நுகர்வோாிடையே விழிப்புணர்ச்சி

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

கோமதி நடராஜன்.


‘நுகர்வோர் ‘இந்தச் சொல்லின் மகத்துவம்,இந்த அமைப்பின் முக்கியத்துவம் பலருக்குத் தொியாமலேயே இருந்து வரகிறது.நுகர்வோர் இல்லையென்றால் தொழில் வளர்ச்சி நின்று போகும்,வாணிபம் ஒடிந்து போகும்,நாட்டின் முன்னேற்றம் தடை பட்டுப் போகும்.இத்தனை மாபெரும் சக்தி வாய்ந்த ,சமுதாயத்தின் ஒரு அங்கமான நுகர்வோர்,நாட்டு வளத்துக்கு ஆணிவேரான இந்த நுகர்வோாில் பெரும்பான்மையினர் ,ஒரு நாள் கூடத் தங்கள் உாிமைகளையும் கடமைகளையும் பற்றிச் சிறிதும் எண்ணிப் பார்த்ததில்லை.

விளைவு ?

போலிகளின் நடமாட்டம்,தரக்குறைவு என்ற சீர்கேடு,ஏமாற்று வித்தைகள் போன்ற குறைபாடுகள்,நல்ல விளைநிலத்தின் களைகளாய்,நந்தவனத்து ,நடைபாதையில் முட்களாய்,நாட்டு வளத்துக்கு முட்டுக் கட்டைகளாய்ப் பரவிக் கிடக்கின்றன.

இவைகளை அப்புறப் படுத்துவதும்,சீர் செய்வது யார் கையில் இருக்கிறது ?

தனிமனிதனின் பணத்துக்கும் உடல் சுகாதாரத்துக்கும் கேடு விளைவிக்கும் வண்ணம், ஒரு தொழிலோ, வியாபாரமோ அமைய நேர்ந்தால், அதனைக் குற்றம் என்று கூறச் சட்டம் இருக்கிறது. அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.சட்டத்தை மதிக்காமல் தவறுகள் நடக்க நேர்ந்தால், கடும் தண்டனை தரக் காவல்துறை இருக்கிறது.அதையும் மறுக்க இயலாது.

ஆனால்-

குற்றங்கள் தடுக்கப்படச் சட்டமும் தண்டனையும் இருந்தால் மட்டும் போதுமா ?அவை இருப்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டாமா ?கொலையையும் கொள்ளையையும் கண்டுபிடிக்க மட்டுமே காவல் துறையினர் இருப்பதாகக் கருதும் சில பாமரமக்களுக்கு ,நுகர்வோர் பாதுகாப்புக்கும், சட்டம் துணைக்கு வரும் என்பதைத் தொியப் படுத்த வேண்டாமா ?

காவல் அதிகாாிகளும்,அரசியல்வாதிகளும் குற்றவாளிகளைக் கண்காணித்துக் கொண்டே இருப்பதென்பது என்னேரமும் சாத்தியமாகும் என்று சொல்லமுடியாது.குற்றம் புாிந்தவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்த ,பாதிக்கப் பட்டவரும் மற்றவர்களும் முன் வராதவரை,புரையோடிக்கொண்டிருக்கும் இப்புண் ஆற வழியே இல்லை அடித்துச் சொல்லலாம்.

பொதுமக்கள் இது விஷயமாகச் சட்டத்தின் துணையை நாடு தைாியத்தை ஓட்ட ஒரே வழி:

*நுகர்வோாின் உாிமைகளை அனைவரது உள்ளத்திலும் கல்வெட்டாய்ப் பதியுமாறு தொியப்படுத்த வேண்டும்.

*குற்றவாளிகளை இனம் கண்டு,நடவடிக்கை எடுக்கத்தேவையான தைாியத்தை ஊட்ட வேண்டும்

*லட்ச ரூபாய்க்கு வாகனம் வாங்கினாலோ,ஐந்து காசுக்கு ஆணி வாங்கினாலோ,நுகர்வோர் நுகர்வோரே,அனைவருக்கும் தட்டிக் கேட்க உாிமை உண்டு என்பதை உணர்த்தவேண்டும்.

காவல் துறையினர் உதவியால் பத்தில் நான்கு பிடிபட்டால்,நுகர்வோர் முயற்சியால்

பத்தும் பார்வைக்கு வந்துவிடாதா ?நாட்டை பீடித்து வலுவிழக்கச்செய்யும் இந்நோய் பஞ்சாய் பறந்து போகாதா ?

இந்த விஷயத்தில் பொதுமக்களை ஈடுபடவிடாமல் எது தடுக்கிறது ?

