பெண்கவிகள் சந்திப்பு-2002 இடம்-புதுவை நாள்-11.9.02

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

ஏற்பாடு-மாலதி மைத்ரி,இரா.மீனட்சி,க்ருஷாங்கினி,குட்டி ரேவதி


ஆரோவில்லில் இரா. மீனாட்சி அவர்கள் நடத்தி வருகின்ற மாலை நேரப் பள்ளியில் பெண்கவிகளின் சந்திப்பு அழைப்பு அனுப்பப் பட்டவர்கள் அனைவரும் வந்து சேர காலை 10 மணிக்கு ஆரம்பமானது.

சரஸ்வதி தேவி என்பவரின் இசைப்பாடலுடன் ஆரம்பமான கூட்டம் இரா. மீனாட்சி அவர்களின் வரவேற்புரையுடனும், பாரதியார், மீரா, மற்றும் செப்டம்பர் 11ல் நடந்த அமெரிக்க அழிவுக்கான அஞ்சலியுடனும் ஆரம்பமானது

குட்டி ரேவதி,மாலதி மைத்ரி, மாலதி, க்ருஷாங்கினி, அமரந்தா, வத்ஸலா, சுகிர்தராணி வைகை செல்வி, வெண்ணிலா, இரா. ஆனந்தி, அமரந்தா, ஜீவசுந்தரி, இவர்களின் சொந்த பெயர், படைப்புகள் செயல்பாடுகள் வெளியீடுகள் இருக்கும் இடம், ஆகியவற்றின் அறிமுகமுடன் ஆரம்பமானது.

அறிமுகங்களை தொடர்ந்து ‘ எனக்கு பிடித்த கவிதைகள் எனும் தலைப்பில் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினர்.பிடித்த கவிதைகளுக்கு காரணங்களாக மொழி, கருப் பொருள், என பல வேறு காரணங்கள் பேசப் பட்டன.

மதிய உணவிற்கு பின்னர் நானும் என் கவிதையும் எனும் தலைப்பில் அவரவர் அனுபவப் பகிர்வாக நிகழ்வு இருந்தது.

இந்த சந்திப்பு பெரிய அளவிலான விவாதங்களுக்கு வழி வகுக்கவில்லை எனினும் அதில் எழுப்பப் பட்ட கேள்விகள் வந்து , சந்தித்து, கலைந்து சென்ற அனைவரது நெஞ்சிலும் கேள்விகளுக்கான தேடலை உருவாக்கும் சந்திப்பாக நிச்சயம் இருக்கும் என்கிற நம்பிக்கை தந்தது

இச்சந்திப்பில் பேசப்பட்ட பகிர்வுகளில் மிக முக்கியமாக நான் கருதுகின்ற சில விவாதங்கள் அல்லது கேள்விகள்

1, தமிழ் சூழலில் கவிதைக்கான தளத்தில் மொழி, உத்தி, வடிவம் பற்றி மிகப் பெரிய அளவில் பரீட்சார்த்த முயற்சிகள் ஏன் எடுக்கப் படவில்லை.

2 கவிதைக்கான தளம் பற்றி தீவிரத் தன்மை இல்லை.

3, பெண்ணியச் சிந்தனைகள் கவிதைகளில் இடம் பெறுவது சரியா ?

4, பெண்கள் இன்னமும் வீடு , குடும்பம் போன்ற சின்ன வட்டத்துக்குள் தான் இருக்க வேண்டுமா ? பெண் கவிதைகள் என்றால் புலம்பல்கள் என்ற கருத்து உருவாவது சரியா ?

5,ஒப்பீடு அடிப்படையில் உலகப் பெண் கவிஞர்களும், தமிழ் பெண்கவிஞர்களும் எடுத்துக் கொள்ளும் கருப்பொருள்கள் எவை எவை ?

6,பெண் எழுதும் பிரச்சனைகளை கவிதை கருப்பொருளை அவர்கள் வாழ்வோடு சம்பந்தப்பட்ட விசயமாக அனைவரும் பார்ப்பது சரிதானா ? ஆண் எழுத்தாளர்களுக்கு இந்த பிரச்சனை வருவதில்லை.பெண்ணுக்கு மட்டும் இது ஏன் ?

7,கவிதை யென்பது பிரவாகமெடுப்பதா ? திட்டமிட்டு செய்யப்படுவதா ?

8,பெண்களின் கவிதைகளில் சிறு தெறிப்பாகக் கூட ஏன் அரசியல் வரவில்லை

இடையிடையே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பகிர்தல்களூடே சில விடைகளும் கிடைத்தன. பெண் குறுகிய வட்டத்துக்குள் பார்க்கிறாள் என்று சொல்வது ஒரு ஆண் குரலாகத்தான் இருக்க முடியும். அதை இங்கே பதிவாக்க வேண்டாம். ஆண்கள் சந்திக்க இயலாத பெண்ணின் பிரச்சனைகள் ஆண்களால் குறுகிய வட்டமாக தீர்மானிக்கப் படுகிறது. ஆகவே பெண்கள்பிரச்ச்சனைகளை பேச வேண்டும்.

கவிதைகளை புலம்பல்களாக கருதாமல் பிரச்சனைகள் பேசப்படுவதாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.

பென்னிடாவின் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன.

மாலை 4 மணிக்கு ஆரோவில்லை விட்டு வெளியேஎறி பாரதி நினைவாலயத்திற்கு வந்து சேர்ந்தோமங்கு கவிதை வாசிப்பு நிகழ்ந்தது

அழிப்பு அனுப்பப் பட்ட பல பெண்களால் வர இயலவில்லை என்பதும் முற்போக்கு எண்ணங்களை விதைக்கும் அவர்களால் அதை அறுவடை செய்ய முடியாமல் நேர்ந்திருப்பது வருத்தமான விசயமென்றாலும் இது நல்ல தொடக்கமே.

***

திலகபாமா,சிவகாசி

mahend-2k@eth.net

Series Navigation

க்ருஷாங்கினி

க்ருஷாங்கினி