எஸ். அர்ஷியா
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர் வனப்பகுதியை வாழிடமாகக் கொண்டிருக்கும் தொல்குடியினரான பளியர் இன மக்களிடமிருந்து, முதல்முறையாகக் காவல் துறையில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது!
சுதந்திரம் பெற்று அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியலமைப்பு ¡£தியில் நடவடிக்கையெடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட அந்தப் புகாரை வாங்குவதற்கு, வழக்கம் போலவே காவல் துறை மறுப்புத் தொ¢வித்திருக்கிறது. புகார் கொடுக்க வந்தவரை சுற்றில் விட்டிருக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, பாதிப்புக்குள்ளானவரையும் அவருக்கு ஆதரவாக வந்தவர்களையும் துரத்தியடித்திருக்கிறது. பாலியல் வன்முறைத் தொடர்பான அந்தப் புகாரைப் பதிய வைக்க 22 வயதான நாகம்மாள் எனும் பழங்குடியினப் பெண், இருபத்து ஐந்து நாட்கள் ரொம்பவே பிரயத்தனப் பட்டிருக்கிறார்.
சுதந்திரம் அடைந்த பின்னர் இந்திய நிலப்பரப்பு, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மக்களாட்சிக்கு உட்பட்ட ஒருநாடு என்ற கருத்தியலுக்குள் அடக்கப் பெற்றது. அதாவது, பல பகுதிகளாக பிளவுண்டு கிடந்த நிலப்பரப்பை, ஒரு நிர்வாக எல்லைக்குள் கொண்டு வந்து ‘இந்தியா’ என்ற தேசம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் இந்த நிலப்பரப்புக்குள் வாழ்ந்த மக்கள், புதிய அதிகார அமைப்பை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது இன்னும் ஆய்வுக்கு¡¢யதாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, இந்திய நிலப்பரப்புக்குள் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள், இதனை எவ்வாறு பார்த்தனர் என்பது மிக முக்கியமானது!
இந்தியாவில் காணப்படும் பல்வேறு தேசிய இனக் குழுக்களில், பழங்குடியினர் எண்ணிக்கையில் குறைவு தான். ஆனால் அவர்களுக்கென்று தனித்த அடையாளங்களும் தனிமைப்படுத்தி வாழ்ந்து கொள்ளும் குணமும் உண்டு. இந்த மக்கள், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் பெரும்பகுதிகளில் நேரடி அரசியல் அதிகாரத்திற்கு உட்படாமலேயே இருக்கின்றனர். அவர்களது வாழிடம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவை, மற்ற பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களிடமிருந்து வேறுபாடு கொண்டதாகவும் இருக்கிறது.
தமிழ்நாட்டில், மேற்குத்தொடர்ச்சி மலையின், உள்ளடங்கிய மலைமடிப்புகளில் ஆங்காங்கே இருளர், தோடர், பளியர், காணிகள் எனும் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இருளர் பி¡¢வினா¢ல் மிகச்சொற்ப அளவினர் பள்ளிக்கூடம் சென்று படித்து, அரசின் ஒருசில பணியிடங் களில் அமர்ந்துள்ளனர் என்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஆனாலும் இவர்களில் பெரும்பான்மையினர், தங்கள் வசிப்பிடங்களான மலைகளை விட்டுக் கீழே இறங்காதவர்களாகவே இன்னும் இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட வேண்டிய விஷயமாகும்!
அயல்நாடுகளின் செயற்கைக் கோள்களை வியாபார ¡£தியாக விண்ணுக்குச் செலுத்தி, விண்சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் ஆற்றல், பெருமை மிகு இந்தியாவுக்கு வந்துவிட்டது. நிலவுக்கு சுயமாக ஆள் அனுப்பும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘சந்திரனில் இந்தியன்’ என்று மார்தட்டி மகிழ்ச்சி கொண்டாடும் நாள், வெகு தொலைவில் இல்லை தான். அடுத்த ஆராய்ச்சி, செவ்வாய்க்குச் செல்வதாக இருக்கலாம்!
ஆனால், பூமியில் இருக்கும் மக்களின் நிலை?
இந்தியத் தொல் பழங்குடியினர் பூமிப் பகுதியிலிருந்து, திராவிடர் மற்றும் ஆ¡¢யர்களின் ஆதிக்கத்தால் மலைப்பகுதிகளுக்குத் துரத்தியடிக்கப் பட்ட வர்கள் என்று கூறப்படுவதை தவிர்த்துவிடவும் முடியாது.
நீலகி¡¢ப்பகுதியில் இருளர்கள் மற்றும் தோடர்கள், திண்டுக்கல் மாவட்டத்தின் உள்ளடங்கிய சிறுமலைப்பகுதிகளில் சில இருளர் குடும்பங்கள், கொடைக் கானல் செல்லும் வழியில் இடதுபக்கம் கீழிறங்கும் அடர்ந்த வனப்பகுதியில் மற்றும் குமுளி செல்லும் வழியிலுள்ள லோயர்கேம்ப் பகுதியின் இடது புறமுள்ள செங்குத்தான மலைகளில், போடியிலிருந்து கேரளா செல்லும் பகுதிகளிலும் பளியர்கள் இருக்கின்றனர். குமுளி மலைகளுக்குக் கிழக்கேயும் தெற்கேயும் காணிகள் இருக்கிறார்கள்.
சுதந்திரத்துக்கு முன்பான ஆங்கில அரசும் சா¢, சுதந்திரத்துக்குப் பின்பான இந்திய ஜனநாயகக் குடியரசும் சா¢, பழங்குடியினருக்கு என்ன செய்தது என்பதை மறுபா¢சீலனை செய்ய வேண்டும். நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பி¡¢வினருக்கான ஒதுக்கீடு என்று குறிப்பிட்ட சதவீதத்தை அறிவித்தவுடன், உறுப்பினர்களுக்கான சம்பளமும் கூட்டத்தொடா¢ல் கலந்து கொண்டதற்கான படியும் பெற்றுக் கொண்டு தங்களின் ஜனநாயகக் கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கிளம்புவதிலேயே குறியாக உள்ளனர், அனைத்துக்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும்!
எஸ்.சி., எஸ்.டி., களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளைப் பாருங்கள்… தகுதியான பழங்குடி விண்ணப்பதாரர்கள் கிடைக் காத பட்சத்தில் அதற்கு முந்தைய பி¡¢வுகளிலிருந்து விண்ணப்பதாரர்கள் தொ¢வு செய்யப் படுவார்கள் என்பது மறக்காமல் குறிப்பிடப்பட்டிருக்கும்.இது அவர்களை தலையெடுக்காமல் செய்யும் ஒரு குயுக்தி முறையே அன்றி வேறெதுவுமாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்த போது, குமுளி செல்லும் பாதையிலுள்ள லோயர் கேம்ப் பகுதிக்கு மேலே பளியங்குடி எனுமிடத் தில் பளியர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுத்தார். ஆனால் பிற வசதிகள் ஏதும் செய்து கொடுக்கப்படாமல், வசிப்பதற்கு ஏதுவாக இல்லாது போய்விட்டக் காரணத்தால், பழங்குடியினர் மீண்டும் உட்காடுகளுக்கே சென்று விட்டனர் என்பதை இங்கே நினைவு படுத்த வேண்டும்.
பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகி, இயற்கைக்கு ஆதரவான வாழ்க்கையை வனப்பகுதிகளில் வாழ்ந்து வரும் அவர்கள் இன்றும்கூட, ‘தாங்கள் உண்டு… தங்கள் வேலை உண்டு’ என்று இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழிடங்களை அழித்து, ஆங்கில அரசும் தனியார்களும் காபித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் ரப்பர் எஸ்டேட்களும் அமைத்த போது, பழங்குடியின மக்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளானது. காடுகளில் வேட்டையாடியும், உணவு சேகா¢த்தும் வாழ்ந்து வந்த அவர்களின் சுதந்திரம், புழங்குவெளி, வனங்கள் எஸ்டேட்களாக உருமாறியதில் சுருங்கிப் போனது. மேலும், காடுகளை பாதுகாக்கப்பட்ட வனங்களாக (Reserved Forest) ஆங்கில அரசு அறிமுகம் செய்ததில், பழங்குடியினா¢ன் வாழ்நிலையே பெரும் இடர்பாடுகளுக்குள்ளானது.
உட்காடுகளில் இருந்து வந்த அவர்கள், சமீப காலமாக மலைகளின் மேலிருக்கும் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்களாக மிகக் குறைந்த கூலிக்கு நாளொன்றுக்கு வெறுமனே ஐந்து ரூபாய்க்கு நாள்முழுவதும் வேலை செய்யும் கொத்தடிமைகளாக அமர்த்தப்படுன்றனர். அவர்களில் பெண்கள், தினந்தோறும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றனர்.
கடந்த மே மாதம் 6 -ம் தேதி. தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள அருங்குளம் மலைப்பகுதியில் வசிக்கும் நாகம்மாள் எனும் பெண், தனது குடிசையில் தூங்கியிருக்கிறார். இவர் பளியர் இனத்தைச் சேர்ந்தவர். அப்போது அவரது பெற்றோரும் அங்கே இருந்துள்ளனர். நள்ளிரவின்போது, அந்தக் குடிசைக்கு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ரவி, பாண்டி என்பவன் உட்பட 4 பேர் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு பளியர் இனத்தைச் சேர்ந்த கருங்காலி ஒருவன் உதவி செய்துள்ளான்.
வன்புணர்வைத் தடுக்க முயன்ற நாகம்மாளின் தகப்பனார் சங்கு என்பவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர், அவர்கள்.
சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் வரை எப்படி நடவடிக்கை மேற்கொள்வது என்பதைத் தொ¢யாதிருந்த பழங்குடி மக்களில் தன்னுணர்வும், சுயமா¢யாதையும், தட்டிக்கேட்கவேண்டும் எனும் உயிர்ப்பும் உக்கிரமாக… பாதிப்புக்குள்ளான நாகம்மாள், ஒருவழியாக போடி மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்த போது, கண்ணியமும் நேர்மையும் கொண்ட காவல்துறை கேட்ட கேள்வி, அச்சுக்குத் தர முடியாதது. இருந்தாலும் ஜனநாயக நாட்டில் அனைத்தையும் தொ¢ந்து கொள்ளும் உ¡¢மை கொண்ட வாசகர்களுக்கு, காவல்துறையின் இந்தக் கேள்வி அதிர்ச்சியளிக்காது. ‘அவனுக வந்து படுத்து எந்தி¡¢ச்சுப் போறதென்ன, உங்களுக்குப் புதுசா?’
இந்தக் கேள்வி கேட்கப்படாமல், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருந்தால் தான், நாட்டுக்கு மக்களுக்கு ஆச்சா¢யமான விஷயமாக இருந்திருக்கும்.
ரேஷன் அட்டை கூட இல்லாத அம்மக்களுக்கு, வாழ்வியல் குறித்த பயமும் பொது நீரோட்டத்தில் கலக்கும் தயக்கமும் இருக்கவே செய்கிறது. அது தான் அவர்களை அச்சப்படுத்தி இயல்பிலிருந்து துண்டாட வைக்கிறது. செய்யும் வேலையும் கிடைத்து வரும் கூலியும் இல்லாது போய்விட்டால், பிழைப்பில் மண்விழுந்து விடுமே என்று எதையும் கண்டு கொள்ளாமல் வாளாதிருந்துவிட்ட பளியர் இனமக்களின் விவேகமற்றத் தன்மை, மொன்னை புத்தியுள்ள காட்டுமிராண்டிகளுக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. அவர்களின் அறியாமையை, கீழிருந்து மலைக்குச் செல்லும் வன்புத்திக் கொண்டவர்கள், சாதுர்யமாக பயன்படுத்தி, மார்கழி மாதத்துத் தெருநாய்களுக்குச் சற்றும் குறைவில்லாதக் கூட்டு வன்புணர்ச்சியில் கண்ணில் தென்படும் பெண்களை சீரழித்து விடுகின்றனர்.
தரையில் வசிக்கும் பிற இனக்குடிகள், தங்களுக்கான அமைப்புகளை ஓரளவு கட்டமைத்திருப்பதால் பிரச்சினைகளை எடுத்துச் சென்று போராடவாவது முடிகிறது. ஆனாலும், நீதிகேட்கும் முதல்படியாக நகர்ப்புற, படித்த சமூகத்தினர் காவல் நிலையத்துக்குச் செல்லும்போதே அலைக்கழிக்கப்படும் நிலைதான் நாடெங்கும் உள்ளது. அதையும் தாண்டி, பளியர் இனக்குடியிலிருந்து முதல் முறையாக சீரழிப்புக் குற்றத்தை வெளியுலகிற்குக் கொண்டு வந்து, மிகப்பொ¢ய அதிர்வை ஏற்படுத்தியிருக்கும் நாகம்மாள், தன் சமூகத்துக்கு விடிவெள்ளியாகி இருப்பது பு¡¢தலுக்கு உட்பட்டதுதான்.
அதே வேளையில், இந்தச் சம்பவத்தை நமது தேசத்தின் நான்காவது தூணான பத்தி¡¢க்கைகள் பார்த்த பார்வையும் கூட விநோதமானது தான்!
நகர்ப்புறப் பெண்களுக்கு நேரும் இது போன்ற கொடூரங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து, முதல்பக்கத்தில் படத்துடன் பிரசு¡¢த்து பரபரப்பு ஏற்படுத்தும் முதலாளித்துவப் பத்தி¡¢கைகள், இந்தச் செய்தியை வெளியிடவேயில்லை. வெளியிட்ட ஒரு பத்தி¡¢கையும் ஏதோ காணாமல் போனவர் பற்றிய வா¢விளம்பரத்தைப் போல ஒருபத்திச் செய்தியாக வெளியிட்டிருந்தது. அந்த ஒருபத்தியில், நாகம்மாள் திருமணமாகி கணவருடன் வாழாமல் தனியே இருப்பவர் என்பதை வலிந்து வெளியிட்டிருந்தது. தனித்து வாழும் பெண்கள், இதுபோன்ற சம்பவங்களை அனுசா¢த்துத்தான் போக வேண்டும் என்பதை உள்ளீடாகச் சொல்லும் தொனிதான் அதிலிருந்தது!
வெளிவராத இதுபோன்ற செய்திகளை, தன்னார்வத் தொண்டு நிறுவங்களும் தனியார் அமைப்புகளும் தான் வெளியே கொண்டு வருகின்றன. அதன் பிறகுதான் அரசுக்கே இந்தத் தகவல்கள் சென்றடைகின்றன என்பது பா¢தாபகரமானது. நாகம்¡ளின் விஷயத்திலும் கூட மதுரையை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் தான் முனைப்புக் காட்டியிருக்கிறது. ஆனால், அடையாளம் காட்டிவிட்டுச் சென்றுவிடும் அந்த அமைப்புகள், இறுதிவரை நின்று அவர்களுக்கு உதவுவது கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆண்டாண்டு காலமாக பளியர் இனப் பழங்குடிப் பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் நிலைமை மாற, அடிப்படை வசதியாக அவர்களுக்குக் குறைந்தபட்ச வசதிகளுடனாவது தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு முன்வர வேண்டும். ஆங்காங்கே குடிசை போட்டு சிதறிவாழும் அவர்கள் ஒரே இடத்தில் இருக்கும்போது இதுபோன்ற அவலங்கள் குறையும் வாய்ப்புகள் உண்டு.
அவர்களின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், தரைப்பகுதி மக்களுக்கு கொடுக்கும் சலுகைகளில் சிலவற்றையாவது அவர்களுக்கும் கிடைக்கும் வழிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
பெயருக்கு அறிவிப்புகளை மட்டும் வெளியிடும் அரசும் அரசியல்வாதிகளும், ஓட்டுகளை வாங்குவதற்காகவாவது பழங்குடியின மக்கள் மீது சிறிது கவனம செலுத்தினால் கூட போதுமானது!
arshiyaas@rediffmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் வடிவம் என்ன ? (கட்டுரை: 31) பாகம் -1
- சீனப்புலியும், ஆப்பிரிக்க ஆடுகளும்
- தாகூரின் கீதங்கள் – 36 மரணமே எனக்குச் சொல்லிடு !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 24 காதல் இல்லையா காசினியில் ?
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 1
- சொல் எரித்த சொல்
- நெய்தல் இலக்கிய அமைப்பின் சு ரா விருது பரிந்துரைக்காக
- காலடியில் ஒரு நாள் ..
- கடிதம்
- மணல் வீடு – சிற்றிதழ் அறிமுகம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 23 ‘அகஸ்தியன்’
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 2
- ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :” ஓடும் நதி ” நாவல்
- ஆலமரமும் வெங்காயத்தாமரையும்
- சு. சுபமுகி கவிதைகள்
- கவிதைகள்
- தாவரங்களின் தலைவன்
- ஊசி
- ஆபரணம்
- பளியர் இன மக்கள் வாழ்நிலையும்… தொடரும் பாலியல் வன்முறைகளும்…
- ” இன்று முதல் படப்பிடிப்பில்” என்ற தலைப்பின் கீழ் “பள்ளிகொண்ட புரம்” என்று வெளிவந்திருக்கும் விளம்பரம் பார்த்து விட்டு..
- நினைவுகளின் தடத்தில் – 13
- மூடநம்பிக்கைகள் இங்கும் அங்கும்!
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(2)
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 16(1)
- “ பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்”
- சேவை
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 12 (சுருக்கப் பட்டது)