பெரிய புராணம்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

பா சத்தியமோகன்


சிவமயம்

ஒரு அவசர அறிவிப்பு .
உடல் நடுங்குகிறது. தகுதியற்ற ஒரு நாய் , வானில் பறக்கப்பார்க்கிறது.
எப்படித்தொடங்குவது, என்று தொடங்குவது என்று தள்ளித் தள்ளிப் போட்டேன்.
இதோ… 8.7.04 இரவில் … தொடங்குகிறேன்.
ம். நெஞ்சத்தின் ஏக்கத்தை உங்களிடம் வெட்கம் விட்டு பகிர்கிறேன்.
உங்களிடம் சொல்ல நான் யார்.
நான் சொல்வதை/ எழுதுவதை எங்கிருந்தோ வாசிக்கப்போகும் தாங்கள்
யாரோ .
எனினும் நமக்குள் பொதுவாய் தமிழ் இருக்கிறதல்லவா .
அதுபோல் இறையடியார்கள் மனிதகுலத்திற்கே பொதுவாக வாழ்ந்தனர்.
அவர்களைப்பற்றி … அந்த புண்ணீயசீலர்கள் அறுபத்துமூவரைப்பற்றி எனது
மொழியில் எழுத சை கொண்டேன் . அதைத்தான் பறக்க சைப்படும் நாயின்
சையுடன் ஒப்பிட்டுக்கொண்டேன்.
இறைவனின் திருமலர்களை அடைந்த அவர்களின் புனித வாழ்வை எனது வரிகள்
தூசுக்குக் கூட காது என்பது திண்ணம். எனினும் ஏன் எழுதுகிறேன் .
எனது நாற்பதில் திரும்பிப் பார்க்கிறேன் – இளைஞர்களின் பிடி ஏதுமில்லை.
அவர்களது ஏக்கம் புரிகிறது . வேலைவாய்ப்பற்ற – கொதித்துப்போன – னால்
தமிழ்பக்திமார்க்கத்தின் எல்லைக்குள் வாழ்ந்து சாதிக்க நினைக்கிற
அவர்களுக்கு – உன் முன்னோன் இப்படி வாழ்ந்தானடா… என்று பகிர்கிற
இம்முயற்சியில் — சேக்கிழார் பெருமான் திருவடிகளைத் தொழுகிறேன்.
அப்பெருமான் இல்லையேல் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணம்
இல்லை.
அவர் முதலமைச்சராக இருந்தபோது கல்வெட்டுச்செய்திகளைத் திரட்டி தனது
காப்பியத்தைத் தொடங்கியிருக்கிறார் தில்லையில். சிதம்பரத்தில்.
“உலகெலாம் “ என்று இறைவன் அடியெடுத்துக்கொடுத்தார்.
திருத்தொண்டர் புராணம் 4281 பாடல்கள் கொண்ட பக்திச்சுனை. அணுகத்தகுதி
சிறிதுமிலா என்னையே – அது அழைக்கிறதெனில் பக்தியெனும் கயிற்றை
இறைவன்மீது வீசி — வாழ்க்கை எனும் கடலில் கரையேறத்துடிக்கும் இன்றைய
இளைஞனை கண்டிப்பாக ஈர்க்கவே செய்யும்.
கூடியமட்டும் எளிய மொழியில் இது இருக்கும்.
அணுவளவு பிழையிருந்தாலும் அது எனதே.
மலையளவு புகழ்வரினும் அது சிவனடியார் பெருமையே.
தமிழ்ச்சான்றோர்களும் ன்றோர்களும் இச்சிறியேனின் முயற்சியை மனமார
மன்னிக்கவேண்டும்.
என்னைநன்றாக இறைவன் படைத்தனன் – தன்னை
நன்றாகத்தமிழ் செய்யுமாறே
— திருமூலர்

முதற்காண்டம்
1. பாயிரம்
வாழ்த்து
1.

உலகங்கள் அனத்தையும் உணர்ந்தாலும் ஓத முடியுமா உன்னை
நிலவை உலாவச் செய்ய கங்கையைச் சூடினாய்
எந்த அலகினாலும் அளக்க முடியாத சோதியே , தில்லைக்கூத்தனே
மலர் போல நெஞ்சில் சிலம்பும் உமது திருவடியை வணங்குவோம்
2.
தேன் சென்று மலரை அடைகின்றது தில்லையில்
அங்கு மகாநடனம் செய்கின்றான் அருளாளனைத் தொழ
ஊன்கொண்ட உடம்பே நீ செல்வாய்
மனிதப் பிறவியின் உறுதி உனக்குச் சேரும்.

3.
எடுக்கும் மகாக்கதை இன்தமிழ் செய்யுள் கட்டும்
நடக்கும் மேன்மைகள் நமக்குக் கிடைக்கட்டும்
ஐந்துகரங்கள் தாழ்செவி நீள் முடி கொண்ட
மதயானைமுக கணபதியை கருத்துள் இருத்திக்கொள்வோம்

திருக்கூட்டம்

4.
மூன்றாம் பிறை வளர் சடை கூத்தபிரானை
துதிசெய் நாயன்மார் தூய சொல் மலர் நலத்தை
அனுபவிக்கும் தூயவர் பேரவை
உலகில் விளங்கி வெல்லுமே.

அவையடக்கம்
5.

அளவிலாத பெருமையர்
அளவிலாத அடியார்
அவர்கள் புகழ் அடியேன் எப்படித்தான் உரைப்பேனோ
அளவிலா ஆசை தூண்டுவதால் சொல்கிறேன்

6.

அறிய இயலா பெருமையுடய திருத்தொண்டர்
நிகரில்லாப் பெருமை புகலுகின்றேன்
பெருகிய அமிர்தக்கடலை உண்டு
வற்ற வைக்க முயலும் நாய் போல

7.

சுட்டும் பொருள் சிறந்ததாயின்
சிறப்பற்ற சொல்லையும் யாவரும் கொள்வர்
அடியார் புகழ் பெரிது என்னுரை சிறிது எனினும்
மெய்ப்பொருள் விழைவோர் ஏற்பர் மேன்மையால்

8.

தூய பொன் அணியால் பேரம்பலம் செய் அநபாய சோழன் அவை
உலகின் நீடுபுகழ் அரசவை
மேலே உரைத்த சிறந்த பொருள் கொண்ட இந்நூலை
ஏற்று விரும்பும் ஆய்ந்து ஆய்ந்து.

9.

அருளின் அருமை அறிய அரிதெனும் நீவீர்
செப்பப் புகக் காரணம் என்ன என்பீரேல் வேறல்ல
மெய்ம்மொழி வான்நிழல் கூறிய பொருளின் துணையால்
என்போம் துணிந்து .

10.
ஆதிகாலம் தொட்டே இருள் கூட்டம் தொட்டு
புற இருள் போக்குவான் செங்கதிரோன்
சிந்தையில் ஆணவம் போக்கும் திருத்தொண்டர் புராணம்
இதுவே இப்புராணத்தின் நாமம்
—-
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்