தாகூரின் கீதங்கள் – 55 உலகக் கவலைகளில் என்னைத் துடிக்க வைக்கிறாய் !

This entry is part [part not set] of 24 in the series 20081113_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



உலகக் கவலைகளில் என்னைத்
துடிக்க வைக்கிறாய் !

எந்தன் வாழ்வில்லை அது
அந்தோ !
காலைப் பொழுதிலோ அன்றி
மாலை வேளையோ
உனக்கும் எனக்கும்
இடையே
மனக்களிப் பூட்டும்
பொழுது போக்கில்லை அது !
இரக்கமற்றுச்
சீற்றமுடன் அடித்தன
இரவுப் புயல்கள் !
எத்தனை தரம் அணைந்திடும்
என் விளக்கு ?

உலகக் கவலைகளில் என்னைத்
துடிக்க வைக்கிறாய் நீ !
கலக்கி விடுகிறாய்
என் உள்ளத்தை
ஐயத்தைக் கிளறி விட்டு !
திரும்பத் திரும்ப வெள்ளங்கள்
வருகின்றன அணைகளை
உடைத்துக் கொண்டு !
இடர்ப்படும் நாட்களில்
ஒவ்வொரு பக்கமும்
துளைக்கும்
ஓலங்கள் பெருகும் !

கடுஞ் சீற்றம் உடையோனே !
இன்ப துன்பங்களில்
உழன்ற நான்
உணர்ந்து கொண்ட
உண்மை இது :
உனது அன்புக் கனிவில்
எனக்கு
உண்டாவது காயமே !
ஆயினும்
அலட்சியப் படுத்த வில்லை
அது என்னை !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 10, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா