‘போதும் எழுந்து வா ‘

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue

ருத்ரா (நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு அமரர் ஆகியது குறித்து எழுதி


நடிப்பின் இமயமே !

இது என்ன நடிப்பு !

‘மரணத்தை

இது வரை நான் காட்டியது

வெறும் அபிநயம் தான்.

இதோ

உயிர்த்துடிப்பான

ஒரு மரணத்தைப்பார்..என

அந்த மரண தேவனுக்கு

நடித்துக்காட்ட..உன்

துடிப்பை நிறுத்தினாயா ? ‘

‘கண்ணீர் வெள்ளமாவது பெருகட்டும் ‘…

இந்த குடிதண்ணீர் பிரச்சினை தீர..

என்று

தலை சாய்ந்து விட்டாயா ?

தென்மேற்கு பருவக்காற்று வீசவில்லை.

வடகிழக்கும்

சென்னையின் வாசலுக்கு

இன்னும் வரவில்லை.

பின் எப்படி..இங்கு

இந்த கண்ணீாின் அடைமழை ?

உன் ‘பாரத விலாஸ் ‘ படத்தில்

ஒரு காட்சி பாக்கியிருக்கிறது..என்று

அதை நிறைவு

செய்து கொண்டாயா இன்று ?

துடிக்கும் சோக வெள்ளத்தில்

தமிழ் நாடு

ஒரு ஒாிஸ்ஸா ஆனது !

எல்லோரையும்

அலங்காித்து

ஓய்ந்து போன விருதுகள்

உன்னிடம்

அலங்காரம் பெறுவதற்கு

தயங்கி தயங்கி

வந்தபோது

அவை புாிந்து கொண்டன

திண்ணைப்பள்ளிகூடங்களையெல்லாம்

தாண்டி

ஒரு பல்கலைக்கழகத்தின்

படியேறிக்கொண்டிருக்கிறோம் என்று.

பிரம்மன் கூட

ஆச்சாியப்பட்டு போனான்.

‘இந்த மனிதனை

ஒரு தடவை தானே

படைத்தேன்.

எப்படி இவன் பல நூறு தடவைக்கும் மேல்

பிறப்பு எடுத்தான் ‘என்று.

ஆம்

நீ நூற்றுக்கணக்கான

படங்களில் அல்லவா

நடித்திருக்கிறாய் !

நடிப்பு எனும் எல்லைக்கு

எதிாி நீ.

அதனால் வானம் கூட

வெட்கப்பட்டு

உன் மடியில் விழுந்தது.

அந்த பாிமாணத்தை தேடி

எல்லைக்கு

அப்பாலும்..இந்த

‘அப்பல்லோவில் ‘

உன் இறுதிப்படப்பிடிப்பை

வைத்துக்கொண்டாயா ?

‘பாசமலாில் ‘

பிழிந்து காட்டினாயே

ஒரு மரணத்தை..

அப்போது ஏமாந்துபோய்

வீசிய எமனின்

பாசக்கயிறு

இப்போது மீண்டும்

எப்படிவிழுந்தது உன்னிடம் ?

இப்போதும்

அவன் ஏமாந்துதான் போனான்.

இப்போது

நீ நடித்துக்காட்டியது

ஒரு மரணத்தின்

மரணத்தை.

உனக்கு மரணம் இல்லை.

நிஜம் எது ? நிழல் எது ?

போதும்.

எழுந்து வா.

டைரக்டர் ‘கட் ‘ சொல்லிவிட்டார்.

போதும்

எழுந்து வா.

இந்த தமிழகம் இனி தாங்காது !

Series Navigation

ருத்ரா

ருத்ரா