

1. அம்மா
அம்மா நீ
அறிந்து போதித்ததை விட
அறியாமல் போதித்தது அதிகம்
தாயே
தொிந்து சொன்னதை விட
தொியாமல் சொன்னது அதிகம்
நாலுபேர் மத்தியிலும்
நறுக்கெனக் கிள்ளுவாயே
யாரும் அறியாமல்
உதடுகள் சிாிக்கும்
உள்ளுக்குள் வலிக்கும்
அன்று நீபோதிமரமாய்
இன்று நான் எாிமலையாய்
உள்ளுக்குள் எாிந்து கனன்றாலும்
உதரமுடியா சோகத்தொடு
அம்மா,
ஒளித்து ஒளித்து வைக்க
ஓயாமல் பிரயத்தனம் செய்தாய்
வித்து அம்மா நான்
விழுது விட்ட மரமாய்
வளர்ந்து விட்டேன்
நீ என்னை ஒளித்து வைத்த இடத்தில்
நீரூற்று கண்டதால்
மழைக்குப் பயந்து
மண்ணுக்குள் வைத்தாய்
நீரூற்றுள் நான் நனைந்ததை
நீ அறிய மாட்டாய் ?
2. காதல்
காதலின் ஆழத்தை
சொல்ல வந்தேன்.
தமிழ் கடலும்
வற்றிப்போனது.
காதலின் சுகத்தைச்
சொல்ல வந்தேன்
தூறும் மழைத்துளி
துடித்து நின்றது
காதலின் வாசத்தைச்
சொல்ல வந்தேன்
மண்ணின் வாசம்
மண்ணுக்குள் மறைந்து போனது
காதலின் வேகத்தைச்
சொல்லவந்தேன்
வீழும் அருவி
வீழ்ந்தே போனது.
காதலின் மென்மையைச்
சொல்லவந்தேன்
என் பெண்மை கூட
மென்மை இழந்தது