நம்மைப் பற்றி நாம்.

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

எஸ். வைதேஹி.


இன்றைய பொழுதுக்கு
காகித குப்பைகள்
எழுதி
பை நிறைய இட்டு வைத்தேன்.

என்னைப் பற்றி நீயும்
உன்னைப் பற்றி நானுமாய்
சொல்லிக் கொண்டதை
‘நம்மைப் பற்றி நாம் ‘ என்று
தலைப்பிட்டு எழுதி வைத்தேன்.
ஆயினும் நீ,

‘ஆனால் நான் இப்படியில்லையே ‘ என்று சொல்லும் போது
வியந்து வியந்து என்னால்
தனிக்கவிதை ஒன்றைத்தான்
எழுத முடியும்.

******

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.