ராம்ப்ரசாத்
கதிருக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை. கணிப்பொறித் திரையையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். திரையில் ஒரு பெண். இருபத்தைந்து வயது இருக்கலாம். திருமணமானவள் போலத் தோன்றவில்லை. ஆனால் வாளிப்பான உடல். முகம் தெரியவில்லை. ஆனால், அவளின் அங்கங்களை எடுத்துக்காட்டும் உடையில் அவளின் உடல் மின்னியது. சில மணித்துளிகளே. வெப்காம் திரை இருளடைந்தது. சரியாக ஒரு நொடி இடைவெளிக்குப்பின் மைக் மீண்டும் உயிர் பெற்றது. அவள் தான்.
‘ ஐ எக்ஸ்பெக்ட் எ பிக் செக் படி. டுவென்டி எல்’.
கதிர் ஒரு உஷ்ணப் பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தான். நிச்சயம் ப்ரோஃபஷனல் தான். அவன் கேட்டுக்கொண்டபடி அவள், தான் ஒரு பெண் தான் என்பதை வெப்காமில் காண்பித்துவிட்டாள். முகத்தைக் காட்டவில்லைதான். ஆனால், இருட்டில் அவள் முகம் எப்படி இருந்தாலென்ன என்று தோன்றியது. அவள் கொஞ்சம் காஸ்ட்லி விலைமாது. விலை இருபது லட்சம். கேம்மில் பார்த்த உடலுக்கு நாற்பது வரைகூட கொடுக்கலாம். இருபது லகரம் அஃபோர்டபில் தான்.
‘டுவென்டி எல் டீல். ப்ளேஸ்?’
‘ ஒ.கே. டீல். வெயிட் ஃபார் சம்டைம். வில் மெயில் யூ த ப்ளேஸ். பை’.
இணைப்பு கதிரின் பதிலை எதிர்பார்க்காமல் துண்டிக்கப்பட்டது. சரியாக 5 நிமிடங்களுக்கு பிறகு அவளின் ஐடியிலிருந்து சென்னையில், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்த ஒரு காஸ்ட்லி ரிஸார்ட்டின் விலாசம் வந்தது, 23 ஆகஸ்ட் 2009 என்று குறிப்பிட்ட தேதியுடன். கதிர் அதை கவனமாய் ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டான்.
சரியாக ஒரு வாரம் கழித்து, 23ம் தேதி அந்த ரிசார்ட்டுக்கு ஒரு ஹோண்டா சிட்டி கார் வந்து நின்றது. மிகவும் உயர்ந்த ரக கோட் சூட்டில் கதிர் போர்டிகோவில் இறங்கிவிட்டு, டிரைவரிடம் பார்க்கிங் ஏரியாவில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு வாடகை அறைகள் இருந்த திசை கேட்டு நடந்தான். கனமான ஒரு பெரிய கருப்பு நிற அமேரிக்கன் டூரிஸ்டர் பையை அவன் வலது கை இறுக்கமாய் பற்றியிருந்தது.
இதற்கு முன் இம்மாதிரி பல முறை விலைமாதுக்களைச் சேர்ந்திருக்கிறான். அப்போதெல்லாம் இத்தனை பதட்டம் இருக்கவில்லை. எப்போதும் அந்தப் பெண்கள் தான் இவனின் அறைக்கு வருவார்கள். இவனாக யாரையும் தேடி போகும்படி இவன் வைத்துக்கொண்டதில்லை. இவன் இருக்கும் இடத்தில் போலீஸ் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது அவன் எண்ணம். ஆனால் இந்த அழகி ரொம்பவும் காஸ்ட்லி தான். அவளாக யார் வீட்டிற்கும் வரமாட்டாளாம். அவள் இருக்கும் இடத்திற்குதான் ஆண்கள் செல்ல வேண்டுமாம்.
பூஜை வெலையில் கரடியாய் போலீஸ் வந்துவிடுமோ என்று பயமாயும் இருந்தது. ஆனாலும் ஒரு சின்ன சபலம். 7ம் எண் கதவை தட்டினான்.
‘கம் இன்’. பெண் குரல் கேட்டது.
கதவு திறந்து உள்ளே நுழைந்தான். அவள் வெல்வெட்டு மெத்தையில் சொகுசாய் படுத்திருந்தாள். மார்பை மூடியபடி ஒரு வெல்வெட்டுத் துணி அவளைப் படர்ந்திருந்தது. அந்த வெல்வெட்டுத் துணி அவளையும் தாண்டி படுக்கையையும் படர்ந்திருந்தது. அந்த வெல்வெட்டுத் துணிக்கடியில் அவள் ஆடைகள் ஏதும் அணிந்திருக்கவில்லை என்று தோன்றியது. பேரழகான பெண்ணை அந்த நிலையில் படுக்கையில் பார்த்ததும் அவன் கையினின்றும் அந்த கறுப்புப் பை கீழே பொத்தென்று விழுந்தது. தானாக மூடி தாழிட்டுக்கொண்ட அறைக்கதவின் கைப்பிடியில் அந்த வாசகம் பொறித்த கார்டு தொங்கிக்கொண்டிருந்தது.
‘ப்ளீஸ், டோண்ட் டிஸ்டர்ப்’.
இரண்டு மணி நேரம் கடந்து கதவு திறந்தது. அதே கோட் சூட்டில் கதிர் வெளியே வந்தான். நேராக கார் பார்க்கிங் ஏரியாவுக்குச் சென்றான். இவனைப்பார்த்ததும் அந்த ஹோண்டா சிட்டி உருமி எழ, அதில் ஏறிக்கொண்டான். அவசரமாய் அந்தப் போர்ட்டிகோவை ஒரு அரைவட்டம் அடித்துவிட்டு மெயின் ரோட்டில் இறங்கி கண்ணிலிருந்து மறைந்தது அந்த ஹோண்டா சிட்டி.
சற்றைக்கெல்லாம் மீண்டும் கதவு திறந்தது. இப்போது அந்தப் பெண் வந்தாள். முழுவதும் மூடியபடி ஜீன்ஸ் டி&ஜி டிசர்ட் அணிந்திருந்தாள். அவள் கையில் அந்த கறுப்புப் பை. தயாராய் நின்றிருந்த குளிரூட்டப்பட்ட வாடகைக் கார் ஏறி மீனம்பாக்கம் விமான நிலையம் அடைந்தாள். கொண்டு வந்த கைப்பையை கீழே வைத்துவிட்டு சற்று தள்ளி, டெலிஃபோனில் புக் செய்த விமானத்திற்கான பி.என்.ஆர் நம்பருக்கு ஈடிக்கட் தரும் இடத்தில் சென்று தன்னுடைய பி.என்.ஆர் நம்பர் சொல்லி ஈடிக்கட்டிற்கு காத்திருக்கும் நொடிகளில் எங்கிருந்தோ வந்த போலீஸ் வாகனம் அவளருகே க்ரீச்சிட்டு நின்றது.
என்ன ஏதென்று கவனிப்பதற்குள் அவளருகே சற்று தள்ளி இருந்த பையை ஒரு போலீஸ்காரர் எடுத்து வேகமாய் அதன் ஜிப்பைத் திறந்து உள்ளே கைவிட்டு ஒரு கட்டு பணத்தை உருவித் தடவிப்பார்த்துவிட்டு கத்தினார்.
‘சார், அதே சீரியல் நம்பர் சார். கள்ள நோட்டு. கதிரு வேலைதான் சார். எப்படியும் இருபது லட்சம் இருக்கும் சார்’ என்றுவிட்டு அவளிடம் திரும்பினார்.
‘ஏம்மா, இந்தப் பை யாரோடதுன்னு தெரியுமா?’.
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
- நினைவுகளின் சுவட்டில் – (51) (முதல் பாகம் முற்றும்)
- பரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 2
- நீங்கள் ஒரு நாகாலாந்து பத்திரிக்கையாளராக இருந்தால்
- வேத வனம்- விருட்சம் 93
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மகா மேதைகள் புவியை விட்டு வெளியே கவிதை -31
- மிச்சங்கள்
- சிங்கத்தை கொலைசெய்வதற்கு என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை
- குழந்தைகளை தொலைக்காட்சி பார்க்க அனுமாதிக்கலாமா!
- உலகப் பெரும் செர்ன் விரைவாக்கியில் இப்போது என்ன நிகழ்கிறது ? (கட்டுரை -7)
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -21
- புலமையும் வறுமையும்
- தலித் முகமதிய-தலித் கிறிஸ்தவ சகோதரர்கள்
- மலர்மன்னன் கடிதத்துக்கு பதில்
- பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்
- உயர்தர இசையில் நிகழ்ந்த நேர்த்திமிகு கலையழகு- சிங்கப்பூர் இசை நிகழ்ச்சி
- இயல் விருது வழங்கும் விழா
- போலீஸ் வந்துவிட்டால்
- ஓரு நாள்…
- திருவள்ளுவர் தீட்டிய கத்தி
- மதசார்பின்மை
- வேரோடி முடிச்சிட்டுக் கொள்ளும் புன்னகை..
- நற்சான்றுடன் இணைந்த அவதூறு: ஹிந்து இயக்கத் தரமான கல்வி குறித்து கிறிஸ்தவ அமைப்பின் கவலை
- ஒவ்வொரு ‘திராவிட’ செயலுக்குப் பின்னாலும் ஒரு ‘கிறுத்துவ’ ஆதரவு உண்டு – 1
- சென்னை வானவில் விழா 2010
- கார்தும்பி
- முள்பாதை 36
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -2
- வலி
- ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 4
- ராத்திரிக்கு?…
- களம் ஒண்ணு கதை பத்து – 7 மப்ளர் மாப்ளய்
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தெட்டு