தாகூரின் கீதங்கள் – 22 கவிஞனைத் தேடுகிறாயா ?

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


வெளியே பார்த்து
அறிய முயலாதே என்னை !
மேற் பூச்சை நோக்கிப்
பார்க்காதே என்னை !
என் இன்ப துன்ப உணர்வுகளில்
காண மாட்டாய் என்னை !
நெஞ்சில் புண்ணாக்கும் என் வலியை
நீ உணர மாட்டாய் !
என் முகத்தி லிருந்து
என்னை நீ உளவ இயலாது !
எங்கிருந்து நோக்குகிறாய்
கவிஞனை ?
அங்கில்லை அவன் !
இங்கு வாழவில்லை அவன் !

யாரைத் தேட வந்திருக்கிறாய் ?
ஒளிந்து திரியும்
கனவு முகத்தோன் என்னையா ?
மொழி விளக்கம் அளிக்க
முயலும் போது
இயலாமல் போகும் என்னையா ?
கானங்கள் தோல்வியுறக்
காரண கர்த்தா
தானென ஏற்கும் என்னையா ?
கவிஞன்
நானெனக் கருதுவாயா
மனிதப் பிறவியாய்
அறைக்குள்ளே
சிறைப்பட்ட என்னை ?

பாரம் நிரம்பி ஒவ்வொரு
நேரமும்
சிரம் தாழ்த்தும் என்னையா ?
மரண இரங்கற்பா பாடி
மெய்வருந்தி
மிகவும் தவிக்கும் என்னையா ?
என்னுடைய
கதை வாழ்விலா
கவிஞனை தேடுகிறாய் ?

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 17, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா