திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்

This entry is part [part not set] of 39 in the series 20110410_Issue

வரத ராசன். அ. கி


அன்புள்ள ஆசிரியருக்கு,

திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

” பொன் மானாக வந்த மாரீசன் உயிர் துறக்கும் போது ” அட்ட திக்கினும் அப்புறம் புக” , “சீதா, ஓ லட்சுமணா ” என்று குரல் கொடுக்கிறான். இது ராமனின் குரலில்தான் மாயமாக நிகழ்த்தப்பட்டது என்று கம்பராமாயணம் திட்டவட்டமாகக் கூறவில்லை” .

கம்பராமாயணத்தில் மாரீசன், இராமன் குரலில் மாயம் செய்து அலறினான் என்பது திட்டவட்டமாக குறிப்பிடப்படுள்ளது.

“ புழைத்த வாளி உரம் புகப் புல்லியோன் ,
இழைத்த மாயையால் என்குரலால் எடுத்து
அழைத்தது உண்டு ; அது கேட்டு அயர்வு எய்துமால்
மழைக்கண் ஏழை “ என்று உள்ளம் வருந்தினான்

என்ற பாடல், இதைத் திடவட்டமாகத் தெளிவு படுத்துகிறது.

வரத ராசன். அ. கி
சிங்கப்பூர்

Series Navigation

வரத ராசன். அ. கி

வரத ராசன். அ. கி