தள்ளாட்டம்

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

ரசிகன்


தனிமை
ஒரு பொழுதேனும் உணர்ந்ததில்லை…
உணர்த்தியிருக்கிறது…
நிரம்ப அவளும் அவளையும் மட்டும்!

கதையென அரங்கேறுமிடத்தில்
கவிதைக்களம் நட்பு….
கதாப்பாத்திரம் காதல்…

கவிதையின் நாயகன்
முன்பொரு நாள்….
காதலர்கள் வயப்பட்ட சுடுமண்ணில்…
தாகம் தீர்த்ததற்காக
நண்பனென கல்லெறியப்பட்டவன்…

காயங்கள் ஒரு பொருட்டல்ல…
கண்ணீர் ஆற்றிவிடுகிறது!

நினைவுகள் ஒன்று கூடுமிடத்தில்
மயானங்களும் கதவை மூடிக்கொள்கின்றன…
நிம்மதியாய் கண்ணீர் வற்றிவிடுகிறது!

முடிவை முன்னின்று நடத்த
இழுத்தடித்து சாத்தப்பட்ட மனதில்……
சாத்தான் ஒரு கோப்பையிலும்
கூத்தாடி மறு கோப்பையிலும்
தள்ளாட்ட தாண்டவம்!

– ரசிகன்
பாண்டிச்சேரி

Series Navigation

ரசிகன்

ரசிகன்