——————————————————

‘இதுபோல் ஏமாறுவது நமக்குத் தலையெழுத்து ,இந்த நாட்டின் சாபக்கேடு ‘என்ற சலிப்பு

‘ஐந்து ரூபாய்க்கு வாங்கிய சாமானின் தரம் சாில்லை என்று வாதாடப் போனால் சிாிக்க மாட்டார்களா ‘ என்ற ம

முயன்று என்ன சாதித்துவிடப் போகிறோம் ‘என்ற அவநம்பிக்கை

‘இந்த சின்ன விஷயத்தைப் பொிது படுத்த வேண்டுமா ‘என்ற அலட்சியப் போக்கு

‘பின் விளைவுகள் ஆபத்தாக முடியுமோ ‘என்ற அச்சம்,

‘இதற்காக அலைய வேண்டுமா ‘என்ற சோம்போித்தனம்.

இவகளில் ஏதோ ஒரு காரணத்தால் பலர் முடங்கி விடுகின்றனர்,அப்படி முடங்கியவர்கள்,தாய்க்கு வரும் ஆபத்தைக் களைய முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவனை விடக் கேவலமானவர்கள்.

வரதட்சணை சட்டப் பூரவமாகக் குற்றம் என்று கூறுகின்றனர்.தண்டனையும் கடுமையாக நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.என்ன பிரயோஜனம் ?இன்னும் வரதட்சணை களைந்தபாடில்லையே ?காரணம் என்ன ?

பாதிக்கப் பட்டவர்கள் ஊமைகளாக இருப்பதால்தானே இந்த நிலைமை.சம்பந்தப் பட்ட அதிகாாிகளின் நேரடிப் பார்வைக்குப் பிரச்சனை போகாதிருந்து விட்டால்,சட்டமும்,தண்டனையும் இருந்து என்ன சாதிக்க முடியும் ?

இச்சமூகச் சீர்கேட்டைத் திருத்த ,பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சியும்,அவர்களின் ஒத்துழைப்பும்,மிகவும் அவசியமாகிறது.

இவைகளைப் பற்றிப் பேசவோ,விளக்கவோ மேல்மட்டத்தினர் மட்டுமே தகுதியானவர்கள்என்று எண்ணாமல்,நடுத்தர மக்களும் எளிய வர்க்கத்தினரும் உணரச்செய்ய வேண்டும்.

*எந்தெந்த வழிகளில் எத்தர்கள் பண்டங்களின் தரத்தைக் கெடுக்கின்றனர்-

*பொதுமக்களின் நலனைப் பொருட்படுத்தாமல்,உணவுப் பொருட்களில் எப்படிக் கலப்படம் செய்கிறார்கள்-

*எடைகளின் அளவுகளில் ,எப்படித் தங்கள் கைவாிசையைக் காட்டி மக்களின் பொருளாதார நஷ்டத்துக்குக் காரணமாகிறார்கள்,போன்ற விவரங்களை மக்களுக்குத் தொியப் படுத்தவேண்டும்.

கொலைகாரனைவிடக் கொடியவன் இந்தக் கலப்பட வியாபாாி.ஆத்திரத்தில் அறிவிழந்துக் கொலை செய்துவிடுகிறான் ஒருவன்,கொலையின் காரண காாியங்களை ஆராய்ந்து பார்த்தால் ,அவனது குற்றத்தைக்கூட மன்னித்துவிடலாம்.வெறும் பணத்தாசையால்,திட்டங்கள் தீட்டிக் கலப்படம் செய்து ,பலருடைய அக்கல் மரணத்துக்கும் உடல் நல பாதிப்புக்கும் காரணமான நாசகாாிகளை விட்டு வைக்கவே கூடாது என்று மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

இது போன்றப் புல்லுருவிகளை வளர விட்டால் நாடு எத்தகையப் படுகுழியில் தள்ளப் பட்டுவிடும் என்ற ஆபத்தை அனைவரும் புாிந்து கொள்ளும் வகையில் பிரச்சாரம் செய்யப் பட வேண்டும்.

மொத்தத்தில் நுகர்வோாின் உாிமை உணர்வும்,விழிப்புணர்ச்சியும் சேர்ந்து,கூடவே நாட்டுப் பற்றும் இணைந்து செயல்பட்டால் போதும்;நாட்டின் முன்னேற்றம் என்ற அச்சாணியைக் கழற்றும் அக்கிரமக்காரர்களை அறவே ஒழித்துவிடலாம்.நாடும் சீரான பாதையில் முன்னேற்றத்தையும் செழிப்பையும் நோக்கி வெற்றி நடை போடும்.இது உறுதி!

**

மதுரை மாவட்டம் நுகர்வோரிடையே விழிப்புணர்ச்சிக்காக நடத்திய கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்