பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

தீபச்செல்வன்



வழிநெடுக அழிக்கப்பட்ட
கிராமத்தின் ஊமைத்துயரம்
கொட்டிக்கொண்டே போனது
துயரத்தை மணந்து கிராமமம்
அதை தூக்கியபடி பறவையும்
அடைபட்டுக்கொண்டிருந்தது

இனி எல்லோரும் ஊமைகள்

நிலங்களுக்காகவே
கொடுமைக்காட்சிகளைபேசியபடி
நிறம் பூசியது பறவையின்
ஊனமடைந்த கைகள்

அந்தப்பறவை
இன்னும் வட்டமிட்டு
கோரத்தை சுமந்து
எங்கள் திசைகள்மீது
சிறகுகளை அடித்தது

அதன்குணம் வீடுகளைச்சூழ
விசம்பரப்பும்
பார்வையை ஆழவிட்டு
மரங்களை அசைத்துதின்றது

பறவைகளே வேட்டையாடின
அதுவும்
மனிதர்களை சப்பியபடி
வீடுகளை காவிக்கொண்டு
கிராமத்தை
பிரளயம்நோக்கிக்கொண்டுபோனது

சுவரில் மோதி
அடிபட்டு விழுந்தது
பறவையும் கிராமமும்
சுவரடியில்
கிராமம்
சிதறிக்கொட்டியது

அந்தப்பறவைக்குப்பிறகு

கோழிகள்கூட
குஞ்சுகளுக்கு
பருந்தாயின
குஞ்சுகளும் பருந்தாகின
சிறகுகளை மணந்து
உணர்ந்துகொள்ளமுடியவில்லை?

சிறகுகள் பயங்கரம்கலந்து
புயலாகின

மீண்டும் அந்தப்பறவை
நிறம் பூசிவரும்
நினைவிலிருக்கிறது
அந்தப்பறவையின் பயங்கரமான
சிறகுகளும்
அது நிலத்தில் விழுத்தும்
வட்டமும்
கொடூரம்
தாங்கியசொண்டும்

நெருங்கிச்சேர்கிறது
பறவையால் அழிக்கப்பட்ட
கிராமம்


2006

deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்