புரியவில்லை

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

ஸ்ரீனி.


புரியவில்லை !
முன்பு
ஒரு நாள்
சந்தித்த உன்னை
ஏன் பல நாட்கள்
சிந்தித்தேன் ?

புரியவில்லை !
பேச வந்ததை
விட்டு பலமுறை
பேசியிருக்கிறேன்
மணிகணக்கில்

புரியவில்லை !
நீ
பேசிய போதெல்லாம்
நான் நினைத்ததை எதிர்பார்த்து
நீ சொன்ன பலவற்றை
தலை ஆட்டி மறந்து போனேன்

புரியவில்லை !
அறியா பருவத்தே உருவான
மன எழுச்சி
என தீர்ப்பளித்து
கைதான உன் நினைவுக்கு
விடுதலை தந்தேன்

புரியவில்லை !
தொண்டி எடுத்த நிலத்தினில்
முளைக்கத்தான் செய்தன
புது நினைவுகள்
என் மனதில் மட்டும்
எத்தனை வசந்த காலங்கள் !

புரியவில்லை !
விதைத்த பயிர் விளைவதர்குள்
பலமுரை பயிரிட நினைத்தேன்
இந்த
பக்குவமற்ற விவசாயி,
இத்தனையும்
உன் முன்னிலையில்,
சிரித்தாய் சினேகத்துடன்

புரியவில்லை !
இன்று
விவசாயத்தை விட்டுவிட்டேன்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன்
ஆனால்
‘என்றோ பயிர் செய்தது
இன்று விளைந்து நிற்கிறது
அதை பயிரிட்டவன் நீ
அருவடையும் செய்வாயா ‘
– சட்டென்று நீ கேட்டது
ஏன் கேட்டாய், புரியவில்லை
அன்று,
ஏன் கேட்கவில்லை, புரியவில்லை

புரியவில்லை !

மறுத்தேன் மென்மையாக
மறக்க மாட்டேன் என்கிறாய்
தகுதியற்றவன் என்றேன்
காரணம் கேட்கிறாய்
தோன்றியது..
ஏன் தோன்றியது
புரியவில்லை !

சிந்தனைகளையும்
சேர்த்து பெருக்கும்
காலத்தை நம்பி இருக்கிறேன்
நிச்சயம் தெளிவு பெருவாய்
நம்பி மீண்டும்
‘நட்போடு ‘ காத்திருக்கிறேன்
கரம் சேர்ப்பாயா ?

புரியவில்லை !

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி