பின்நவீனத்துக்குப் பின்:அதிநவீனத்துவம் (Hypermodernism) சில குறிப்புகள்

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

எச்.முஜீப் ரஹ்மான்


பால் வெரிலியோ( Paul Virilio) இன்று பிரஞ்ச் பண்பாட்டு கோட்பாடாளர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராவார்.அவரது டிரமாலஜி (dromology) எனும் கருத்தாக்கம் வேகத்தின் விஞ்ஞானத்தை சுட்டிக்காட்டுகிறது.நவீன உலகின் உருமாற்றமும் மற்றும் அமைப்புகளின் தன்மைகள் பற்றிய வேகமுடுக்கி தர்க்கம் எனும் கோட்பாட்டால் மிகவும் பிரபலமானார்.எனினும் பின்நவீன பண்பாட்டு கோட்பாட்டார்களால் அவர் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார். பின்நவீனத்துக்குப்பிறகு என்னவாகவிருக்கும் என்பது பற்றிய விவாதங்களிலும்,அதிநவீனத்துவம் பற்றிய சர்ச்சைகளிலும் அவரது பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் அதிநவீனத்துவம் பற்றியதாகவே இருக்கிறது. 1932 ல் பாரிஸில் இத்தாலிய தந்தைக்கு பிறந்த அவர் 1939 வரை நாண்டே துறைமுகத்திலும் இரண்டாவது உலகப்போர் வரை பிளிஸ்கிரேகிலும் இருந்தார். பாரிஸில் கலைநிறுவனம் ஒன்றில் பயின்று பல்வேறு சர்சுகளில் கண்ணாடி வரைகலைஞராக பணிபுரிந்தார்.1950ல் கிறித்தவ மததில் இணைந்ததுடன் அல்ஜீரிய போரில் இராணுவத்திற்க்காக பணியாற்றினார்.சர்போனியில் நிகழ்வியலியல் (phenomenology) படித்தார்.அவர்து ஆரம்பகால எழுத்துக்கள் எல்லாம் கட்டிடகலைகுறித்த நகர்புற சிந்தனையைக் கொண்டிருந்தது.

1963ல் கிளாட் பரன்ட்டுடன் இணைந்து கட்டிடகலை வரைபடங்கள் மற்றும் மதிப்புரைகளை வழங்கிக்கொண்டிருந்தார்.1960ல் வெளிவந்த அவரது நூலான பங்கர் ஆர்கியாலஜி (Bunker Archeology)தத்துவ நோக்கில்

கட்டிடகலை மற்றும் புகைப்படகலை போன்றவற்றை ஆய்ந்தது.அதில் அவர் இராணுவவெளி,டிராமாலஜி,மறைதலின் அழகியல் போன்ற கருத்தாக்கங்களை வரையறுத்தார்.நிகழ்வியலியல் தளத்தில் ஹர்சல்,ஹைடெக்கர்,மெர்லியு போன்றோர்களின் எழுத்துக்களை சர்ச்சைக்கு உட்படுத்தினார்.1968ல் கட்டடகலை பேராசிரியராக நியமிக்க பட்டார்.சர்வதேச தத்துவ கல்லுரியை ழாக் தெரிதாவுடன் இணைந்து நிறுவினார்.பூக்கோ,கில்ஸ் தெலுயூஸ்,பெலிக்ஸ் கத்தாரி,ழான் பிராஞ்சுவா லையோர்டு போன்ற தத்துவவியலாளர்களுக்கு இணையாக விரைவிலேயே இனம் காணப்பட்டார்.அவரது குறிபிடதகுந்த நூல்களான

Speed & Politics: An Essay on Dromology [1977]

The Aesthetics of Disappearance [1980],

War and Cinema: The Logistics of Perception [1984],

Politics of the Very Worst [1996],

Polar Inertia [1990],

The Information Bomb [1998]

Strategy of Deception [1999]

