எச்.முஜீப் ரஹ்மான்
10 துவக்கப்புள்ளிகள்:
அ.குவிமையம்:பண்பாட்டு ஆய்வுகளுக்கும் அடையாள வித்தியாச அரசியலுக்கும் ஆன கோட்பாட்டுறவு பின்காலனிய கோட்பாட்டிலும்,விமர்சன இன கோட்பாட்டிலும் மிகுந்த அளவுக்கு தாக்கத்தை செலுத்தி வருகிறது.
ஆ.சவால்
1.நவீனத்துவ தர்க்கத்தின் படி அடையாளம் குறிப்பிடத்தகுந்த முறையில் நிறுவப்பட்டிருக்கிறது.மேலும் இந்த அடையாள அமைப்பு பொருத்தமான வடிவங்களிலும்,அரசியல் போராட்ட தளத்திலும் வியாக்கியானப்படுத்தப்படுகிறது.
2.அடையாளம் சம்பந்தமான விஷயங்களில் அதிகாரத்தின் ஒவ்வொரு போராட்டமும் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவில் புரிந்து கொள்ளப்படுகிறது.
இ.அறிக்கைகள்
1.பண்பாட்டு ஆய்வுகள் ஒடுக்குதல் வடிவங்களைத்தாண்டி ஒடுக்குபவருக்கும் ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான காலனீயம் சம்பந்தமான விஷயங்களையும் மீறல் சம்பந்தமானவைகளையும் ஒடுக்குதல் எதிர்ப்புகளையும் ஆராய்கிறது.
2.பண்பாட்டு ஆய்வுகள் மாற்றுவ்கை நடைமுறைகளை பற்றி உரையாடல் நடத்த எத்தனிக்கிறது.
ஈ.அடையாளம் என்பது நவீன வளர்சியே
1.மூன்று தர்க்கங்கள் நிறுவப்பட்டுள்ளது
ஒன்று வேறுபாட்டின் தர்க்கம்
இரண்டு தன்னிலையின் தர்க்கம்
மூன்று தற்காலிகமான தர்க்கம்
2.போட்டிகளும் மாற்றுகளும்
ஒன்று மற்றவை பற்றிய தர்க்கம்
இரண்டு உற்பத்தியாக்கம் பற்றிய தர்க்கம்
மூன்று விதி பற்றிய தர்க்கம்
20.பண்பாட்டு ஆய்வுகளில் அடையாளம்,வித்தியாசம்
அ.ஹாலின் இரண்டு வடிவங்கள்( அடையாளப் போராட்டம்)
1.பொதுவான தோற்றுவாய் அல்லது அனுபவத்தின் அமைப்பு அல்லது இரண்டும்
2.உறவுமிக்க,முழுமையற்ற,செயல்பாடுடைய:இவை நம்பகமான தனித்த அடையாளங்களை உலகப்பொதுவாக அல்லது அனுபவமாக பிரிந்திருப்பதை மறுக்கிறது.
3.ஹிராஸ்பெர்க் கருத்துப்படி இரண்டாவது மாதிரி கோட்பாட்டு நிலையில் சரியாக விளக்கப்படவில்லை.
ஆ.ஹிராஸ்பெர்க்கின் கருத்தில் நான்கு வடிவங்கள்:
வித்தியாசம்
பிரிவுகளாலானது
ஒட்டிணைப்பு(கலப்பு)
எல்லை அல்லது வெளியே
1.வித்தியாசம்: வித்தியாசத்தின் வடிவம் குறிப்பிட்ட எதிர்மறை உறவுகளாக இணைப்பு பதமாக விளக்கப்படுகிறது.(விளிம்பு நிலை மற்றவை அல்லது அடித்தட்டு மக்கள்) அடையாளம் இன்றியமையாத உள்முக சக்தியாக நிலைநிறுத்தப்படுவது .
வித்தியாசம் எப்போதும் வேறுபாட்டுடனும்,ஒத்திபோடபடுவதுமாக மொழியில் அர்த்தங்களை குறிப்பிட்ட தருணங்களுக்கு பயன்படுத்துவதால் அதன் முக்கியத்துவம் முழுமையற்றதாகிறது
2.பிரிவுகளாலானது: பன்முகத்தன்மை வாய்ந்த அடையாளங்கள் மற்றும் நிலைகள் வலியுறுத்தப்பட்டு தெளிவுமிக்க அடையாளம் ஆகிறது.அடையாளங்கள் எப்போதும் முரண்பாடுகளால் ஆனவையால் பிரிவுகளாய் இருக்கிறது.
3.ஒட்டிணைப்பு:ஹிராஸ்பெர்க் மூன்று படிமங்களை எல்லையின் இருப்புக்கு தருகிறார்.
ஒன்று மூன்றாவது வெளி : விளிம்பு நிலை அடையாளங்கள் சிறப்பாக மூன்றாவது பதங்களில் இடம் சார்ந்த இருப்புகளுக்கிடையே விளக்கப்படுகிறது
இரண்டு விளிம்பு என்பது இடம் சார்ந்து வெளிசார்ந்து பல்வேறு வடிவங்களில் வேறுபாடுகளுடன் நிறுவிக்கொள்கிறது
மூன்று எல்லையை கடப்பது:பன்முகத்தன்மை,நிச்சயமற்றதன்மை,நகரும் தன்மை அழுத்தமாக பிம்பங்களை உருவாக்குகிறது.
4.நாடு பற்றிய எண்ணம்(டயாஸ்பொரா):ஜிம் கிளிபோர்டின் கருத்துப்படி நாடுகடந்த ஒரு இயக்கம் அரசியல் போராட்டமாக சொந்தமண்ணை வந்தடைவது என்பது வரலாற்றில் இடம் விட்டு போனவர்களுக்கு அல்லது சமூகத்துக்கு உதவிபுரியும்.
வேறுவார்த்தைகளில் சொல்வதானால் வரலாற்றின் அடிப்படையில் வெளி சார்ந்த உள்நோக்கம் அடையாளத்தை பெற்று தரும்.
30.பண்பாட்டு அடையாளமும் வித்தியாசத்தின் தர்க்கமும்
அ.ஹிராஸ்பெர்கின் வாதம்:எந்த கோட்பாடுகள் நவீன சக்தியை,நவீன தர்க்கத்தை எதிர்க்க இயலாது போனதோ அவை வித்தியாசம்,தனித்தன்மை,சிறிய காலத்தில் இயங்கும் தன்மையைப் பெற்றிருக்கும்.
ஆ.வித்தியாச கோட்பாடுகள் மற்றமை பற்றிய கோட்பாடுகளை எதிர்க்கும்?
1.வித்தியாச கோட்பாடுகள்: அடையாளம் அல்லது அந்த வார்த்தையின் அர்த்தம் பிம்பமாக பல்வேறு வடிவங்களில் உறவு கொண்டிருக்கிறது.
2.மற்றமை பற்றிய கோட்பாடுகள்: வித்தியாசம் என்பது வரலாற்றில் பொருளாதாரம் மூலம் உருவாக்கப்பட்டு நவீன அமைப்புகளின் வழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.எனவே அவற்றுக்கு அடிப்படையாக அதிகாரம் உந்துசக்தியாக அமைந்திருக்கிறது என்பது தெரியாது.அதாவது ஹிராஸ்பெர்க்கின் கருத்துப்படி மற்றமை கோட்பாடுகள் வித்தியாசத்தை ஏற்றுக்கொண்டு அடையாளத்தை வைத்து நிறுவிக்கொள்ள விரும்பாது.மற்றவை என்பது அதன் தனித்த பகுதியில் இருக்கிறதே தவிர மற்றவைகளுடன் இணைந்திருக்காது. மற்றமை என்பது அதன் பகுதியில் தனித்துவமாக மற்றவை இல்லாமலே இயங்கவும் குறிபிடதகுந்த உறவுடனுமிருக்கும்.(The other exists in its own specific place, not as a particular Other for something.)
இ.எட்வர்டு செய்யத் மற்றும் ஓரியண்டலிசம்
1.ஓரியண்டலிசம் என்னவென்று செய்யத் விளக்கும் போது அறிவாதரத்தையும்,தொகுப்பையும் பெற்றிருக்கிற ஒரு சிந்தனைபோக்கு கீழ்திசைக்கும்,மேற்கத்தியத்துக்கும் இடையில் இயங்குவதாகும்.
2.செய்யத்தின் கருத்துப்படி கீழ்திசை என்பது ஒருவகை பிரதிபலித்தல் ஆகும்.இது கீழ்திசைவாதிகளிடமிருந்து பிரதிகள்,வரலாறு,பத்திரிக்கைகள் வாயிலாக கண்டுபிடிக்கப்படும்.
3.அதாவது கீழ்திசை என்பது பண்பாட்டு வகையாக மேற்கத்தியவாதத்தை எதிர்க்கிறது.
4.கீழ்திசை என்ன என்பதை செய்யத் தெளிவாக்கவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது.
5.கிராஸ்பெர்க்கின் கருத்தின் படி கீழ்திசை பற்றி மூன்று வித கண்ணோட்டங்கள் இருக்கிறது.
ஒன்று மேற்கத்தியத்தைப் பற்றிய சொந்த புரிதல் வழி அதிகமாகவோ அல்லது துணையாகவோ எதிர்மறையாக விளங்கி கொள்ளுதல்.இவர்கள் கீழ்திசையை சார்ந்தவர்களல்ல.
இரண்டு சமமற்ற இரண்டு உறவுகள் ஒருவரைப்பற்றி ஒருவர் வித்தியாசமாக விளக்கங்களை அளித்தனர்.
மூன்று கீழ்திசைவாதிகள் கீழ்திசையை புரிந்துகொண்ட விதம்.இதை எட்வர்டு செய்யது போன்றோரிடம் காணலாம்.செய்யது ஓரியண்டலிசம் நூலுக்காக பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பார்த்து சுரண்டலையும்,ஆதிக்கத்தையும் தனக்கு கிடைத்த ஆதரங்கள் வழியே நிரூபித்தார்.
ஈ.கிராஸ்பெர்க்கின் வாதம்:
1.பண்பாட்டு ஆய்வுகள் ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்புகளையும்,இருப்புகளையும் பேசி அதையும் தாண்டுகிறது.நீட்சேவின் பார்வையில் வித்தியாசத்தின் தர்க்கம் என்பது மற்றவையை தவறாக வியாக்கியானப்படுத்தி சினத்தை அதிகப்படுத்தும் அரசியலைக் கொண்டிருக்கிறது.
2.மாற்றுகள் மற்றவை பற்றிய கோட்பாடுகள் வழியாக கட்டமைக்கப்படுகிறது என்றாலும் அவசியமானவையல்ல.
40.பண்பாட்டு அடையாளமும் தன்னிலையின் தர்க்கமும்
அ.நவீன மனிதாபிமான தன்னிலை மூன்று வேறுபட்ட திட்டங்களை கொண்டுள்ளது.
1.தன்னிலை என்பது ஒரு நிலை என்றவிதத்தில் அனுபவத்தினையும்,அறிவையும் சாத்தியப்படுத்தல்.
2.முகவர் என்றவிதத்தில் செயல்நிலையிலிருப்பது.
3.சுயம் என்பது சமூக அடையாளத்தின் குறி மாத்திரமே.
ஆ.கிராஸ்பெர்க்கின் முரண்:
1.எப்படி ஒரு தனிமனிதன் காரணமாகவும்,விளைவாகவும் சட்டகத்தில் இருக்கிறான்?
2.தன்னிலை என்பது சூழலைப்பொறுத்து அறிவாதார மதிப்பீடை உருவாக்கும்.
ஒவ்வொருவரும் இருப்பை கொண்டே குறிப்பிட்ட நிலைகளில் தன்னிலையை தகவமைத்துக் கொள்ளுகின்றனர்.ஒவ்வொருவரின் நிலைகளும் அனுபவங்களை உள்ளடக்கியவராக அதை நியாப்படுத்தும் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள்.
3.ஏஜென்சி: நவீன வார்த்தையில் ஏஜென்சிகள் சுதந்திரம்,விருப்பு ஆகியவற்றை குறித்த கேள்விகளை சர்ச்சைக்குள்ளாக்குன்றன. அல்லது எப்படி மக்கள் தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பொறுப்புவகிக்கிறார்கள்? எவ்வாறாயினும் அதிகாரத்தில் தலையிடுகிற சாத்தியங்களை ஏஜென்சிகள் கேள்வி கேட்கிறார்கள்.
