சேவியர்
நெடு நாட்களாய்
நெஞ்சு நிமிர்த்தி நின்றேன்
விழுப்புண் கொடுத்து என்னை
விழ வைத்து விட்டார்கள்.
நியூயார்க் நகாின் நீளமான சாலைகள்
என் நிழல் விழுந்ததால்
சிறிதாகிக் கிடந்ததுண்டு.
சுதந்திர தேவியின் தீபச் சுடர்
என் நிழல் பூசியதால்
கருப்பாய் தோன்றியதுண்டு.
கால்வலிக்கும் மேகங்களும்,
விழுந்துகொண்டிருக்கும் மழைத் துளிகளும்
என்
தலைமேல் அமர்ந்து ஓய்வெடுத்ததுண்டு.
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே
ஓர்
வியப்பு இடைவெளியில்
என்மேல் விழுந்து கிடந்த விழிகள் ஏராளம்..
நினைத்திருக்கவே இல்லை
பாசக் கயிறொன்று பூமியிலிருந்து பாயுமென்று.
என் நெற்றிக்கு
நெருப்புப் பொட்டிடும் வேகத்தில்
விரைவாய் விமானம் நெருங்கிய போது
விலகி ஓட முடியாமல்
என் கால்களைச் சுற்றிலும் கட்டிடங்கள்.
மூச்சிரைக்க மூக்கு மோதி
என் தலை உடைத்து
தற்கொலை செய்தது அந்த
மனசாட்சி இல்லாத மரண வாகனம்.
ஒற்றைச் சிதையில்
உயிர்களை அடுக்கி
தீவைத்துச் சென்றது தீவிரவாதம்.
நான் எாிந்தபோது
ஒரு சின்னம் அழிவதாய் தான் நினைத்தேன்,
என்னுள் பலர் எாிந்தபோது தான்
நானே நினைவுச் சின்னமாய் உணர்ந்தேன்.
குதறப்பட்டு நான் குற்றுயிராகி
கைத்தடியில்லாத குருட்டுக் கிழவனாய்
பொல பொலவென்று உதிர்ந்தபோது,
என்னுள் நசுங்கிய உயிர்களை எண்ணி
குற்ற உணர்ச்சி குறுகுறுக்கிறது.
என் இடிபாடுகளுக்கிடையே
இறுகிக் கிடக்கிறது
சிதைந்துபோன இதயங்கள்.
என் முதுகெலும்புகள் முறிக்கப்பட்டதால்
முக்கால் வாசி முனைகளிலும்
உடைந்துபோன எலும்புகளின் வாசம்.
என் காலடியில் கிடந்து
கதறும் நகரம் கசிந்த கண்ணீாில்
அணைய முடியாமல் எாிகிறேன்…
என் புகையோடு சேர்ந்து
காற்றில் கரைந்து கொண்டிருக்கின்றன
பகை பலிகொண்ட
அரை ஆயுள் ஆன்மாக்கள்.
என்னை சிரச்சேதம் செய்ததில்,
ஓரு ஆச்சாியம்
உருத்தொியாமல் அழிக்கப்பட்டுவிட்டது
ஒரு வரலாறு
இரத்த ஆறாய் உரு மாறி விட்டது.
ஒரு நகரத்தின்
இரு கண்கள்
இருட்டாக்கப் பட்டு விட்டன.
என்னோடு சேர்ந்து
ரத்தமும் சதையுமாய் செத்துப் போனவர்களை
சத்தமிடும் நகரத்தில் புதைத்துவிட்டு.
நான் மட்டும் நாளை எழக்கூடும்.
என் இறுதி மூச்சின் முடிவுரையாய் நான்
மரணவாக்கு மூலம் தர விரும்பவில்லை…
கடைசி ஆசையை
முன் வைக்கவே விரும்புகிறேன்.
கட்டிடங்கள் மண்ணால் ஆனவை
விழுந்தபின்னும் மனிதரால் எழும்பிவிடும்.
மனிதர்களோ மாண்புகளால் ஆனவர்கள்
சிதைக்கும் முன் சில வினாடியேனும் சிந்தியுங்கள்.
- பாத்திரம்…
- அலங்காரங்கள்
- ஒற்றை பறவை
- (1) சிட்டுக் குருவி! சிட்டுக் குருவி!(2) பாரதி ‘யாய்ப் படைத்திடுவீர்!(3) ஞாபகமிருக்கிறதா பெண்ணே!
- புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள்
- புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும்
- விக்ரமாதித்தனின் ‘கவிமூலம் ‘
- ஷேப்டு சாலன்
- பாம்பே டோஸ்ட்
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)
- அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள்!
- கற்றுக்கொடேன்……..
- நான் தான் W T C பேசுகிறேன்….
- கண்ணாடி
- முன்னுக்குப் பின்
- உயிர்த்தெழும் மனிதம்
- போர்க்காலக் கனவு
- பலகாரம் பல ஆகாரம் !
- ‘பிதாவே ! இவர்களை……. ‘
- பாிமாணங்களை மீறுவதெப்போ ? (அல்லது இருப்பு பற்றியதொரு விசாரம்)
- உலக வர்த்தக மையம் தாக்குதல் – கருத்துக் குருடர்களின் ராஜ பார்வையும் அறிவுஜீவி நேர்மையின்மையும்
- ஏன் போர்கள் நடக்கின்றன ? (முதல் பகுதி)
- உறவும் சிதைவும்
- சேவல் கூவிய நாட்கள் – 4 (குறுநாவல்)
- கரிய முகம்