தினந்தோறும்

This entry is part [part not set] of 18 in the series 20010812_Issue

ஸ்ரீனி.


இரவின் துவக்கத்தில்
உறங்க பிடிக்கவில்லை
விடிந்த பிறகும்
இமை திறக்க பிடிக்கவில்லை

சுத்தமாக நீராடி
உடுத்தி
சுகமாக பயணம் செய்து
எதிர்பார்ப்பு இல்லாமல்
கணிப்பொறியின் முன்
இயங்குகின்ற
மனிதப்பொறி

பணி முடியும் சமயம்
ஆம்
மாலையிலும் காலையிலும்
கடிகாரம் என்னை இயக்கியது
அது ஏனோ கடிகாரத்தை
8ற்க்கும் 5ந்திற்கும் இடையில்
பார்ப்பதும் இல்லை !

உருவாக்குதல் கடினம்
உணவு எனில் மிகவும்
ஆனால்
வயிற்றுக்குத் தொிவதில்லை
மாறும் வாழ்வில்
என்றும் மாரா ஓர் அம்சம் – பசி.

மீண்டும் முதல் பத்தி –

எதிர்பார்ப்புகள் புாியவில்லை
கடிகாரத்தின் முட்களோடு
போட்டியிடுகிறேன்
காரணங்கள் தொியவில்லை

ஆதவனை ஆவலுடன்
எதிர்பார்ப்போர் யார் ?
நிலவும் அன்றாட நிகழ்வாகி போனது
நிலை மாற்றம்,
இட மாற்றம்,
மனது மட்டும் மாராமல்
குழம்பியே இருக்கிறது

படுக்கையில் கிடந்தபடி
உறங்க நினைக்கிறேன்
அவையங்கள் அனைத்தும் இந்த
தினப்படி அட்டவணையை முடித்தால்
சோர்வுற்றிருக்க
ஏனோ மனது உறங்க மறுக்கிறது.

இந்த நிகழ்வுகள் தினந்தோறும்.

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி