அம்மாளு மாமி.
பாய்ஸ் பாத்துட்டு ஆபாசம் சரி தப்புன்னு ஏதாவது சொல்லலாம்னா, தூக்கம் கண்ண அமட்டிண்டு வந்துடுத்து. நாச்சியார் மடத்துலருந்து பாய்ஸ் வரைக்கும் ஆபாசம் ரைட் ராங்க்னு சொல்ல நமக்கு முடியறதுன்னா ஆபாசம்னு பொதுவா அபிப்ராயப்படறதை சொல்ல ஒரளவுக்கு சுதந்தரம் இருக்குன்னுதானே அர்த்தம். ஈரான்ல அது மைனஸ்னு தெரிஞ்ச சமாச்சாரம்தானே. பொம்மனாட்டிகள் போத்தி மூடிண்டுதான் சினிமால வரலாம். கொழந்தைகள் வரலாம். காதல், கீதல், முத்தக்காட்சி, படுக்கை அறை காட்சி எல்லாம் சான்ஸே கெடையாது. (கன்னியாகுமாரிக்கு முழு கட்). இப்பிடி ஒரு கெடுபிடில சினிமா எப்பிடி இருக்கும் ? ஸோஷலிசம் கொழிச்சுண்டு இருந்த காலத்துல சீனால வாரத்துக்கோர் தடவை, மாசத்துக்கோர்தரம்னு, இந்திய்ச் சினிமா காட்டுவாளாம். மெஜாரிட்டி சீனா காரா எப்படா இந்திய சினிமா வரப்போறதுன்னு காத்துண்டு இருப்பாளாம். பொம்மனாட்டிகள் பொட்டு வச்சுண்டு, டான்ஸ் ஆடிண்டு, டூயட், கல்யாணம், கண்ணு கொளமாகும் செண்டிமெண்ட் இதெல்லாம் அவாளுக்கு ரொம்ப பிடிக்குமாம். சீனாவுல எடுக்கற கம்யூனிஸ்ட் சினிமா காட்டும்போது, கம்யூனிஸ்ட் அடிபட்றாமாரியோ, அல்லது, இறந்து போய்டற மாரியோ சீன் வந்தா தக்குனூண்டு ஸ்கோல் கொழந்தைகள் கூட தும்மி, இருமி, (சிரிச்சாலோ, குசு விட்டாலோ போச்) அனிச்சையா நடக்கும் காரியங்கள்ளாம் ஒழுங்கீனம்னு வகைபடுத்தப்படுமாம். கூடுமான வரை முகத்தை சீரியசா வச்சுண்டு படம் பாக்கறது நல்லதாம். அப்பிடி கம்யூனிஸ்ட் புராணத்தைக் காட்டாம வந்த சினிமாக்கள்ளாம் கூட நல்ல கலாபூர்வமா எடுக்கப்பட்ட சினிமாதான். கலாச்சார புரட்சியில ஒரு குடும்பம் என்னென்ன அவஸ்தை பட்டுதுன்னு சொல்லற ‘நீலப் பட்டம் ‘ (ப்ளூகைட்)லாம் ரிலீஸ் பண்ண கஷ்டப்படுருப்பா ஆனா. தி விண்ட் வில் ஃபால் இரான்ல சுளுவா ரிலீஸ் ஆயிருக்கும்னுதான் தோண்றது. லோ பட்ஜெட், ஆர்ட் படம்னு இந்திய சினிமால அதை வகைப்படுத்தலாம். (அருமாமணை இல்லை). ஆழமா சிந்திக்க வச்ச சினிமா.
மலைக்கூட்டதுக்கு நடுவுல கதகதப்பா ஒரு கிராமம். தொலைத்தொடர்பு வசதிக்கு அப்போதான் ஒரு கம்யூனிகேஷன் டவர் தோண்டறா. கிராமத்து பொம்மனாட்டிகள்ளாம் ஆம்பிளைகள் மாதிரி வேலை பாக்கறா. பொம்மனாட்டிகள், கொழந்தேள், வயசான ஆம்பிளைகள்ளாந்தான் ஊர்ல இருக்கா. வலுவான ஆம்பிள்ளைகள் சம்மர்ல வயக்காட்டு வேலைக்குப்போய்டுவாளாம். விண்டர்ல வந்து பொம்மனாட்டிகளை பிரக்னெண்டா ஆக்குவா. அந்த ஊர்க்கு ஒரு லாண்ட் க்ரூசர்ல பட்டணத்துக்காரா நாலு பேர் ஒரு ‘மிஷனோட ‘ வரா. அவாளோட ஹோஸ்ட்டா ஒரு பத்து வயசு இருக்கும் ஒரு பிள்ளையாண்டன் ஊருக்கு வெளில காத்துண்டு இருந்து அவாளைக்கூட்டிண்டு போறான். அந்த ஊர்ல ராஜ் தெளலத்னு ஒரு பாட்டி படுத்த படுக்கையா இருக்கா. அந்த பாட்டியோட சாவுக்கும் வந்தவாளோட மிஷனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு படறது, அது பத்து வயசு பிள்ளையாண்டனுக்கு மாத்திரம்தான் அது தெரியும். மத்தவாள்ட்ட புதையல் தேடி வந்திருக்கறதா சொல்லணும்னு கொழந்தைட்ட வந்தவாளோட சீஃப் கேட்டுக்கறார். கொழந்தை பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லாம ஊர்க்காரா வந்தவாளை கம்யூனிகேஷன் இன்சினியர்னு நெனைச்சுக்கறா. கொழந்தைலேர்ந்து, மூக்கு தரைல தொடற மாதிரி கூனிண்டு நடக்கற பாட்டா வரைக்கும் ஆண்கள் யாருக்கும் யாரும் சாகறதுல இஷ்டம் இல்லைன்னு புரியறது. கொழந்தை ஸ்கோல் சார்வாள்ட்ட வந்தவா ராஜ் தெளலத் மாமி சாவை எதிர்பாத்து வந்ததா போட்டுக்குடுத்துருக்கும் போல, சார்வாள் சீஃப் கிட்ட ஏன் தனக்கு யாரு சாகறதுலயும் இஷ்டம் இல்லைன்னு காரணம் சொல்றார். சாவு அன்னிக்கு பொம்மனாட்டிகள் எல்லாம் ஒண்ணு சேந்து, ஒப்பாரி வெச்சுண்டு, அடிச்சுண்டு, அவாளைக் கீச்சிண்டு காயப்படுத்திப்பாளாம். அது சின்ன வயசுலயே சார்வாளுக்கு அவரோட அம்மா கீச்சிண்டது கண்டு சாவுன்னா ஒரு பயம் மாதிரி வந்துடுத்தாம். ஒப்பாரிக்கான சமுதாய்ப் பொருளாதார காரணத்தை நம்ம தமிழ்நாட்டு மார்வின் ஹாரிஸ்- சின்னக்கருப்பன் பாணில சார்வாள் விளக்கமா சொல்லவும் செய்வார்.
சீஃப்க்கு ஏகப்பட்ட பிரஷர். மிஷன் எப்போ முடியும்னு கூட வந்தவாளோட நச்சரிப்பு. சீஃப்போட பாஸ் (லேடி) யோட கெடுபிடி. மனைவியோட கெடுபிடி. ஒவ்வொரு சமயமும் போன் வரும்போது ரிசப்ஷன் கிடைக்காம, லாண்ட்க்ருசரை ஓட்டிண்டு கம்யூனிகேஷன் டவர் வேலை நடக்கற மேட்டுக்கு ஓடற, ஓட்ட சாட்டத்துல, கொழந்தையபோட்டு திட்டிடுவார். இவ்வளவுக்கும் சார்வா கொழந்தைய ஓண்ணும் சொல்லப்படாதுன்னு ஏற்கனவே கேட்டுருப்பர். சீஃப் கோச்சுண்டதுல கொழந்தை அதுக்கே இயல்பான கெளரவத்தோட அவாளை விட்டு ஒதுங்கிண்டுடும். இதுக்கு நடுவுல ராஜ்தெளலத் மாமி கஞ்சி குடிச்சு எழுந்து ஒக்காந்துண்டு தேறிண்டு வரதா சேதி வந்துடும். சீஃப் கூட வந்தவா சீஃப்பை விட்டுட்டு பட்டணத்தைப்பாக்க போயிடுவா. ஏதோ ஒரு ஃபோனுக்கு மேட்டு நிலத்துக்கு சீஃப் போய்ருக்கறப்போ கம்யூனிகேஷன் டவருக்கு தோண்டியிருக்கற குழில யாரோ விழுந்துடுவா. சீஃப் ஊர்க்காராள்ட்ட ஓடிப்போய் சொல்லி, காப்பாத்தப்பண்ணிடுவார். சிகிச்சை பண்ண வந்த டாக்டர், விழுந்த ஆளுக்கு அபாயம் ஒண்ணும் இல்லைன்னு சொல்லுவார். அவருக்கும் சாவு மறு உலகத்துலலாம் நம்பிக்கை இருக்கற மாதிரி தெரியலை.
சீஃப்போட காரை கிராமத்துக்காரா நோயாளிய பட்டணத்துக்குப்போக ஓட்டிண்டு போய்ட்டதால் டாக்டரோட ரெண்டுசக்கரத்துல ஊருக்குள்ள கொண்டு விடச்சொல்லுவார். அப்பிடியே ராஜ்தெளலத் பாட்டியைப் பாக்கக் கூட்டிண்டு போவார். டாக்டர் மாமிக்கு ஒண்ணும் இல்லை, ஒல்ட் ஏஜ்தான் பிரச்சினை. ரெஸ்ட் வேணும்னு மருந்து எழுதிக்கொடுத்து கரெக்ட் டோஸேஜ் சொல்லுவார். சீஃப் ஒண்ணுக்கு ரெண்டு முறை கரெக்ட் டோஸெஜ் கேட்டுத் தெரிஞ்சுப்பர். அடுத்த பிரேம்ல ராஜ்தெளலத் பாட்டி பாஸ்ட் டென்ஸா ஆயிருப்பா. எனக்கு வண்ண நிலவனோட எஸ்தர் கதைய ஞாபகப்படுத்தின சீன் இது. (வண்ணநிலவனின் ஈரானியத்தழுவல் எஸ்தர்னு, சாமி சத்தியமா நான் சொல்ல வரலை. இந்தப்படம் இந்த மில்லனியத்துல ரிலீஸ் ஆன படம்). அது வரைக்கும் தனி தனியா மட்டுமே பாக்க முடிஞ்ச பொம்மனாட்டிகள் சேந்து வெளில வருவா. சீஃப் அவாளை போட்டோ பிடிச்சுண்டு போவார். இதுதான் கதை. இதுல நான் கவனிச்சு இங்கே சொல்லாம விட்டது எக்கச்சக்கம். கவனிக்காம எவ்வளவு விட்டுருக்கேனோ.
என்னை ரொம்ப யோசிக்க வச்ச கலாபூர்வமான படம் இது. இந்த சினிமாவப்பத்தி முத்துலிங்கம் எங்கியோ எழுதி இருந்ததா வேகா ஒரு ஞாபகம். அவர் இதை எப்பிடி அர்த்தப்ப்டுத்திண்டார்னு நினைவு இல்லை. பிராமண மாமியாகிய நான் இதை அர்த்தப்படுத்திண்டது பின்வருமாறு.
தொலைத்தொடர்பு வசதியே இல்லாத ஒரு கிராமத்துல கம்யூனிகேஷன் டவர்க்கான அஸ்திவாரம் தோண்ட ஆரம்பிச்ச ஒடனேயே மிஷனோட நாலு பட்டணத்துக்காரா வர ஆரம்பிச்சுடறா. தேறிண்டு வர பாட்டி செத்துபோறா. நவீன் வசதிகளோட நாம சேத்து அக்ஸெப்ட் பண்ணிக்க வேண்டிய விஷயங்கள் இந்த மாதிரி மிஷன் ஓரியண்டட் ஆட்களும், அவா மிஷனை முடிச்சுக்கற விதம்னும் சொல்ற மாதிரி இருக்கு. ஈமெய்ல் வந்துடுத்து, லெட்டர் போச்சுன்னு அசட்டுத்தனமா டெக்னாலஜியப்பத்தி பேத்தலா அதே டெக்னாலஜிய உபயோகிச்சுப் புலம்பும் புலம்பல் இல்லைன்னுத்தான் படறது. (சமீபத்துல ரெண்டு செய்திகள் தனித்தனியா படிச்சேன். உலகத்துலயே ரொம்ப சந்தோஷமானவா, அதிக டெக்னாலஜி டெவலப்மெண்ட் யூஸ் பண்ணாத தரம்சலா புத்த பிக்குகள்தானாம். நவீன டெக்னாலஜியவச்சு இதை நிரூபணம் பண்ணியிருக்கா!!! இன்னோரு ஆராய்ச்சிப்படி, எக்கச்சக்கமான டெக்னாலஜி ஜனங்களை ரொம்ப சோகமானவாளா மாத்தியிருக்காம். நான் வாங்கின சீடி ப்ளேயர் உசத்தியா தாழ்த்தியா, நம்ம நண்பன் வேறே வாங்க்கிட்டானே, அது அளவுக்கு இது வேலை பண்ணும்மான்னுலாம் யோசிச்சு யோசிச்சு கொழம்பறாளாம். இதையெல்லாம் தூக்கிச்சாப்பிடற விஷயங்கள்தான் ஈமெய்லைப் பத்தி புலம்பி ஈமெய்ல்ல எழுதி அனுப்பறதும்).
என்னைக்கவர்ந்த காட்சி: திருப்பதி லட்டுல எந்தப்பக்கம் இனிப்புன்னு ஆராய்ச்சி பண்ணறா மாதிரிதான் என்னைக்கவர்ந்த சீன்னு இந்தப்படத்துலருந்து பொருக்கிச்சொல்றது. இருந்தாலும் தமிழ் சினிமாவை ஒரு குத்து விடத்தோதுவான பல காட்சிகள்ள ஒரு காட்சி இது. சீஃப் பால் வாங்க் ஒரு மாமியாத்துக்குப் போறார். மாமி சொல்றா இதோ இப்பிடிபோங்கோ, எங்க பொண்ணு மாட்டுக்கொட்டகைல இருக்கா. கறந்து தருவான்னும் ஒரு வழியக் காட்டறா. மாட்டுக்கொட்டகை கும்மிருட்டா இருக்கு. பொண்ணு (18 வயசுன்னு நினைவு) லாந்தரோட வந்து கூட்டிண்டு போறா. மூஞ்சியக்காட்ட மறுத்துடுவா. பால் கறக்கும்போது ஒரு கவிதை சொல்லவான்னு சீஃப் கேட்டுட்டு சொல்ல ஆரம்பிப்பர். ‘எங்காத்துக்கு வரும்போது ஒரு விளக்கு கொண்டு வாங்கோ. மறக்காம ஒரு ஜன்னலும் கொண்டு வாங்கோ….. ‘ (முழுக்கவிதையும் இன்னொரு தடவை சான்ஸ்கிடைச்சு படம் பாத்தா எழுதறேன்). பொண்ணு பாலுக்கு காசு வாங்க கண்டிப்பா மறுத்துடுவா. நம்ம தமிழ் சினிமால இப்பிடி ஒரு சீன்ல கவிதையா சொல்லுவா ?
சீஃப்பா நடிச்சவரையும் 10 வயசுப் பிள்ளையாண்டனையும் அதிகமாகக் காட்டப்பட்ட் படம். 10 வயசுப்பிள்ளை 10 வயசுப்பிள்ளையா வரது. அதி சாமர்த்தியம், புஷ்டி, குண்டுக்கன்னம், செல்லம், வாய்த்துடுக்குன்னுலாம் இல்லை. தமிழ் சினிமால குழந்தைகளை (அழகி நீங்கலாக) இந்த அளவுக்கு இயல்பாப் பாத்தது இல்லை. கிராமம் கிராமமா இருக்கு. சீஃப்பா நடிக்கறவரோட உடல் மொழி அந்த பாத்திரத்துக்கு ஏத்தமாதிரி மிகவும் இயல்பா இருந்துது. டாக்கடை பொம்மனாட்டியத்தவிர வேறே பெண்மணிகல் யாரையும் கிட்டத்துல காட்டலை.
கிசுகிசு: சத்தம் போடாம கிசுகிசு குரல்ல படிக்கவும். அமெரிக்கன் ஒருத்தன் ஏதோ ஒரு தமிழ் படம் பாத்தானாம். மரபணு நடிகர் சண்டைக்காட்சில கலக்கிப்பிட்டு, ஹீரோயினோட காதல் பண்ணிண்டு இருந்த சீன். அமெரிக்கன் சொன்னானாம், இந்த நடிகனோட உடல்மொழியும், கொஞ்ச நாளைக்கி மின்னாடி பாத்த கண்டுகொண்ட கதாநாயகனோட உடல்மொழியும் ஓரினச்சேர்க்கையாளன் பாத்திரத்துக்கு அற்புதமா இருக்குமேன்னு. கல்ச்சர் ஷாக். வெள்ளைக்காரனை எல்லாத்துக்கும் பெஞ்ச் மார்க்கிங்குக்கு வச்சுக்கப்படாதுதான். டைரக்டர் சொல்லிக்கொடுக்கறத அப்பிடியே நடிக்கற நடிகர்கள் நிலைமையைப் பாருங்கோ.
தமிழ் (சிறுபான்மை) இலக்கியம் யோசிக்க வைக்கும்படியாத்தான் இருக்குன்னுதான் சொல்லுவேன். பிராமண மாமியா இருந்தாலும், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல்லாம் படிச்சு ஓரளவுக்காவது புரிஞ்சிக்க முடியறது. (போடு, ஜெயமோகனின் இலக்கித்தில் பிராமணத்துவம்னு ஆராய்ச்சி பண்ணி எழுத பகுத்தறிவாளர்ளுக்கு எவிடன்ஸ் கெடச்சாச்சி). தயிர்வடை, பன்னிக்கறி, வைட் வைன், ரெட்வைன் சாப்பிடுப்பிட்டுப்பிட்டுத் தோணறதை எழுதினாலும் மத்தள ராயன் கதைக்கு ‘ஓ ‘ போட முடியறது. தமிழ் சினிமாவை புரிஞ்சிக்கலாம்னா படத்தை முழுக்க பாக்கறதுக்குள்ளயும் உறக்கம் கண்களை ஆனந்தமா தழுவறது. தமிழ் சினிமாவுக்கு தயவுசெஞ்சு, யாராவது ஒரு விளக்கு கொண்டு வாங்கோ. ஒரு ஜன்னலும் கொண்டு வாங்கோ.
aparna177@hotmail.com
- மீராவின் கனவுகள்
- எட்டு நூல்கள்.
- கவிதைகள்
- இசை அசுரன்
- தீபாவழி
- ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நிபுளாக்கள்!
- கவிதையின் புதிய உலகங்கள்
- தாமரைத் திருவிழா-ஒரு கலைச் சங்கமம்
- உயிர்மை வெளியீடு
- எனக்குப் பிடித்த கதைகள் – 82- மனத்தின் மறுபக்கம்- ந.முத்துசாமியின் ‘இழப்பு ‘
- தி விண்ட் வில் ஃபால்- இரானிய திரைப் படம்.
- பகுதி விகுதியானதேன் ?
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq)
- திரு.அண்ணாதுரை மறைவின்போது ஜெயகாந்தன் பேசியது
- ஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…
- பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.
- அன்னை தெரேஸாவின் அமுத மொழிகள் (1910-1997)
- மீண்டும் மீளும் அந்தத் தெரு.
- வணக்கம் தமிழ்த்தாயே !
- கவிதைகள்
- அலைகளின் காதல்
- கல்லூரிக் காலம் – 4 -Frustration
- விடியும்!- (19)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தொன்பது
- ே ப ய்
- அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை
- தீபாவளிப் பரிசு
- குட்டியாப்பா
- இது தாண்டா ஆஃபீஸ்!
- கடிதங்கள் – அக்டோபர் 23,2003
- குருட்டுச் சட்டம்
- வாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்
- நேரம்
- உதயமூர்த்தி சுவாமிகள்
- பகுத்தறிவு குறித்த மூடநம்பிக்கைகள் – குறுகிய கண்ணோட்டம்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -2
- காரேட் ஹார்டின்(1915-2003)
- பொது இடம், தனிமனித இடம் ,சமூகக் குழுவின் தகுதரங்கள்
- கொடை கேட்கும் சிறு பெண்தெய்வங்கள்
- தாண்டவன்
- மறுபடியும்
- பரிணாமம்