வ.ந.கிாிதரன்
சாியாக பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் நண்பனைச் சந்திக்கின்றேன். என் பால்யகாலத்து நண்பனிவன். மூர்த்தி. எப்பொழுதுமே சைவப் பழமாக நெற்றியில் பட்டையும் சிாிப்புமாகக் காணப்படுவான். பாடசாலையில் காலை மாலையில் தேவாரங்கள் பாடும் ஒரு சிலாில் இவன் முக்கியமானவன். தொராண்டோ ‘பார்லிமென்ற் ‘ நுாலகக் கிளையில் தமிழ் நுல்களைத் தேடிக் கொண்டிருந்த போதுதான் நண்பனைச் சந்தித்தேன். நண்பனைச் சந்தித்தது பல பசுமை நிறைந்த நினைவுகளை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அன்று கண்ட மூர்த்திக்கும் இன்றைய மூர்த்திக்குமிடையில் பொிய வித்தியாசங்களை மனது உணர்ந்தது. நெற்றியில் விபூதிப் பட்டையைக் காணவில்லை. முகத்தில் அந்தக் கள்ளமற்ற வெள்ளைச் சிாிப்பைக் காணவில்லை. முகம் ஒருவிதமாகக் கனத்து இறுகிக் கிடந்தது. நண்பனைப் பல வருடங்கள் சந்தித்திருக்காத போதும் இவனைப் பற்றிய தகவல்களை அடிக்கடி அறிந்து கொண்டுதானிருக்கின்றேன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து பலவேறு குழுக்களாக வீங்கி வெடித்த போராட்டக் குழுக்களொன்றில் இவன் இருந்ததும் பின்னொரு சமயம் அக்குழுவின் முக்கியமானதொரு பொறுப்பில் இவன் இருந்ததும் ஏற்கனவே நான் அறிந்திருந்தது தான். ஒருவேளை போராட்டப் பயிற்சிகள் இவனை இறுக்கமானவனாக்கி விட்டிருக்கலாம். இதே மாதிாி இன்னுமொரு எனது பாலயகால நண்பனான ரவி இன்னுமொரு அமைப்பில் நல்ல நிலையிலிருந்தவன். நான் கூட இன்னுமொரு அமைப்பின் நடவடிக்கைகளை ஆதாித்தவனாக இடையில் இருந்தவன் தான்.
‘என்ன மூர்த்தி! எப்படா கனடா வந்தனீ ‘ ஆர்வமாகக் கேட்டவனாக அவனது கைகளைப் பற்றினேன். எனது கேள்வியில் தொனித்த ஆர்வத்திற்கும் அன்பிற்கும் எதிராக அவனது பதில் இருந்தது.
‘ நான் வந்து இரண்டு வருசம். ‘ என்றான் சுரத்தில்லாமல். வாய்க்கு வாய் சிாித்தபடி ‘டா ‘ போட்டு அழைக்கும் என் பால்யகாலத்து நண்பன் மூர்த்தியா இவன். நீண்ட காலத்தின் பின் தன் பால்யகாலத்து நண்பனொருவனைச் சந்தித்திருக்கின்றோமென்ற எந்தவித ஆர்வத்தினையும் மகிழ்ச்சி கலந்த உணர்வுகளையும் நண்பனின் குரலிலோ செயலிலோ காணமுடியவில்லை. முகத்தில் ஒருவித தீவிரமான பாவம் கலந்திருந்தது.
‘என்னடா என்ன ஒரு மாதிாி இருக்கின்றாய். உடம்பு கிடம்பு சாியில்லையா ? ‘
நண்பன் அதற்கு எந்தவிதப் பதிலையும் அளிக்காமல் சிறிது சிந்தனை வயப்பட்டிருந்தான். என்னுடன் அளவளாவுதலில் அவ்வளவு ஆர்வம் அவனுக்கு இருப்பதாகத் தொியவில்லை. ஏதாவது கேட்டால் மட்டும் பதில் கூறினான். பழைய நினைவுகளை ஞாபகப் படுத்தி மகிழ்ச்சியடைவதில் அவனுக்கு ஆர்வமேதுமிருந்ததாகத் தொியவில்லை.
‘இப்ப என்னடா செய்கிறாய் ? உன்னுடைய அரசியல் நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தனான் ‘ என்றேன்.
நான் இவ்விதம் அவனது அரசியல் பற்றிக் கேள்டபோது நண்பனின் முகத்தில் சிறிது ஒளி படர்ந்ததை அவதானித்தேன். ஆனால் அதே சமயம் அவனை ‘டா ‘ போட்டு அழைக்கும் போதெல்லாம் அவனது முகத்தில் ஒருவித அசூயை கலந்த சுளிப்போடியதையும் அவதானித்தேன். எதற்காக இவன் இவ்விதம் மாறிப் போனான் ? நான் உாிமையுடன், பால்ய காலத்து நண்பனென்னும் உாிமையுடன் ‘டா ‘ போட்டு அழைப்பதை இவனேன் விரும்பவில்லை. ஆனால் அவனது அரசியல் பற்றிப் பேசும்போது மட்டுமேனிவ்விதம் ஒளிர்கின்றான்.
‘மக்களின் அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காக நான் ஆயுதமேந்தினோம் ‘ என்றான். சிறிது நேரம் கனவுலகில் சஞ்சாித்தான். பின் தன் நடவடிக்கைகள் சிலவற்றை ஆர்வத்துடன் விபாித்தான். அடிக்கடி லெனின், மார்கஸ், பெண்ணியம் வே¢விதம் சில வார்த்தைகளைப் பாவித்தான். அப்பொழுது தான் அவனது முகத்தில் வளர்ந்திருந்த குறுந்தாடியினைக் கவனித்தேன். அதனை அவன் அடிக்கடி நீவி விட்டுக் கொண்டே உரையாடினான்.
அவனது முகத்தில் ஒருவிதமான பெருமிதம் கலந்த உணர்வு விரவிக்கிடந்தது. குழந்தையொன்று இன்னொரு குழந்தையிடம் தனது பெருமைகளைக் கூறி ஆனந்திக்குமே அத்தகையதொரு உணர்வு பரவிக் கிடந்தது.
அச்சமயம் அங்கு ‘மாஸ்ட்டரா ‘ என்றொரு குரல் கேட்டது. இன்னுமொருவர் தான் நண்பனை அவ்விதம் அழைத்தபடி அங்கு வந்தார். ‘மாஸ்ட்டர் உங்களை எங்கெல்லாம் தேடுகிறது… ‘ இவ்விதம் கூறிய புதியவர் அப்பொழுது தான் அருகில் நின்றிருந்த என்னைக் கவனித்தார்.
‘மாஸ்ட்டர் யாாிவர். உங்கள் நண்பரா ‘
‘எனக்குத் தொிந்தவர் ‘ என்றான் நண்பன்.
வந்தவர் என்னைப் பார்த்துக் கூறினார் ‘மாஸ்ட்டர் எவ்வளவு பொிய ஆள் தொியுமா ? எங்கள் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர் எங்கள் மாஸ்ட்டர்… ‘
நண்பனின் முகம் மகிழ்ச்சியால் விாிந்தது. முகமெங்கும் பெருமித ரேகைகள் விரைந்தோடின. நண்பன் என்னை ஒருவித கோணத்தில் நோக்கினான். அந்தப் பார்வையில் ‘பார்த்தாயா நான் எவ்வளவு பொிய ஆள் ‘ என்றதொரு பாவமிருந்தது போல் பட்டது. பால்யகாலத்து நினைவுகள் எப்பொழுதுமே சந்தோசத்தினை அள்ளித் தருபவை. ஆனால் நண்பனுக்கேன் அவை அவ்விதம் மகிழ்வினை வழங்கி விடவில்லை ? உண்மையிலேயே நண்பன் மாறித்தான் போய் விட்டான். வார்த்தைக்கு வார்த்தை ‘டா ‘ போட்டும், நெற்றியில் பட்டையுமாகக் கள்ளமற்ற வெள்ளைச் சிாிப்புடன் வளைய வந்த நண்பன் ‘டா ‘வையே வெறுக்குமளவிற்கு இன்று மாறித்தான் போய் விட்டான். மனித குலத்திற்கே பொதுவானதொரு சந்தோசத்தினை நண்பன் இழந்து தான் விட்டான் என்று பட்டது.
***
- மாற்றம்
- தேவகோட்டை – சிவகங்கை
- சீரணி அரங்கத்தில் பேரணி
- பயணம்
- மெளனம்
- இந்திய இளவரசர்களே!
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- கோயிலுக்கு
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- ஈழத்தில் சமாதானம்
- இழந்த யோகம்
- சின்னப் பூக்கள்
- தீ தித்திப்பதில்லை…
- காவல்
- குழந்தை யேசு
- தலைப்பாரம்…..
- உதிரும் சிறகு
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- ஞாநிக்கு மீண்டும்
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- என் அக்கா
- பால்யகாலத்து நண்பன்!