போன்றவை புகழ்மிக்கதாக திகழ்கிறது.இதன் காரணமாக உலக நாடுகள் பலவும்

அவரை சொற்பொழிவாற்ற அழைப்பு விடுத்தன.1998ல் அவர் ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.அவரது எழுத்துகளில் மையமாக போருக்கு பண்பாடு எவ்வாறு காரணமாகிறது,இராணுவமும்,தொழிற்சாலைகளும் கட்டமைக்கும் மனநிலை போன்றவை சர்ச்சை செய்யப்படுகிறது. வேகமும்,

அரசியலும் என்ற நூலில் நகர முன்னேற்றமும்,சமூக வளர்ச்சியும் மாதிரிப்போரை எங்ஙனம் தவமைத்துக்கொண்டிருகிறது என்பதை அலசினார்.பியூடல் சமூகத்தில் பலபடுத்தப்பட்ட நகரம்,போர் இயந்திரமாக நகர்புற மக்களை எவ்வாறு மாற்றியது என்பதும் ஆராயப்பட்டது.பலபடுத்தப்பட்ட நகரம் அரசியல் வெளியை கொண்டிருப்பதால் செயலற்ற வசிப்பிடம் உருவாகிறது. ஆயுதங்களால் பலபடுத்தப்படும் நகரம் போரை ஒரு இயக்கமாக

மாற்றிவிடுகிறது.காரல் மார்க்சை போலல்லாமல் வெரிலியோ பியூடலிசத்திலிருந்து

முதலாளித்துவம் வெறுமனே பொருளாதார அடிப்படையல்லாது இராணுவம்,

அரசியல்,தொழில்நுட்பங்கள்,குடியிருப்புகள் ஆகியவை உருமாற்றம் பெறும் போது உருவாகிறது என்றார்.மார்க்ஸ் பொருள்முதல் கருத்தாக்கம் வழி வரலாற்றை பார்த்தார்.ஆனால் வெரிலியோ இராணுவ கருத்தாக்கம் வழி வரலாற்றைப் பார்த்தார்.வெரிலியோ நிகழ்வியலியல் ஆய்வில் இராணுவ வெளி

மற்றும் நில அமைப்பு பற்றியும்,அணுகல் கோட்பாடு அடிப்படையில் உளவியல்

பிரச்சனைகளும் விவாதித்தார்.

தெல்யூஸ்,கத்தாரி போன்றோர்கள் பேசிய நிலமயநீக்கம் தற்கால நகரதோற்றத்தில் முதலாளித்துவ நகர வெளியாக மாறியது பற்றி வெரிலியோ விவாதித்தார்.பண்பாட்டு வெளியின் அமைப்பு பற்றியும் தொடர்பியல் சாதனங்கள் பாதிப்பு தகவல் ஊடாட்டமாக மாறுவது பற்றியும் இராணுவ தொடர்பு தகவல் சாதனங்களை சமூகத்துக்குள் நுழைப்பது இராணுவமயமாக்கலின் அரசியல் செயல்பாடு என்ற விதத்தில் அவர் விரிவாக விவாதித்தார்.மேலும் 1980ல் வெரிலியோ கோட்பாடு உருவாக்கத்தின் அடுத்த கட்ட நகர்வான மறைதல் எனும் கருத்தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

1990ல் ரிமோட் கண்டிரோலில் இயங்கும் சைபர்னெட்டிக் டெக்னால்ஜி பற்றியும் அதன் பண்பாட்டு நிலைப்பற்றியும் பேசினார்.இணையத்தின் தன்மையை மூன்றாவது கால இராணுவ ஆயுதம் என்று வர்ணித்தார்.அவரின் பின்னை ஜன்ஸ்டானியன் பண்பாட்டு கோட்பாடு ‘polar inertia ‘, the ‘third ‘, or, ‘transplant revolution ‘, போன்றவை முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளாகும்.

