தாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை !

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இச்சிறிய இதயத்தை ஆசீர்வதி !
பூமியிலிருந்து சொர்க்கத்தின்
முத்தத்தை வென்ற
சுத்தமான ஆத்மாவுக்கு
ஆசிகள் வழங்கு !
பரிதி ஒளியை வழிபடுபவன் அவன் !
அன்னை திருமுகத்தை நோக்கி
அடிபணிபவன் அவன் !
பொன்னிச்சை மேவிப்
புழுதியை வெறுக்க
இன்னும் கற்றிலன் அவன் !
அணைத்துக் கொண்டு அவனுக்கு
ஆசிகள் வழங்கு !
காசினிக்கு வந்துள்ளான் அவன்
கணக்கிலா இடர்களைக்
கடந்து கொண்டு !

எப்படித் தேர்ந் தெடுத்தான் உன்னை
இச்சந்தைக் கூட்டத்தில் ?
வாசலுக்கு வந்துன் கரம் பற்றி
எப்படித் தனக்கு
வழி கேட்டான் ? சந்தேக மின்றி
உன்னைப் பின்பற்றி
புன்னகை புரிவான் அவன் !
உரையாடு வான் உன்னுடன் ! அவனது
நம்பிக்கை உணர்வைக் காப்பாய் !
நேர்மையாய் நடத்தி
ஆசீர்வதிப்பாய் ! அவன்
சிரம் மீது உன் கரம் வைத்து
பிரார்த்தனை செய்வாய் !
அலைகளின் கீழே எச்சரிக்கை
பெருகினும்
மேலிருந்து பாய்மரத்தில் காற்றடித்து
அமைதி உலகுக்குச்
சுமக்கும்
அவனைப் படகு !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 22, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா