப்பலாம்.
4. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் ஆசிரியரின் சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும்; மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருக்கக்கூடாது.
5. படைப்புகள் போட்டிக்காகவென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்; ஏற்கனவே பிரசுரமான (இணையக்குழுக்கள், வலைப்பதிவுகள் உள்ளிட்ட இடங்களில்) படைப்புகளை அனுப்பக் கூடாது.
6. கட்டுரைகள் எந்தத் தலைப்பிலும் இருக்கலாம். கட்டுரைகள் 10,000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
7. படைப்புகள் திஸ்கி எழுத்துருவில் இருக்கவேண்டும். (எழுத்துருவில் சந்தேகங்கள், பிரச்சினைகள் உள்ளவர்கள்
m_meenaks (@) yahoo.com, iyappan_k (@) yahoo.com என்கிற மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்புகொள்ளவும்.)
8. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் கீழே குறிப்பிட்டுள்ளவாறு தலைப்பை(Subject line) அமைத்து,
முழு படைப்பையும் ஒரே மடலில் மரத்தடிக் குழுமத்தில் பொதுவில் இடப்பட வேண்டும்.
aanduvizha pOtti-2004 siRukathai –
aanduvizha pOtti-2004 katturai –
aanduvizha pOtti-2004 marabukkavithai –
aanduvizha pOtti-2004 puthukkavithai –
9. போட்டிக்கான படைப்பு என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.
10. படைப்புகளைப் போட்டிக்கென மரத்தடிக் குழுமத்தில் பொதுவில் இட்ட பின்னர் அதைத் திருத்தம் செய்து மீண்டும் உள்ளிடவோ அல்லது முதலில் உள்ளிட்ட படைப்புகளுக்குப் பதிலாக வேறு படைப்புகளை உள்ளிடுவது அனுமதிக்கப்பட மாட்டாது.
11. ஒருவரே எல்லாப் பிரிவுப் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப இயலும்.
12. போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: செப்டம்பர் 04, 2004 11:59 PM EST.
13. கடைசித் தேதிக்குப் பின்னர் வரும் படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டா.
14. போட்டி விதிகளைக் குறித்து ஒருங்கிணைப்பாளரின் கருத்தும், பரிசுக்குரியனவற்றைக் குறித்து நடுவரின் கருத்துமே இறுதியானவை.
15. போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவரின் குடும்பத்தினர் போட்டியில் பங்கேற்க இயலாது.
16. மரத்தடி குழுமத்தின் மட்டுறுத்துனர்களும், உரிமையாளரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
17. போட்டி முடிவுகள் செப்டம்பர் 30, 2004 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும்.
18. மேலும் விவரங்களுக்கு vizha@maraththadi.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள்
மேற்கண்ட விதிகளுடன் மரபுக்கவிதைக்கான சிறப்பு விதிகள்:
—-
1. மரபில் எந்த வகை யாப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
2. வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற இறுக்கமான வகைகள் என்றால், தளை தட்டாமலும், இலக்கண விதிகளை மீறாமலும் இருப்பது அவசியம். மரத்தடிக் குழுமம் இளைஞர்களையும் மரபில் அதிகம் பயிற்சி இல்லாத கவிஞர்களையும் கொண்டது என்பதனால் நடுவரின் கருத்துக்கிசைய சில விலக்குகள் பரிசீலிக்கப்படலாம்.
3. விருத்தங்கள், சிந்து போன்ற சந்தத்தால் இயங்கும் பா வகைகளில் சந்தம் தட்டாமல் இருப்பது நலம். ஒன்றிரண்டு இடங்களில் தவறியிருந்தாலும், நடுவர் கருத்தில் ஏற்கத் தக்கவையாயின் அவற்றை ஏற்கத் தடையில்லை. நடுவரின் கருத்தே இறுதியானது.
4. இயற்றுவதற்கு மிக எளிதான ஆசிரியப் பாக்களிலும் கவிதைகளை அனுப்பலாம்.
5. கருத்தாழம், நடையழகு, எடுத்துச் சொல்லும் விதம், உணர்வுகளின் வெளிப்பாடு போன்ற சிறப்புகளை வைத்தே பரிசுகள் தீர்மானிக்கப்படும். ஆகையால், கருத்தின் வெளிப்பாட்டிலும், சொல்ல வேண்டிய கருத்தைத் தெளிவாகப் புலப்படும்படியாக எடுத்து வைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
வளர்ந்து வருகிற, புதுமுக எழுத்தாளர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இங்கனம்,
நம்பி (ஒருங்கிணைப்பாளர், மரத்தடி ஆண்டுவிழா இலக்கியப் போட்டி 2004),
மதி கந்தசாமி (மட்டுறுத்துனர், மரத்தடி யாகூ குழுமம்)
ஹரன்பிரசன்னா (மட்டுறுத்துனர், மரத்தடி யாகூ குழுமம்)
- கடிதம் ஜூலை 22 , 2004
- மீள்பிறக்கும் உயிர்வளக் கழிவு, எருவாயு எருக்களில் எடுக்கும் எரிசக்தி [Energy from Renewable Biomass & Biogas Fuels]
- தங்கம் மனோரமா – மணிப்பூரில் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்
- தியாகிகளுக்கு கண்ணீருடன் சிரம் தாழ்த்துவோம்
- ஊழலின் சந்நிதியில் 100 நரபலிகள்
- கூரையைப் பிய்க்கும் குரங்குகள்!
- கர்ணனின் மனைவி யார் ?
- மெய்மையின் மயக்கம்-9
- வாழ்வின் புன்னகை இந்தக் கதைகள்
- அறிய விரும்பிய ரகசியம்(எலீ வீசலின் ‘இரவு ‘ -நூல் அறிமுகம்)
- கொடிகள் அறுபடும் காலம்( உமா மகேஸ்வரியின் ‘யாரும் யாருடனும் இல்லை ‘-நாவல் அறிமுகம்)
- அழகும் அதிகாரமும் (காதல் தேவதை-மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்)
- நூறு வருடம் லேட்
- சோமரட்ண திசநாயக்காவின் ‘சின்ன தேவதை ‘ திரைப்படம்
- பூச்சிகளின் காதல்
- உயிர்மை ஓராண்டு நிறைவு விழா – உயிர்மை.காம் துவக்க விழா – ஜூலை 31 , 2004
- மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் ஆண்டுவிழாப் போட்டிகள்
- தஞ்சை ப்ரகாஷ் நான்காம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- கடிதம் ஜூலை 22,2004
- கடிதம் ஜூலை 22, 2004 – கலைந்ததா ‘மவுண்ட் ரோடு மாஒ ‘வின் உறக்கம் ?
- தேர்தல், காந்தி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற
- கடிதம் ஜூலை 22, 2004 – தமிழ் சங்க பேரவை
- கும்பகோணத்தில் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி : 24-07-04
- கடிதம் ஜூலை 22, 2004 : வஹாபி இயக்கமும் வர்னாஷிரம லோகஸ்டுகளும்
- கடிதம் ஜூலை 22, 2004
- ஆட்டோகிராஃப் ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி ‘
- வள்ளுவர் தந்த புதுக்கவிதை (அதி:111)– இன்பத்தின் இன்பம்(3)
- டாக்ஸி டிரைவர்
- அன்புள்ள ஆண்டவனுக்கு
- பொய்யன் நான் பொய்யனேனே!
- பதியப்படாத பதிவுகள்
- அன்புடன் இதயம் – 24 – எழுதக் கூடாத கடிதம்
- ஒரு தமிழனின் பிரார்த்தனை
- பெரிய புராணம்
- கொட்டு
- வேடத்தைக் கிழிப்போம்-3 (தொடர் கவிதை)
- எப்போதும் சூாியனாய்
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- சுயதரிசனம் (26.01.004)
- தோற்கிறேன் தான்!
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 29
- கவிதைகள்
- கவிதைகள்
- தீயே நீ தீபம் ஆகமாட்டாய்…
- கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004
- இனிப்பானது
- சத்தியின் கவிக்கட்டு 16-நன்றாய்ப் பார்த்துவிடு
- வதங்கள்
- தீக்கொழுந்தாக….
- 16-ஜூலை-04
- சின்னபுள்ள….
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்-4
- அறிவியல் தொழில்நுட்பம்:எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை!