கடலைப் பருப்பு 1 கோப்பை
உப்பு 1 தேக்கரண்டி
ஆட்டுக்கறி 1 கிலோ
வெங்காயம் 2 பெரியது
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
இஞ்சிப் பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
புளித்தண்ணீர் 1 கோப்பை
சிவப்பு மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3 அல்லது 4 (சிறியது)
கறிவேப்பிலை 6 அல்லது 8 இலைகள்
உருளைக்கிழங்கு அல்லது செளசெள போன்ற காய்கறிகளில் 300 கிராம்
செய்முறை
அரிந்த வெங்காயத்தை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்
இஞ்சிப்பூண்டு விழுது, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், போன்றவற்றைப் போட்டு அதன் பின்னர் ஆட்டுக்கறியையும் போட்டு வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் ஊற்றி மாமிசம் மென்மையாகும் வரை வேகவிடவும்.
காய்கறிகளைத் தோலுரித்து, நீளதுண்டுகளாக வெட்டி இத்துடன் சேர்த்து, தண்ணீர் ஆவியாகியிருந்தால், சிறிதளவு தண்ணீரும் ஊற்றி வேகவிடவும்.
பருப்பை தனியாக வேகவைத்து, நன்றாக கரைத்து கூழாக்கி இத்துடன் சேர்க்கவும். இத்துடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றையும் மாமிசத்துடன் சேர்த்து வேகவிடவும்.
இத்துடன் புளித்தண்ணீர் சேர்த்து, தீயைக் குறைத்து மெல்லிய தீயில் நன்றாக வேகும் வரை வைத்திருந்து பிறகு பரிமாறவும்.
பிரியாணி, புலவ், அல்லது வெறும் சாதத்துடன் பரிமாறலாம்.
- அர்த்தங்கள்
- கலாநிதி பத்மா சுப்ரமண்யத்தின் ‘பகவத் கீதை ‘!
- பிரியாணி
- தாள்ச்சா (ஆட்டுக்கறி சாம்பார்)
- அறிவியலில் ஒரு வாழ்க்கை
- விஷக் கிருமிகள்
- உந்தன் நினைவில்…
- ஒரு மலைக்கால மாலைப்பொழுதில்…
- கிளி ஜோசியம்…
- சேவல் கூவிய நாட்கள் – 8,9,10 – குறுநாவல்
- இருட்டுப் பன்றிகள்!
- பயராத்திரி
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 21 , 2001
- பழிக்குப் பழி என்பது கடமையா ?
- உ.வ.மை.யில்லாத உலகம் -1
- என் விழியில் நீ இருந்தாய் !
- கனடாவில் கார்
- பிரசாத்திற்குக் கல்யாணம்……!