நினைவுகள் இனிக்கும்!

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

ஆனந்தன்.


பள்ளிக்கு செல்ல பயந்து
பல்வலி என்று சொல்லி
படுக்கையை இறுருக்கி கட்டிய – அந்த
பழைய நினைவுகள் இனிக்கிறது!

பள்ளிக்கு செல்வதாக சொல்லி
பாதியில் மாந்தோப்பில் திருடி
பங்குப்போட்டு தின்ற – அந்த
பழமான நினைவுகள் இனிக்கிறது!

கல்லூாி என்று சொல்லி
கன்னியவள் வருகைக்காக சென்று
கால் கடக்க காத்திருந்த – அந்த
கனிவான நினைவுகள் இனிக்கிறது!

மங்கையவள் வரச் சொல்லி
மறந்துப்போய் ஆலுவலில் மூழ்கிட்டு
மாலையில் மான்றாடிய – அந்த
மயக்கமான நினைவுகள் இனிக்கிறது!

நினைவுகள் இனிக்கும் என்ற
நினைப்பில் இனிவரும் நினைவுகளை
நசுக்குகின்றேன் என்ற – அந்த
நினைப்பு மட்டும் கசக்கிறதே..!!

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்