மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்

This entry is part [part not set] of 26 in the series 20010910_Issue

ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்

தமிழகத்தில் ஞானியோடு பரிச்சயமில்லாத தமிழிலக்கியப் படைப்பாளிகள், தமிழ்ச் சிந்தனையாளர்கள் எவருமேயில்லையெனச் சொல்லலாம். ஞானி சகல விஷயங்களையும் தத்துவ தளத்திலிருந்து சதா இடையீடு செய்தபடியிருப்பவர். இவர் சம்பந்தப்பட்ட அல்லது இவர் துவங்கி நடத்திய ‘புதிய தலைமுறை ‘, ‘பரிமாணம் ‘, ‘நிகழ் ‘ தற்போது ‘தமிழ் நேயம் ‘ போன்ற சஞ்சிகைகள் தமிழ் சிந்தனைச் சூழலில் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்த : செய்துவருகிற சஞ்சிகைகள். உலக அளவில் மார்க்சியத்துக்குள் நிகழ்ந்து வந்த சகலவிதமான விவாதங்களையும் தமிழ்ச்சூழலுக்குள் இந்தச் சஞ்சிகைகளே கொண்டுவந்தன. அடிப்படையில் ஞானி நடைமுறை அரசியல்வாதியோ கட்சி சார்ந்த சித்தாந்தியோ அல்ல. தன்னைச் சுற்றிலும் நடக்கின்ற அறிவார்ந்த விஷயங்களை-அது இலக்கியமாயினும் தத்துவமாயினும் அரசியலாயினும் அனைத்தையும் செரிித்துக் கொள்வதும் தத்துவரீதியில்-அரசியல் ரீதியில் அல்ல: அரசியல் பரிமாணம் கெர்ணடிருப்பினும்- இடையீடு செய்வதும் தான் இவருடைய சிந்தனை அமைப்பின் தன்மையாக இருக்கிறது. இவர் கருத்தியல் சார்பாளர்களோடு இயக்கம் அல்லது கட்சிசார்ந்தவர்களோடு உடன்பட்ட தருணங்கள் என்பது மிகவும்சொற்பம். அது இந்தியக் கமயூனிஸ்ட் இயக்கம் சார்ந்த பிரச்சினையாயினும் தலித்தியமாயினும் தேசியமாயினும் இதுவே அவரது நிலைபாடாக இருந்திருக்கிறது. அனைத்துவிதமான நெருக்கடிகளிலும் வாழ்க்கை மனிதன் அன்பு விடுதலை சமத்தவம் சமதர்மம் போன்ற விஷயங்கள் இவருக்கு முக்கியம். அனைத்து விதமான விடுதலை சார்ந்த அரசியல் இயகக்கங்களும் தமது செயல் போககில் அரசியல் நிறுவனமயமாகிற போக்கில் தவறவிட்டு விடுகிற விஷயங்களும் இதுதான். இந்தக் காரணஙகளே தமிழ் அறிவுச்சூழலில் ஞானியின் குரலுக்குரிய முக்கியத்துவத்தை நிலைநாட்ட வல்லது. ஞானி பேசுகிற தத்துவதரிசனம் சார்ந்த விஷயங்கள் உடனடி அரசியல் செயற்பாட்டாளனுக்கு ஒப்புக் கொள்வதில் நிறைய சிக்கலைத் தரக்கூடியவை. ஆனால் தத்தவத்துக்கும் கலைககும் அரசியல் செயல்பாட்டக்கும்இருக்கும் முரணைப் புரிந்து கொள்கிறவர்கள் ஞானியின் அக்கறைகளைப் புரிந்து கொள்ளமுடியும். மார்க்சிலிருந்து வள்ளலாரிலிருந்து ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ரஜனீஷ் ஜீவராமு புதமைப்பித்தன் சைக்காவ்ஸ்க்கி என நிஜத்தில் தேடலில் ஈடுபட்டிருக்கிற மன்ிதர் ஞானி. அரசியல் காரணங்களினால் ஆவேசப்பட்ட தருணங்களில் இவருடனும் இவரது நெருங்கிய நண்பரும் எனது தகப்பனாரின் நண்பருமான எஸ். என். நாகராஜனிடமும் நானும் எனது கட்சி சார்ந்த நண்பர்களும் வன்முறையாக நடந்து கொண்ட சந்தர்பப்ங்களும் உண்டு. வாழ்க்கையின் விரிந்த கேள்விகளையும் அது தந்த அனுபவங்களையும் நான் எதிர்கொண்டபோது எனது கடந்த கால நடத்தைக்காக வெட்கமுற்று ஞானியிடம் மன்னிப்புக்கோரிய தருணமும் என் வாழ்விலிருக்கிறது. பண்ணிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் அவரது இல்லத்தில் ஞானியை நண்பன் விசுவநாதனோடு சந்தித்த போது அதே பழைய வாடகை வீட்டிற்றான் இருந்தார். புத்தகங்களுக்கு நடுவில்தான்இருந்தார். முதிய வயதுக் காலத்தில் இரண்டு விழிகளும் முற்றிலும் தெரியாத நிலையிலும் கூட சமகால அறிவுசார் விஷயங்களைத் தெரிந்த கொள்ளும் தேடலுடன் தான்இருந்தார். அனைத்துக்கும் மேலாக ஞானி அன்பு மயமான மனிதர். அதன் அனைத்த அர்த்தஙகளிலும் தன்னைக் கடந்து போய் கொண்டிருக்கும் மனிதர்.முதுமையும் குழந்தைமையும் கலந்து போகிற நிலை உன்னத மனிதம் நோக்கிய நிலை. அந்த நிலையை எங்களோடு ஞானி கோவை காந்திபுரத்திலிருக்கும் பொதுமதுவிடுதிக்கு வந்திருந்து பகிர்ந்து கெர்ண்ட அனுபவங்களிலிருந்தும் பிற்பாடு கையேந்தி பவனில் தெருவோரத்தில் அமர்ந்து உணவருந்திய வேளையிலும் நானும் எனது நண்பர்கள் விசு பழனிச்சாமி பாமரன் போன்றோரும் பெற்றோம். அவர் ஆவேசத்துடன் பகிர்ந்து கொள்கிற பல்வேறு விஷயங்கள் நடைமுறைவாதிகளுக்குக் கசப்பானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாம் அனைவருமே செய்யத் தவறியிருக்கிற பல்வேறு விஷயங்களை அவர் தொடர்ந்து வலியுறுத்துகிறார் என்பதை எவரும் மறுக்கமுடியாது. இரண்டு அமர்வுகளிலான உரையாடலுக்கு வாய்ப்பளித்த ஞானிக்கும் இந்த உரையாடலுக்கான நடைமுறைச் சாத்தியங்களை உருவாக்கித் தந்த எனது ஆருயிர் நணபன் விசுவநாதனுக்கும் எனது மருமகன் சுரேஷூக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

: யமுனா ராஜேந்திரன்.

*****

யரா: நீங்க தொடர்ந்து சில விஷயங்கல தமிழ்ச் சூழல்ல வலியுறுத்திக் கொண்டு வர்றீங்க. உதாரணமா மதம் பற்றிய உங்களுடைய பார்வை. உங்களுடைய புத்தகங்கள்ல முக்கியமான ஆதாரமான புத்தகம்னு நான் நினக்கறது வந்து – இந்திய வாழ்ககையும் மார்க்சியமும்- இன்றைக்கும் அந்தப் புத்தகத்திற்கு எதிர்மறையாவும் நேர்மறையாவும் நெறயப் பொருத்தம் இருக்கு. மற்றது – கலை இலக்கியம் ஓரு தத்துவப் பார்வை- என்கிற உங்களடைய குறுநுாலும் அந்த அளவு அந்தக் காலத்தில முக்கியமான புத்தகமா இருந்தது. மேல்கட்டு அடிக்கட்டுமானம் சமபந்தமான விஷயங்கள்- மற்றது பொருளாதாரம் எப்பிடி வந்து கலாச்சாரம் கருத்தியல் சம்பந்தமான விஷயங்கள்ல நேரடியா பாதிப்புச் செலுத்தறதில்ல என்று நீங்கள் வலியுறுத்திய எழுத்துக்கள்- உங்களுடைய வளர்ச்சியில இப்ப சமீபத்தில ஏற்பட்டிருக்கிற மிக முக்கியமான பரிமணமா நான் பார்ககறது தமிழ்த் தேசியம் சம்பந்தமான உஙகளுடைய பரிமாணம்.

நான் முதலாக உங்களிடம் கேட்கிற கேள்வி இந்த இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் என்கிற பிரச்சினையோடு ஒட்டிய கேள்விதான் இன்றைக்கு நடக்கிற விவாதங்களோட சம்பந்தப்படுத்தி அந்தக் கேள்வி அமையுது. மார்க்சியம் எங்களுடைய வாழ்ககையினுடைய பிர்ச்சினைகளுக்கு அவசியமில்லைன்னா அந்த மார்க்சியத்தை நாம் கைக் கொள்ளத் தேவையில்லை. அது மாதிரி எங்களுடைய கிரைசிஸ்சுக்கு சில சிந்தனைகள் உதவுமுன்னா அத எடுத்துக்கவம் இல்லைன்னா அத எங்களுக்குத் தேவையேயில்லை. எங்களுடைய மரபிலிருந்து மாற்று வாழ்க்கை- மரபினுடைய வேர்கள்ளிலிருந்து உருவாக்கிக் கொள்ளோனும் அப்பிடாங்கற விஷயத்தை நீங்க வலியறுத்தீட்டு வர்றீங்க. அதுமாதிரியே இந்திய வாழ்ககை முறையிலிருந்துதான் சோசலிசத்தக்கான அல்லது கம்யூனிஸத்துக்கான வேர்களை வந்து நாங்க கண்டடைந்து அதிலிருந்து எவல்யூஸனரியா நாங்க போகமுடியும் அப்பிடான்னு வலியுறுத்திக் கொண்டு வர்றீங்க.

அப்பிடிப் பாத்தீங்கன்னா இன்னைக்கி வந்து மிக முக்கியமான ஒரு அரசியலா வந்திருக்கிறது. அதனுடைய இலக்கிய கலாச்சார அரசியல் தளங்கன்னு எல்லாத்தலயம் தலித் பார்வைதான். நீங்க வந்து தொடர்ந்த மரப வலியுறுத்திக் கொண்டு வர்றிங்க. தலித் பிரக்ஞையில் வந்து மிக முக்கியமான விஷயம் என்னன்ன கேட்டாங்கன்னா- இப்ப மரபுன்னா இந்திய மரபு வந்து ரெண்டாயிரமாண்டு கால மரபுண்ணு நாம வச்சுட்டுமண்ணா- தலித்களினுடைய அறிவார்ந்த மரபுங்கறது அம்பேத்காருக்குப் பின்னாடிதான் வளர்ச்சியுற்று வந்திருக்கிறது.. இன்னுஞ்சொன்னா அவங்களுடைய இலக்கிய மரபு காவிய மரபு இதற்கான மரபென்றதே இனித்தான் உருவாக்கப்படவேணும். ஓரு எழுபத்தியைந்தான்டு கால மரபிலிருந்துதான் உருவாக்கப்படவேணும- ஒப்புிட்டளவுல ஆப்ரோ அமெரிக்கக் கறுப்பு மக்களுக்க இருநூறு ஆண்டு கால வரலாறு இருக்குது-. இந்திய மரபென்பது ஜாதிய அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்துத்தவ மரபாதான் இருந்திருக்குது. தலித்துகளினுடைய பிரசன்ஸ் என்பது இந்தியக் காவியங்களிலேயோ மரபுகளிலேயோ இல்ல. இந்த மரபுகளிலிலிருந்து தேர்ந்த கொள்வதற்கு இந்திய வாழ்வினுடைய கடைக்கோடி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன இருக்கென்று நீங்க நினைக்கிறீங்க ?

ஞானி : என்னுடைய முதல் நூல் இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் பற்றிச் சொன்னீங்க. அதற்குத் தொடக்கத்துல எதிர்மறையான விமர்சனங்கள் மருதமுத்து செந்தில்நாதன் போன்றவங்களால முன்வைக்கப்ட்டது. அன்று மார்க்ஸியத்த உள்வாங்கிக் கொண்டவங்களுக்கு மதம் பற்றி சரியான பார்வை கிடையாது. மதம் பற்றி விரிவான பார்வை ஒரு மார்க்சியனுக்கு ரொம்ப ரொம்ப அவசியம். சுறுக்கமாச் சொன்ன இதயமற்ற உலகின்  இதயம். போன்று மார்க்ஸ் சொன்ன வரையறை ரொம்ப முக்கியமானதுன்னு நான் நெனக்கிறன். தொடக்க காலத்தில நான் இந்திய வாழ்ககைன்னு பேசினேன். நாளடைவில இந்திய வாழக்கைங்கறதக் காட்டிலும்- இந்திய வாழ்ககைங்கற தொடர் மிகச் சரியான கருத்து அப்பிடான்ன நா நினைக்கல்ல- அப்பறம் இந்தியான்னு சொல்றதே பின்னால தரப்பட்ட பேராக இருந்தாலுங்கூட- பொதுவாக இந்திய நாகரீகம்னு ஒரு தொடர நாம எடுத்துக்கலாம்..இந்தியாவுக்குரிய நிலப்பரப்பு இந்தியாவுக்கு முன்னாடி என்ன பெயர் இருந்திச்சு என்கிறதெல்லாம் இப்ப அவசியமுன்னு எனக்குப்படல. இந்தியா என்கிற நிலப்பரப்பு அது எவ்வளவு சிறிசா பெரிசா இருந்தாலுங்கூட ஒரு நீண்ட கால ஒரு மாபெரும் மரபொன்னு தொடர்ந்து இருக்கு. வரலாற்றுச் சூழல் மாறியிருக்கிறபடி மரபுகளும் மாறியிருக்கு. இருந்தாலும் மரபுன்னு நாம அடிச்சிச் சொல்லவேண்டிய முக்கியமான கூறுகள் இருக்குன்னு நா நெனக்கிறன். இரண்டாவது இந்திய வாழ்ககையில இந்திய நாகரீகம் அப்படான்னு பாரக்கிறபோது டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலியவர்கள் எல்லாம் சொன்ன ஒரு கருத்து இந்த விஷயத்த ரொம்பத் தெளிவுபடுத்தும்னு தோணுகிறது. இந்திய நாகரிகம்கறத பத்தி சுனிதி குமார் சட்டர்ஜி போன்றவங்களும் இதே கருத்தச் சொல்லியிருக்காங்க. இந்திய நாகரிகம்கறதினுடைய மேலடுக்கு ஆரிய நாகரீகம். அந்த மேலடுக்க நீக்கிட்டுப் பாத்தீங்கன்னு சொன்னா உள்ளிருக்கறது முழுக்க திராவிட நாகரிகம்னு சொல்றாங்க. இங்கிருக்கிற வேளாண்மை மருத்துவம் இப்படித் தொடங்கி நீர்ப்பாசனத்திட்டங்கள் நகரஅமைப்பு முதலியவற்றைப் பற்றியெல்லாம் நான் விரிவாகப் பேசறதுன்ன சொன்னா அது திராவிடக்கூறுகளாகத்தான் இருக்கிறதுங்கறது பலருடைய கருத்து. ஸ்லேட்டர் சொல்லும்போது இந்த மாதிரி ஏராளமான விஷயங்கள அந்த பிரிட்டாஸ்காரர் சொல்றார். ஆகவே திராவிட நாகரிந்தான் இந்திய வாழ்ககையில நெடுங்காலமா ரொம்ப அழுத்தமான கூறுகளா இருந்திருக்குன்னு நா நெனக்கிறன். பொதுவாக ஆரிய நாகரிகம் திராவிட நாகரிகங்கறத குறிப்பிட்ட தேவைகளினடிப்படையில நாம வேறபடுத்திப்பார்க்கறம். இப்பிடி வேறுபடுத்திப் பார்க்கும்  போது ஆரிய நாகரிகங்கறத மேலுலகச் சார்பு திராவிட நாகரிகங்கறது மனித வாழ்ககை- நிலம் வேளாண்மை ஆகியவற்றைச் சார்ந்தது என்கிறத முக்கியமா நாங்க வேறபடுத்தலாம். ஆரியருடைய தெய்வங்கள் வழிபாடுகள் போன்றவற்றைப் பாரத்தீங்கன்னா வேள்விய அடிபபடையாக் கொண்டது. திராவிடர் களுடைய வழிபாடு கோயில அடிப்படையாகக் கொண்டது.

திராவிட நாகரிகத்தினுடைய மிகமுக்கியமான ஒரு கூறுன்னு எடுத்துக்கொண்டா திருமுருகாற்றுப்படையிலிருந்து ஒரு அருமையான மேற்கோள நான் சொல்லலாம். முருகங்கறவன் எல்லா எடங்களிலும் இருக்கிறான். அறுபடை வீடகள்னு சொல்லீட்டு உயர்ந்த மலை உச்சிகள்லதான் அவன் இருக்கிறான்ட்டு இல்ல. நீங்க விரும்பனா ஒரு சாதாரண மரத்தடால உக்காந்துட்டு நீங்க முருகன நினச்சீங்கன்னா அவன் ஓடி வருவான். அந்த முருகன் அன்புமயமானவனா இருக்கிறான்ட்டு திருமுறுகாற்றப் படைல இருக்குது. இந்தக் கருத்த நீங்க கவனாப் பாத்தீங்கன்னா- சித்தர் இலக்கியத்துல மட்டுமல்ல சித்தர் இலக்கியத்துக்கு மிக முற்பட்ட திருமூலர்கிட்டிருந்து திருக்குறளிலிருந்து இந்தக் கருத்த நீங்க எடுக்கலாம். கடவுள் என்கிற கருத்தையும் மனிதச் சார்புள்ளதாகத்தான் நாங்க கருதி வந்திருக்கறம். அப்ப கடவுளப் பத்திப் பேசும்போதெல்லாம் நீங்க கடவுள்ங்கறது ஒரு கருத்தாக்கம் கட்டமைப்பு- அந்தக் கட்டமைப்புங் கறத நீங்க கலச்சிப்போட்டுப் பாத்தீங்கன்னா மறுபடியும் மனித வாழ்ககை- இந்த வகையில இந்திய வாழக்கைங்கறத இந்த வகையில தொடர்ந்து பொருள்படுத்தீட் டு வர்றன் நானு. இப்படிப் பொருள் படுத்தற போதுதான் சங்க இலக்கியங்கள் போன்றவற்றையெல்லாம் இப்படிப் பார்க்க ணே¢டியிருக்குது.

உடுமலைக்குப் பக்கத்திலிருக்கிற என்னுடைய நண்பர் பழனிவேலனார் என்கிறவர் ஒரு பெரிய ஆய்வை எழுதி-அத வெளியிடறுதுக்கான வாய்ப்புகள் இல்லாமப் போயிட்டது- புறநானுாறு மாதிரி இல்கியங்கள்ல குறவர் குறமகளிர் போன்றதெல்லாம் சேர்த்து அவர் ஒரு பத்துப் புலவர்களச் சொல்றார். அந்தப் புலவர்களுடைய வாழ்க்கயைிலிருந்து பார்த்தீங்கன்னு சொன்னீங்கன்னா குறவர் குறமகளிர் போன்றவங்க தாழ்த்தப்பட்ட சாதியாக் கருதப்படவேயில்ல. அவர்களும் ஒரு தொழிற்பிரிவச் சேர்ந்தவங்க அப்பிடாங்கறதுக்கு அப்பால அவங்க கீழ்ப்பட்ட நிலையில வாழ்ந்தாங்க அப்படாங்கறதுக்கு ஆதாரங்க கெடையாது. குணாவினுடைய வள்ளுவததின் வீழ்ச்சீங்கற நுால்ல பார்த்தீங்கன்னா அந்த வள்ளுவர்கள்னு சொல்றவங்க கணிதத்துல தேர்ச்சி பெற்றவங்களா இருந்தாங்க. வானயியல்ல தேர்ந்தவங்களா இருந்தாங்க. மருத்துவத்துல தேர்ந்தவங்களா இருந்தாங்க. மெய்யியல்ல மிக்மிகத் தேர்ச்சியடஞ்சவங்களா இருந்தாங்க. அந்த வைசேடிகம்னு சொல்லக்கூடிய மெய்யியல் பள்ளிக்கு மூலவர்கள் வந்து அந்த வள்ளுவர்கள்தான் என்கறத ரொம்ப ரொம்ப நிறைய ஆதாரத்தோட அவர் நிறுவியருக்கிறார். வள்ளுவர்கள்ங்கறது பிற்காலத்துல பாத்தீங்கன்னா ஒரு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியாயிருக்குது. அப்ப சங்க காலத்துல பாத்தீங்கன்னா சாதி வேறுபாடுங்கறது பெரிய அளவுக்க ஏற்றத் தாழ்வோட இல்ல.

புறநானுாற்றுல பாத்தீங்கன்னா துடியன் அப்பிடான்னு ஒரு நாலு சாதியச் சொல்லி இவர்களன்றி வேறு குடியும் இல்ல என்கிற அற்புதமான மேற்கோள் இருக்குது. புறநானுாற்றுல பாத்தீங்கன்னா மேற்பிறந்தார் கீழ்ப்பிறந்தார் போன்ற விஷயங்க வரது. ஆனா கல்வியறிவுடையவன். கீழ்க்குடியில பிறந்தாலும் மேல்குடியில பிறந்தவங்க அவரகளச் சமமா மதிபபார்கள்ன வருது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்னு வள்ளுவர் சொல்றார். அது மாதிரி நற்றினையில ரொம்ப அருமையான ஒரு பாட்டு. நெய்தல் தலைவே தலைவனங்கறவன் நகரத்திலிருந்து கடற்கரைக்கு வந்து அவளச் சந்த்ிச்சிட்டு போய்ட்டிக்கிறான். அவ சொல்றா : நீ நகரத்துல வாழக்கூடியவன். நீீ வணிகம் முதலியவற்றோடு சார்ந்து வரக்கூடியவன். உன்னுடைய சாதி வேறு-சாதிங்கற வார்த்தை இல்லாட்டிங்கூட நீ வேறு- நாங்களோ இந்த மீன் பிடிகக்ககூடிய பரதவர்  குலத்தச் சேர்ந்தவங்க-பக்கத்துல வராதே புலவு நாறும் புலவு நாறும் அப்படான்னு சொல்லி- காதலிக்கறதில அது ஒரு கட்டம். அப்பிடி ரெண்டொரு தடவை அவனத்தொரத்திப்பாத்திட்டு- அப்படியும் காதல் கொள்ளுவதற்கு அவன் தயாராயிருக்கிறானா என்று அறிந்து கொள்வதற்கு ஒரு முயற்சி இது. அதே மாதிரி கலித்தொகை முதலிய நுால்கள்ல பாத்தீங்கன்னு சொன்னா-இலக்கணப்படி பாத்தீங்கன்னா கைக்கிளை பெருந்திணை ஐந்திணைக்கான இலக்கணம்கிறது ஒண்ணு- அது இலக்கணப் புலவர்கள் செஞ்ச சில வரையறைகள்.-அந்த வரையறைக்கள்ளதா மேலு கீழுங்கறது கூடுதலாப் புகுந்துவிட்டதாக நான் நினை¢ககிறென். மற்றபடி இயல்பா காணக்கூடிய பாடல்கள் முதலியவற்றுல பாத்தீங்கன்னா இந்த வரையறைகளுக்குப் பொறுத்தமா அந்தப்பாடல்கள வச்சுப் பாரக்கலாம்னு எனக்குத் தோணல்ல. அதே மாதிரி காதலுக்குரிய இலக்கணமா இன்னார்தான் காதல் புரியலாம்னு சொல்லி வைக்கிறார். அந்த இலக்கணமானது நற்றினைப்பாடல்கள்ல அடிபடுது.

இன்னும் தேடிப்பாரத்தமுன்னா கலித்தொகையில அது சுத்தமா அடிபட்டப் போகுது. அதனால இலக்கணப் புலவர்கள்னு சொல்லக்கூடியவங்க இந்த சாதி வேற்றுமை வருண வேற்றமை போன்றவற்றுக்கு எப்படியோ அழுத்தங்குடுத்துட்டாங்க. ஆனா இயல்பான வாழக்கையில அப்பிடி இல்ல. மேல்ககுடி கீழ்க்குடி போன்றவைகள பிரிச்சுப் பாரக்கவேண்டிய தேவயிருந்தாங்கூட இதமீறித்தான் காதல் நடந்து வந்திருக்கிறது. சொல்லப்பேனா தொல்காப்பியர் சொல்லக்கூடிய திணைமயக்கம்கிறது ரொம்ப அற்பதமானது. சொலல்ப்போனா சங்க இலக்கியம் முழுவதையுமே திணைமயக்கம்ங்கிற கருத்துல பொருள்படுத்துறது ரொம்ப ரொம்ப வளமான பொருளைத் தரும். தொல்காப்ப்ியரோ நாற்கவிராசன்நம்பியோ சங்க இலக்கியப் பாடல்கள் முதலியவற்றுக்கெல்லாம் படுத்தீருக்கிற அர்த்தம்  இருக்கு பாருங்க- இந்தப் பொருள் கோடல்கள பண்டிதர்கள் அப்பிடியே ஒத்துக் கொண்டாங்க. அத நாம அப்பிடியே ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இன்னும் இப்படியான பொருள்கோடல்கள வேரடிப்படையில நாம திரட்டுவது இன்னொருவகையான ஆய்வச்சொய்யறதுக்க நமக்கு ராம்ப உபயோகமா இருக்கும். அதாவது அகத்திணை புறத்தணை முதலிய இலக்கணங்க இருக்குது பாருங்க – இதையுங் கூட தொல்காப்பியருடைய இலக்கணம்னு வெச்சிட்டு- இதயுங்கூட நாம கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு- மறுபடியும் இந்தப் பாடல்கள் முதலியற்றையெல்லாம் கொஞ்சம் கூடுதலான ஆய்வுக்கு உட்படுத்தனும்ன்னா வேறு பொருள்களுக்கு நாம் செல்ல முடியும். அதுக்கான நியாயம் நெறய இருக்குது.

தெலுங்கு மொழிலே சங்க காலத்திலயே எழுதப்பட்ட நுால்-கலா சப்த கதின்னுட்டு- முகுந்தராஜா ரொம்ப அருமையான முறைல ஆந்திரநாட்டு அகநானுாறுன்னுட்டு மொழிபெயர்த்திருக்கிறார். அந்த நுால்ல பாத்தீங்கன்னா கைக்கிளை பெருந்திணை ஐந்தினைங்கற வேறுபாடு எல்லாம் இல்ல. அது ரொம்ப அற்புதமான சில கூறுகளச் சொல்லுது. சங்க இலக்கியம் நிச்சயமா அந்த வடிவத்துலதான் இருந்திருக்க முடியும். சங்க இலக்கியத் தொகுப்பாளர்கள் இலக்கணப்புலவர்கள் எல்ஆலாரும் உள்ள நுழஞ்சபோதுதான் இந்த மாதிரியெல்லாம் சில வேறுபாடுகள உட்புகுத்தீட்டாங்கனனுன எனக்குத் தோன்றுகிறது. அந்த வகையில பாதத்தீங்கன்னா தொடக்ககால சமூகத்துல ஏற்றத்தாழ்வுகளோ சாதிவேறுபாடுகளோ இவ்வனவு அதிகமா இல்லைங்கறத மட்டுமல்ல- அது பெரிய அளவுக்கு பொருட்படுத்தப்பட்டதும் அல்ல- உண்மையில் சங்க இலக்கியம்ன்னு சொல்லப்படறது என்னன்னு சொன்னா திணை வேறுபாடுகளெல்லாம் வந்து ஆட்சி முறைகளெல்லாம் வந்து- செல்வம் மக்கள மத்தியில வந்து- மக்கள் மத்தியல சில ஏற்றத்தாழ்வுகளெல்லாம் ஏற்பட்ட காலத்துல தமிழ்ச் சான்றோர்கள்னு சொல்லப்படுறவங்க அந்த ஏற்றத் தாழ்வ ஒத்துக்க்ல்ல. அவங்க மறுபடியும் அன்பினைந்திணை அன்பினைந்திணைன்னே பேசறாங்க. திணைகளுக்கிடையில வேறுபாடு இருந்தாலுங்கூட அன்பைப்  பொறுத்த வரைக்கும் ஆண் பெண் இடையில உறவ ஏற்படுத்தணும்னு அவங்க ரொம்ப வற்புறுத்துறாங்க. இதுக்காக கபிலர் முதலியவர்களையெல்லாம் நான் மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை.

அப்ப இந்த வடிவத்தில எடுத்துட்டாங்கீன்னு சொன்னா இன்னக்கி தலித்தியம் அப்பிடான்னு சொல்லப்படறது ஒரு வகையில் அரசியலாக்கப்பட்டிருக்குது. இந்த அரசியல் பார்வையோட அந்தச் சங்க இலக்கியத்தப் பாரக்கறதுல சில பேர் ரொம்ப ஒரு அரசியல் ஆவேசத்தோட- கூடுதலான ஒரு ஆவேசத்தோடு- அந்த இலக்கியத்துக்குள்ள புகுந்து அந்த இலக்கியத்துக்குள்ள எங்கே தலித்துக்கு மரியாதை அப்படான்னு கேட்கறாங்க. உயர்சாதியினுடைய இலக்கியந்தானே அது அப்பிடான்னல்லாம் சொல்றாங்க. எனக்கென்னமோ நீங்க அப்பிடிச் சில கூறுகள- நீங்க இன்றைய தேவை கருதி கண்டுபுடிக்கறதுங்கறது உங்களுக்குத் தேவையின்னு சொன்னாக் கூட- இந்தக் கூறுகள் இருக்கிறதா வெச்சிட்டாலும் கூட- ரொம்ப அதிகமா இல்ல- ரொம்ப லேசான கூறுகள்தான்- சாதிங்கறது ஒரு சூழல்ல லேசாத் தோன்றி நாளடையவிலதா அது வெவ்வேறு சூழல்கள்லதா அது பலப்பட்டிருக்க வேணும்கறது ஒரு பொது உண்மை. அத. அப்பிடிப் பாரக்கும் போது இந்த வள்ளுவர் சொல்றாரு பாருங்க- மேற்பிறந்தாறாயினும்- அந்தக் கருத்த எடுத்திட்டு அந்த வேறுபாடுகள் சமூகத்துக்குள்ள வந்துவிட்ட சமயத்தல கூட-முரண்பாடுகள் வந்துவிட்ட சமயத்தில கூட- இந்த முரண்பாட்டுக்கு அழுத்தம்தரவேண்டாம் இதமீறி நாங்க இயங்கறதுங்கறது வேணும்கறது வள்ளுவர் முதலியங்களுடைய நெறியாக இருந்திருக்கிறது. அப்படான்னா தமிழ் இல்ககிய்தத நீங்க இந்த மாதிரி பொருள் படுத்துவதைக் காட்டிலும் அந்த மனிதர்கள் மத்தியல் ஒருசமத்துவத்த உருவாக்குவத இந்த இலக்கியம் கொண்டிருக்க்ிறது-உள்ளுறயாகக் கொண்டிருக் கிறது என பார்க்கும்போது நமக்கு இன்னும் கூடுதலான அரத்தத்தை வழங்கக்கூடும்னு நான் நெனக்கிறென்.

தமிழ் மரபுங்கறத நாங்க அங்கிருந்து நாங்க தொடங்க வேணும். தமிழ் மரபுங்கறத நீங்க பலவகையில அர்த்தப்படுத்தலாம்.ஆனா என்னைப் பொறத்தவரையிலும் இந்த சமத்துவம் என்கிறது தமிழ் மரபுக்குள்ள இருக்குது. சமதர்மம்கறதும் தமிழ் மரபுக்குள்ள இருக்குது. ஏன்னா ஆதி பொதுமைச் சமூகத்துல மனிதர்களுக்கிடையில வரக்க வேறுபாடுகள் இல்ல. மனிதர்கள் பொதுமைக் கூறுகளோட வாழ்ந்தார்கள். சங்க காலத்திலதான் அது மாறுது. மாறத் தொடங்கீட்டு இருக்குது. நாகரீகம் அரசு ஆதிக்கம் முதலியவைகளெல்லாம் வரும் போதுதான் மாறுது. ஆனா இந்த மாற்றத்துக்கிடையில ஏராளமான போராட்டங்கள் நடந்திருக்குது. பாரி மற்றவங்க கடையேழு வளள்ல்கள் கோப்பெருஞ்சோழன் மற்றவங்களுடைய வாழக்கை¢ககுள்ள பாரக்கலாம். அந்த பழைய பொதுமைக் கூறுகள புலவர்கள் மட்டுமல்ல சில் வேளிர்களும் மன்னர்களும் கூட இழக்க விரும்பல்ல. ஆனா வேந்தர்களப் பொறத்தமட்டிலும் அத அடிச்சு நொறுக்க வேணும்னு அவங்க ஆத்திரத்தோட இருந்தாங்க. பொதமைக்கூறுங்கறது தொடர்நது- திருக்கறளுக்குள்ள ஒப் பறவுன்ன சொல்றம் – அந்த ஒப்புறவுங்கறது சமதர்மம் சமத்துவங்கற அரத்தம் தரக்கூடியது. நிறைய இது மாதிரி குறள்கள் இருக்குது. நீர் நறைந்தற்றே- அதுக்க என்ன அர்த்தம்ன்னு சொன்ன. மழைபெய்யது. ஊர் நடுவிலிருக்கிற குளம் நெறயது. தேவையுள்ளவங்க நீர எடுத்திட்டுப் போகலாம்- யாரயும் கேக் கத் தேவையில்லை. அது ஊருக்குச் சொத்து- வளங்கள யார் வேணுன்னாலும் எடுத்துட்டுப் போகலாம் அப்பிடாங்கற கருத்தெல்லாம்இருக்குது. இந்த மரபு தமிழ் இல்ககியத்தில தொடர்ந்து வருது. சித்தர் இலக்கியத்துல நீங்க இத ரொம்ப அழுத்தமாகப் பார்க்கலாம். இப்பதான் சாதியென்ன பேகயிலென்ன சடங்கென்ன என்கிற விஷயங்களெலல்ாம் வருது. மனசுக்குள்ள இருக்கிறது கடவுள் என்கிற மாதிரி அவங்க அரத்தம் கொள்றாங்க. இந்தக் கடவுள் மனித எல்லையைக் கடந்த ஒரு கடவுள் அல்ல. மனிதனுக்கும் இது நெருக்கமான கடவுள்.

மதுரைல தெய்வம் ஒரு தவறு நடந்து மதுரை நகரம் தீக்கள்ளாகிற சமயத்_ல அது வரைக்கும் சும்மா இருந்துட்டு கண்ணகிய வந்து ரொம்ப கெஞ்சிக் கேட்டு அக்கினிகிட்ட இருந்து விடுதலை பெறுகிறது- அப்பிடான்னா அந்த தெய்வம் வந்து ஒன்னும் மனிதனுக்கு மேம்பட்டதல்லன்னு ஒரு கருத்து வருது. வள்ளுவரும் அது மாதிரித்தான். வறுமையத்ததான் கடவுள் படச்சான்னா அவனும்அலஞ்சு திரிஞ்சு பிச்சையெடுத்துச் சாகட்டும்கறார். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில ரெண்டு கருத்தாக்க்ங்கள வச்சிட்டு இத யோசிச் சுப்பாருங்க. பிற்காலத்துல சித்தருங்கற வடிவத்துல நாம பேசினாலுங்கூட இந்த இயக்கம்கறதுதமிழ் மரபுக்குள்ள ஆழமா இருக்கு. வள்ளுவருக்குள்ள இருக்கு- நக்கீரனுக்குள்ள இருக்கு-இதையலெ¢லாம்எடுத்துக் கொள்ளும் போது தமிழ் மரபை நீங்க சமதர்மம் னு அர்த்தப்படுத்தலாம- சமத்துவம்னா மனிதர்களுக்கு மத்தியல வேறுபாடுங்கறது அவசியமில்ல. சமதர்மம்ங்கறது எல்லாத்தையும் பொதுவா வைத்துக்கொள் அப்பிடாங்கறது. இந்த மரபு மீண்டும் நமக்கு வேண்டும் அப்பிடாங்கன்னு சொன்னா தலித் அரசியலுங்கறத இவ்வளவு துாரம்- இன்னைக்கு குறிப்பிட்ட தேவைக்காக துாக்கறாங்க பாருங்க- அப்பிடித் துாக்க வேண்டிய அவசியமில்ல. இன்று வேறுபாடு ரொம்ப கனமாப் போச்சு பெரிசாப் போச்சு- மறுக்கத்தான் வேணும் அதுல நமக்கு ரெண்டு மாறுபட்ட கருத்தில்ல- இதங்காரணமாக கூட நீங்க பழைய இல்க்கியங்களையெல்லாம் தற்காலிகமா மறுத்தோ இழிவுபடுத்தியோ பேசுவது கூட என்னனைப் பொறுத்து பெரிய தப்புண்னு எடுத்துக்கொள்ள மாட்டன். இலக்கியத்த காப்பாத்தறமா மக்கள காப்பத்தறமான்னு பாத்தமுன்னா மக்கள்தான் நமக்கு முதன்மையானவங்க. அதுக்குப்ிறகுகூட இலக்கியத்தை எப்பிடிப் பாக்கறது அத எப்பிடிச் செழுமைப்படுத்தறதுங்கறத அப்பறங் கூட பாத்துக்கலாம்னு நெனக்கிறன் நானு. அப்படிப் பார்ககும்போது தமிழ் மரபுங்கறது அப்பிடியொன்னும்ஆதிக்க மரபல்ல. தமிழ் நாட்டில திராவிட முன்னேற்றக்கழகத்தப் பொறுத்த வரையிலும் அவங்க மூவேந்தர்களப் பாராட்டுறது ராஜராஜ சோழனுக்கு விழா எடுப்பது போன்றதுல தமிழ் மரபினுடைய ஆதிக்கக்கூறு இருக்கிறது.

யரா : உண்மையா ஞானி நாங்க தொடங்குன கேள்வி வந்து இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் சம்பந்தமானது- ஆனா நீங்க தமிழ் வாழ்க்கை தமிழ் பொதுமை- தமிழ் தலித்தியம் சம்பந்தமா தான் சொல்லியிருக்கீங்க- இப்படி இன்றைக்கு உங்களுடைய சிந்தனையமைப்புல நிறைய மாற்றங்கள்இருக்குது. இந்தியவாழ்ககைன்னு முதல்ல அழுத்தம் குடுத்த நீங்க இப்ப தமிழ் வாழ்க்கை என்கிற விஷயத்துக்கு அழுத்தம் குடுக்குறீங்க. நீங்க பேசுற தமிழ்த் தேசியம்தான் இப்ப தமிழ் வாழக்கை தமிழ் மரபுன்னு–

ஞானி : இங்க வந்து நான் ஒரு சின்ன இடையிடு பண்ணிக்கிறன். இந்திய வாழ்க்கைன்னு சொன்னா இந்தியாவில பல்வேறு வகையான தொழில் முதலியவற்ற செய்யக்கூடிய மக்கள் இருக்கிறாங்க. இந்த மக்கள்ள ஆரியர்னு சொல்லக்கூடியவங்க அவங்கள்ல சத்திரியர் வைசியர் போன்றவங்கள உள்ளடக்குனாக் கூடஅவங்க வந்து ரொம்பச் சிறுபான்மைதான். மக்க்ள்லபெரும்பான்மையினர் உழவர்களும் கைவினைஞர்களும் ஆதிப்பழங்கடி மக்களும் பெண்களும்  தான். இவங்களுடையவாழக்கைங்கறது வேளான்மை மற்றும் கைவினைத் தொழில்கள்தான். இவர்கள்தான் அசலான மனிதரகள். இவங்கள ஆதிக்கம் பண்றவங்கதான் மற்றவர்கள் அவங்கள் ஆரியர்களோ யாரோ- இந்த மக்களுடைய வாழக்கை என்பது எல்லாக் காலங்களிலும் உழைப்பும் பகிர்வும்என்றுதான்இருக்கும். இவங்களக்கள்ள பாத்தீங்கன்னா வேற்றுமை இருந்தாலும் கூட சாதியென்ன மதமென்ன என்கிற கருத்துத்தான் பெரும்பாலும்இருக்கும்.

ஆனைமுத்துவினுடைய அனுபவத்த நான் சொல்றன். உத்தரப்பரதேசம் பீகார் போன்ற மாநிலங்கள்ல்ல பயணஞ்செஞ்சு அந்த மக்களோட அவர் பேசியிருக்கிறார். அவங்க கேட்கறாங்க என்ன நாம இந்தி பேசறம் எப்பிடி நம்மடைய மொழி ஆதிக்கம் பண்ணும்னு அவங்க கேட்கறாங்க. ஆனா அரசியல் வாதிங்களுக்கு வியாபாரிங்களுக்கு ஆதிக்கத்துக்கு ஒரு மொழி தேவையா இருக்கு. பீகார் மக்களப் பொறுத்தளவில இந்த மொழைிஏன் போய் மற்ற மக்கள ஆதிக்கம் பண்ணுதுங்கறதுதான் அவங்களுடைய கருத்தா இருக்கு. அதே மாதிரி இந்திய வாழ்க்கை என்கிறத வந்து நாங்க ஒற்றைப் பரிமாணத்தல வேதம் வேதியர்கள் போன்றவங்களக் கொண்_ அர்தத்ப்படுத்துகிறபோக்கு இன்றும் இருக்குது. இந்தியாவுல வேதத்துக்கு எதிரானப் போக்குத்தான் இந்தியாவுல நெடுங்காலமா இருந்து வற்ர போக்கு. வேதக் கரத்துங்கறத இந்தியாவுல பெரும்பகுதிமக்க்ள ஒத்துக்கல்ல. சமணமாகட்டும் பெளத்தமாகட்டும். சாஙகியம் எடுத்துக்குங்க சார்வாகம் நியாயம் வைசேடிகம எல்லாம் எடுத்துக்குங்க. இதுவெல்லாம் வேத ஆதிக்கத்துக்கு எதிரானது ஃவைதீகர்கள்னுடைய ஆதிக்த்துக்கு எதிரானது. ஊபநிடதஙகள் பத்தி டாக்டர் சுப்ரமணியம் ரொம்ப அற்புதமா எடுத்துக் காட்டறார். வேதங்களக்காட்டிலும் கொள்கைக் கோட்பாடுகள்போன்றவற்றையெல்லாம் அழுத்தந் திருத்தமாச் சொல்லக்கூடியது உபநிடதங்கள். உபநிடதங்கள் வேள்வி செயய்க்கூடிய் பிராமணர்களையெல்லாம் நாய்கள் பேய்கள்னல்லாம் கண்டிக்கிறக்கிறதெல்லாம் அதுல இருக்குது.

இப்ப குடிசையிலிருந்துன்ன ஒரு நாவல் வந்திருக்கு. பிரெஞ்சுக்காரர் ஒருத்தர் இந்தியாவுக்கு வந்து- தனது இந்திய வாழ்ககை அனுபவங்களைச் சொல்லக்கூடிய ஒரு சின்ன நாவல்-ரொம்ப அழகான நாவல். ஆந்த நாவல்ல பாத்திங்கன்னா இங்கிலாந்தினுடைய ராயல் சொசைட்டால இருந்து இந்தியாவினுடைய தத்துவங்களயெல்லாம் தெர்ிஞ்சிக்கறதுக்காக ஒரு ஆய்வாளர் வர்றார். அவரு பல்லக்கக் கட்டிட்டு இந்தியா முழுக்க அலையறார். ஓலைச் சுவடிகளையெல்ாம் தொகுக்கிறார் எல்லாரும் ஒரிஸ்ஸாவில புவனேஸ்வர்ல இருக்கிற கோயில்ல இருக்க்கூடிய தலைமைப் பிராமணர்தான் இந்தியாவினுடைய தத்தவத்துக்குச் சரியான விளக்கம் சொல்லக்கூடியவர் அப்படான்ன சொல்றாங்க. அவரு வந்து சிரமப்பட்டு புவனேஸ்வர் அனுமன் கோயிலுக்குப் போயி-அந்தப் பிராமணன சந்திக்கிறதுரொம்ப சிரமம் ஏன்னா அவரு ரொம்ப உயர்ந்த பீடத்தில இருக்கிறவரு- அவரப்போயி பார்க்கிறாரு. அவருகிட்ட தன்ற சந்தேகத்தக் கேட்கராரு- கடவுள்னா என்ன- எல்லாக் கேள்விக்கும் அந்தப் பிராமணர்களோட தலைவர் நான் நான் நான்ங்கறார். ஆய்வாரள் ரொம்ப மனம் நொந்து போய் வெளியே வற்றார். அவர் திரும்ப பல்லக்குல ஒரு காட்டு வழியில போயக்கிட்டிருக்கிறபோது இராவுநேரம. பலத்த மழை பேஞ்சிகிட்டிருக்குது. துாரத்தில ஒரு குடிசையில் வெளக்கு எரியறதபார்க்கறாரு. அங்க போயி அவங்கக்ிட்டஉள்ள வரலாமான்னு அனுமதி கேட்கறார். அவங்க அனுமதிச்சு உட்காரவச்சு உபசரிச்சு பேசிக்கிட்டாருக்காங்க. அப்புறமா அவர் அந்த மனுஷங்கிட்ட தன்னுடைய  சந்தேகத்தக்கேட்கறார். அந்த மனுஷன் ஒரு பறையன். அவுருக்குஒரு மனைவி- பிராமண விதவை. ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. காலை நேரம். நல்ல வெளிச்சம். அந்த மனுஷன் கண்ணத்துாக்கி வானத்தப் பார்க்கறார். தரையப்பார்க்கறார் ரெண்டையும் கையெடுத்துக் கும்படறார். இதுதான் கட்வுள்ங்கறார். அந்த ஆய்வளருக்குப் புரிஞ்சு போ_சு. இதுதான் இந்தியத் தத்துவத்தினுடைய மிச்சம்கறது. இங்கதா இருக்குது பிராமணங்கிட்ட இல்ல என்கிறது அவருக்கப் புரிஞ்சு போச்சு.

உண்மையில நீங்க வேதங்க உபநிடதங்க முதலியற்றையெல்லாம் பழுதற ஆராய்ச்சி பண்றதுன்னு சொன்னா-அம்பேத்கர் வேதங்களப் பத்தி ரொம்பச் சிறப்பான முறையில் ஆய்வு செய்தவர்.அவர் வேதங்கள் பத்திச் சொல்றபோது கடைசியில் ஒன்னச் சொல்றார். வேதங்கள தோண்டாட்டே போனிங்கன்னா எல்லாவற்றுக்கம் மூலம் கடவுள்னு ஒரு கருத்து காணமுடிகிறது- ஆனா அதேவேதத்துல இன்னும் தேடுனிங்கன்னு சொன்னா எலலாவற்றுக்கும் மூலம்மனிதன்னு கருத்து காணப்படுகிறதுன்னு அம்பேதக்ர் சொல்றார். அப்ப சாங்கியம் சார்வாகம் சமணம்பெளத்தம். இத எல்லாம் உள்ளடக்கிப் பாருங்க தர்ம் சாஸ்திரமுங்கறது மனு மட்டுமல்ல- ரொம்பக் கதையடிக்கிறாங்க- இந்த மனுதர்ம சாஸ்திரத்த மறுக்கிற தர்ம சாஸ்திரங்க உண்டு. ஆகமன்னு செர்ன்னா ஒன்னதான்னு இல்ல பல ஆகமங்க இருக்கு. இதனுடைய விளைநிலமெல்லாம் என்ன என்று பாததீங்கன்னா இந்திய வாழ்க்கைதான். வாழ்க்கைக்குள்ள இருந்துதான் இதுவெல்வாம் வருது. ஆதிவாசிகள் பெண்கள் வேளான்மை செய்பவர்கள் கைவினைஞர்கள் இவங்கதான் அசலான வாழ்ககை உடையவர்கள். மனிதன்னு சொலலக் கூடியவன்இங்கிருந்துதான் வர்றான். ஆப்படான்னா பிராமணணுக்கு மண்ணு தெரியாது .உழைப்பு தெரியாது. காடு தெரியாது. வேற எதுவும்அவனுக்குத் தெரியாது. அவனுடைய தத்துவத்த நாம மையப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனா சிலபேரு அத மகிமைப்படுத்தி வச்சிருக்கிறாங்க. சங்கரர் கூட அத மகிமைப்படத்தினார்னு நான் நினக்கல்ல. நம்ம பெரியார் தாசன் போன்றவங்க ஆதிசங்கரரட உண்மையான படைப்புக்கள் எதுங் கறத ஆய்வு செஞ்சு கடசீல ஒரு ரெண்டோ முணோ தான்ஆதி சங்கரருடைய அசலான படைபபபுக்க்ள அப்படாங்கறார். அதில பிராமணனைப்பத்தி பெருமையாச் சொல்லக்கூடிய வரிகள் எதுவும் இல்லைங்கறார். வுாழ்க்கைன்னு ஆரம்பிச்சீங்கன்னு சொன்னா உழைப்பிருக்க வேணும் பயிர்இருக்க வேணும். இதுக்குள்ளதான் மற்ற பண்புகள் மேன்மைகள் எல்லாம் அடங்கியிருக்குது. உழைககிறவன்தான்மனிதன்உழைக்கிறவன்தான் கடவுள். இப்படித்தான். இப்படியான கருத்துக்கெல்லாம் போனாத்தான்இந்திய வாழ்ககையை சரியானபடி அர்த்தப்படுத்துவதாகும்.

இந்துத்துவவாதிகள் சொல்லித் தொலைசசிட்டாங்க எங்கிறதுக்காகவே நாம அதக் கடைபிடிக்கத்தேவயில்லை. திராவிடன்னு சொல்க்கூடியவன் தமிழன்னு சொல்க்கூடியவன் இந்த மாதிரி ஆழமான ஒரு பார்வையை எடுத்திட்டு- வரலாற்றுல இதுக்கு ஏராளமான சான்றுகள்இருக்கு- ஆரியன் நமக்கு எதிரின்னா அவன் சொல்லக்கூடிய இன்டர்பிரடேஷன நாம எதுக்கு எடுத்துக்கொள்ளவேணும். நமக்கான அர்தத்தத் தேடுவோம். நமக்கான தத்துவத்த கண்டுபிடிப்போம். நமக்கான வாழ்ககையைத் தேடுவோம். அது இந்திய வாழ்ககை¢குள்ள இருக்கதானு பார்த்து அடையவேணுமேயொழிய பிராமணஞ் சொல்லீட்ா நானே புத்திசாலி- நீபோ மடையன்னு- ஆமா நா மடையன்னு ஒத்துக்கரதுக்கு என்ன பெரிய ஆய்வு வேணடிக்கெடக்குது. நான் எந்த பிராமணனுக்கம் இளைச்சவன் அல்ல. என்னுடையஅறிவு மகத்தான அறிவு. எந்தப்  பிராமணனுக்கும் நா அடிமைப்பட வேண்டிய அவசியமில்லை. பிராமணஞ் சொல்றத அப்பிடாயே நம்பி-ஆதிகக்ம் செய்யறவஞ் சொல்றத அப்பிடியே நம்பி- அது தான் என்னுடைய மரபுன்னு எடுத்துக் கொண்டுஇப்பிடியே நாம அழிஞ்சு போகவேண்டிய அவசியமில்லை. நமக்கு நெடுங்கால மரபுண்டு. பத்தாயிரம் இரபதாயிர்ம் ஆண்டு கால மரபுண்டு. இந்த இருபதாயிரம் ஆண்டு மரபை திரும்ப நாம நினைச்சுப் பார்த்தமுன்னா நிச்சயம்அது நம்ம நிலை நிறுத்தும். புத்தனையும் மற்றவங்களையும் நாம இழந்தவிட வேண்டிய அவசியமேயில்லை. எந்த பிராமணனுக்கும் ஈடாக மட்டுமல்ல மேலாக நாம நிமிர்ந்து நிற்க முடியும்.

யரா : கடவுள் மதம் மரபு சம்பந்தமான இடதுசாரி அணுகுமுறைகளின் போதாமைகள் சம்பந்தமாகப் பேசிக் கொண்டு வந்திருக்கிறோம். எங்களுடைய தமிழ்ச்சுழல்ல கட்டுடைப்பு என்கிற போக்கு வந்து எங்களுடைய கலர்ச்சாரத்துல நாங்க தேர்ந்து கொள்ளக் கூடிய நேர்மறையான விஷயங்களக் கூட இழிவு செய்யக்கூடியதாக இருக்குங்கிற விஷயத்த நீங்க சொன்னிங்க- இடையில நான்ஒன்னு சொல்ல வேண்டியிருக்கிறது- கட்டுடைப்புங்கற விஷயம் வந்து உண்மையில தமிழ்ச்சுழல்ல வந்த ரொம்ப விகாரமாப் புரிஞ்சு கொள்ளப்படடிருக்கிறது. தெரிதா வந்து கட்டுடைப்பைப் பற்றிச் சொல்லும்போது தான் கட்டுடைக்கிற படைப்பாளிகள் மீது தனக்கு நிறைய மதிப்பிருக்குங்கற விஷயத்த அவர் தெளிவாச்சொல்றார். ஆனா தமிழ்ச் சூழலில் படைப்பாளிகளை இழிவு செய்வது என்கிற மாதிரித்தான்கட்டுடைப்பு என்கிற மாதிரியான கண்ணோட்டம் நிலைநாட்டப்படடிருக்கிறது-அது வந்து ரொம்பவும் துரதிரு–டவசமான விஷயம்- இன்னும் தெரிதாவினுடைய பார்வையில கட்டுடைப்பை ஒரு அரசியல் செயல்பாட்டுக்கான கருவியின்னும் அவர் பாக்கிறதாத் தோணல்ல- தெரிதா மேல அவர் கட்டுடைப்பு முறை மேல பல்வேற ஆட்கள் வெக்கிற விமர்சனமும் இது ஒண்ணு- அவர் தொடர்ந்து எல்லாத்தையும் கட்டுடைக்கிறத தொடர்ந்த ஒரு அறீவார்ந்த முறையாக் கொண்டு போறார்- இந்தப் போக்க மார்க்சியம் தவிர்த்த மார்க்சிய அணுகுமறை என்நு கூட தெரிதாவினுடைய மார்க்ஸ் தொடர்பான பார்வை பற்றி விமர்சிக்கும்போது ஈகிள்டன் சொல்றார்-தெரிதா கட்டுடைப்பை ஒரு அதிர்ச்சி தர்ற விஷயமா இழிவுபடுத்தற விஷயமாச் செய்ய இல்ல என்கறதுதான் அடிப்படையான விஷயமா விசேஷமா தமிழ்ச் சுழல்ல சொல்ல வெண்டியிருக்கு-அந்தப் பகுப்பாய்வுக் கருவிய சரியா விளங்கிக் கொள்ளமுடியாததினுடய நிலதான் தமிழலே நிலவுதுன்ன நா நினக்கிறன்.

நாங்கள் ஏன் கடடுடைப்பச் செய்கிறோம் என்கிற விஷயத்தை நாம் முதலில் பார்க்கவேணும். எந்த விஷயத்தையும்நாம் நிகழ்கால அனுபவங்களிலிருந்துதான் பாரக்கிறோம். நிகழ்காலத்த்ில எங்களக்கீருகக்ிற நெருக்கடிகள்-இந்தநெருக்கடிகளுக்கானகாரணங்களைத் தேடிக் கொண்டு போகும்போது-இந்தமுரண்களுக்கான வேர்களை நாங்கள் தேடிக் கொண்டு போகும்போது நாம கடந்த காலத்தில பார்க்க வேண்டியிருக்குது- அந்தக் கடந்த காலத்த வந்து நாங்க அந்த வரலாற்றுச் சூழல்லதான் வச்சுப் பாரக்கவேணும். துரதிரு–டவசமா என்னன்னா கடந்த காலத்தையே நிகழ்காலத்தினுடைய தேவைகளோடு வச்சிப்பார்க்கிறாங்க. அப்படிப் பாரக் கும்போது அன்றைய சமூகச் சூழலில் அப்படி இருந்தது. ஒரு படைப்பாளி அல்லது சிந்தனையாளன்அன்றைய சமூகச் சூழல்ல எப்பிடி மீறிப்பார்த்தான். புதமைப்பித்தன கூட அவனது வாழ்நிலையோடு ஒட்டி அப்படித்ததான் பார்க்கவேனும். அவரை இழிவுபடுத்துகிற மாதிரியான பார்வை சரியான கட்டுடைப்புப் பார்வை இல்லையென்றுதான் நான் நினைக்கிறன்.

யரா : தெரிதாவை மூலத்துல நான் படிக்லை. தமிழ் நாட்டுல நாகார்ுூனன் அ.மார்க்ஸ் மற்றவங்க எப்ிடிச் சொல்றாங்களோ அதை வைத்துக்கொண்டுதா நா பார்க்கறன். ஆனா பக்ஷக்கும் போதே- சுயமா இது பற்றிய சில கருத்துக்கள் எனக்கு உண்டு. எனககுள்ளயே நான் தேடிக்கிறேன். கட்டுடைத்தலை இப்படி அரத்தப்படுத்தவதன் மூலமாகச் சரியான தமிழ் மரபு இவற்றையெல்லாம் கண்டுபிடிக்கமுடியும் – கடவுள்ங்கற கருத்தாக்கத்த எப்படிக் கட்டமைச்சாங்க என்கறதையெல்ாம் கண்டுபிடிக்க முடியுது. இரண்டாவதாக வரலாறுங்கறது பெரும்பகுதி ஒரு கட் டமைப்புத்தான். அதை அர்த்தப்படுத்தும் போது எப்படான்னா நிகழ்கால்த்தேவைகள் எதுவோ அதுதான் முன்னின்று அதற்கேற்றாற் போல ஒரு பழைய வரலாற்றைக் கட்டமைக்கிற போக்குதான் வரும். வுரலாற்று உருவாக்கம் என்பது நிகழ்காலத் தேவைகள் எதிர்காலத் தேவைகளினுடைய அடிப்படையிலதான் உருவாகுது என்கறிதப் புரிந்துகொண்டு பார்க்கமுடியமானால் பழங்காலத்திலும் இதே மாதிரித்தான் நிகழ்ந்தது அப்படான்னு சொல்லவேண்டிய அவசியமில்லை. எதுக்கு அப்பிடிச் சொல்றம்னா இன்னக்கி இருக்கிற சில சக்திகளோட போராடறதுக்காக அப்பிடிச் சொல்றம். வரலாறு முழக்க அப்பிடி இருந்ததுன்ன சொல்றம். அப்பிடி இல்லைங்கறதுஅவனுக்குத் தெரியவேணும். தெரிஞ்சு சொல்ல வேணும். நிகழ்காலத்தேவைகளை வைத்துத்தான் நாம பழைய வரலாற்றைப் பொருள்படுத்திக்கிறொம்கிறது புரிஞ்சிட்டு- வரலாறு வேறு ஒரு வகையில் இருந்திருக்கமுடியும்- நாம படுததுவது ஒரு வகையில் ஒரு பொருள்கோடல்- ஒரு இன்டர்பிரடேஷன் அப்பிடாங்கறத புரிஞ்சிட்டமுன்னா- பழைய வரலாற்று மேல இவ்வளவு ஒரு கோபத்த நாம கக்க வேண்டிய தேவையில்லை.

யரா : இங்க ஒரு சிக்கலான விஷயம்இருக்க ஞானே. இப்ப அதிகாரம் இருக்கில்ல.. அதிகாரம் என்கிற விஷயத்தை நாம மேல் தளத்தில ரொம்ப மேற்போக்காதான் பாத்து பழகக்ப்பட்டிருக்கிறம். பெரும்பாலும் மார்க்சியவாதிகள் நுண்தள அரசியல் நுண்தனத்தில வந்த அதிகாரம் என்னவா இருக்கு-சாதாரணமா பார்த்தீங்கன்னா குடும்பம்னு எடுத்திட்டா ஆண் பெண்ணுறவு- அப்புறம் குழுந்தை- அதனுடையசெல்லப்பிராணிகள்- அந்தப்பிராணிகள்கொல்கிற சிற்றுயிர்கள் இப்பிடி அதிகாரமும் வன்முறையும் வேறு வறு வகைகளில்ல வேறு வேற தளங்கள்ல இருக்கு. அதிகாரம் சம்பந்தமான ஆய்வு மிகமுக்கியமா தற்போது மேற்கில் வரக்காரணம். சமூகத்துனால ஒதுக்கப்பட்டவங்க இப்ப ஜிப்ஸிக்கள் இருக்கிறாங்க.- அல்லது சிறைக்ககைதிகள்இருக்கறாங்க-அல்லது பிராஸ்டிட்யூட்ஸ் இருக்காங்க- ஹோமோ செக்சுவல்ஸ் இருக்காங்க- இவங்க எல்லோருமே இந்த சமூகத்துல மோசமா ஒதுகக்கப்பட்டிருக்காங்க. இப்படி இவங்க இப்படி ஒதுக்கப்ட்டதுக்கான மாரல் எதிகல்வேல்யூஸ் வந்து எதன்மீது கட்டப்பட்டது அப்பிடான:னு பாக்கும் போதுதான் இந்த அதிகாரம் சமப்ந்தமான ஆய்வுகள் வந்து மேற்கில வருது- பூக்கோவுக்கு அதிகாரம் சம்பந்தமான ஆய்வுகள் ஒன்று வந்து செக்சவாலிடடால தொடங்குது-ஏன்னா அவர்ஒரு ஹேமோ செக்சுவல்-அதே மாதிரி அவர் சிறைக்கைதிகள் மற்றும் மனநிலை மருத்துவமனைகளில இருக்கிற ஆட்களச்சந்திக்கும்போது இம்மாதிரி ஒதுக்கப்பட்டவர்களபத்தின ஆய்வுகளிளலிருந்து அதிகாரம் சம்பந்தமான அக்கறை அவருடைய எழுத்துக்கள் எல்லாத்துலயும் விரவக் கொண்டு போகுது.- அதிகாரம் பற்றிய ஆய்வுகள் சம்பந்தமான முக்கியத்தவம் அதிலிருந்துதான் அவருக்குத் தோன்றுகிறது.

அதே மாதிரி தமிழ்ச்சூழல்ல பாத்தமுன்னாதலித் சம்பந்தமான கேள்விகள பெரும்பாலுமானவர்கள் எழுப்பிக் கொண்டாலும் தலித் சம்பந்தமான விஷயங்கள அதிகம் பேசாமல்- நான்-தலித் உரையாடலுக்குள்ளதான்இது வரைக்கும் நாம பேசிக கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலிலிருந்துதான் சகல விதத்திலும் அதிகாரம் சமடபந்தமான ஆய்வுகளின் தேவை இந்தியச் சமூகத்தில் இருக்கிறதென தலித் கோட்பாட்டாளருங்க நினைக்கிறாஙக. இதுவரைக்கும் நீங்க பார்த்துக் கொண்டு வந்த எல்லா விஷயஙகளையுமே தத்துவரீதியலதான் பார்த்துக் கொண்டு வந்தீருக்கீங்க. ஆனா அன்றாடஉறவுகள் அரசியல்பொருளாதார உறவுகள்ளதான்இருக்குது. இதிலிருந்துஅன்றாட அதிகாரத்த எதிர்கொள்றவங்கதான் அதிகாதரத்தினுடைய வேர்களத்தேடிப் போறவங்களா இருக்காங்க. இப்படித்தான் எங்களுடைய பழந்தமிழ் இலக்கியங்கள்ல எந்த விதத்தில அதிகாரம் உறைஞ்சிருக்குங்கற விஷயத்தப் பாரக்க வேண்டிய தேவை வருது.

மராத்திய தலித் கோட்பாடடாளரும்இலக்கியவாதியுமான அர்ஜூன் டாங்க்ளே சொல்லும் போது- முதல் முதலில் மகாரா–டரத்தில் தலித் இலக்கியம் வந்த போது- மரபான விமர்சகர்கள் முன்வைத்த முதல்விமர்சனம் என்ன்ன்னா- இதில அழகியல் இல்ல இதுக்கு அழகியல் மதிப்ப இல்ல-இவங்களுக்கு வடிவம் தெரியல்ல- மொழி சரியா பாவிக்கத் தெரியல்ல என்கிற குற்றச் சாட்டுக்கள முன் வைக்கிறாங்க- இதிலபாக்க வேண்டியதென்ன்னனா அழகியல் மதிப்பீடுன்னா என்ன ? அழகியல் அறம்ன்னா என்ன ? மொழி சம்பந்தமான பயிற்சி அல்லது ேதெர்ச்சின்னா என்ன ? இந்த மாதிரியான அடிப்படையான கேள்விகள் வருரம்பொது-இதற்கான அடிப்படைகள் மரபிலிருந்ததான் வருகிறது என்கிறபோது- அப்ப இந்த மரபுக்கள்ள நாங்க இல்லாத போது எங்களுளக்கான அழகியல நாங்க உருவாக்கறது எப்படிங்கற கேள்விய முன்வைக்கிறாங்க. இந்த மாதிரிச் சூழல்லதான் அதிகாரம் சம்பந்தமான கேள்விகள் மிக முக்கியத்துதவம் பெறுது. லெவி ஸ்ட்ராஸ் கூட பிரேஸில் மக்களுடைய கலாச்டசாரத்தப்பார்க்கும்போது எப்படி அத வெஸ்டேர்ன் வேல்யூசிலிருந்து விலகி கல்ச்சுரலி ரிலேடிவிஸ்டிக்காக பார்க்கவேணும் என்கிறார்.

ஞானி : அதிகாரத்தைக் குறித்த பார்வை என்பதை எனது நண்பர்கள்சொன்னபோது அது எனக்கு அதிர்ச்ியே தரலை. இது ரொமபவும் அற்புதமான ஆய்வுக்கருவியா அத தொடக்கத்த்ிலேயே என்னால எடுத்துக்கொள்ளமுடிந்தது. அந்த வகையில பார்த்தீங்கன்னு சொன்னா மன்னராட்சி அப்பிடாங்கறதே நாம மகிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.பொருள் குவிப்ப நாம மகிமைப்ப_த்த வேண்டிய அவசியமில்லை. அதிகாரம் யாரு செஞ்சாலும் நிச்சயமா அதிகாரம் செயயறவனையும் அது அழிக்கும். மார்க்சினுடைய ஒரு அற்புதமான மேற்கோள நாகராஜன் அடிக்கடி குறிப்பிடுடவார் ஆண்டானுக்கு விடுதலை தேவைன்னு சொன்னா அடிமைக்கு விடுதலை தரவேண்டும் ஊபடான்ன ஒரு கருத்து. ரொம்ப அற்பதமான கருத்து. இந்தக் கருத்து நமக்கு எவ்வளவோ விஷயங்கள துல்லியப்ப_த்து_. இத நாம எளிமையா புரிஞ்சிக்கலாம். இப்ப மத்தியதரவர்க்கம்- சாதி வர்க்கம் ஏதோ ஒரு படிநிலைல நா இருகக்கறன்னு சொன்னா- எனக்குக் கீழ தலித் மகக்ள இருக்கிறாங்க. என்னுடடைய படிப்பு என்னுடைய வாழ்ககை என்னுடைய இல்கியம் இது எல்லாங்கூட எனக்கு எவ்வளவோ சக்தியக் குடுத்துருக்கு. எவ்வளவோ பார்வைகளக் குடுத்துருக்கு. பாத்தீங்கன்னா இதுக்கெல்லாம் ஆதாரமா இருக்கறதுஅவங்களுடைய வாழ்க்கைதான். அவங்க வாழ்க்கைக்கு மேலதான என்னுடைய வாழ்ககையானது கட்டப்பட்டிருக்கு. சரியாச் சொல்லப்போன அவங்களுடைய வாழ்ககையினுடைய அழக அழிச்சிட்_த்தான். எனக்குள்ள அழக நான் வளர்த்திருக்கறன். அவங்களுடைய அழிவை அழிச்சிட்டுத்தான் எனக்குள்ள அழிவ நான்தேடிட்டிருக்கிறன். அவங்கள அதிகாரஞ் செய்துதான் எனக்குள்ள அதிகாரத்த நான்தேடிட்டிருக்கிறன். இப்பிடிப்புரிஞ்சிக்கிறது ஒரு மார்க்சியவாதிக்கு ரொம்ப ரொம்ப எளிமை.

மார்க்சியத்துக்குள்ளயும் அதிகாரம் ஏராளமாச் செறிஞ்சு கெடக்கு. ஸ்டாலினியம்மட்டுமல்ல-பாட்டாளிவரக்க் சர்வாதிகாமங்கற அந்த மாபெரும் அதிகாரம் மட்டுமல்ல- இந்த அடித்தளத்துக்கத்தான் முதன்மை என்கிறபோதே அதற்குள்ள அதிகாரம் வந்தற்றது. இதை மாவோ கூட குறிப்பிட்டிருக்கிறார். அப்ப இந் அதழிகாரம்ங்கறது அவசியமில்ல. இந்த அரசு உதிர்வதுங்கறதுபாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் முடிஞ்சு அப்ப்றம் அரசு உதிர்வதுங்கறது சாத்தியமேயில்லைங்க. அப்ப நீங்க எப்ப அதிகாரத்துக்குள்ள வர்றிங்களோ அன்றைய அந்த நிமிடத்திலிரந்தேஅதிகாரத்தைக் களைவது மககளிடத்தில கெர்ணடு போய்ச் சேர்ப்பது. மக்கள அதிகாரமயப்படுத்தறது அப்பிடாங்கற ஒரு போக்கு நிச்சயமா நடந்திருக்க வேணும். ஆனா ர–யாவுல அப்பிடி நடக்கல்ல. சீனாவுல ஓர முயற்சி மேற்கொள்ளபபட்டாலுங்கூட அது பெரிய அளவுக்கு நடைபெறல்ல. மார்க்சியத்தக்குள்ளிருந்து அதிகாரத்தைக் களையறது. இநத அதிகாரம்ங்கறத நான் எப்பிடி அரத்தப்படுத்தறன்னு சொன்னா- மார்க்சியத்துக்குள்ளேயே முதலாளியம் போயி இருக்கமாப் பதிஞ்சிருச்சு. முதலாளியமும் அதிகாரமும் பிரிக்கமுடியாதது. முதலாளியம் போய் மார்க்சியத்துல பதிஞ்சிட்டுதனால உற்பத்தி சக்திகளுக்கு முதன்மை- அடித்தட்டுக்கு முதன்மை-கட்சிக்கு முதன்மை- இந்த மாதிரியெல்ாம் கோட்பாடுகள வருகிறபோது இது எல்லாத்துக்குள்ளயும்அதிகாரம் புகந்துக்குது. இதனாலதான்ஸயன்ஸ் அன்ட் டெக்னாலஜிய விமர்சனமில்லாம ஏற்றுக கொள்ளும் போது அதுக்குள்ள முதலாளியம் ஏகாதிபத்தியமெல்லாம் பதுங்கி உள்ள வந்துசேரந்துக்குது. தஞ்சைப்

பல்கலைக்கழகத்தில ஒரு அச்சு இயந்தரம்னு சொன்னாங்க. ஒரு நாளக்கி லட்சம்பக்கம் அது அடாக்கும்னாங்க. அந்த இயந்திரம் முழு அளவில வேல செய்யறதுன்னு சொன்னா எத்தன மரங்கள அழிக்க வேண்டி வரும்சொல்லுங்க.

எங்கெல்சினடைய அற்பதமான ஒரு மேற்கோள். புகாரினுடைய கம்யூனிஸ்ம்ங்கற புத்தகத்துலதான் அந்த மேற்கோள நான் படிச்சன். நாகராஜன் சுட்டிக்காட்டினார். என்ன மேற்கோள் ? பெருந்தொழிலும் சோசலிசமும் ஒத்துப் போகாதன்ன ஒரு மேற்கோள். முார்க்ஸ்எங்கெல்ஸ் படைப்புகள்ல எந்த இடத்திலயும் இந்த மேற்கோள நான் பாரக்கவேயில்லை. புகாரின் எங்கெல்ஸிலிருந்து அந்த மேற்கோள எடுத்து ரொம்ப அற்புதமா சொல்றார். பெருந்தொழிலும் சோலிசமும் ஒத்துப் போகாதன்னு- பெரிய நகரம் பெரிய அதிகாரபீடம் மையத்துல அதிகாரத்த குவிச்சிக் கொண்டிருக்குது. மிகப்பெரிய ராணுவம் மிகப்பெரிய கட்சி. இப்பிடி இந்த பிரம்மாண்டமான கட்டுடைப்புகள எந்த வகையில செஞ்சாலும் அதிகாரக்குவியல எற்படுத்துது. ஆது மக்கள எந்த வகையிலாவது அழுத்தத்தான் செய்யும். ரு–யா உடைஞ்சு போச்சன்னு சொல்றுதக்கு ஒரு முக்கியமான காரணம்இதாங்க. அப்ப இந்த அதிகாரத்தைக் களைவது என்பது மார்க்சியத்தக்குள்ள இல்லாதது அப்படான்ன நா நினக்கல்ல. அப்பிடிப்பாரக்கும்போது தெரிதாவோ மற்றவங்களோ அதிகாரத்தக் களைவதுங்கறத விட்_ட்டு சூனியத்துக்குப் போய்ச் சேரவேண்டியதில்லை. இதை ஒப்புக் கொண்டாங்கன்னா எத்தனையோ விஷயங்க நமக்குத் தெளிவுபட்றும். திருடர்கள் ரொம்ப பேரு நம்ம சமூகத்துல குற்றஞ் சாட்றம். வுியாபாரிங்கறவன விட பெரிய திருடன் வேறெவனமில்ல. மார்க்ஸ் சொன்னமாதிரி முதலாளியவிட கற்பழிப்பு செய்யக்கூடியவன் வேறொருத்தன்கிடையாது. இவனெலலர்ம் சமூகத்துல முக்கியமானவன்னு சொல்லீட்டு சில பெண்கள பிராஸ்டிட்யூட்னு- உடலை விற்பனை செய்யககூடிய பெணக்ள்னு அவன   கேவலப்படுத்தறான். இந்த மாதிரிப் பாதத்ீங்கன்னு சொன்னா-குற்றம் செயயறவன் தப்பிட்டு குற்றத்துக்கு உள்ளாகக்ப்பட்டவங்கள ஜெயிலுக்குள்ள தள்றாங்க-விளிம்புநிலைக்குத்தள்றாங்க- எங்களுடய சமூகம் ரொம்ப ஆரோக்யமானது சட்டவரையறைக்குள்ள இய்ங்கற சமூகம்அப்பிடாங்கறாங்க. தலித் மக்கள மட்டுமல்ல சமூகத்தினுடைய ஒவ்வொருபகுதி மக்களா அவன் விளிம்பு நிலைக்குத்தள்ளனீட்டே வர்றான். இது சந்தைப்பொருளாதார உலகமயமாதல் சூழல்ல அது ரொம்ப வெளிப்படையாத் தெரியுது. இன்னக்கி இருக்கிற அத்தனை உழவர்களயும் விளிம்பு நிலைக்கு அவன் தள்ளீட்டு இருக்கறான். உழவர்கள மட்டுமல்ல கைவினைஞர்கள் மற்றவர்களெல்லாம் ஏற்கனவே விளிம்பு நிலைக்குத்தள்ளப் பட்டுட்டாங்க.

அப்ப இந்த அதிகாரம்ங்கற கருத்தாக்கத்த சரிவரப் புரிந்து கொண்டம்னு சொன்னா- . பூங்குன்றன் ரொம்ப அழகாச் சொல்றாருே- தமிழ்ச்சூழல்லஅரசாக்கம் என்பது சோழப்பேரரசு உருவாகிறபோதுதான் ஓரளவுக்கு அத அரசுன்னு சொல்லமுடியும். அதுவரைக்கம் அத அரசுன்னு சொல்லமுடியாது. இது ஒரு முககியமான ஆ_வா எனக்குத் தோணுது. நமது முக்கியமான நண்பர்கள் மார்க்சியவாதிகள் என்று சொல்ப்படுகிறவர்கள். கேசவனைப் போன்றவர்கள்- மன்னன்னு ஒருத்தனிருந்தாஅது நிலவுடமை அப்பிடான்னு உடனே வந்தர்றாங்க. அட மன்னனா-அவனுக்குஎன்ன அதிகாரம்இருக்கு என்ன கட்டமைப்பு இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணும்போது அத நிலமானியம்னு சொல்லித்தொலைக்கிறாங்க.நிலமானியம்ங்கறது ஐரோப்பாவில இருந்த சிஸ்டம் அது. இங்கே நிலமானிய முறை இல்ல. இங்க இருக்கறது வேற. மார்க்ஸ் ஆசிய உற்பத்தி முறைன்னு சொன்னாரு.அதுதான் இங்க சரியாப்பொருந்தும். ஆசிய உற்பத்தி முறைச் சமூகங்கறதுதான் இந்தியச் சூழலுக்கு புரிந்து கொள்வதற்கு ஒரு சரியான ஆய்வு முறையா இருந்திருக்கும். அத எப்படியோ மார்க்சுக்குப்பிறகு அந்த ஆய்வுமறை ஒதுகபபட்டுட்டது. சோவியத் யூனியன்லயெ அவங்க அந்த ஆய்வு முறயத் தொடரல்ல. தொடராததற்கான காரணங்களெல்லாம் உண்டு. இந்த மாதிரியெல்ாம் பாரக்கமுடியுமானால் இந்த அதிகாரம் கட்டமைப்பு போன்றத எல்லாத்தையும் உளவாங்கிட்டு நாம் மார்க்சியத்த அழகா அர்த்தப்படுத்தமுடியும். மாரக்சியத்த வளர்த்தெடுக்க முடியும்.

இந்த அதிகாரம் கட்டமைப்பு டாகன்ஸ்ட்ரக்ஸன் மற்றதெல்லாம் வந்துட்டதனாலேயே மார்க்சியம் எங்களுக்கான ஆய்வு முறை அல்ல. அது எங்களுக்கான தத்துவமல்ல அப்பிடான்னு புறக்கனிக்கறது -வேறெந்த வார்த்தையில சொல்றது- முட்டாள்தனம் என்கறதத் தவிர்- புரிஞ்சிக்கிலீங்கறதத் தவிர வேற எந்த அர்தத்ததுல சொல்லமுடியும் ?

யரா: இப்ப சோவியத் யூனியன் வ ‘ிழ்ந்திருச்சு கிழக்கு ஐரோப்பிய நாடகளினுடைய அனுபவங்கள் இருக்கு. ஸ்டாலினியம் அதிகாரவர்க்க சோசலிசம் போன்ற விஷயங்களையும் இதனுடைய வீழ்ச்சியோட வச்சு விவாதிக்கலாம். இது எல்லா காலனியாதிக்க எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேச விடுதலைப் போராட்டங்களுக்குப் பின்ன்ான சமூகங்களுடைய அனுபவங்கள்இருக்கு. இந்தமாதிரி புரட்சிக்குப் பிந்திய சமூகங்கள்ல ஜனநாயமின்மைங்கறது ஒரு மிகப்பெரிய பிரச்சினயா இருக்கு இது மாதிரியான விஷயங்களக்கொஞ்சம் முன்கூட்டியே சொல்ற மாதிரி இந்தப் பிரச்சினகள எர்னஸ்ட் லக்ளாவ்சந்தால் மொபே ரெண்டு பேரும்சேர்ந்து எழுதுன ஹெஜமனி அன்ட் சோஷல் ஸ்ரேடஜி- ஒரு புரட்சிகர ஜனநாயகத்தை நோக்கிங்கிற புத்தகத்துல பேசறாங்க.இப்ப ஜனநாயத்த அதிகம் வலியறுத்தற தாராளவாத சமூகத்தலகூட அதிகாரம்ங்கறத தனிநபர் முதலாளிகளினுடைய அதிகாரமா வந்து மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு கூட இல்லாம போய்க்கிட்டிருக்கு- பியர்ரே போதிரியோ மாதிர் பிரெஞ்சு சமூகவியலாளர்கள் இப்ப இந்தஆபத்த பத்தியும் பேசறாங்க. ஸ்டாலியத்தினுடைய லெகஸீஸ் வநது தேசவிடுதலைப் போராட்ட இயககங்கள்லயும பரட்சிகர இயகக்ங்கள்லயும்இந்த நிமிஷம் வரைக்கும் தொடருது.

இந்தச் சூழல்ல தேசியம் என்கற பிரச்சன வந்த ஒரு மிக முக்கியமான பிரச்சினயா வந்திருக்கு. தேசியம் ஒரு கருத்தியலா வரும்போது பாசிசத்தக்கான கூறுகள் அதுக்குள்ள செரிஞ்சு போகுது. தியாகு மணியரசன் போன்ற மாரக்சியர்கள் இப்ப தமிழ்த்தேசியத்த வரையறுத்துட்டு வர்றாங்க. இவ்ங்களுக்கிடையில் கருத்தியல்அடிப்படையில வித்தியாசங்களும்இருக்குது. இப்படியான சூழல்ல நீங்களும் சமீப காலமா தமிழ்த் தேசியத்தில் ரொம்ப அதிகமா ஆர்வங்காட்டி வர்றது தமிழ்நேசத்துல வறற கட்டுரைகள் சமகாலததில வற்ர உங்களுடைய பல்வேறு எழுத்தகளப்பார்க்கத் தெரியுது. மார்க்சியத் திட்டம் வந்து உலகுதழுவிய சில மதிப்பீடுகள் முன் வச்சுது. இனம் மொழி வர்க்கம் பால் வேறுபாடகள் போன்றவற்றைக்கடந்து சர்வதேசிய மனிதனுக்கான மதிப்பீடுகள முன்வச்சுது. இன்றைய சூழல்ல- பின்நவீன்த்தவ யுகம்னு சிலர் சொல்றாங்க- இந்த உலகமதிப்பீடகளுக்கு எதிரான பிராந்திய மதிப்பீடுகளவச்சுத்தான் போராட்டம்கிறது முன்னெடுக்கப்படுது. தேசியம் சம்பந்தமான பிரச்சினைகளையும் நாம் அப்பிடியும் புாிஞ்சு கொள்ள முடியும். நீங்க மனிதனை மனிதன்நேசிக்கற்தங்கற விஷயத்த தொடர்ந்து வலியுறுத்தீட்டு வர்றீங்க. குணா போன்றவர்கள் பொஸ்னியாவில் முஸலீம் மக்கள இனச்சத்திகரிப்பு செஞ்சமாதிரி தமிழக்த்திலிருந்து தெலுங்கு மக்கள வெளியேற்ற வேணும்னு சொல்றாங்கஇப்படியான சுழல்ல தமிழ்த் தேசியத்துனுடைய மானுட உள்ளடக்கத்தை நீங்க என்ன மாதிரி விளக்குவீங்க ?

ஞானி : மார்க்சியவாதிகளப் பொறத்தவரைக்கும் ஸ்டாலினுடைய நானகு வரையறைகள குறிப்பாச் சொல்லுவாங்க. சொல்லப்போனா நேஷனலிசம்ன்னு சொல்லக்கூடியது ஐரொப்பாவுல முதலாளியத்தோட வளரச்சி பெற்ற ஒரு கருத்தாக்கம். நிலக்கிளாரியத்துக்கு எதிராக மன்னராட்சிக்கு எதிராக தொலாளர்களை அணிி சேரத்துக்கொண்டு தொழிலதிபர்கள் வியாபாரிகளோடும் தொடர்புடையவங்க வந்தாங்க- அவங்க ஆட்சியக் கைப்பத்தனாங்க. அந்தச் சமயத்துல மக்கள தங்களோட இணைத்துக்கொள்றதுக்கான என்னுடைய மொழி என்னுடய தேசம் அப்பிடாங்கறத ஒன்னாக் கொண்டுவந்தாங்க. இப்படி பாத்தீங்கன்னா தேசத்துக்கு மதம் வேண்டியதில்ல இது நம்முடைய தேசம் அப்பிடாங்கறமாதிரி ஒரு கருத்துக்கு வந்துசேந்தது. ஸ்டாலின் தன்னுடைய வரையறைய அந்த அனுபவஙகளிலிருந்துதா தொடக்கறாரு. ஓரு தேசம்ன்னு சொன்னா ஒன்னு மொழே. அப்பறம் குறிப்பிட்ட நில எல்லைகள். ஓரு பொருளியல் அமைப்பு. அப்புறம் வரலாறு சார்ந்த பண்பாடு இந்த மாதிரி நான்கு கூறுகள். இந்த வரையறைகள வைக்கிறார் ஸ்டாலின்.வக்கறது ஒரு தேசம் அப்பிடாங்கறதுக்கான வரையறைகள் மட்டுமல்ல. இந்த வரையறைகள் முதலாளிய வரையறைகள்தான் அப்பிடாங்கறதையும் நாம கண்டுபுடாச்சிக்க வேணும். முதலாளியச் சூழல்ல ஏற்ப்பட்ட வரையறைகள்தான் என்பதையும் சேர்த்துக்கொள்ளோனும்.

முதலாளியச் சூழல்ல லெனினனைப்பொறுத்தவரைக்கும் நிச்சயமாதேசவிடுதலை அப்பிடான்னு சொல்லக்கூடியது ஒரு தேசிய முதலாளியினுடைய தலைமையில நடக்ககூடியது. தேசிய முதலாளிகளினுடைய தலைமையில நடக்கக்கூடிய இதில தொழிலாளிகள் தங்கள அணி சேர்த்துக்க வேணும். இந்த போராட்டம் ஏகாதிபத்தித்திற்கு எதிரானது. அது ஏகாதிபத்தியத்த பலவீனப்படுத்துவதற்கு தேசவிடுதலைப் போராட்டங்கள் பெரிய அளவக்குப்பயன்படும் அப்பிடாங்கறத ரொம்பத் தெளிவாச் சொன்னார். இதற்கு கொஞ்சம் முன்னால பாத்தீங்கன்னா எம்..என்.ராய் போன்றவங்க கடுமையா மாறுபட்டு மூன்றாம் உலக நாடுகள்ல தேசிய முதலாளிகள் கிடையாது. இவங்க ஏற்கனவே ஏகாதிபததியத்திற்கு சேவை செயய்ககூடிய தரகு முதலாளிளா மாறீட்டிருக்கிறான். ஆகவே தேசவிடுதலைப்போராட்டங்கறது ஒரு பூர்–வாவினுடைய தலைமையிலே மேற்கொள்ளக்கூடிய போராட்டமல்ல தொழிலாளிவர்க்கம் தன்னுடைய தலைமையில தேசவிடுதலைக்காகப் போராட வேணுமுனனு சொல்லி எம் என் .ராய் சொன்னாரு. இதச் சரியானபடி கடைப்பிடித்தவரு மாவோதான். ஸ்டாலின் சியாங்கே ஷேக்கோட சேரந்து நீ நில்லுன்னுதான் கடைசிவரைக்கும் சொல்லிட்டு இருந்தாரு. ஆனா சியாங்கே ஷேக்க உதரீட்டுதான் மாவோ அந்தப் போராட்டத்துல ஈடுபட்டாரு. வெற்றியும் கண்டாரு. அந்த முதலாளிய வரையறையத்திரும்ப நாம சரியாப் பரிஞ்சிக்க வேணும். அப்ப அந்த முதலாளியம்தான் தேசத்தினுடைய மொழியை வரையறை செய்கிறது. முதலாளியந்தான் தேசத்தினுடைய எல்லையை வரையறை செய்கிறது. அந்த முதலாளியம்தாள்இந்ததேசத்தினுடைய முன்னைய வரலாறு என்கிறதையும் வரையறை செய்கிறது. அதே முதலாளியம்தான் நமக்கான பண்பாடு என்ன என்பதையம் வரையறை செய்கிறது. இதை நாம கண்டுபிடிச்சுக்க வேணும். இதக் கண்டபிடிச்சிட்டு இந்த தேசம் இந்த வரையறை பாட்டாளி வரக்கத்துக்கு உழைக்கும்மக்களுக்கு உரிய வரையறை அல்ல. அப்படான்னா இந்த வரையறையை நாம என்ன செய்யலாம் ? முதலாளிய வரையறையா இருக்கம் போது தான் அதிலிருந்து இட்லர்வந்து சேர்றார். மற்ற கொடுமைகள் எல்லாம் வந்து சேருது. பாசிசம் இந்த முதலாளிய வரையறைக்கள்ளிருந்துதா வருது. இது நம்முடைய தேசம். ஈத நம்ம பூர்வீகம். இவன் இடையில வந்தவன்.இவன வெளியேற்று. வெளியேற மறுத்தான்னா அவனக் கொல்லு அப்பிடாங்கறதெல்லாம் வரும். ஆனா முதலாளிய வரையறைன்னு இதப் புரிஞ்சிட்டமடன்னா இத எப்பிடி பாட்டாளிவரக்க வரையறையாக மாற்றுவது அப்படாங்கற கேள்வி வரது.தேசியங்கற அந்தக் கருத்தாக்கத்துக்குள்ள அந்த வரையறைக்குள்ள இருக்கற அந்தக் கூறுகளக் களைய முடியுமா அப்பிடான்னு பார்க்கவேணும். களையமுடியும்கறது நமக்குப் புரிகிறது.

தமிழ்நாட்டுல கு.சா.ஆனந்தன்னு சொல்லி ஒருத்தர் இருந்தார். அன்மையில் அவர் காலமானார் திராவிட இயக்கம்மார்க்சியம் ரெண்டுலயும்அழுத்தமாக இருந்த ஒரு அறிஞர் அவர். இவர்தன்னுடைய நுால்ல இந்த ஸ்டாலினுடைய வரையறைகளுக்குள்ள சமத்துவம் சமதர்மம்னுரெண்டு வரையறைகளை உள்ளடக்க வேணும்னு சொன்னார். சமத்துவம்னு சொன்னா சாதிகளுக்கிடையில சமத்தவம். சாதியற்ற நிலை. சமதர்மங்கறது உடமைக்கெதிரான ஒரு வரையறை. இந்த ரெண்டு வரையறைகள நுழைச்சீங்கன்னு சொன்னா அந்த முதலாளிய வரையறைககுகள்ளிருக்கிற முதலாளியக் கூறுகளக் களையமுடியும். களைந்து பாட்டாளிவர்கக்த்துக்குரிய வரையறையாக அதை மாற்றமுடியும்ன்னு அதை அவர்சொன்னார். இத ஆரம்பத்தில கட்டுரையாக எழுதி எனக்கு அனுப்பியபோதே என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ரொம்ப அற்புதமான ஒரு கோட் பாடாக அது இருந்தது. அதுக்கு ஆதரவா பல கட்டுரைகள மேற்கோள் காட்டி எழுதனன்  நான். ஆனா புத்திசாலிகள் திரும்பத்திரும்பப் பாத்தீங்கன்னு சொன்னா அவங்கஇந்த வரையறைய எந்த வகையிலும் பொருட்ப_த்திக்கவேயில்ல.

இந்த தேசங்கறது உழைககும்மக்களுக்குஉரியது. தொன்னாறு தொன்னுாத்தொன்பது சதம் மக்களுக்கு உரியது. இந்த நிலம் எங்களுக்கு உரியது. இந்த இயற்கை எங்களுக்கு உரியது. இந்த அரசியல் நாங்கள் தீர்மானிக்ககூடியது. இதனுடைய பொருளியல் எங்களுக்கு உரியது. இதனுடைய கல்வி மருத்துவம்அனைத்தும் எங்களுடைய தீர்மானத்தக்குள்ளதான் இருக்கும். திராவிட முன்னேற்றக்கழகப் பண்பாடு எனறு சொல்வது முதலாளிய தேசியப் பண்பாடுதான். திராவிட முன்னேற்றக்கழகம் சொல்கிற வரலாற்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்குக்கிடையாது. தமிழ் வரலாறு என்னங்கறத நாமதான் கண்டுபுடிக்கோணும். நிச்சயமாக உழகை¢கும் மக்கள்னு சொல்றவங்க இந்த முதலாளிய சக்திகள் வரலாறுன்னு என்ன சொல்லியிருக்காங்களோ பண்பாடுன்னு என்ன சொல்லியிருக்காங்களோ எல்லைன்னுஎதச் சொல்றாங்களோ தேசம்ன்னு எதச் சொல்றாங்களோ மொழின்னு எதச் சொல்றர்ங்களோ எல்லாத்தை_ம்பொருண்மையான பகுப்பாய்வுக்குஉட்படுத்தியாகவேணும். இந்தக் காரியத்த தமிழ்த் தேசியச்சக்திகள் என்று சொல்றவங்க செய்யவேயில்லை. தொடங்கவேயில்லை.

இதுக்குள்ள போனீங்கன்னு சொன்னா நீங்க ஏற்கனவே சொன்னமாதிரி இந்தத் தமிழ்த் தேசியத்துல ஒரு பாசிச்ப் போக்க அவங்க கொண்ட வர்ராங்க. தெலுங்கன வெளியேற்றவேணும். அருந்ததியர வெளியேற்ற வேணும். கொன்னு தீக்க வேணும் அப்பிடின்னு கொண்டு வர்றாங்க. இந்தக் கூறுகள வேறு சிலரும் கடைபிடிக்கிிறாங்க. சில பேரு வாய்மூடி மெளனிகளா இருக்காங்க. நாம இத வெளிப்படையாப் பேசேவுணும் வெளிப்படையாப் பேசறப்ப- ஏய்யா நீ தெலுங்க வீட்டுல பேசினாலும் சமூகத்துல வெளில கல்வி கற்கிற இடத்திலமற்றவங்களோட உனக்குத் தாய்மொழியா இருக்கறது தமிழ்தான். அறிவையும் உணர்வையும் தரக்கூடிய மொழி எதுவோ அது தாய்மொழி. நீ விட்ல தெலுங்க பேசினாக்கூட அடுத்த தலைமுறைல உன்ற குழந்தைக தெலுங்கு பேசப்பபோறதில்ல. உன்னுடைய ஆளுமைகள் இந்தச் சூழல்லதான் வளர்ருதுன்னு சொன்னா நீ தமிழன்கறத தயவு ெசுஞ்சு நீ புரிஞ்சிக்க வேணும். நீ மறுபடி தெலுங்கன்னு சொல்லி நீ ஆந்திராவுக்குப் போகமுடியாது. இந்தத் தேசம்தான் உன்னுடைய தேசம் இந்த மரபுதான் உன்னுடைய மரபு அப்பிடான்னு சொல்லி அவங்களோட கொஞ்சம் நிதானமாப் பேசி ஒரு அனபான முறையில உரையாடல் நிகழ்த்தித்தான் நாங்க நெறிப்படுத்தமுடியமேயொழிய மற்றபடி நீ தெலுங்கன் தெலுங்கன் தெலுங்கன்னு சொல்லி அவன நாம எதிரியாக்கறது நம்ம பலவீனப்ப_த்தும்.அருந்ததியர்களா இருக்கிறவங்க எந்த மொழி பேசினாலும் அவங்க நம்ம சமூகத்துக்கு ஆக்கத்துக்கு எவ்வளவு காலமா உழசை¢சிருக்காங்க. அவங்கள எப்பிடி நாம அன்னியராக்கமுடியும். அதத மாதிரித்தான் மற்றவங்களையும் நாம கவனமா ஆய்வுக்கு உட்படுத்தினா இந்த தேசியம்கற கருத்துக்குள்ள சமதர்மங்கற கருத்தஉள்ளடக்க முடியும். சமத்துவத்த உள்ளடக்க முடியும். நமக்கு நிச்சியமா உலகளாவிய மனிதனா இருக்கமுடியும்.

தமிழன்னு சொல்லக்கூடியவன் உலகளாவிய மனிதன்கிற தகுதியப் பெறுவதற் கு ஏராளமான வாயப்புக்கள்இருக்குது. திருக்கறள் சித்தரிலக்கியங்களையெல்லாம் மனசில் வச்சுப் பாத்தீங்கன்னா இதுதான் தேசியங்கற அர்த்தத்த தரக்கூடியது. தேசியத்தையும் பாசிசத்தையும் பிரிக்கமுடியுமுன்னு எனக்குத் தோணுது. தமிழ்த்தேசியத்துக்குள்ள பாசிசம் ஒரு கூறாக இருந்து தீரவேணும்கற கட்டாயம கிடையவே கிடையாது.

யரா: சமூகத்துல மதத்தினுடைய பங்கு பற்றி விளங்கிக் கொள்றத நீங்க அதிகம் வலியுறத்துறதுனால தேசியத்துல மதத்துனடைய பங்குஎன்னங்கறதுப் பத்திப்பேசலாம்னு நெனக்கிறன். ஆப்கானிஸ்தான் தேசியத்தை இஸ்லாமிய அஉப்படைவாத்திலிருந்து பிரிச்சுப்பாரக்கமுடியாது. ஐரோப்பாவுல கூட தேசங்களுக்கடையிலான யுத்தத்தில பிராடஸ்தாந்த கத்தோலிகககப் பிரவினை ஒரு மிக முக்கியமான கூறா இருந்திருக்குது- உதாரணமா அயர்லாந்தப்பிரச்சினய இப்பிடிப்பாரக்கலாம். இப்பிடிப் பாரக்கிறபோது நீங்க சொல்ற தமிழ்த் தேசியத்துதக்குகள்ள மதம் சம்மபந்தமான பங்களிப்பு மற் றது பல்வேறு மதங்களுளக்கிடையிலான உறவுகள் என்ன மாதிரி அமையும்ன்னு நீங்க நினைக்கிறிங்க ?

ஞானி : மனோன்மணியம் சுந்தரனார் திராவிடம்னு பேசிய கலத்துல சைவமதச்டசார்பை அவருக்குள்ள வச்சிருந்தாரு. திராவிடம்கற கருத்தாக்கத்தக்குள்ள அது இருந்திச்சு. மறைமலையடிகள் போன்றவங்களுக்கு அந்தக் கருத்தாக்கம் இருந்ததுங்கறத மறுக்கறதுக்கில்ல. அதே மாதிரி ரொம்ப ஆச்சரியப்படுகிற முறையில திராவிடர்கள்னு பெரியார் பேசும்போது சாதிஇல்லை மதம் இல்லின்ட்டு இன்னொரு எல்லைக்கு அவர் போனாரு. அப்படான்னு பாக்கும்போது பெரும்பாலான தமிழ்த்தேசியர்கள் பெரியார்சொன்னதச் சொல்றாங்க. எங்களுக்க கடவுள் வேண்டாம் சாதி வேண்டாம் மதம் வேண்டாம். சாதி மதம்னாலே பார்பப்னியம்தான். அப்பிடாங்கறமாதிர் அவங்க சில திரிபு வாதஙகள மேற்கொள்றாங்க அவங்க. எனக்கு என்ன தோணுதுன்னா மதம்ங்கறது ஏற்கனவே முதலாளிய வரையறைகள்ல பண்பாடுன்னு சொன்னங்க பாருங்க அந்தப்பண்பாட்டினுடைய ஒரு கூறு மதம். ஏற்கனவே இருந்த ஆதிக்கவாதிகள் அந்த மதத்தை தேசத்தோடு ஐக்கியப்படுத்தியிருக்காங்க. இந்தியாவுக்குரிய மதம் ஒன்னுன்னு சொல்வான்.. தமிழ்நாட்டுக்குரிய மதம் சைவம் வைணம்னு இன்னொருத்தர் சொல்வான். தமிழ்ச்சூழல்ல சில ஆய்வார் கள் செசுஞ்ச அக்கிரமங்கள நாம யோசிசச்சுப்பாரக்கவேணும். சதாசிவ பண்டாரத்தார் போன்ஙவங்கள்லாம் சமணம் பெளத்தமெல்லாம் அந்நிய மதம் எனகிறாங்க சைவம் வைணவந்தான் தமிழனுடைய மதம்ன்னு சொல்லி இந்த மாதிரி கதைகளயெல்லாம் -பொய்யுரைகளையெல்லாம் பண்ணியிருக்காங்க- ஐயா சமணம் பெளத்தம் தமிழ் நாட்டுக்க வந்த பொழுதுதான் தமிழ்ச்சூழல்ல திருக்குறள் அறம் முதலிய விஷயங்களெல்லாம் மேலுக்க வருது. ஏராளமான விஷயங்கள் தமிழ்ச்சுழூழுக்குள்ள வந்து சேருது. முந்திய விஷயங்களுக்குள்ள நிறையமாற்றங்களக்கொண்டுவந்து இவனத் தமிழனாக்கியது இந்த மதங்கள்தான். சமணம் பெளத்தம் போன்ற கருத்துப் பொக்கிசங்கள்தான்3  மாதம்கறத சமம் பாரப்பனியம்ன்னு பாரக்க வேண்டியதில்ல .

மதம் வந்து நிறுவனமயமாகிறபோது சொத்து முதலியவற்யையெல்லாம் சேகரிக்கிற போது அது அதிகார பீடமா மாறும். அது மக்களுக்கு எதிரானது. மக்களுக்கு எதிராக மதம் மாறுகிறபோது எல்லா மதங்களுக்குள்ளிருந்தும் கலகம் புறப்படும். அது மக்கள் சார்பான கலகம். மதத்துல எப்பவும் ரெண்டு போக்கு இருக்குது. ஆதிக்கத்துக்கு எதிரான மதம பொக்கு இருக்குது3. கிளரிக்கலிசம்-. புரோகிதம். அதுதான்  கோயில்  சடங்கு பார்ப்பனியம் மந்திரம் தந்திரம் இதுவெல்லாம் பேசக்கூடியது அதுதான். இதற்க எதிரான தீர்க்கதரிசிகள்னு சொல்லக்கூடியவங்க மக்கள சார்பா கலகம் செய்வாங்க- அவங்கதான் சித்தர்கள் சாதியேது சடங்ஆகது என்று பேசக்கூடியவங்க. இயேசுநாதர் அந்த மாதிரே முன்னே இருந்த மதப்போக்குக்கு எதிரான ஒரு கலகக்காரர்தான். பின்னாடி இதே கிறிஸ்தவம்ன்னு சொல்லக்கூடியது ஆதிக்த்ததன்மைபெறும்போது அதிலிருந்து லிபரேஷன தியாலஜிஸ்ட் தோனறாங்க.ஆதிக்கத்தைக களையற போக்கு அப்ப வற்ரது. முதம்ங்கறது வெறுக்கத்தக்கது அருவருக்கத்தக்கது-. பெரியார் சொல்ற மாதிரி பரப்பியவன் அயோக்கியன் கண்டுபிடிச்சவன் காட்டுமிராண்டி இப்பிடியெல்பாம் போறது மாரக்சியவாதிக்கு நிச்சியமா உடன்பாடா இருக்கவே முடியாது. இது மதம் பற்றிய ஆய்வே கிடையாது. தமிழ்நாட்டிலிருக்கிற மார்க்சியர்களெல்லாம் பெரயோரியந்தான் ஒரே வழின்னு கொண்டிருக்கிறாங்க. இது மார்கசியத்த முடமாக்கிற போக்கு.

மதம்கறது அதுக்குள்ள மக்கள் சார்பங்கறது ஒனனா இருக்கு. வுிவேகானந்தரப் பாருங்க. பாரதியாரப்பாருங்க. அத்வைதங்கறது எல்லா ஒன்னுன்ன சொன்னா நீயென்ன உயர்ந்த சாதி நானென் ன தாழ்ந்த சாதி-எல்லாத்தையும் பொதுவாய் வை என்கிற கருத்துக்கு அத்வைதத்த வச்சே விவேகானந்தர் வர்றார். பெரியார் ரொம்ப அற்புதமா ஒருகட்டுரை எழுதி வச்சிருக்கார்ங்க. அதை பெரியாரியர்கள்  யாரும் பொருட்படுத்தரது இல்ல. அதுல என்ன சொன்னாருன்ன சொன்னா. வேதமும் கம்யூனிஸமும் வேற வேற அல்ல. அப்பிடான்னு சொல்லீட்டு விளக்கஞ்சொல்றாரு. வேதம் என்ன சொல்லுது. எல்லாமே ஒன்னுன்னு சொல்லுது. எல்லாமே கடவுள்னு சொன்னா நீயென்ன பெரிசு நானென்ன சிரிசு. நுானென்ன அடிமை நீயென்ன ஆதிக்கம்- வேண்டாம-. மதம் என்ன சொல்லுது நாம  எல்லாம் கடவுளின் குழந்தைகள்னுன சொல்லுது. குழந்தைகள்னு சொன்னா அப்புறமென்ன ஏற்றத்தாழ்வு வேண்டிக் கிடக்குது. வேதமும் கம்யூனியமும் ஒன்னுன்னு பெரியார் கண்டுபுடிச்சு அற்புதமாச் சொல்லிவச்சிருக்காரு.

யரா : கிறிஸ்டியானிட்டி லிாரேஷன் தியாலஜி மற்றதெல்லாம் இலத்தீனமெரிக்க புரட்சிகர இய்கக்ங்களல் வெச்சுப்பார்ககம்போது ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்கு. இன்னமும் பொலிவிய விவசாயிக இயேசு கிறிஸ்துவினுடைய ஏன்னொருவடிவமா சே குவேராவப் பாரத்திருக்கிறாங்க. இப்ப அவருடைய எலும்புக்கூடு கிடைச்ச இடம் கிறிஸ்தவ நம்பிக்கையுள்ள இல்த்தினமெரிக்க மக்களுக்கு ஒரு யாத்திரை ஸ்தலமா ஆகியிருக்கு. இயேசு கிறிஸ்து ஒரு தனிநபராக தனிமனித சுதந்திரம் பொறுப்புணர்வ போன்றவந்றை வலியுறுத்தியவராகத்ான் இருந்தார். ஒரு சமூகத்தில ஒரு தனிநபரின் விடுதலை அவருக்னகப்பிரச்சினையாக இருந்தது. அப்படித்ததான் தனிநபருக்கான வரலாற்றுப் பொறுப்பக் கருதி லிபரேஷன் தியாலஜிஸட் புரட்சிகரப் போராட்டத்துல பங்கேற்கறத வலியுறுத்தினாங்க.

பி.பி.சி.யினுடைய இந்திய நிருபர் மார்க் டெல்லி இந்திய சுதந்திரத்தினுடைய பொன்விழா சம்பந்தமா எடுத்த டாக்குமென்டரியில கூட ஒரு தலித் பொண்ணு சொல்லும்போது கிறிஸ்து தங்களப்போலவே ஒண்ணுமில்லாதவரு நிராகரிக்கப்பட்டவருக்காக போராடுனவரு அதனால அவரு எங்க கட்வுள்னு சொல்றாங்க. ஆனா இந்து மதத்தப் பொறுத்தளவு அப்படியான லிபரேஷன் தியாலஜிகல் ட்ரெண்ட பார்க்கமுடியாது. சாவர்க்கர்லெ இருந்து அரவிந்தர் வரைக்கும் இந்துமதத்த தேசவிடுதலை மற்றது வன்முறையோட இனச்சவங்களெல்லாம் சமூக அளவுல வலதுசாரிகளாத்தான் இருக்காங்க. இப்பக்கூட இந்திய தேசம் வன்முறை தேசியம் விடுதலைன்னு பேசறவங்க ஆர்.ஒளஸ்.எஸ்.காரங்களாதான் இருக்காங்க. அதெ மாதிரி இவங்க எல்லாம் ஒரு ஐடியல் சொசைட்டிய – பிராமினிகல் சொசைட்டிய-உருவாக்குகிற கும்பல்ல ஒருத்தராதான் இருக்காங்களே அல்லாம பிரக்ஞையுள்ள விடுதலையுணர்வுள்ள தனிமனிதர்களா இல்ல. இப்படியான சூழல்ல லிபரேஷன் தியாலஜிகல் டிரெண்ட் இந்து மதத்துக்குள்ளிருந்து சாத்தியமாகும்னு தோணல்ல—

ஞானி : மதம்கறது அடிப்படையிலயே பார்பனியம்னு சொல்லி- மதம்கிறத அடிப்படையிலயே முட்டாள்தனம்ன பேசிப்பேசி நம்ம திராவிட இயக்கதத்தார் என்ன பணணிட்டாங்கன்னா மக்களிடமிருந்து ஒரு வகையில் அன்னியப்பட்டிருக்காங்க. இந்த இடத்துல இந்துத்துவ வாதிகள் வந்து கெட்டியா உட்கார்ந்துக்கிறாங்க. மக்களுக்கு என்னைக்கும் கோயில் தேவைப்படுது கோயில் திருவிழாக்கள் தேவைப்படுது.இவங்க எல்லாத்தையும் மறுக்கறாங்க. அப்ப எனனான்னனு சொன்னா இந்துத்துவ வாதிகள் ரொம்ப சாமார்த்தியமா அந்த இடத்தைக் கைப்பற்றமுடிகிறது. அதுக்குப் பதிலாக நீங்க மதம்ங்கறது என்ன கடவுள்ங்கறத என்ன- சடங்குகள் இல்லாம இந்தச்சமூகம் எந்தக் காலத்திலும் இருந்தது இல்ல- இந்த மாதிரிக் கொஞ்சம் ஆய்வுகளோடப் போயிருந்திங்கன்னு சொன்னா மககள நீங்க உங்க வயப்படுத்தியிருக்கமுடியும். கேரளாவில நாராயண குருவினடைய உதாரணம் பாருங்க. அவர் ஒரு சிவன் கோயிலக் கட்டுனாரு. சிவன் போயிலக்கட்டறதுக்கு உனக்கு அதிகாரமில்லன்னு பார்ப்பனருங்க சொன்னாங்க. இது உங்களோட சிவன் இல்லைன்னு அவரு சொல்லிட்டாரு. அப்படி இந்த மாதிரி நிங்க மதத்துக்கு அர்த்தம் கொடுத்திருக்க முடியமானால்- மணோன்மணியம் சுந்தரனார் மறைமலையடிகள் போன்றவங்க அந்தக் காத்தில வந்தாங்கன்ன சொன்னன்.- மறைமலையடிகள் மதங்கற வகையில என்னனெ¢ன வித்யாசமான கருத்த ொண்டிருந்தார் தெரியுங்களா- மதத்தில துறவு தேவையில்லை. புராணங்கள் முழுவதும் பொய்க்கதைகள். இப்பிடியெலலாம் தீவிரமாச்சில கருத்துக்கள அவரு முன்வக்க முடிங்சது. குனறக் குடி அடிகளும் அந்த மரபில வந்து அதக் கடை பிடிச்சவர்தான்.

மதம் பற்றி உங்களுக்குச் சரியான பார்வை இருந்திருக்கமானால் தமிழ் வரலாறு தமிழ் இல்க்கியத்துல நீங்கள் மதம்ங்கறத ஒரு அம்சமா அர்த்தப்ப_ததவேமுடியாது. அப்பிடிப் பாதத்ீங்கன்னா தமிழிலக்கியம் முழுதும் உங்களுக்க மாபெரும் நிநியங்களா மாறும். அந்தமாதிரிப் போக்கு உங்க்கிட்டக்கிடையாது. உங்க போக்கிலஎடுத்திட்டாங்கன்ா திருக்கறளக் காப்பாத்த முடியாது. பெரியாரும் அத ரொம்ப வெளிப்படையாச் சொன்னாரு. இறுக்கிப்பிடிச்சா திருக்கறள்ள 300 குறள்தான் தேறும்ன்னாரு. அதையே வேறாதிரி சொல்லிப்பாருங்க 1000 குறளதள்ளக்கூடிய தைரியம் இன்னக்கி யாருக்குஇருக்கு. உங்க பார்வையில் எடுத்திட்டாங்கன்னா சிலப்பதிகாரதத்த நீங்க ஏற்கவே முடியாது. அப்படிப் பாரக்கம்போது சைவம்வைணவம் அத்தனையும் உங்களுக்க ஆகாத விஷயங்களாயிரும். நான் ஒரு முறை சொன்னன் அய்யா- சித் தர்மரபிலவந்தவர்தான் பெரியார்.அ.மார்க்ஸ் வேலுசாமி கெக்கலி கொட்டுணாங்க. சித்தர் மரபுலவந்தவந்தான் ஜெயகாந்தன். சுித்தர்மரபுல வந்தவந்தான் புதுமைப்பிதத்ன். சித்தர் மரபுல வந்தவந்தான் நான்ூனு உரத்துச் சொன்னன் நான். அது அவுங்களுக்கு எட்டுல்புரியல. மதம்ங்கறத மக்கள் சார்பிலிருந்து உங்களால அர்த்தப்படுத்திக்க முடியுமானால்-

மக்களுடைய கடவுள் மற்றதையலெ¢லாம் நீங்க மூடத்தனம்ன்னு சொல்லி மூர்க்கத்தனம்னு பேசறதுனாலயே இந்த மக்கள் அந்தப்பக்கம் நகர்றாங்க. நீங்க அதிகமா எதிரிகள உற்பத்தி பண்ணீட்டு இருக்கீங்க. நம்ம மக்கள அவங்கிட்ட தள்ளி விட்றீங்க. அவஞ்சக்திய அதிகப்படுத்தறீங்க. மார்க்சியவாதிகள்னு சொல்றவங்க இததான் காலம்பூரா செஞ்சிட்டு வந்தாங்க. இந்துத்துவத்த தமிழ்நாட்டுல வலுப்படுத்துனசக்திகள் யாருன்ன சொன்னா முதல்ல இவங்கதான். இப்ப இந்துத்துவம் இன்னக்கி மேலவந்திருச்சு.15 வயசுப்பசங்கெல்லாம் காவி என்ன திருநீரென்ன பூசிக்கறான். அவன் பயிற்சி நடத்தறான். வீர விளையபாட்டெல்லாம் சொல்லித்தர்றான். பாடஞ்சொல்லித்தாரான். புாடம்ன்னா கேள்வி பதில். திருப்பி அப்பிடியே சொல்வான். பாரதிய ஜனதா பையங்கிட்ட நீங்க விவாதிக்கும்போது ஒன்னையே திரும்பத்திரும்பச் சொல்வான். மீறினா அவன் கை வப்பான். நமக்கல்லாம் கை வைக்கிற தைரியமேயில்லை. நமக்கு யாரும் பயிற்சியே குடுக்கல்ல. பெரியாரிகளும் அடிவாங்கவாங்க. மாரக்ஸிய்ர்களும் அடிவாங்குவாங்க. சில் மதங்களுக்க முன்னாடி என்ன நடந்துச்சுன்னு சொன்னா சிங்காநல்லுார்ப்பக்கம் ஒருதெருவுல திராவிட இய்க்கத்_காரரு பிரச்சாரத்துக்குப் போனபோது உள்ள வரக்கூடாது அப்பிடான்னுட்டான். வரக்கூடாதுன்னா வரக்கூடாது உங்க பிரச்சாரம் எங்களுக்கு வேண்டாம் ட்டான். பெரியநாய்க்கன்பாளயம் பக்கம் புத்தகம் விக்கப் போனாங்க. ஸ்டால்ல துாக்கிட்டுப் போங்க அப்பிடான்னானாம். அவன் அடிக்கத் தயாரா இருக்கான். நீங்க திருப்பித்தாக்கத்தயாாில்ல.

ரொம்ப அறிவோட பேசறதா நீங்க நெனச்சிட்டிருக்கீங்க. இது ஒன்னும் அறிவோட பேசககூடிய பேச்சல்ல. பாரதியார எவ்வளவு கேவலப்படத்துறிங்க நீங்க. கடைசியா நிங்க எவ்வளவு ஒரு அழிவு சக்தியா மாறித் தொலச்சிிருக்கிறீங்க- பாரதியார அவ்வளவு கேவலமா நிங்க எதிரணிக்குத்தள்றீங்க- பாரதியார மட்டுமல்ல தைரியமிருந்தா நீங்க எல்லாத்தையும் செய்யுங்க. பாரதியார் மட்டுமல்ல பாரதிதாசன் ஒரு கடவுள் உன்டென்போம்னு சொனனார். தமிழ் தேசிய மாநாட்டுல பேசும் போது பெரியார் அவரப்புடிச்சு திட்டு திட்டுன்னு திட்டுனார். பாரதிதாசன் குமரகுருபரரப் பாராட்டுனார். பாரதிதாசனுக்கு இலக்கியங்கள் வேணும். கம்பர் வேணும் பாரதிதாசனுக்கு. உங்களுக்கெல்லாம் அவசியங்கெடையாது. இபபிடியிருந்தா தமிழ்ச சமூகத்துக்குரிய இயக்கமா நீங்க எப்பிடி இருக்கமுடியும். கடவுள் இல்லை. வழிபாடுவேண்டாம். சடங்கு வேண்டாம். நீங்க நடத்தறது என்ன ? பெரியாருக்கு சிலை

வைக்கறீங்க பெரியாருக்குத் துதி பாடறீங்க. பெரியார மீறி ஒரு சிந்தனையாளன் இல்லீங்கிறீங்க. பெரியாருக்கு மாலை போடறீங்க. விழாக் கொண்டாடறிங்க. என்னன்னுசொன்னா நீங்கல்லாம் பெரியாருக்கு நல்ல அசலான புரோகிதர்களா இருக்கீங்க. புரொகிதர்ல யார் சிறந்த புரோகிதர் மோசமான புரோகிதர்ன்னு வித்தியாசப்ப_த்தலாமேயொழிய மற்றபடி பெரியாரிசத்த நீங்க வளர்த்தெடுக்க வேண்டாமா ? மேல கொண்டு போக வேண்டாமா ?

உலக அளவுல நாத்திகவாதம்கறது எவ்வளவு பிரம்மாண்டமா வளர்ந்நிருக்குது ? டிக்சனரி ஆப் பிலீவர்ஸ் அனட் நான் பிலீவரஸ்ன்னு ஒரு அற்புதமான ர–யன் டிக்சனரி. பெளத்தமதத்த விடவா உஙகளுக்கு நாத்திக வாதம் ? ரஸ்ஸல ஒரு காலத்தில லேசா மேற்கோள் காட்டினீங்க. டார்வின நீங்க பெரய அளவுக்குப் பேசல . பெரியாரியம்னு உள்ள போனிங்கன்னு சொன்னா ஏகாதிபத்திய எதிரப்பபுக்கு நீங்க முதன்மையா இருக்க வேண்டாமா ? சிங்காரவேலர் தயாரிச்ச ஈரோடு தீர்மானத்தில என்ன சொல்றார் : இந்தியாவிலிருக்கக் கூடிய பிரிட்டாஸாரின் சொத்துக்கள் அனைத்தையம் ந–ட ஈடில்லாமல் பறிமுதல் செய்ய வேண்டும். ஜமீநத்ார்கள ஒழிக் க வேண்டும். எத்தன விஷயங்கள அவர் சொல்லீருக்காரு. அப்பிடான்னா இன்னக்கி உலகமயமாதல பத்தி எத்தன உருக்கமா நிங்க பேசவேணும் ? உங்களுக்கு அது தோணவேயில்லையே ?

நன் சொன்னன் : ஐயா பாரப்பனியம்ன்னு இன்னக்கி நீ பேசற. நமக்கிடையில ஆதிக்க சக்திகள் இருக்குன்னா. ஏகாதிபத்தியம்முதலாளியம்அரசதிகாரம்அப்பிடான்னு சொன்னேன். உடனே ஒரு புத்திசாலி- படு புத்திசாலி சொன்னாரு- ஞானி நீங்க சொல்ற ஏகாதிபத்தியமும் பார்ப்னியம்தான். முதலாளியமும் பார்ப்பனியம்தான். அரசதிகாரமும் பார்பபனியம்தான். அப்பிடான்ன முடிச்சிட்டாரு அவரு. எனக்கும் மாரக் சுக்கும் பெரியசண்ட வந்திருச்சு. இந்த வகையில செயல்படுற அதிகாரத்த பார்பபனியம்கற எளிய சொல்லால சொல்லாத-வேற சொல் சொல்லு அப்படின்னேன். இல்ல இந்தச் சொல்தான் சரியான சொல் அப்பிடின்னாரு. இதையெல்லாம் பாப்பாந்தான் கொண்டுவர்ரானாம். மற்ற சாதிக்காரன் இருந்தாக் கொண்டவரமாட்டானாம். தத்தவம்னு சொன்னாலே மதம்ன்னு எப்படியப்பா உங் களால புரிஞ்சிக்க முடியுது. தத்துவம்ன்னு சொன்னா-பரந்தஅர்தத்துல வாழ்க்கை சம்பந்தமானது-பிலாஸபி அபபிடான்னு பெரிய அர்த்தம் உங்களால கொள்ள முடியாதா ? தத்துவம்ன்னா அது மதம். மதம்ன்னா அத இந்து மதம். இந்து மதம்ன்னா அது பார்ப்பனீயம். இவ்வளவு துாரம் நீங்க அறிவுல கீழ போயிட்டு ஒரு தேசத்த நீங்க எப்பிடி காப்பாத்தறது ?

Series Navigation

யமுனா ராஜேந்திரன்