தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
பிரபஞ்சத்தின் ஐக்கியத்தில்
நீ தடம் வைப்பது
எங்கேயோ
அங்கே தான்
என் உள்ளத்தின் ஐக்கியமும்
பின்னிக் கொள்ளும்
உன்னோடு !
என் ஐக்கியம்
வனாந் திரத்தில் இல்லை !
ஏகாந் தத்தில் இல்லை !
என் உள்ளத்தின் உள்ளே
இல்லை !
என்னருமை நேசனே !
எல்லோ ருக்கும் பொறுப்பாக
எங்கே நீ உள் ளாயோ
அங்கே தான் நீயும்
எனக்குச் சொந்தம் !
இரு கரங்கள் நீட்டி
எங்கு நீ எல்லோ ரையும்
வரவேற் கிறாயோ
அங்கே தான்
விழித்துக் கொள்கிறது
எந்தன் நேசம் !
காதலை மறைத்து வைக்க
முடியாது !
ஒளிக்கதிர் போல் அது
பரவுகிறது !
என்னருமை நேசனே !
எல்லா வற்றுக்கும்
மேலான
இன்ப மயம் நீ !
ஏற்றுக் கொள்வேன்
அதைத்தான்
எந்தன் மகிழ்வாய் !
(முற்றும்)
************
1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra
2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 19, 2008)]
- 2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தைக் கருமைச் சக்தி பிழைத்திடச் செய்யுமா அல்லது பிளந்திடச் செய்யுமா ?
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -3 பாகம் -1
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- அந்த இரவை போல்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்:39. ராஜாஜி.
- அகப்பாடல்களில் புறச் செய்திகள்
- ‘வண்ணநிலவனி’ன் கடல்புரத்தில் ஒரு பார்வை
- கதிரையின் நுனியில் எறும்பு
- வேத வனம் விருட்சம் 20
- புத்தகம்
- ஆசை
- கேள்விகள்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -20 << காம வெறி ! >>
- தாகூரின் கீதங்கள் – 65 ஒளிக்கதிராய்ப் பரவுகிறாய் !
- சென்ரியு கவிதைகள்
- பொய்
- மரணச் சமாதியின் குருவி
- உயிர் ஊறும் ஒற்றைச் சொல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திநாலு
- ஈரம்