வஹ்ஹாபி
சலுகையா? கட்டாயமா?
“என்னை இறைவனாக ஏற்றுக் கொண்ட ஒருவர், வலுக்கட்டாயத்திற்கு உள்ளாகி, உயிர் போகும் சூழலில், என்னை மறுதலிப்பதாகச் சொல்லி உயிர் பிழைத்துக் கொள்ளலாம்” என்னும் அல்லாஹ்வின் விதிவிலக்குச் சலுகையை – உறுதியான நம்பிக்கையாளர்கள் பயன்படுத்தாத சலுகையை – அனுதினமும் கட்டாயமாகச் செயல் படுத்தப் படுகின்ற நிகழ்வைப்போல் அடுத்த அரைகுறையில் புனித மோசடி செய்யப் பட்டது.
அரைகுறை-6 சுரா (16:106) – எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது). – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப் படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் காஃபிரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு.
அபிசீனியா (எதியோப்பியா/ஹபஷா)வைச் சேர்ந்த ரபாஹ்-ஹமாமா அடிமைப் பெற்றோருக்குப் பிறந்த பிலால் (ரலி) என்பவர், இணைவைப்பாளர்களைச் சேர்ந்த மக்கத்துத் தலைவர்களுள் ஒருவனான உமைய்யா பின் கலஃப் என்பவனிடம் அடிமையாக இருந்தார். மீளெழுச்சியின்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தொடக்க கால மக்கத்து முஸ்லிம்களுள் ஒருவராவார் பிலால் (ரலி).
மக்காவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவனான தன்னிடம் அடிமையாக இருக்கும் பிலால் (ரலி), இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து உமைய்யா வெகுண்டான். ஓரிறைக் கொள்கையைக் கைவிடச் சொல்லி, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுமைகளையும் பிலால் (ரலி) மீது கட்டவிழ்த்து விட்டான். கணக்கின்றிக் கசையடிகளைப் பரிசாக்கினான். அடிப்பதில் தன் கை சோர்ந்து போனால் தன்னச் சார்ந்த இன்னொருவரிடம் கொடுத்து அடிக்கச் சொன்னான். அத்தனைக்கும் பிலால் (ரலி) அசைந்து கொடுக்கவில்லை.
இறுதியில், கொளுத்தும் பாலை மணலில் ஆடையின்றி அவரைப் படுக்க வைத்து அவரது நெஞ்சின் மீது ஒரு பாராங்கல்லை ஏற்றி வைத்து விட்டு, “இஸ்லாத்தைக் கைவிடு; அல்லது கைவிடுவதாகச் சொல், இப்போதே உனக்கு விடுதலை” என்று ஆசை காட்டினான். அப்போதும் அவர், “ஏகன், (அவன்);ஏகன்” என்றே உறுதியுடன் உரைத்தார். அவர் சொன்ன ஒவ்வொரு “ஏகன்” எனும் சொல்லுக்கும் அடியும் உதையும் அதிகரித்தன. அவை அதிகரிக்க அதிகரிக்க “ஏகன்” எனும் கொள்கைச் சொல் பிலாலிடமிருந்து முன்னைவிட யானைப் பிளிறலாய் வெளியானது. ஓரிறைக் கொள்கை என்பது உயிரைக் காட்டிலும் பெரிது எனும் உறுதி கொண்ட நெஞ்சினராய்த் திகழ்ந்ததால்தான் திண்ணையிலும் அவர் “சாகாத கருப்பு யானை”யாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் [சுட்டி-36].
தம் தோழர் பிலாலைக் குரைஷியர் பாலை மணலில் கிடத்தி சித்திரவதை செய்து கொண்டிருக்கும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்து, அவரை விடுவிப்பதற்கு அபூபக்ரு (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். அபூபக்ரு (ரலி) உமையாவிடம் ஒன்பது பவுன் (9 தீனார்) செலுத்தி பிலால் (ரலி) அவர்களின் அடிமைத் தளையை அறுத்து விடுவித்தார். அப்போது அவ்விருவருக்கும் நடந்த உரையாடல், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
“அபூபக்ரே! என்னால் சித்திரவதைக்குள்ளாகி, ஏறக்குறைய செத்துவிட்ட, இனிமேல் எதற்கும் பயன்படாத இந்த முக்கால் பிணத்தை ஒரு பவுனுக்கு நீங்கள் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனைக் கொடுத்து நீங்கள் ஏமாறிப் போனீர்கள்” என்றான் உமைய்யா.
“உமய்யா, அவசரப் பட்டு விட்டாய்!. நீ இந்தச் சொக்கத் தங்கத்துக்கு விலையாக நூறு பவுன் கேட்டிருந்தாலும் நான் தந்திருப்பேன். ஒன்பது பவுனுக்கு இவரை விற்ற நீதான் ஏமாளிகளின் தலைவன்!” என்றார் அபூபக்ரு (ரலி).
உயிர் போகும் சூழலில் தம் கொள்கையை மாற்றிச் சொல்லச் சலுகையிருந்தும் நாவளவில்கூட அதைச் சொல்ல மறுத்து, கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததால் பிலால் (ரலி) அவர்கள் இன்றும் உலக முஸ்லிம்களிடத்துத் தனி மரியாதையுடன் மதிக்கப் படுகிறார். Bilal Habashi the first muezzin of Islam was so named as he was from the Habash area, now known as Ethiopia. His life story resonates courage and consistency in a revolutionary time for the Arabs.
He had been amongst the slaves owned by Umaya ibn Khalaf, a member of the leading tribe of Arabia – the Quraish. This man became infamous in history due to his cruelty towards the new Muslims especially his slave Bilal.
Islam had been practiced undercover when Bilal chanced upon knowledge about this new religion which preached equality and worship of One Creator- Allah. He had heard about the prophet of Islam, Muhammad. Muhammad was also from the Quraish tribe and was known amongst his community as”Al-Amin”(the truthful one). This newfound belief led Bilal to being severely punished by his master who hated this new upstart religion.
The torture of Bilal is famous in the history of Islam as it depicted the religious ostracism the new Muslims faced. Umaya ibn Khalaf used to leave Bilal in the middle of the desert, in soaring temperatures, with huge stones placed upon his chest. Bilal Habashi refused under all this duress to give up his beliefs. Even as he was whipped and beaten he would not stop believing in one god. This defiance against his slave master, who may have owned his body, proved ultimately that nobody could own ones mind or ones thought.
Hearing of his plight another companion of the prophet Muhammad, Abu Bakr Siddiqui, came to his aid and bought his freedom for the price of nine dinars. Umaya felt he had won- and he reportedly told Abu Bakr that he would have gladly sold Bilal for one dinar. Abu Bakr replied that he would have paid one hundred dinars. This describes the high place and value of Bilal Habashi, the Ethiopian slave, amongst the early Arab Muslims. His status nor his colour bore any importance amongst them but the strength of his character and his unyielding adherence to his belief. [சுட்டி-37].
தூதுத்துவத்தில் பங்கு கேட்ட பொய்யன் முஸைலமாவை மறுத்த காரணத்தால் ஒவ்வோர் உறுப்பும் வெட்டப் பட்டு மரணித்த தியாகி ஹபீப் பின் ஸைத் அல் அன்ஸாரீ (ரலி) என்பவர், தியாக வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற இன்னொருவராவார். உயிர்போகும் அதுபோன்ற சூழலில்கூட, தாம் இறைத்தூதராக உள்ளத்தால் ஏற்றுக் கொண்டவருக்கு இணையாக இன்னொருவனையும் “இறைத்தூதனே” என வெறும் நாவளவில் விளிக்க மறுத்தவராவார்.
“கிருத்துவத்தை ஏற்றுக் கொண்டால் அரசில் பங்கும் அழகிய மங்கையரும் வழங்கப் படுவீர்; மறுத்தால் சிலுவையில் அறையப் படுவீர்” எனும் ஆசைகாட்டலையும் அச்சுறுத்தலையும் அலட்சியப் படுத்திய கைதி அப்துல்லாஹ் பின் ஹுதைஃபா அல் ஸஹ்மீ (ரலி) அவர்களின் உறுதிமிக்க தியாகத்தையும் வரலாறு தன்னில் பதித்துக் கொண்டுள்ளது. நபித்தோழர் அப்துல்லாஹ் அல் ஸஹ்மீ (ரலி) – இறுதிக் கட்டமாக ரோமாபுரி மன்னனின் தலையை மட்டும் முத்தமிட்டார், அதுவும் தம் சக கைதிகளின் விடுதலைக்காக.
மேற்காண்பவை அனைத்தும் சிலிர்ப்பூட்டும் சில்லரைக் கதைகளல்ல. மாறாக, அரைகுறை-6இல் எடுத்து வைக்கப் பட்ட இறைவசனம் 016:106இல் பின்னிக் கிடக்கும் வரலாற்றுப் பின்னணிகள் (except one who was forced while his heart is at peace with the faith) This is an exception in the case of one who utters statements of disbelief and verbally agrees with the Mushrikin because he is forced to do so by the beatings and abuse to which he is subjected, but his heart refuses to accept what he is saying, and he is, in reality, at peace with his faith in Allah and His Messenger . The scholars agreed that if a person is forced into disbelief, it is permissible for him to either go along with them in the interests of self-preservation, or to refuse, as Bilal did when they were inflicting all sorts of torture on him, even placing a huge rock on his chest in the intense heat and telling him to admit others as partners with Allah. He refused, saying, “Alone, Alone.” And he said, “By Allah, if I knew any word more annoying to you than this, I would say it.” May Allah be pleased with him. Similarly, when the Liar Musaylimah asked Habib bin Zayd Al-Ansari, “Do you bear witness that Muhammad is the Messenger of Allah” He said, “Yes.” Then Musaylimah asked, “Do you bear witness that I am the messenger of Allah” Habib said, “I do not hear you.” Musaylimah kept cutting him, piece by piece, but he remained steadfast insisting on his words. It is better and preferable for the Muslim to remain steadfast in his religion, even if that leads to him being killed, as was mentioned by Al-Hafiz Ibn ‘Asakir in his biography of ‘Abdullah bin Hudhafah Al-Sahmi, one of the Companions. He said that he was taken prisoner by the Romans, who brought him to their king. The king said, “Become a Christian, and I will give you a share of my kingdom and my daughter in marriage.” ‘Abdullah said: “If you were to give me all that you possess and all that Arabs possess to make me give up the religion of Muhammad even for an instant, I would not do it.” The king said, “Then I will kill you.” ‘Abdullah said, “It is up to you.” The king gave orders that he should be crucified, and commanded his archers to shoot near his hands and feet while ordering him to become a Christian, but he still refused. Then the king gave orders that he should be brought down, and that a big vessel made of copper be brought and heated up. Then, while ‘Abdullah was watching, one of the Muslim prisoners was brought out and thrown into it, until all that was left of him was scorched bones. The king ordered him to become a Christian, but he still refused. Then he ordered that ‘Abdullah be thrown into the vessel, and he was brought back to the pulley to be thrown in. ‘Abdullah wept, and the king hoped that he would respond to him, so he called him, but ‘Abdullah said, “I only weep because I have only one soul with which to be thrown into this vessel at this moment for the sake of Allah; I wish that I had as many souls as there are hairs on my body with which I could undergo this torture for the sake of Allah.” According to some reports, the king imprisoned him and deprived him of food and drink for several days, then he sent him wine and pork, and he did not come near them. Then the king called him and asked him, “What stopped you from eating” ‘Abdullah said, “It is permissible for me [under these circumstances], but I did not want to give you the opportunity to gloat.” The king said to him, “Kiss my head and I will let you go.” ‘Abdullah said, “And will you release all the Muslim prisoners with me” The king said, “Yes.” So ‘Abdullah kissed his head and he released him and all the other Muslim prisoners he was holding. When he came back, ‘Umar bin Al-Khattab said, “Every Muslim should kiss the head of ‘Abdullah bin Hudhafah, and I will be the first to do so.” And he stood up and kissed his head. May Allah be pleased with them both. [சுட்டி-38].
