எம் .வி .குமார்
பாரதி நேஷனல் ஃபாரம் திருவனந்தபுரம் நீலபத்மநாபனைப்பற்றிய விமரிசனக்குறிப்ப்புகளில் முக்கியமானவை அனைத்தையும் தொகுத்து ஒரு பெருந்தொகைநூலை பிரசுரித்துள்ளது .மூன்று மொழிகளில் வந்த விமர்சனங்கள் இத்தொகை நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கேரள இலக்கியவரலாற்றாசிரியரான டாக்டர் கெ எம் ஜார்ஜ் பொது ஆசிரியராக பணியாற்ற தமிழ் பகுதியை டாக்டர் கெ நாச்சிமுத்து எம் நயினார் ஆகியோர் தொகுத்துள்ளனர் . ஆங்கிலப்பகுதி கெ வானமாமலை அவர்களாலும் மலையாளப்பகுதி டாக்டர் டி பெஞ்சமின்ஆவர்களாலும் தொகுக்கபட்டுள்ளன. முன்னுரைகளுக்கு பிறகு நீலபத்மநாபனைப்பற்றிய பொதுவான விமரிசனங்கள் உள்ளன. பிறகு அவரது ஒவ்வொரு நூலைப்பற்றியும் வெளிவந்த விரிவான கட்டுரைகள் மற்றும் மதிப்புரைகள் ,அபூர்வமாக கடிதங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. பற்கலை ஆய்வேடுகளின் சுருக்கங்கள் சில சலிப்பூட்டினாலும் க . நா. சு ,வெங்கட் சாமிநாதன் ,பேரேசிரியர் ஜேசுதாசன் , என் வி கிருஷ்ண வாரியர் முதலிய முக்கியமான விமரிசகர்களின் கட்டுரைகள் சுவாரஸியமானவை . ந.முத்துசாமி , கோ ராஜாராம் ஆகியோரின் எதிர்மறை விமரிசங்கள் பல தொகுக்கப்பட்டிருந்தபோதிலும்கூட பல முக்கியமான எதிர்மறை விமரிசனங்கள் தொகுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டபடுகிறது .திருவனந்தபுரம் பல்கலைகழக நூலகம் மற்றும் நீலபத்மனாபனின் சொந்தத் தொகுப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பி இத்தொகுப்பு ஆக்கப்பட்டுள்ளது என்பதன் விளைவு இது . ஆனால் தமிழ் எழுத்தாளன் ஒருவனைப்பற்றிய தகவல்கள் எங்குமே சேமிக்கப்படுவது இல்லை ,கிடைப்பதுமில்லை என்ற கோணத்தில் பார்த்தால் இது தவிர்க்க முடியாததே .
ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெரிதும் உதவிகரமான தொகுப்பு இது .வாசகர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளில் நம் விமரிசன மரபு எப்படி படிப்படியான வளர்ச்சி அடைந்துள்ளது என்ற சித்திரத்தை உருவாக்க்கூடியது என்ற முறையில் மிக முக்கியமானது .
தொகுப்பில் இருந்து
================
நீலபத்மநாபன் விவரப்பட்டியல்
————————————
வயது 26/4/1938
நூல்கள் [மொத்தம் 36]
======
நாவல்கள்
———–
தலைமுறைகள் 1968
பள்ளிகொண்ட புரம் 1970
ஃபைல்கள் 1973
உறவுகள் 1975
மின் உலகம் 1976
உதயதாரகை 1980
வட்டத்துக்கு வெளியே 1980
பகவதிகோவில் தெரு 1981
தேரோடும் வீதி 1987
கூண்டினுள் பட்சிகள் 1995
சிறுகதைகள்
—————
இஞ்சினீயர் 1965
மோகம் முப்பது ஆண்டு 1968
சண்டையும் சமாதானமும் 1972
மூன்றாவது நாள் 1974
யாத்திரை அனுபவங்கள் சமர் 1977
இரண்டாவது முகம் 1978
நாகம்மாவா 1978
சிறகடிகள் 1978
சத்தியத்தின் சன்னிதியில் 1985
வானவிதியில் 1988
பாவம் செய்யாதவர்கள் 1991
வெள்ளம் 1994
அவரவர் அந்தரங்கம் 1998
பிற விபரங்கள்
==========
பரிசு
——
ராஜா முத்தையா செட்டியார் நினைவுப்பரிசு 1977
மொழிபெயர்ப்புகள்
————————-
மலையாளத்தில் 3 சிறுகதை தொகுப்புகள் [அசல்] வெளிவந்துள்ளன
தலைமுறைகள் ஆங்கிலம்[மொழிபெயர்ப்பு க நா சு ] ஜெர்மன் .இந்தி ,மலையாளம்,கன்னடம்,உள்ளிட்ட 11மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பள்ளிகொண்ட புரம் ஆங்கிலம் ரஷ்ய மொழிகளிலும் 10 இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகியுள்ளது.
விமரிசன நூல்கள்
———————
நீ .ப .இலக்கியத்தடம்
[காவ்யா பதிப்பகம்]
நீலபத்மநாபனின் படைப்புலகம்
[திருவனந்த புரம்]
இந்த விமரிசனத்தொகுப்பு
BHARATHI NATIONAL FORUM
TC NO 21/472,KARAMANA
THIRUVANANTHAPURAM
KERALA STATE
INDIA
695002
என்ற விலாசத்தில் கிடைக்கும் .அல்லது dilipbooks@eth.net ல் விசாரிக்கலாம்.
- உன்னுள் நான்
- ப்ரியமுள்ள தொலைபேசிக்கு
- நலமுற
- வளர்ச்சி
- அனிச்சமடி சிறு இதயம்
- நீல பத்மநாபன் விமரிசனத்தொகுப்பு
- நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
- ‘Amores Perros ‘ அமோரஸ் பெர்ரோஸ்- நாய் போல அன்பு மெக்ஸிகோ சினிமா (விமர்சனம் அல்ல)
- நூல் விமர்சனம் – நகரம் – 90 (சுப்ரபாரதிமணியன்) -போராட்ட வாழ்க்கை
- திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம்- விமரிசனக் கூட்டம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 7 – கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை ‘ – எதிர்பார்ப்பும் ஏக்கமும்
- நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி
- அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்
- இன்னும் கொஞ்சம் வெண்பா
- சொன்னால் விரோதம்
- முந்தைப் பெருநகர்
- கறுப்பு வெளிச்சங்கள்
- கடிகாரம்..
- இன்னொரு ஜனனம்
- நினைவுகள்
- பனி மழை
- இயல்பு
- தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்
- ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது
- ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)
- சூஃபி இஸ்லாம் : அமைதிப்புறா
- சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகளே!
- கோவில்களில் அன்னதானம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் தவறானது
- இந்த வாரம் இப்படி – மார்ச் 31 2002 (சங்கரலிங்கபுர கலவரம், ஜெயலலிதா ஆறுதல், கோத்ரா மற்றும் ஜம்மு, மீண்டும் மூன்றாம் அணி)
- இரக்கம்
- ஓட்டப் போட்டி