கொசவா மற்றும் வளைகுடா யுத்தங்கள் சைபர்னெட்டிக் நிகழ்த்துகலைகள்

என்று வர்ணித்தார்.அவரது விமர்சன கருத்தாக்கங்களான ‘endo-colonization ‘, ‘cyberfeminism ‘, ‘technological fundamentalism ‘, ‘the information bomb ‘, ‘the strategies of deception ‘ என்பன போன்றவை புகழ் பெற்றன.இதிலிருந்து தான்

‘hypermodern ‘ cultural theory யை உருவாக்கினார்.இதனால் அவர் சிறந்த சமூக

ஆய்வாளராக மதிக்கப்பட்டார்.தற்போது அவரது எழுத்துக்கள் பின்நவீன பண்பாட்டு கோட்பாடார்களான பெளமான்,லாஸ் ,வான் கிளாஸ்விட்ச் சொல்லும்

‘global information culture ‘ன் அரசியல் பொருளாதாரமும் மார்னெட்டியின்

artistic theory of Futurism மும் அவரை கவர்ந்தன.The Art of War (1993) என்ற

கட்டுரையில் வெரிலியோ மிகதீவிர நிலைப்பாட்டை எடுத்தார்.அரசியல் பொருளாதாரத்தில் செல்வம் என்பது வேகத்தின் அரசியல் பொருளாதாரத்தை

சார்ந்தது என்றார்.உண்மையில் சமூக அரசியல் நிறுவனங்களின் வரலாறு என்பது

இராணுவம்,கலை இயக்கங்களின் போருக்கான வேகத்தின் தேவை பற்றிய காட்சிகளாகும்.Popular Defense & Ecological Struggles (1990 ), Pure War (Virilio and Lotringer, 1997 )பற்றிய விஷயங்கள் துய்மையான அதிகாரம் எது

என்பன பற்றியும் நகர வெளியை இராணுவமயமாக்கும் அரசியல் பற்றியும்

‘military-scientific complex ‘ என்ற பெயரில் விளக்கினார்.எதிர்காலத்தில் மனித பிரக்ஞையை தொழில்நுட்பங்கள் ‘morphological irruptions ‘ , ‘picnolepsy ‘ (frequent interruption) என்றவிதத்தில் தோற்றமறைதலின் குணாம்சத்துடன் தீர்மானம் செய்யப்படும்.Einstein ன் General Relativity Theory வைத்து நவீன பார்வை மற்றும் தற்கால நகரங்கள் the products of military power ஆகவும் time-based cinematic technologies of disappearance ஆகவும் இருக்கிறது என்றார்.காட்சி பிரக்ஞையுடன் திகழும் தொழில்நுட்ப தோற்றமறைதல் நகர தோற்றமாக விளங்குவதோடு காட்சி வியக்கியானங்கள் முக்கியமானதாக மாறிவிடும்.இதை

வெரிலியோ கூறும்போது the crisis of whole dimensions என்கிறார்.

தோற்றமறைதலின் அழகியலை பேசும் போது அறிவு தளத்தில் இயல்பு கோணங்களின் நெருக்கடி விளக்கம் என்ற பெயரில் பொதுமைபடுத்தப்படுவாதாக

கூறுகிறார்.வெரிலியோ The Lost Dimension என்ற பேரில் overexposed city ஆக நகரங்கள் உருவாகின்றன என்றும் technological space-time என்ற பேரில் இராணுவமயமாக்கல் சினிமா தொழில்நுட்பங்களுடன் வினைபடுகிறது என்கிறார்

சமீபத்தில் டையானாவின் சவஅடக்கமும்,கிளிண்டனின் மோனிகா லெவின்ஸ்கி விவகாரம் போன்றவை நகரங்கள் குவியபடுத்தப்படுகிறது என்பதற்கு உதாரணங்களாக காட்டுகிறார்.போரிலும்,சினிமாவிலும் பதிலி எனும் கருத்து எதார்த்தத்தின் பன்முக தன்மைக்காக முன்னிறுத்தப்படுகிறது.பூதிலாரின்

‘simulation ‘ என்ற கருத்தாக்கத்தை அடியொற்றி logistics of perception ஆக போரும்,சினிமாவும் விளங்குகிறது என்கிறார்.வளைகுடா போரும்,கொசாவா போரும் ஹைபர் மார்டன் நிகழ்வுகள் என்கிறார்.சினிமாவில் காட்டப்படும் போர் பற்றிய சித்தரிப்புகள் போரை சாதாரணமான சினிமாபோராகவே கருதப்பட செய்கிறது.அவரது படைப்புகளை பார்ப்போம்.

Virilio, P. (1976) L ‘ insecurite du territoire. Paris: Stock.

Virilio, P. (1986 [1977]) Speed & Politics: An Essay on Dromology. New York:

Semiotext(e).

Virilio, P. (1989 [1984]) War and Cinema: The Logistics of Perception. London

and New York: Verso.

Virilio, P. (1990 [1978]) Popular Defense & Ecological Struggles. New York:

Semiotext(e).

Virilio, P. (1991a [1980]) The Aesthetics of Disappearance. New York:

Semiotext(e).

Virilio, P. (1991b [1984]) The Lost Dimension. New York: Semiotext(e).

Virilio, P. (1991c) L ‘ ecran du desert: chroniques de guerre. Paris: Galilee.

Virilio, P. (1994a [1975]) Bunker Archeology. Princeton: Princeton Architectural

Press.

Virilio, P. (1994b [1988]) The Vision Machine. Bloomington and London: Indiana

University Press and British Film Institute.

Virilio, P. (1995 [1993]) The Art of the Motor. Minneapolis: University of

Minnesota Press.

Virilio, P. (1996 [1966]) ‘Habitable Circulation ‘, pp.xv in P. Virilio and C.

Parent (eds.) Architecture Principe, 1966 et 1996. Besancon: L ‘ imprimeur.

Virilio, P. (1997 [1995]) Open Sky. London: Verso.

Virilio, P. (1999a [1996]) Politics of the Very Worst. New York: Semiotext(e).

Virilio, P. (1999b [1990]) Polar Inertia. London: Sage.

Virilio, P. (2000a [1998]) The Information Bomb. London: Verso.

Virilio, P. (2000b [1999]) Strategy of Deception. London: Verso.

Virilio, P. and Parent, C. (eds.) (1996) Architecture Principe, 1966 et 1996.

Besancon: L ‘ imprimeur.

Virilio, P. and S. Lotringer (1997 [1983]) Pure War: Revised Edition. New York:

Semiotext(e).

Virilio, P. and Kittler, F. (1999) ‘The Information Bomb: A Conversation. ‘

Edited and Introduced by John Armitage, pp.81-90 in J. Armitage (ed) Special

issue on: Machinic Modulations: new cultural theory & technopolitics. Angelaki:

journal of the theoretical humanities. Vol. 4, No. 2, September.

அடுத்தபடியாக அவர் இன்போவார் என்ற கருத்தாக்கத்தை பேசுகிறார்.இந்த போர் மரபார்ந்த போரில் இருந்து வித்தியாசப்பட்டு உண்மையை சிதறடிக்கிறது என்றார்.பிம்பங்களின் போராக இருப்பதால் எதார்த்தமான போர் பற்றிய பிரக்ஞாபூர்மான அறிவு தர்க்கபார்வையினால் கட்டமைக்கப்படுவதால் சினிமா,போர் எல்லாம் ஒரேமாதிரியானது என்று நம்பவைக்கப்படுகிறது என்று The Vision Machine (1994b [1988]) கட்டுரையில் தெளிவாக விவரிக்கிறார்.மக்கள் தங்கள் கண்களை இப்போது நம்புவதுகிடையாது.மாறாக தொழில்நுட்பத்தின் காட்சிகளை நம்புகிறார்கள் என்று கூறினார்.இன்று தோற்றநிலைமெய்மை (Virtual Reality) என்று இணையதளங்களில் இராணுவ விஞ்ஞானம் ‘pure perception ‘ என்பதை வரையறுத்துக்கொண்டிருக்கிறது.வெரிலியோ கூறும்போது எதார்த்தத்தை காலி செய்யும் முயற்சியாகும் இது என்கிறார்.மேலும் காட்சிக்கும்,ரிமோட் கண்ரோல் தொழிநுட்பத்துக்குமான பண்பாட்டு உறவு பற்றி விவாதித்தார்.

அவர் தனது நூலான போலார் இனேர்சியாவில் வெரிலியோ வேகம்,தூய பார்வை,மனித நிலை போன்றவற்றை விளக்குகிறார்.மறைமுக ஒளி என்ற கருத்தாக்கத்தைப் பற்றி பேசும் போது பாரிஸ் மெட்ரோ அமைப்பில் வீடியோதிரைகள் மூலம் காட்சிகளை பார்வைபடுத்தும் நிலை இருப்பதை சுட்டிக்காட்டி கட்டுபடுத்தப்பட்ட சமூகமாக மனிதன் மாறிவருவதை தெளிவுபட விளக்குகிறார்.இவ்வகை சமூகங்களை பூக்கோ கண்காணிக்கப்படும் சமூகம் என்றும்,தெல்யூஸ் கட்டுபடுத்தப்பட்ட சமூகம் என்றும் வர்ணித்தனர்.அதே சமயம்

தொழில்நுட்பமாக உருவாக்கப்படும் செயலற்ற நிலைக்கும்,உயிரியல் அடிப்படையிலான மனித இயக்கத்துக்குமான வித்தியாசம் குறித்து பின்னர் எழுதினார்.ஜப்பானில் ஸுமிங் பூல்களில் அலைகள் உருவாக்கும் இயந்திரங்கள் பற்றியும் பல நாடுகள் உள்ளூர் சமயத்தை உலக சமயத்தை நோக்கி நகர்வதையும் பழைய ஆப்டிகல் தொடர்பிலிருந்து எலக்ற்றோ ஆப்டிக்கல் தொடர்பாக மாறுவதையும் வைத்து விளக்கினார்.இருமுனை செயலற்றநிலை,

வேகமுடுக்கியாலும்,வேகமின்மையாலும் உருவாக்க படுவதை தொடர்ந்து விவாதித்தார்.1980 களின் பிறகு பின் தொழிற்சாலை யுகத்தில் ஒளியின் வேகம் தான் உண்மை சமயத்தையும்,உண்மை வெளியையும் தீர்மானிக்கிறது.இச்சூழலில் பூகோளரீதியிலான இங்கே,அங்கே ஆகியவற்றின் இடைவெளி கொண்ட சமயத்தின் சுவர்களை ஒளி உடைத்தெறிந்து விட்டது.

பாலைவனபிரதேசத்தில் உருவாக்கப்பட்ட முழுவதும் ஜஸ்களால் ஆன விளையாட்டுப்பூங்கா தொழில்நுட்ப மங்க் என்றே அவர் வர்ணித்தார்.சினிமாவும்,டி.வியும் உலக யுத்த மண்டலமாக மாறியிருக்கிறது.இப்போது இராணுவம் பிரதேசங்களை மட்டும் ஆக்ரமிக்கின்றன.ஆனால் யுத்தம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது என்கிறார்.அவர் தனது The Art of the Motor (1995 [1993]) கட்டுரையில் மனித உடலுக்கும்,தொழில்நுட்பத்துக்குமான உறவு பற்றி விவாதிக்கிறார்.அபோது வருங்காலம் third, or, the transplant revolution என்றே வர்ணிக்கிறார்.இராணுவமயமாக்கப்பட்ட தொழிற்விஞ்ஞானம் மனித உடலுக்கு எதிராக மாறும் சூழல் உருவாகும்.இதை ‘neo-eugenics ‘ என்றழைக்கிறார்.மேலும் அவர் சைபர் பெண்ணியம் எனும் கருத்தைச்சொல்லும் போது சைபர் தொழிற்நுட்பமும்,பெண்ணியமும் திருமணஉறவுகளை எதிர்ப்பதன் வாயிலாக சைபர்செக்ஸ் பிரதானப்படுத்தப்படும்.இந்நிலையை அவர் தொழிநுட்ப அடிப்படைவாதம் என்கிறார்.அதுபோல மதம் என்பது தொழிற்நுட்பத்தின் அதிகாரத்தை நம்புவதாக மாறும்.தற்போதுள்ள கடவுள்களும்,மத உணர்வுகளும் புது தகவல் யுகத்தில் தொழில்நுட்பங்களும்,சைபர்பெண்ணியவாதிகளும்,மற்றும் மாறுபட்ட பண்பாட்டுவாதிகளும் மாற்றியமைத்து விடுவார்கள்.

