தியானம் கலைத்தல்…

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

மதுமிதா


====
பார்வையின் உள்வாங்களும்
நடையும் மட்டுமே
சாத்தியப்படும்
நடையே
தியானமாய் அமைகையில்
மனதின்
சலனமற்ற நிலை
சக ?மாய் நிகழ்கையில்
அந்தப் பேரானந்தம்
கலைந்திடும் வகையில்
ஒன்று
குழந்தையின் முதுகில்
தொப்பென அறைந்து
தரதரவென இழுத்துச் செல்லும்
தாயோ
அல்லது
சாலையின் ஓரம் கிடந்த
செங்கல் துண்டினை
நச் சென அடித்து
நற நற வென அங்கேயே
பொடி செய்து
பல்தேய்க்கும் பெரியவரோ
எதிர்ப்பட்டு விடுகின்றனர்
====
madhumitha_1964@yahoo.co.in

Series Navigation

மதுமிதா

மதுமிதா