நானென்னை தொலைத்துவிடும்படி

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

கலாசுரன்


*
ஒய்யார நடைகொண்ட
சொல்லொன்றை அடிக்கடி
உச்சாடனம் செய்கிறாய்
நானென்னை தொலைத்துவிடும்படி

என்னை நானே சுதந்திரப்படுத்திக்கொள்ள
காதுகளை அறுத்து
லட்சியமற்றதொரு தொலைவில்
ஓங்கி எறிந்துவிட்டு
புறப்பட்டுச் செல்கிறேன்

பார்வையில் படும் அனைவரும்
உதடுகளை மட்டும்
அசைத்துக் கொண்டிருக்கிறார்கள்
கண்கள் கூசுகின்றன..
*
***
கலாசுரன்

Series Navigation

கலாசுரன்

கலாசுரன்