தேவமைந்தன்
உண்மையிலேயே நானும் என் குடும்பத்தாரும் சன் தொ.கா. ‘வின் ‘வணக்கம் தமிழகம் ‘ நிகழ்ச்சியையும் ‘அரட்டை அரங்க ‘த்தையும் விரும்பிப் பார்ப்பவர்கள் அல்ல. எப்பொழுதாவது நேரம் ஒதுங்கினால் வேண்டா வெறுப்பாகப் பார்ப்போம். காரணம், நாங்கள் கொஞ்சம் ‘கிரியேடிவ் ‘ குணம் கொண்டவர்கள்.
இந்த மாதம்(ஆகஸ்ட்) 3-ஆம் தேதி காலை தற்செயலாக அந்நிகழ்ச்சியைப் பார்த்தோம். எழுத்தாளர் பாவண்ணன் உருவத்தையும் ‘நேம் கார்டை ‘யும் கண்டவுடன், ‘சரி, வி ?யம் இருக்கும்! ‘ என்று நிமிர்ந்து உட்கார்ந்தோம். மொழிபெயர்ப்புப் பற்றிய ஆழ அகலங்களைத் தொடத் தொடங்கினார் பாவண்ணன்.
இராமாயணத்தின் மறு உருவாக்கமாக எப்படி கம்பனின் இராமகாதையும் எழுத்தச்சனின் இராமாயணமும்
உருவாயினவோ, அப்படி உருவாவதுவே சரியான மொழிபெயர்ப்பு என்றும் இந்த வேலை இதிகாச காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது எனவும் பாவண்ணன் கூறினார்.
வாசிப்பு என்பது மரம் என்றால், அதன் கனி படைப்பு; கனியின் சுவை, அதனால் அடையும் அனுபவம் எ
ன்று உவமைகளை எளிமையாகப் பயன்படுத்தி வாசிப்பனுபவத்தை விரும்பித் தேடி நுகரும் ஒருவனே சிறந்த மொ
ழிபெயர்ப்புக்குரிய உந்துதலைப் பெற இயலும் என்றார்.
ஒரு மொழியில் உள்ள, பாமர மக்கள் பயன்படுத்திய சொலவடைகளையும், உயர்ந்தோரும் பயன்படுத்திய மரபுத்தொடர்களையும் மொழிபெயர்ப்பதில்(பெயர்த்துவிடுகிறார்கள் சிலர்!)தான் நல்ல மொழியாக்கம் செய்பவனின் முயற்சியும் பாடுகளும் கடின உழைப்பும் இருக்கின்றன என்றதோடு, ‘அ ?டாவக்ரன் ‘[என்ற முனிவரின்] பின்னணி (தொன்மம்)அறியாமல் மொழிபெயர்த்தால் வி ?யம் விபரீதமில்லாமல் அடுத்த மொழிக்குப் போய்ச் சேருமா என்று கேட்டார். நல்ல கேள்வி.
அப்புறம் ‘வரீசை ‘யாகப் பட்டியல்–எந்தவிதக் காழ்ப்புமில்லாமல்–தன் சமகாலத்திய மொழிபெயர்ப்பாளர்களைப்பற்றியும் அவர்களின் சிறப்பான முயற்சிகள் பற்றியும்; அபார ஞாபக சாதகம்தான். சரளமாக, அன்றைய க.நா.சு. முதல் இன்றைய சா.தேவதாஸ் வரை ஒருவரையும் விடவில்லை. இந்த ஒரு குணத்துக்காகவே கணினிமுன் உட்கார்ந்து இந்த விடியலில் இச்சித்திரம் எழுதுகிறேன்.
தான் இவ்வாண்டு மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுபெறக் காரணமாக இருந்த எஸ்.எல்.பைரப்பா நாவலின் தமிழாக்கமான ‘பருவம் ‘ பற்றியும் அதன் விரிவான மகாபாரதக் கதைப் பின்னணி–துரியோதனின் கதை-ஆர-அச்சு-நிலை குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
தவிர, கிரீஷ் கர்னாடின் ஆக்கமான ‘பலிபீடம் ‘-நாட்டுக்கதை தந்த ‘நாகமண்டலம் ‘- ‘கவர்மெண்ட் பிராமணன் ‘பின்னணியில் உள்ள நியாயம்[தன் சொந்த அனுபவம்] என்று பலப்பல….சொல்லிக்கொண்டே போகலாம்.
என்ன செய்வது ? எப்பொழுதாவது இப்படி ஒரு நேர்காணலை ‘வணக்கம் தமிழகம் ‘ நிகழ்ச்சியில் ஒளி பரப்பிவிடுகிறார்கள். இதை நம்பி இன்னொரு நாளும் பார்த்தேன். கட்டைக் குரலோடும், வெற்றிலை பாக்குப்போட்டுச் சிவந்த நாக்கோடும் ஒரு பழைய காலேஜ் வாத்தியார் இலக்கிய நயம் பற்றி அடிக்க வருவதுபோல் பேசத் தொடங்கினார். வாழ்க்கையே, அந்தக்கணத்தில், திகைத்துப் போனது. —அ.பசுபதி(தேவமைந்தன்)
.
pasu2tamil@yahoo.com
- காயமே மெய்
- இசையரங்கம் – அக்டோபர் 9
- தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்கம் – துவக்கவிழா
- அரிமா விருதுகள் 2005
- எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – விமரிசன அரங்கு – ஆகஸ்டு, 20
- பாவண்ணனின் வணக்கம் தமிழகம்
- வரட்டு அறிவுக்கு அப்பால்!
- மதியிறுக்கம் (Autism) : ஒரு எளிய அறிமுகம்
- பாதுகாப்பாய் புவிக்கு மீண்ட டிஸ்கவரி விண்வெளிக் கப்பல் (Safe Landing of The Space Shuttle Discovery)
- இல்லற ஆறு
- நிலாக்காலக் கனவுகள்
- கீதாஞ்சலி (35) இதயத்தில் உனக்கோர் இடம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சுப்ரபாரதிமணியன் கவிதைகள்
- ச மு த் தி ர ஆ ண் ட வ ர் ( பிரஞ்சுக் கதை – ஆங்கிலத்தில் அனடோல் பிரான்ஸ் )
- பெரியபுராணம்-51 – திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி
- முதலாளித்துவச் சூழலியல் – 01 – முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
- வேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ஈவெரா
- மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!
- துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று இதழ்களும்
- திண்ணை அட்டவணை : 1984 சீக்கியர் மீதான படுகொலைகள்- 20 வருடங்கள்
- அம்ச்சி மும்பை.
- பிசாசும் இராட்சதக் குடைக்காளானும் ( பிரெஞ்சு மூலம்: Michel Tremblay : ஆங்கில மூலம்: Michae Bullock )
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி: பாகம்-3)
- காதல் என்பது காத்திருப்பது
- இரண்டு குறுங்கதைகள்