நவீனங்களின் சாம்பல்

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

அன்பாதவன்


—-
ஆனந்த தாண்டவத்தில்
சக்தியும் பரமனும்
ஆடைகள் துறந்து

விசுவரூப மெடுக்கின்றன
விரைத்தக்குறியும் விரிந்த யோனியும்
காணக்கிடைக்காத காட்சிப் பேரமைதியில்
மண் வீழ்ந்து வணங்குகிறார்கள்
செம்மொழியின் நவீனர்கள்
நிர்வாணத் தரிசனப் பரவசத்தில்
பெருகி விழிக்கின்றன படைப்பிலக்கியங்கள்
வாசித்த சக்திக்கு பூடகப் புன்னகை
‘பார்வையற்றோரின் யானைக்காணல் ‘
அர்த்தம் பொதிந்த புன்முறுவலோடு
அழைக்கிறார் சிவன்
மெல்லிய நாணத்தோடு நகர்கிறாள் அம்பிகை
அர்த்தநாரியின் அவதாரப் பெருந்தீயில்
பற்றி எரிகின்றன படைப்புகள்
—-
அன்பாதவன்,மும்பை

jpashivammumbai@rediffmail.com

Series Navigation

அன்பாதவன்.

அன்பாதவன்.