பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்

This entry is part [part not set] of 39 in the series 20070920_Issue

அறிவிப்பு


பாரதி 125 பன்னாட்டுக்கருத்தரங்கம்

புதுவைப் பல்கலைக்கழகமும்,சென்னை வானவில் பண்பாட்டு மையமும் இணைந்து பாரதி 125
கருத்தரங்கைச் செப்டம்பர் 21,22,23 இல் புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடத்துகின்றன.இதில் இந்தியா,சிங்கப்பூர்,இலங்கை,இலண்டன்,மலேசியா,அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த
200 அறிஞர்கள் பாரதி குறித்த ஆய்வுக்கட்டுரை படிக்கின்றனர்.

செப்.21 காலை புதுவை பாரதி இல்லத்தில் கவிதை வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.
பல்கலைக்கழகத்தில் தொடங்கும் தொடக்க விழாவில் புதுவை கல்வி அமைச்சர் அவர்களும் புதுவைப்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.மேலும் வா.செ.குழந்தைசாமி,
எம்.எசு.சாமிநாதன்,பதிவாளர் உலகநாதன்,சாலமன் பாப்பையா முதலானவர்களும் கலந்துகொள்கின்றனர்.

22 ஆம் தேதி தமிழருவி மணியன்,வேங்கடாசலபதி,சத்தியசீலன்,சுதா சேசையன்,குமரி அனந்தன் உரையாற்றுகின்றனர்.

23 ஆம் தேதி பொற்கோ,இ.சுந்தரமூர்த்தி,அவ்வை நடராசன் உரையாற்றுகின்றனர்.

பல்வேறு,போட்டிகள்,கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு