தாகூரின் கீதங்கள் – 59 மெய்யாய் உன்னை உணர்வது !

This entry is part [part not set] of 24 in the series 20081211_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மெய்யாக உன்னை உணர்வது
என்றால்
என்ன வென்று
எனக்குத் தெரிய வில்லை !
ஆயினும் உனது வீட்டு
வாசல் அருகே வந்து
தூசியில் விளையாடினேன்
மாசின்றி
மகிழ்வோடு இருளில்
உனக்குச்
சிறிதும் பயமின்றி !

உன்னுடைய படித்த மாந்தர்
என்னை இகழ்ந்தார்
ஆழமாய்த் துழாவிக்
கீழாக எடைபோட்டு !
“வழியைத் தொடர்ந்து
ஏன் நீ
வந்திட வில்லை”
என்றென்னைக் கடிந்தார்
“திரும்பி வா” வென்று
விளித்து !

ஆனால் கதவை
நீயோ
அடைத்து விட்டாய் நான்
திரும்பிச் செல்லாதபடி
உன் கரங்களில்
என்னைப்
பற்றிக் கொண்டு !
என்னை மீளும்படி
அழைத்திடும்
அவரது அழுத்தக்
கூக்குரல்
போனது வீணாய் !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 8, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா