நிராகரிப்பின் வலி

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

அன்பாதவன்


தவிக்கிறாய் உன்னுள்- எனினும்
தவிர்க்கிறாய் என்னை

உரையாடல்களில் உடைபடுமென்று
மவுனங்களை பொத்தி காக்கிறாய்
ரகசியங்களின் இருட்குகையில்
இருப்பதறியாது தவிக்கிறேன், இருட்டில்
வெய்யிலில் வீடு நுழைந்தவன் போல

அடித்து சாத்தியக் கதவின்
விளிம்பில் சிக்கிய விரலாய்
துடிக்கிற என் மனம் படிப்பின்
வரக்கூடும் வெளிச்சம்

என் மேல் உன் நிழலும் படாதபடிக்கு
தடுக்கின்ற சக்திகளை
எதிர்கொள்ளும் திராணியற்றவனின்
முனகல் கேட்கிறதா
கேட்டிருப்பின் உணரக்கூடும்
நிராகரிப்பின் வலியை.

அன்பாதவன்

jpashivammumbai@rediffmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.