50.பண்பாட்டு அடையாளமும் தற்காலிக தர்க்கமும்:
அ.கிராஸ்பெர்க்கின் வெளிதொடர்பு உறவு அழுத்தம்
1.காலமும்,வெளியும் நவீன சிந்தனையில் இரண்டு கருதுகோள்களாகும்.எவ்வாறாயினும் காலம் வெளியை விட அடிப்படையானது என்று கருதப்படுகிறது.
2.கிராஸ்பெர்க் அடையாளத்தை வரலாற்று கட்டமைப்பாக ஒத்துக்கொள்கிறார்.தன்னிலை, அடையாளம்,ஏஜென்சி தற்காலிக கட்டுமானங்களே.
3.ஆனால் கிராஸ்பெர்க் தன்னிலையை வெளி தொடர்பு உறவாகவே பார்க்கிறார்.அதாவது மக்களின் உலக அனுபவம் குறிப்பிட்ட நிலையில் வெளியை தாண்டி காலத்தை மாத்திரமே கைகொள்கிறது.
4. இட ஏக்கம் என்பது தற்கால எழுத்துக்களில் இப்படியிருக்கிறது.இட ஏக்கம் ஒரு நிகழ்வாக பன்முக உள் தொடர்புகளில் வாழ்வதற்க்கோ சுற்றுப்பயணம் செய்வதற்க்கோ ஆனது போன்ற புரிதல் பொதுவாக காணப்படுகிறது.
60.பண்பாடும் ஒற்றைதன்மையின் அரசியலும்
அ.கிராஸ்பெர்க்கின் விருப்பம்:மற்றமை பற்றிய தர்க்கங்கள் மாற்றுகளாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.உற்பத்தி,வெளிதொடர்புறவு மனித ஏஜென்சியின்,வரலாற்று மாற்றத்தின் கோட்பாடுகளாக இருக்கிறது.
ஆ.யங்:ஒருமை பற்றிய கேள்வி அறிவை கட்டமைக்கிற வடிவமாக,திட்டமாக உறவுகொண்டிருக்கிறது.அது மற்றமையை வித்தியாசமாக புரிந்து கொள்கிறது.
இ.கடைசி இலக்கு: நகரும் தன்மையுடைய ஒற்றை சமூகம்
1.மெர்சரின் கருத்துப்படி 1980களுக்கு பின்னான அரசியலில் இனம் முக்கிய இடத்தை வகித்தது.அவற்றின் செயல்பாடு மேட்டிமை சமூக நடைமுறையை கட்டமைத்தது.
2.கிராஸ்பெர்க்,ஹால்,மெர்சர் போன்றோரின் கருத்துபடி அடையாளம் என்பது மக்களின் குறியீடே.ஒற்றை சமூகத்தில் சமூகங்கள் என்பன பற்றிய பார்வை நகரும் வாழ்க்கையை குறித்த அடையாளப்படுத்தல் மட்டுமே.
———————————————–
mujeebu2000@yahoo.co.in
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா ? அறிஞராகவா ?
- ழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4
- கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி
- வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்
- அல்லாவும் வகாபும்
- தமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்
- நவீனத்துவம்,பின்நவீனத்துவம்: உரையாடல் தொடர்கிறது
- எடின்பரோ குறிப்புகள் – 15
- தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
- பின்காலனியப் பண்பாட்டு அடையாளம்
- இந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்
- புலம் பெயர் வாழ்வு 10 – மதம் ?
- திண்ணை புதிய வடிவமைப்பு குறித்து
- ஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)
- சிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு
- சுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்
- மே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு
- வசவுகளும் விஸ்வாமித்ராவும்
- சுடர் ஆய்வுப் பரிசு
- நடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)
- சேர்ந்து வாழலாம், வா! – 2
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2
- கூடுவிட்டுக் கூடுபாயும் பறவைகள்!
- கீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3
- பசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- கடிதம்
- காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்
- இங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி
- சாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா?
- அக், யாத்ரா
- ஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்
- அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…
- கடிதம்
- தனிமை..