கோவிந்த்
நாம் நமது கலாச்சாரம், முன்னோர் பெருமை எனப் பழம் பெருமை பல பேசினாலும், நிதர்சனம் சுடுகிற ஒன்றாகவே இருக்கிறது.
அதிலும், இந்தியா என்ற பரந்த நாட்டில் ஒரு அங்கமாக இருப்பினும், சற்றே முரண்டு பிடிக்கும் அலங்காநல்லூர் ஜல்லி காளையாக நம்மில் சிலர் கருதாட்டுகிறார்கள்.
கல்தோன்றி மண் தோன்ற காலத்து மூத்தக்குடி என்றே ரிதமாகச் சொன்னாலும், காலையில் சூர்ய நமஸ்காரத்திற்கோ இல்லை இயற்கையின் உதய அழகு பார்ப்பதற்கோ, கடற்கரைக்கோ, இல்லை பயணப்படும் ரயில், பஸ் போன்றவற்றின் ஜன்னல் கதவுகளின் வழியே விழி செலுத்தினால், கழிப்பிடக் காட்சிகளே… கண்ணில் படுகின்றன.
நிற்பன, நடப்பன, ஊர்வன என அனைத்தையும் தமிழ் பெயர் மாற்றம் செய்யும் பணியே தமிழ்ப் பணி என்பது போல் நாம் செயலாற்றம் செய்கையில், பேண்ட் , ஷர்ட், டை என இங்கிலாந்து நமக்கு தந்த கொடையில் தான் குளிர் காய்கிறோம்.
மரத்தடி திண்ணைகளும், கோவில் பிரகாரங்களும் உறங்கும் அல்லது உண்டு கிறங்கும் இடமாக இருந்த போது, இங்கிலாந்துக் காரன் தான், பள்ளிக்கூடம், மருத்துவமனை என மதத்தின் பெயரால் கொணர்ந்தான்.
நாமோ அந்த மாதிரி எண்ணங்களை இந்து மதத்தின் மூலமாக செய்யாமல், மதம் மாத்திறான் மதம் மாத்திறான் என்று மதம் பிடித்து 200 வருடமாக கத்துகிறோம்.
நாமோ, 5000 வருடமாகியும் அழிக்க முடியாத மதம் என்று சொல்கையில், இங்கிலாந்தில் இருந்து வந்தவரோ, 200 வருடத்தில் எவ்வளவு வளர்ந்தது என்று பார்க்கிறான்.
இப்படியாகத்தான், கார், மொபைல், கம்ப்யூட்டட் என பிற நாடுகளின் கண்டுபிடிப்பு வசதிகள் நம்மில் அங்கமாக மாற நாமோ இன்னும் மோட்டு வளை கனவில் கப்பல் கட்டுகிறோம்.
சினிமாவிலும் அப்படித்தான்.
ஷோலே, உலகம் சுற்றும் வாலிபன் என்று நாம் பிரமித்த போது, நம்மில் நம்மிடையே வாழ்ந்த கற்பனைக்கும் எட்டாத புனிதன், காந்தியாரை பற்றி நினைக்காத போது, அதே இங்கிலாந்திலிருந்து வந்த “அட்டன்பரோ” காந்தி படத்தின் மூலம் நம்மின் முகவரியை நமக்குச் சொன்னார்.
அவர்கள் படித்தவர்கள் என்று வாதமிட்டால், நம்மில் மெத்த படித்த ஒருவரே, தமிழ்மக்களை அதிகம் பாதித்த இருவரை பற்றி இஷ்டக் கற்பனையுடன் படமெடுத்து, அது அந்த இருவரை பற்றிய கதையல்ல என்றார்.
இப்படியான தமிழ்ச் சினிமா சூழலில், மதன், ஹாசினி போன்ற அதிகம் சினிமா பற்றித் தெரிந்தவர்கள், ரொம்ப ரொம்ப அளவுக்கு அதிகமாக தமிழ் படங்களைப் பற்றி புளாங்கிதமடைந்து பேசுகிறார்கள்…. விமர்சன நேரத்தில் – வருமானத்திற்காக.
மதன், ஹாசினி போன்றவர்களால் நிச்சயம் தங்களது நிகழ்ச்சியின் மூலம் உலக சினிமா பார்க்கும் தரத்திற்கு தமிழ் ரசிகர்களை நிச்சயம் கொண்டு செல்ல முடியும்.
ஆனால், என்னவோ, பொய்மையுடன் நிகழ்ச்சி தருகிறார்கள் – சாதாரண உலக சினிமா ஞானம் மற்றும் அனுபவம் இல்லாதவர்கள் போல…
இருவரும் தத்தம் துறையில் அருமையான சாதனை செய்து நெஞ்சத்தை கிள்ளியவர்கள்.
பின் ஏன்…? இப்படி…?
அதிலும் “கண்ணாமூச்சி ஏணடா” படத்தை ஹாசினி சிலாகித்தது ரொம்ப ஓவர். ஒரு வேளை தன்னிடமும் ,தன் கணவரிடமும் உதவியாளராக அந்த இயக்குனர் இருந்ததாலா…?
பொல்லாதவன் விமர்சனத்தில், அதன் மூலம் அழியாத உலக காவியத்தில் ஒன்றான, “BiCycle Thieves” என்று ஊறுகாய் போன்று சொன்னவர், அது பற்றி கொஞ்சம் விவரப்படுத்தி அதற்கு ஒரு மரியாதை செலுத்தியிருக்கலாம்.
இன்றைய திருட்டு டிவிடி உலகில், அங்கங்கே கிடைக்கும் உலக சினிமாக்கள் விற்கும் கடையில் நிச்சயம் மக்கள் அப்படத்தை வாங்கிப்பாட்த்திருப்பர். அவர்கள் சரியான சினிமாவிற்கு புரிதலும் கொண்டு போலிகளை கண்டு கிறங்காமல் இருந்திருப்பார்கள்.
அப்புறம், நம்ம மதன்…
அவர் அழகிய தமிழ் மகன் இயக்குனரை குத்தலும் , கேலியுமாக கையாண்ட விதம், “மதன்… நீங்களூமா..? ” என்றிருந்து,
பல கானல் நீர் அறிவு ஜீவிகளை விட, ATM இயக்குனர் நல்லவரே..
அது ஒரு பிதற்றல் மசாலா… அதை கிண்டல் விடும் மதன், சீரியஸ் சினிமா என்ற பெயரில் திருடும் உயர் கலைஞர்களிடம் உள்ளப் புழாங்கிதம் அடைவது ஏன்..
Please மதன்… நீங்கள் அப்படி செய்யாதீர்கள்….
இல்லையெனில்,
Ameros Perros, BiCycle Thieves, WhiteNights, City of God, Memento, Following போன்ற படங்களைத் திருடி படமெடுத்தவர்களை ATM இயக்கினரை நடத்திய விதத்தில் நடத்துங்கள்….
இப்படியாக தமிழ் சினிமா இயக்க, விமர்சன களம் இருக்க, இன்று தமிழ்ச் சினிமாவில் கதை சொல்லும் பாணியில் ஒரு வித்தியாசம் வந்திருப்பதாக அனைவரும் சொல்கிறார்கள்.
அதற்கு காரணம் யார்…?
தமிழ் சினிமா போக்கில், முன்பு, ஸ்ரீதர், கே.எஸ்.ஜி., பாலசந்தர், மகேந்திரன், பாரதிராஜா, ராமநாறாயணன், ஆபாவாணன், எஸ்.பி.எம், மணிரத்னம், ஷங்கர், பாலா, செல்வராகவன், தரணி போன்றோர் வேவ்வேறு நிலை பாதிப்பு ஏற்படுத்தி தமிழ்ச் சினிமாவின் முக்கிய மைல் கல்லாக இருந்துள்ளனர்.
இன்றைய சூழலில், தமிழ்ச் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை அதன் போக்கில் ஏற்படுத்தியவர் என்று சொல்ல வேண்டுமானலும், AGAIN ஒரு இங்கிலாந்துகாரரே…. வருகிறார்.
அவர் தான் கிறிஸ்டோபர் நோலன்.
இங்கிலாந்தில் பிறந்து , இன்று இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குடியுரிமை இரண்டும் வைத்துள்ள இவரின் படங்கள் தான் புதிய கதை சொல்லும் பாணியை உலகிற்கு தந்துள்ளது.
அந்தகாலத்தில் சினிமா பிதாமகர்கள், தாஸ்கோவஸ்கி மற்றும் அக்கிரோ குரசேவா பேசுகையில், ஒரு சினிமாவிற்கு தேவையானது – கதை சொல்ல என்று, Begining Middle End ( ஆரம்பம், இடை மற்றும் முடிவு ) என்று ஒருவர் சொல்ல , மற்றவர் சொன்னாராம் Not neccessarily in that order ( அந்த வரிசைத் தொடரில் இருக்க தேவையில்லை ) என்று,
இதன் அற்புத வெளிப்பாடு நோலன் படங்களில் காணலாம்.
கோர்வைத் தொடராக வருவது, கட்டுரையாக வரலாம், கதையாகவோம் இல்லை நாம் நடந்து ஒன்று பற்றி ஒருவரிடம் சொல்லும் போது சொல்லும் விதமாக இருக்காது. இப்ப நடந்தது, அப்ப நடந்தது என்றே நடந்ததைச் சொல்வோம் – நிஜத்தில்.
இதை நிழலில் சாதித்துக் காட்டியவர் “நோலன்”
இவர் கல்லூரியில் படிக்கும் போது எடுத்த படம் Doodle Bug”
ஒரு அறையில் , பூச்சி ஒன்றை ஒருவன் அடிக்க முயல்வது பற்றின குறும் படம்.
1997 ல் இவர் எடுத்த , Following சினிமாவில் ஒரு மிகப் பெரிய மைல் கல்.
2000 ல் எடுத்த படம் Memento…..
Short term memory loss…. திரைக்கதை அமைப்பே அற்புதம். நாமே ஒரு STM loss மனநிலையில் இருந்துவிடுவோம். வசனங்கள் அற்புதம். அதில் ஒன்று, “கால ஓட்டத்தில் எல்லாக் கவலைகளூம் சிறிதாக ஒன்றுமில்லாதாகிவிடும் என்கிறார்கள். என்னைப் போன்று கால ஓட்டத்தையே அறிய முடியாதவன்… என்ன செய்ய…?”
2000 வந்த இந்த படம் தான் கஜினி யாக தமிழில் வந்து இப்போது ஹிந்தியில் உல்டாவாகிக் கொண்டிருக்கிறது.
திருட்டு டிவிடி பற்றி குரல் கொடுக்கும் நபர்களே ஒரு அற்புத மனிதனின் சிந்தனையைத் திருடி, குத்தாட்டத்தில் சங்கமம் ஆக்கி இருக்கிறார்கள். பல காட்சிகள் அப்பட்டமாக இருக்கும். பாருங்கள்.
2002 Insomnia அடுத்த அற்புதம். நீங்கள் ஒரு இடத்திலாவது கண் கிறங்கி தூக்காத நிலை உணர்வீர்கள்.
2006 Prestige இது இரு MAGICIANS இருவர் வாழ்வு பற்றியது,. Magical Realism என்று அதிகமாக பேசும் நமது சில போலி கலைஞரகள் பற்றி அறிய நாம் பார்க்க வேண்டிய படம். திரைக்கதையே மேஜிக் போல் இருக்கும்.
இப்போது , The dark Knight என்ற படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
யோசியுங்கள், சாதாரண குழப்ப படம் எடுத்த சிலர் இது 10வருடம் பின் வந்திருக்க வேண்டிய படம் என்று சொல்லும் போது, நோலன், 1997 -ல் எடுத்த படம் மற்றும் திரைக்கதை பாணியை தமிழ்சினிமா FOLLOWing செய்யும் போது, அவரை தமிழ் சினிமாவின் தந்தை என்றால் மிகையாகாது.
மேலும் விவரங்களுக்கு,
http://imdb.com/name/nm0634240/ கிளிக்குங்கள்.