***
தனக்கு அரபு மொழியெல்லாம் அத்துப்படி என்பதாகக் காட்டிக் கொள்ள புனித மோசடிக்காரர் பெரிதும் பிரயாசைப் பட்டார். ‘ஸூரா’ (அத்தியாயம்) எனும் சொல்லை “சுரா” என்றார்; ‘ஸீரா’ (நபி வாழ்ந்த வரலாறு) என்பதை “சிரா” என்றார். ‘பனூ குரைளா’ (குரைளாவின் சந்ததியினர்)ஐ, //முஸ்லிமில்லாத அரேபியர்கள், பானு குஃரைஸா என்ற யூதனின் உதவியை நாடினர்// என்று ஒருமைப் படுத்தினர்; போலவே, //நேராக குஃரைஸ்ஸிடம் சென்று, “நான் உங்களிடம் வைத்திருக்கும் அன்பை நன்கறிவீர்கள். உங்களிடம் என் காதில் விழுந்த பரம ரகசியத்தைக் கூற விரும்புகிறேன். ரகசியத்தைக் காத்து என்னையும் காப்பீர்களா?” என அப்பட்டமாக நடித்தான். இதற்கு அவனும் சம்மதித்தான்// ‘குரைஷி’ எனும் மக்கத்துப் பெருங்குலத்தவரைப் பன்மை என விளங்க வேண்டிய அறிவின்றி “குஃரைஸ்” என்று ஓர் ஆளாகக் காட்டினார். போதாதென்று, //ஒரு அரேபிய பழமொழி பழக்கத்தில் உண்டு (Darabani, wa baka; Sabaqani, wa’shtaka)…// என்பதாக அரபுப் பழமொழிக்குள்ளும் புகுந்து விளையாடினார்.
ஆனால், பாவம்! வெட்டி-ஒட்டும்போது ஏற்பட்ட இமி நோய் நடுக்கத்தில் அத்தனை முயற்சிகளையும் தானே பாழாக்கிக் கொண்டு, தான் அரைகுறையே என்பதை வெளிச்சம் போட்டு அவரே காட்டி விட்டார்.
அரைகுறை-7 சுரா (40:28) – காபிஃர் அவனின் குடும்பத்தாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த ஒரு நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் இறைவன் அல்லாஹ்வே தான்!” என்று ஒரு மனிதர் கூறுவதற்காக அவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.”
Sura (40:28) – YUSUFALI: It is He Who has sent His Messenger with Guidance and the Religion of Truth, to proclaim it over all religion: and enough is Allah for a Witness.
“Pharaoh” என ஆங்கிலத்தில் குறிக்கப் படும் ‘ஃபிர்அவ்ன்’ எனும் பெயருடைய எகிப்திய கொடுங்கோல் மன்னனைப் பற்றியோ அவனது காலகட்டத்தைப் பற்றியோ ஏதும் அறிந்திராத புனித மோசடியார், இறைவசனத் தமிழாக்கத்தில் குழம்பியதோடு மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் தான் அரைகுறையே என்பதை அசைக்க முடியாமல் உறுதிப் படுத்தி விட்டார்.
அரைகுறை-7இன் தமிழ்-ஆங்கில முழுவசனங்கள்:
‘ஃபிர்அவ்னின் குடும்பத்தாரில் தம் இறைநம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒருவர், “என் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறுவதற்காக (மூஸா-மோஸஸ் எனும்) ஒருவரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்து விட்டால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களை வந்தடையுமே! நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறிய பொய்யரை நேர்வழியில் செலுத்த மாட்டான்” என்று (மூஸாவுக்காக) வாதாடினார். [அல் குர்ஆன் 040:028]. A believer, a man from among the people of Pharaoh, who had concealed his faith, said: “Will ye slay a man because he says, ‘My Lord is Allah’?- when he has indeed come to you with Clear (Signs) from your Lord? and if he be a liar, on him is (the sin of) his lie: but, if he is telling the Truth, then will fall on you something of the (calamity) of which he warns you: Truly Allah guides not one who transgresses and lies! [சுட்டி-39].
அரைகுறை-7க்கான கூடுதல் விளக்கங்கள் ஆங்கிலத்தில் “Musa was supported by a believing Man from Fir-awn’s Family” எனும் தலைப்பில் கிடைக்கின்றன [சுட்டி-40].
தாம் ஏற்றிருந்த கொள்கையை, வெளிப்படுத்த வேண்டிய வேளையில், வெளிப்படுத்தத் தக்க விதத்தில், தம் கொடுங்கோல் மன்னனின் எதிரில் எடுத்துரைத்த அதே இறைநம்பிக்கையாளரைப் பற்றி அடுத்தடுத்த வசனங்கள் தெளிவாகப் பேசுகின்றன:
“…என்னுடைய சமூகத்தாரே! (அழிந்து போன மற்ற) கூட்டத்தினர்களின் நாட்களைப் போன்றவை உங்கள் மீது வந்து விடுமே என்று நான் அஞ்சுகிறேன். ‘நூஹு(நோவா)’ உடைய சமூகத்திற்கும் ‘ஆது’ உடைய சமூகத்திற்கும் ‘ஸமூது’ உடைய சமூகத்திற்கும், அவர்களுக்குப் பின்னுள்ளவர்களுக்கும் உண்டான (அழிவு)நிலையைப் போன்று (உங்களுக்கும் நிகழ்ந்து விடுமோ என அஞ்சுகிறேன்); ஆனால், அல்லாஹ் (தன்) அடியார்களுக்கு அநியாயம் செய்ய நாடமாட்டான் …” [அல் குர்ஆன் 040:030-031] Then said the man who believed: “O my people! Truly I do fear for you something like the Day (of disaster) of the Confederates (in sin)! Something like the fate of the People of Noah, the ‘Ad, and the Thamud, and those who came after them: but Allah never wishes injustice to his Servants. [சுட்டி-41].
தனக்கே விளங்காதவற்றைத் திண்ணை வாசகர்களுக்கு விளக்க வந்தவர் செய்ததும் வைத்த தலைப்பும் மிகப் பொருத்தம் – அதுதான் “புனித மோசடி”.
அடுத்து, அகழிப் போரைப் பற்றித் தெரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com/
சுட்டிகள் :
36 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=308092510&format=html
37 – http://www.helium.com/items/1506441-bilal-habashi
38 – http://www.tafsir.com/default.asp?sid=16&tid=28249
39 – http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/040.qmt.html#040.028
40 – http://www.tafsir.com/default.asp?sid=40&tid=46007
41 – http://www.usc.edu/schools/college/crcc/engagement/resources/texts/muslim/quran/040.qmt.html#040.030
- இயல்பாயொரு இயல்பு உடைத்தல்..
- நான் யார்?
- வஹ்ஹாபியின் மோசடி
- “ஜெயகாந்தனின் இலக்கியப் பங்களிப்பு” கனடா எழுத்தாளர் இணையம் நடத்தும் கவியரங்கும் கருத்தரங்கும்
- புதுவகை நோய்: இமி-5
- வண்ணநிலவனின் நாவல் ‘ரெயினீஸ் ஐயர் தெரு’
- குழந்தையின் கண்களால்
- ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்
- வானுக்கு கீழே அதன் வாழ்க்கை
- வேத வனம் -விருட்சம் 68
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -2 பாகம் -7 மதுக்குடி அங்காடி (The Tavern)
- உண்மை பேசும் சிநேகிதம்
- கரைப்பார் கரைத்தால்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -4
- அரசியல்
- இதையும்
- காத்திருப்பேன்
- அறம் செறிந்த அன்பும் மறமும்
- மொழிவது சுகம்: அடித்து வளர்க்கிற பிள்ளைகள்
- முள்பாதை 13
- பள்ளத்தாக்கு (முடிவு)
- பள்ளத்தாக்கு
- மாயபிம்பம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -6 (கடைசிக் காட்சி)
- பொட்டலம்