தாகூரின் கீதங்கள் – 23 உலகைப் பிரியும் நாளில் !

This entry is part [part not set] of 36 in the series 20080327_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இவ்வுலகை விட்டுப் பிரியும் நாளில்
இவ்விதம் சொல்வேன் !
கண்ணால் கண்டவையும் நான்
கைகளில் பெற்றவையும்
ஒப்பிடு வதற்கு
அப்பாற் பட்டவை !
ஆயிரம் ஆயிரம் தாமரை
மொட்டிதழ்கள் மிதந்து கிடக்கும்
ஒளிக்கடலில்
அள்ளி அள்ளித் தேனை
அருந்தினேன் !
அவ்விதம் ஆசீர்வதிக்கப் பட்டேன் !
இவ்வுலகை விட்டுப் பிரியும் நாளில்
எடுத்துச் சொல்வேன்
அவற்றை
எல்லோருக்கும் !

பிரபஞ்ச விளையாட்டு
அரங்கத்தில்
பெருங் களிப்புடன் ஆடினேன் !
இருவிழிகளில் பூரணமான
அபூர்வன் அழகில்
எவ்விதம்
கவ்வப் பட்டேன் நான் !
எல்லோரது
உடலிலும் அடைக்கல மானான்
உள்ளத்துக்கு எட்டாதவன் !
முடிய வேண்டுமென் வாழ்வெனக்
கடவுள் விரும்பினால்
அவ்விதமே நடக்கட்டும் !
இவ்வுலகை விட்டுப் பிரியும் நாளில்
எடுத்துச் சொல்வேன்
அவற்றை
எல்லோருக்கும் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 24, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா