பரிமளத்திற்கு இறுதிப் பதில்

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

விஸ்வாமித்ரா


நண்பர் பரிமளம் என்னிடம் தான் கேட்ட கேள்விகளையே எனது தெளிவானப் பதில்களுப் பின்னும் மீண்டும், மீண்டும் எழுப்பியுள்ளார். அவரின் கேள்விகள் பலவற்றிற்கும் எனது பிற கட்டுரைகளிலேயேயும் பதில்கள் உள்ளன. புரியாதது போல் நடிப்பவர்களுக்கு நான் தொடட்ந்து பதில் சொல்லிப் பயனில்லை. இருப்பினும் இந்த இறுதிப் பதிலின் நோக்கம் அவர் விஸ்வாமித்தாதான் ஜெயபாரதனா என்று எழுப்பியுள்ள ஐயத்துக்கு விடை தருவது மட்டுமே.

ஜெயபாரதன் நான் பெரிதும் மதிக்கும் ஒரு அறிஞர். திறைமையான அறிவியல் கட்டுரையாளர். கனடாவில் வசிப்பவர். நான் பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால். அறிவில் அவர் மலை என்றால் நான் மடு. இருவரும் வேறு, வேறு. எனது கருத்துக்களுடன் அவருக்கு ஒப்புதல் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். உங்களின் அர்த்தமற்ற பதிலைப் படிக்கும் பொழுது அவருடன் உங்களுக்கு நடந்த கடிதம் நினைவுக்கு வந்ததால் குறிப்பிட்டிருந்தேன், மற்றபடி எங்கள் இருவருக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அவர் கட்டுரைகளை நான் தொடர்ந்து படிக்கும் தொடர்பைத் தவிர. இதன்

வயது ஒப்பாதத் திருமணத்தை அவமரியாதைத் திருமணம் என்று அழைத்தவர் நீங்கள் அல்லதான், அவ்வாறு அழைத்தது நீங்கள் பெரியார் என்று கொண்டாடும் முரண்பாட்டாளர்தான்.

எழுதிய மை உடனே உங்களுக்கும் எனக்கும் உடனே காயலாம், கொள்கைப் பிடிப்பாளருக்கும், தமிழர்களின் தந்தைக்கும், பகுத்தறிவின் பகலவனுக்கும், பெரியாருக்கும் எப்பொழுதும் கொள்கைகள் என்னும் மை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காய்வதில்லை, காயக்க்கூடாது. அப்படிக் காய்ந்தால் அது மை அல்ல பொய். அந்த அர்த்தத்தில் எழுதப் பட்டதுதான் அது. உங்கள் கண்டு பிடிப்புக்காக உங்களுக்கு தி க பாணியில் எடைக்கு எடை நாணயம் பரிசு அளிக்கலாம்.

மணியம்மை சம்மதம் தெரிவித்தற்கு சொத்து உட்பட பல காரணங்கள் இருக்கலாம். அதையெல்லாம் ம பொ சி யே கேட்டுள்ளார், மற்ற கட்டுரைகளையும் படியுங்கள். பொருந்தா வயது என்று அவர் குறிப்பிடதில் சிறு வயது திருமணமும் அடங்கலாமே தவிர, அதை மட்டும்தான் அவர் குறிப்பிட்டாஎ என்பதற்கு எவ்வித ஆதாரமும் உங்கள் விளக்கத்தில் இல்லை. மீண்டும் மீண்டும் சிறு வயது திருமணம் என்று நீங்கள்தான் அடித்துக் கொண்டுள்ளீர்கள். அதை உங்கள் பகுத்தறிவுப் பகலவன் சொல்லியிருக்க வேண்டு ஐயா! நீங்கள் ஆயிரம் சப்பைக் கட்டுக்கள் கட்டலாம். நான் எழுதுவது அவர் என்ன சொன்னார் என்பதன் அடிப்படையில், உங்களது சப்ப்பைக் கட்டு வக்காலத்து வியாக்கியானத்தை வைத்து அல்ல. எனக்குத் தெரிந்தவரை சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட பலர் நில உடமையாளர்கள், ரைஸ் மில் உரிமையாளர்கள், வியாபாரிகள். அவர்கள் சொத்து எக்கேடு கெட்டு போகட்டும் என் சொத்து கெட்டி என்று கருதியவர்தான் உங்களுக்குப் பெரியாராகத் தோன்றுகிறார். ஆம் பணப்பித்து என்று நான் சரியாகத்தான் குறிப்பிட்டேன். என்னளவில் அது பணப்பித்துதான்.

இதற்கு மேல் உங்களுக்குத் தொடர விருப்பம் இருந்தால் தாரளமாக நீங்கள் கூறியதையே ஆயிரம் முறைக் கூறிக் கொண்டிருக்கலாம் எனக்கு எதுவும் ஆட்சேபணையில்லை.

குண்டலகேசி என்பவருக்கு எனது சொந்தக் கருத்து என்ன என்பதைக் கூட புரியாத மன நிலை. எனது கட்டுரைகளைப் படிக்க வேடிக்கையாக இருந்ததாம். சரிதான். சொன்னது புரிந்திருந்தால் வருத்தம் அல்லவா வந்திருக்கும்! புரியாத காரணத்தினாலேயே பித்தலாட்டக் காரர்களைப் பெரியார் என்று அழைத்துக் கொண்டு திரிகிறார்கள். இவரைப் போன்றவர்களுக்கு எனது கட்டுரைகள் வேடிக்கையாகத் தோன்றியதில் எதுவும் ஆச்சரியமில்லை.

விஸ்வாமித்ரா

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா