தொட்டி ஜெயா : விமர்சனம்

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

வினோத்


—-

நன்றாகத்தான் சினிமாவின் ஆரம்பம் இருக்கிறது – பொதுவாக எல்லா தமிழ்ப்படங்களுமே.

அது ஒரு பத்து நிமிடத்திற்குத்தான் தாங்குகிறது.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, ‘ராம் கோபால் வர்மா ‘ -வின் பாணியை இயக்குனர் தமிழில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்.

வழக்கம் போல் அனாதைக் கதாநாயகன்.

ஆனால், ஹோட்டல்களில் பாத்திரம் கழுவும் கதாநாயகனின் சிறுவயதுக் காட்சிகள் மனதைத் தொடுவதாய் இருக்கிறது.

அது போல். இந்தப் படத்தைப் போல், அழகிய தேவதை போன்ற பெண்ணிற்கு ஒரு பொறுக்கியுடன் காதல் வருவதை ஏற்றுக் கொள்ளும்படி அல்லது புரிந்து கொள்ளும்படி எந்தத் தமிழ்படத்திலும் காட்டியதில்லை.

அதே சமயம் ஒவ்வொரு காட்சியும் வேகமெடுத்து சற்று ஈடுபாடு வருகையில் பொதேர் என்று தொட்டிக்குள் டம்பளரைப் போடுவது போல் யாரும் போட்டதில்லை.

ஆரம்பத்தில் ‘காதல் கொண்டேன் ‘ சிறுவயது வாழ்வு காட்சிகள். பின் ‘மகாநதி ‘ போன்ற கல்கத்தா காட்சிகள், பின் ‘தூள் ‘ படம் போல் விறுவிறுப்பு ( னால் என்ன மிதித்தாலும் வேகமெடுக்காத 1960 அம்பாஸடர் வேகம் ) காட்சிகள், இதெல்லாம் தாண்டி, ‘தேவர் மகன் ‘ பாணி காட்சி. வித்தியாசம் வேண்டும் என்று அதில் தேவர்மகனில் வடிவேலு கேட்டும் கமல் அரிவாளைத் தரமறுப்பது போல் அல்லாமல், இதில் ‘சிம்து 2 ‘-வின் அரிவாளை இன்னொருவர் வாங்கி ‘சிம்பு ‘ -வை ஊரை விட்டு போய் நிம்மதியாக வாழ வாழ்த்துகிறார்.

சினிமாவில் கற்பனை தேவைதான். ஆனால், படைப்புகளில் சமகால வாழ்வு முறைகள் பற்றி அறியமுடியாத நிலை இருந்தாலும் பரவாயில்லை ஆனால் ஆபாச களஞ்சியங்கள் ஏனோ தெரியவில்லை.

இது வரை கொஞ்சம் கொஞ்சமாக ஆடை குறைக்கும் படம் தான் பார்த்திருந்தோம். இப்போது கிட்டத்தட்ட அம்மணமாய் இடுப்பாட்டம் ஆடும் படம் வந்திருக்கிறது…

வார்த்தை ஆபாசங்களைப் பெரிதாக எடுத்து S.J.சூர்யா விஷயத்தில் பம்மாத்து பண்ணும் சென்சார் ஒளி ஊடக வடிவமைப்பில் கொட்டிக் கிடக்கும் ஆபாசத்தை கண்டு கொள்ளாதது ஏனோ… ?

இந்த லட்சணத்தில் தியேட்டரில், குட்டி குழந்தைகளும் இருந்தன.

பல காட்சிகள் பழையபடம் பார்ப்பது போல் பிரமை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில் இது ஒரு ‘குப்பைத் தொட்டி ‘

:::: வினோத் ::::

Series Navigation

வினோத்

வினோத்