இந்த மாதிரி படங்கள் பற்பல தமிழ் சினிமா இயக்குனர்கள் வாங்கிச் செல்லும் கடைகள் பல, ஜெமினி பாலம் சந்திப்பில் , The Park ஹோட்டல் முன்பாக அந்த சந்திப்பு முக்கில் இருக்கும் பல்மாடி கட்டிட பேஸ்மென்டில் ( Hotel Palimar கீழே ) இருக்கிறது.
வாங்கி உங்கள் தரம் உயர்த்துங்கள்.
ரசனையும் , ரசிப்புத்தன்மையும் , போலிகளைக் கொண்டாடத மனநிலை வந்து நீங்கள் மதிக்கத் தக்கவர் ஆவீர்கள்.
இதை பார்க்கும் போது தான், சினிமா பார்ப்பதற்கும் அறிவு வேண்டும், இது மாதிரி சினிமா அறிவு விருத்திக்கும் உதவும் என்பது புரியும்.
இவரைப் பற்றி அனைவருக்கும் சொல்லுங்கள்.
govind.karup@gmail.com
- பனிக்கரடி முழுக்கு
- பெண்புத்தி, பின்புத்தி!
- தோழர் பரா நினைவில்
- Last Kilo Bytes 5 – நமஸ்தே மோடி சாகிப்: மஜா சாகிப்
- மூக்கு
- துரும்படியில் யானை படுத்திருந்தது
- புதுச்சேரியில் துளிப்பா வளர்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !பிரபஞ்சம் ஒன்றா ? பலவா ? (கட்டுரை: 11)
- பெண்ணெனும் இரண்டாமினம்
- மூடு மணல்
- நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்
- கிளைதாவி வரும் மின்னல்
- மலேசியாவில் வெளிவரும் தனித்தமிழ் நாள்காட்டி 2008 செய்தியறிக்கை
- மாத்தா- ஹரி அத்தியாயம் -44
- நம்பிக்கை அளிக்கும் சினிமாக்கள் பற்றிச் சில குறிப்புக்கள்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 கடைவீதியில் கிடைத்த கருமேனியான் !
- கவிதைகள்
- உமா மகேஸ்வரி கவிதைகள் கற்பாவை
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!
- தைவான் நாடோடிக் கதைகள் 8. மனைவியும் இல்லை; குரங்கும் இல்லை.
- மலர்மன்னனின் கட்டுரைக்கு நன்றி
- திரு ஜெய பாரதன் அக்கினிப் பூக்கள்
- ராட்டடூயி
- ஆர். வெங்கடேஷ் “மியூச்சுவல் ஃபண்ட்” – புத்தக விமரிசனம்
- கவிஞர் ரஜித் அவர்களுக்கு தங்கப் பேனா விருது
- 2006ல் வெளியான சிறந்த நாவலாக எனது ‘நீர்வலை’ தமிழக அரசால் தேர்வு
- வல்லரசாய் விளங்க வேளாண்மை ஒன்றே போதும் நமக்கு!
- “மலர்கொடி”
- நாங்கள் பூக்களாக இருக்கிறோம்
- ஒரு ராஜா ஒரு ராணி
- உலகத்தமிழ்வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்!
- ‘இயல்விருது’ பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி….
- அன்புள்ள கிரிதரன்
- கத்தி குத்திய இடம்…
- பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்
- தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !
- எழுத்தாளர்கள்: நடை வேறுபாடு காட்டிவிடும் யாரென்பதை!
- இலங்கையில் வழங்கும் தாலாட்டுப்பாடல்கள்
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள் – 7 தி.ஜ.ரங்கநாதன்
- “அலமாரி”
- கடிதம்
- வேட்டை நாய்
- சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 2
- நிகழ்கால தமிழ்ச் சினிமாவின் தந்தை ” கிறிஸ்டோபர் நோலன்”
- வருவதுதான் வாழ்க்கை
- எதுவும் நடக்கலாம் என்றாகிப்போன…
- நண்பன்
- 27வது பெண்கள் சந்திப்பு
- யார் இவர்கள்?
- காந்திஜி, ஹரிஜன், முகமதியம் மற்றும் ஸடன் ரிமூவல்
- கவிதைகள்
- ஒரு ‘வெளியிடப்படாத’ முன்னுரையின் தமிழாக்கம்
- கவிதைகள்