பால் வெரிலியோ மற்ற கோட்பாட்டாளர்களை போல அல்லாமல் நவீனத்துவம் என்பதை விஞ்ஞான நவீனத்துவமாகவே பார்க்கிறார்.விஞ்ஞான நவீனத்துவம் 1915ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது என்கிறார்.எனவே நவீனத்துவம்,பின் நவீனத்துவம்,பெருங்கதையாடல்கள்,உரையாடல் போன்றவற்றை கடந்தாக வேண்டும்.நாம் அதி நவீனத்துவ பண்பாட்டு சூழலில் இருந்துக் கொண்டிருப்பதால் அதைப்பற்றி விவாதிக்க வேண்டும்.பால் வெரிலியோவின் வார்த்தைகளில் சொன்னால் நமது சூழல் அதி நவீனத்துவம் அல்லது தற்கால இராணுவயியலின் பண்பாட்டு தர்க்கம் என்பதே ஆகும்.சில பின் நவீன பண்பாட்டு கோட்பாடாளர்கள் அவரது கோட்பாடை பின் நவீனத்துவம் சார்ந்ததாகவே பார்க்கிறார்கள்.ஆனால் இந்நோக்கு அவரை மலினபடுத்திவிடும்.ஆனால் அவர் அதையும் தாண்டி மிக வலுவான நிலையில் எல்லாவற்றையும் விவாதிக்கிறார்.அவரது Strategy of Deception ஆக இருந்தாலும் சரி அல்லது Revolution in Military Affairs ‘ (RMA) ஆக இருந்தாலும் சரி அல்லது Global Information Dominance (GID) ஆக இருந்தாலும் சரி

எல்லாமே விரிவான சிந்தனைகளை உடையது.மீண்டும் ஒரு முறை அவரது சிந்தனைளை,கோட்பாடுகளை நாம் விரிவாக அலசுவோம்.

References

Armitage, J. (1999) ‘Dissecting the Data Body: An Interview with Arthur and Marilouise Kroker ‘, pp.69-74 in J. Armitage (ed) Special issue on: Machinic Modulations: new cultural theory & technopolitics. Angelaki: journal of the theoretical humanities. Vol. 4, No. 2, September.

Armitage, J. (2000a): ‘Paul Virilio: An Introduction ‘, pp.1-23 in J. Armitage (ed) Paul Virilio: From Modernism to Hypermodernism and Beyond. London: Sage.

Armitage, J. (2000b) ‘From Modernism to Hypermodernism and Beyond: An Interview with Paul Virilio ‘, pp.25-56 in J. Armitage (ed) Paul Virilio: From Modernism to Hypermodernism and Beyond. London: Sage.

Armitage, J. (2000c) ‘The Theorist of Speed ‘, pp.145-147 in New Left Review 2 (Second Series) March/April 2000.

Armitage, J. (2000d) ‘The Uncertainty Principle: Paul Virilio ‘s The Information Bomb ‘, in G. Redden and S. Aylward (eds.), M/C-A Journal of Media and Culture,

Issue 3, Volume 3, ‘Speed ‘. (Electronic journal:http://www.api-network.com/mc/).

Armitage, J. (2001a, forthcoming) ‘The Kosovo War Did Take Place: An Interview with Paul Virilio ‘, in J. Armitage (ed) Virilio Live: Selected Interviews.London: Sage.

Armitage, J. (2001b, forthcoming) ‘The Military is the Message ‘, in J. Armitage and J. Roberts (eds.) Living With Cyberspace: Technology & Society in the 21st Century. London: The Athlone Press.

Armitage, J. and Graham, P. (2001, forthcoming) ‘Dromoeconomics: Towards a Political Economy of Speed ‘ in J. Armitage (ed) Parallax 18, Vol. 7, No. 1, ‘Economies of Excess ‘.

Baudrillard, J. (1983) Simulations. New York: Semiotext(e).

Baudrillard, J. (1995) The Gulf War Did Not Take Place. Bloomington and

Indianapolis: Indiana University Press.

Bauman, Z. (1999) In Search of Politics. Cambridge: Polity Press.

Clausewitz, Von C. (1997 [1832]) On War. Ware: Wordsworth Editions.

Borgmann, A. (1993) Crossing the Postmodern Divide. Chicago: University of Chicago Press.

Conley, V. A. (1997) Ecopolitics: The Environment in Poststructuralist Thought.London: Routledge.

Crogan, P. (1999) ‘Theory of State: Deleuze, Guattari and Virilio on the State,

Technology, and Speed ‘, pp.137-148 in J. Armitage (ed) Special issue on:

Machinic Modulations: new cultural theory & technopolitics. Angelaki: journal of the theoretical humanities. Vol. 4, No. 2, September.

Deleuze, G. (1995) ‘Postscript on Control Societies ‘, pp.177-182 in G. Deleuze.

Negotiations: 1972-1990. New York: Columbia University Press.

Deleuze, G. and Guattari, F. (1988) A Thousand Plateaus: Capitalism and

Schizophrenia. London: The Athlone Press.

Der Derian, J. (1992) Antidiplomacy: Spies, Terror, Speed and War. Oxford:

Blackwell.

Foucault, M. (1977) Discipline and Punish: The Birth of the Prison.

Harmondsworth: Penguin.

Genosko, G. (1999) McLuhan and Baudrillard: The Masters of Implosion. London:Routledge.

Guillaume, P. (1937) La Psychologie de la forme. Paris: Flammarion.

Haraway, D. (1985) ‘A Manifesto for Cyborgs: Science, Technology and Socialist Feminism in the 1980s ‘, pp.65-108 in Socialist Review 80 (2).

Harvey, D. (1989) The Condition of Postmodernity: An Enquiry into the Origins of Cultural Change. Oxford: Blackwell.

Harvey, D. (2000) ‘Reinventing Geography ‘, pp.75-97 in New Left Review 4 (Second Series) July/August.

Johnson, P. (ed.) (1996) The Function of the Oblique: The Architecture of Claude Parent and Paul Virilio. London: Architectural Association.

Kearney, R. (1986) Modern Movements in European Philosophy. Manchester:

Manchester University Press.

Kellner, D. (2000) ‘Virilio, War, and Technology: Some Critical Reflections ‘,

pp.103-126 in J. Armitage (ed) Paul Virilio: From Modernism to Hypermodernism and Beyond. London: Sage.

Kroker, A. (1992) ‘Paul Virilio: The Postmodern Body as War Machine ‘, pp.20-50 in A. Kroker The Possessed Individual: Technology and Postmodernity. Basingstoke: Macmillan.

Kroker, A. and Kroker, M. (eds.) (1997) Digital Delirium. Montreal: New World Perspectives.

Lash, S. (1999) ‘Bad Objects: Virilio ‘, pp.285-311 in S. Lash Another Modernity,A Different Rationality. Oxford: Blackwell.

Lyotard, J-F. (1984) The Postmodern Condition: A Report on Knowledge.

Minneapolis and Manchester: Minnesota Press and Manchester University Press.

Mandelbrot, B. (1977) The Fractal Geometry of Nature. New York: Freeman.

McLuhan, M. (1994 [1964]) Understanding Media: The Extensions of Man. Cambridge,Mass: MIT Press.

Plant, S. (1997) Zeros + Ones: Digital Women + The New Technoculture. London:

Fourth Estate.

Sokal, A. and Bricmont, J. (1998) Intellectual Impostures: Postmodern

Philosophers ‘ Abuse of Science. London: Profile Books.

Tzu, S. (1993 [ancient Chinese text]) The Art of War. Ware: Wordsworth Editions.

Virilio, P. (1976) L ‘ insecurite du territoire. Paris: Stock.

Virilio, P. (1986 [1977]) Speed & Politics: An Essay on Dromology. New York:

Semiotext(e).

Virilio, P. (1989 [1984]) War and Cinema: The Logistics of Perception. London

and New York: Verso.

Virilio, P. (1990 [1978]) Popular Defense & Ecological Struggles. New York:

Semiotext(e).

Virilio, P. (1991a [1980]) The Aesthetics of Disappearance. New York:

Semiotext(e).

Virilio, P. (1991b [1984]) The Lost Dimension. New York: Semiotext(e).

Virilio, P. (1991c) L ‘ ecran du desert: chroniques de guerre. Paris: Galilee.

Virilio, P. (1994a [1975]) Bunker Archeology. Princeton: Princeton Architectural

Press.

Virilio, P. (1994b [1988]) The Vision Machine. Bloomington and London: Indiana

University Press and British Film Institute.

Virilio, P. (1995 [1993]) The Art of the Motor. Minneapolis: University of

Minnesota Press.

Virilio, P. (1996 [1966]) ‘Habitable Circulation ‘, pp.xv in P. Virilio and C.

Parent (eds.) Architecture Principe, 1966 et 1996. Besancon: L ‘ imprimeur.

Virilio, P. (1997 [1995]) Open Sky. London: Verso.

Virilio, P. (1999a [1996]) Politics of the Very Worst. New York: Semiotext(e).

Virilio, P. (1999b [1990]) Polar Inertia. London: Sage.

Virilio, P. (2000a [1998]) The Information Bomb. London: Verso.

Virilio, P. (2000b [1999]) Strategy of Deception. London: Verso.

Virilio, P. and Parent, C. (eds.) (1996) Architecture Principe, 1966 et 1996.

Besancon: L ‘ imprimeur.

Virilio, P. and S. Lotringer (1997 [1983]) Pure War: Revised Edition. New York:

Semiotext(e).

Virilio, P. and Kittler, F. (1999) ‘The Information Bomb: A Conversation. ‘

Edited and Introduced by John Armitage, pp.81-90 in J. Armitage (ed) Special

issue on: Machinic Modulations: new cultural theory & technopolitics. Angelaki:

journal of the theoretical humanities. Vol. 4, No. 2, September.

Waite, G. (1996) Nietzshe ‘s Corps/e: Aesthetics, Politics, Prophecy, or the

Spectacular Technoculture of Everyday Life. Durham and London: Duke University

Press.

Wark, M. (1994) Virtual Geography: Living with Global Media Events. Bloomington

and Indiana: Indiana University Press.

Zurbrugg, N. (2001, forthcoming) ‘Not Words But Visions! ‘ An Interview with Paul

Virilio, in J. Armitage (ed) Virilio Live: Selected Interviews. London: Sage.

John Armitage is Principal Lecturer in Politics and Media Studies at the

University of Northumbria, UK. The editor of Paul Virilio: From Modernism to

Hypermodernism and Beyond (2000), he is currently editing Virilio Live: Selected

Interviews for publication in 2001.

mujeebu2000@yahoo.co.in

Series Navigation

எச்.முஜீப் ரஹ்மான்

எச்.முஜீப் ரஹ்மான்