புதிய வகை உயிரை உருவாக்க அறிவியலாளர்கள் முனைகிறார்கள்.

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue


மனித மரபணுவை (genome ) படித்து விரிக்க உதவிபுரிந்த தலைசிறந்த ஒரு முன்னோடி அறிவியலாளரும், நோபல் பரிசு பெற்ற உயிரியல் அறிவியலறிஞர் ஒருவரும் இணைந்து சென்ற வியாழக்கிழமை (நவம்பர் 14) புதிய வகை உயிரினத்தை செயற்கையாக பரிசோதனைச்சாலையில் உருவாக்க இருக்கும் திட்டத்தை வெளியிட்டார்கள்.

மரபணு அறிவியலாளரான க்ரேக் வெண்டர் அவர்களும், ஹாமில்டன் ஸ்மித் அவர்களும் இணைந்து ஒரு ஒற்றை செல் உயிரை, செயற்கையாக அதன் மரபணுவை பரிசோதனைச்சாலையில் கோர்த்து, ஒரு உயிர் உயிராக இருக்க எவ்வளவு அடிப்படை மரபணுக்கூறுகள் தேவையோ அதனை மட்டும் சேர்த்து உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக 3 மில்லியன் டாலர் மான்யம் அமெரிக்க சக்தித் துறை தருகிறது.

இந்த பரிசோதனை வெற்றிபெற்றால், இதுவரை இல்லாத ஒரு உயிர் சாப்பிட்டு பிரிந்து பல்கிப் பெருகும்.

இதற்கான அடிப்படைக் கருத்து, உயிரியலுக்கான கணினி மாதிரியை அடிப்படை உயிரியலோடு இணைத்து நவீன உயிர் ஒன்றை உருவாக்குவது. எல்லா வாழும் செல்களும் ஒரே வேதியியலின் அடிப்படையைக் கொண்டிருப்பதால், இது உயிரியலின் எல்லாத்துறைகளிலும் பெரும் அறிவு வெளிச்சத்தைத் தரும் என்று கருதுகிறார்கள்.

ஸ்மித் அவர்களும் வெண்டர் அவர்களும், இந்த செயற்கை செல்கள் மனிதர்களைப் பாதிக்காதபடி அமைக்கப்படும் என்று கூறுகிறார்கள். காற்றுப்பட்டால் இறந்துவிடும் என்பது போலவே வடிவமைக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சி, புதிய உயிரியல் அடிப்படை உள்ள போராயுதங்களை உருவாக்க அடிப்படையை உருவாக்கித் தரும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆகவே, இந்த பரிசோதனை பற்றி மிகவும் குறைவான தகவல்களையே தெரிவிப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் அறிவியலாளர்கள் தங்களது பரிசோதனையைப் பற்றி முன்கூட்டியே தெரிவிப்பதில்லை, ஆனால் இந்த விஷயம், வாஷிங்டனுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனக்கருதியதால் இதனை வெளியிடுவதாகச் சொன்னார்கள்.

ஸ்மித் அவர்கள் 1978இல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர்

வெண்டர் அவர்களும் ஸ்மித் அவர்களும் M. genitalium என்ற ஒரு ஜீனை மரபணுகூறை இந்த செயற்கை மரபணுவில் போடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள். இந்த ஜீனே ஒரு செல் மனித செல்லோடு இணைய உதவுவது. இன்னும் 200 ஜீன்கள் காற்றில் வாழவும் தீய சூழ்நிலையில் வாழவும் சக்தி தருபவை. இவைகளையும் இந்த செல்லில் போடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். பரிசோதனைச்சாலையின் பாதுகாப்புச் சூழ்நிலையைவிட்டு வெளியே வந்தால் இறந்துவிடுமாறு இது வடிவமைக்கப்படுகிறது.

***

Series Navigation

செய்தி

செய்தி