நானும், தாத்தாவும் வேப்பமரமும்.

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

சேவியர்.


0

மேற்குப் பக்க
வேப்பமர நிழலில் தான்
தாத்தாவின்
மாலை நேர நாற்காலி,

எனக்கோ,
மின்விசிறிக் காற்று
தலையைக் கலைக்க,
தொலைக்காட்சி வெயிலில்.

வேப்ப மரக் குச்சி தான்
தாத்தாவின் பல்லுக்கு,
எனக்கோ
சுகாதாரத்தையும்
சோதனைக் கூடத்தில்
தயாரித்தால் தான் ஆகும்.

தாத்தாவின்
மூட்டு வலிச் சோர்வுக்கான
மூலிகை எண்ணையை
வேப்ப மரம் தான் தரும்,
எனக்கு
அரசு அனுமதி பெற்ற
அயோடெக்ஸ் அனுமதி தான்
மூட்டு வலியை
விரட்டி வைக்கும்.

தாத்தாவுக்கு
சுகாதாரமில்லாத
குளத்து நீர் குளியல் தான்,
எனக்கோ
சுதந்திரமான
உள்ளறைக் குளியல்.

கலோரிகளைப் பார்க்காமல்
நான்
உண்பதில்லை,
தாத்தாவுக்கு
கலோரி என்ன என்பதே
தெரிந்ததில்லை.

இருந்தாலும்,
தாத்தா
எழுபது வயதிலும் பனையேறினார்,
நான்
இப்போதே படியேறத்
தடுமாறுகிறேன்.

0

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்