‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது காப்பாற்றும்)

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா


(பெங்களூரில், 1993 செப்டம்பர் 25ஆம் தேதி, தேசிய சட்ட பள்ளி பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் பேசிய உரை)

முதலாவது பட்டமளிப்பு விழாவோடு என்னை இணைத்துக்கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு அனுப்பி, இங்கு பேச வாய்ப்பளித்த பல்கலைக்கழகத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசிய சட்ட பள்ளி பல்கலைக்கழகம், நமது நீதித்துறையின் பெருமைமிகு உறுப்பினர்களும், பல மாநில அரசாங்கங்களின் வழக்குறைஞர் குழுக்களின் உறுப்பினர்களும் கொண்டிருக்கும் தொலைநோக்குப் பார்வையின் வெளிப்பாடாக அமைக்கப்பட்டுள்ளது. இது பொருளார்ந்த சட்ட படிப்புக்கும், நமது சட்ட ஆராய்ச்சியின் தரத்தை உயர்த்துவதற்கும் தொழில்முறை பயிற்சியின் தரத்தை உயர்த்துவதற்கும் இந்த புதிய கல்வி நிறுவனம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தேசிய சட்ட பள்ளி பல்கலைக்கழகம் (National Law School of India University (NLSIU)) பல துறைகளில் தன் வீச்சைப்பரப்பியும், பயிற்றுவிப்பவர்களின் தரத்தை உயர்த்தியும், பல புதிய வழிமுறைக்க்கண்டறிந்தும், அந்த புதிய வழிகளை கல்வி சொல்லிக்கொடுப்பதில் பயன்படுத்தியுன், ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்பை வலுப்படுத்தியும், சட்டத்தின் இயங்குதல்களுக்கான நடைமுறை பயிற்சியோடும், சட்டத்தை ஒழுக்க ரீதியான அணுகுமுறையில் அணுகி கற்பதும், புரிந்துகொள்வதும், அதனை நடைமுறைப்படுத்துவதும் கொண்டு வளர்ந்து வருகிறது. குறுகிய காலத்தில், இந்த பல்கலைக்கழகத்தை உறுதியான அமைப்பாக உருவாக்க அரும்பாடு பட்ட அதிகாரிகள், உறுப்பினர்கள், மாணவர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகத்திலிருந்து முதன் முதலாக மாணவர்கள் வெளிவந்து நம் நாட்டின் நீதித்துறையில் நுழைவதை இந்த பட்டமளிப்பு விழா குறிக்கிறது. இவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கல்வி நிறுவனத்தின் முதலாம் தலைமுறை மாணவர்களுக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் இருக்கிறது. ஒவ்வொரு மாணவரின் முன்னேற்றமும், திறன் வெளிப்பாடும், ஒரு வகையில் இந்த பல்கலைக்கழகம் தன் மாணவர்களுக்கு படிப்பித்த சமூக ஒழுக்கத்தையும், திறன்பாட்டையும் பிரதிபலிக்கிறது.

நண்பர்களே, இந்த பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் வாசகம், நம்முடைய நீதி பற்றிய பெரும் பாரம்பரியத்தை நினைவு கூர்வதாக இருக்கிறது. மிகவும் செழுமைப்படுத்தப்பட்ட தத்துவங்கள், கொள்கைகள், கருத்துருவாக்கங்கள், பார்வைகள் ஆகியவை நீதி பற்றிய சிந்தனையை இந்நாட்டில் வளமைப்படுத்தி இருக்கின்றன. எல்லாக்காலங்களுக்கும் பொருந்தக்கூடிய கருத்துருவாக்கங்கள், மிகப்பழைய காலம் தொட்டு நம் நாட்டில் மிகவும் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அறம் – தர்மா – என்ற வார்த்தை ஆங்கில மொழியில் ஒரு வார்த்தையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வெப்ஸ்டர் அகராதியில் கீழ்க்கண்ட பொருள் காணப்படுகிறது.

தர்மா என்ற வார்த்தை தரயதி என்ற சமஸ்கிருத வார்த்தையின் மூலத்திலிருந்து வருகிறது. தரயதி என்றால் ‘கொள்கிறான் ‘ என்பது பொருள்)

ரிக் வேதம் பழைய சட்டங்களை ‘ஸனாதன் தர்மாணி ‘ என்று குறிக்கிறது. ரிக் வேதத்தையே மனித குலத்தின் மிகவும் பழைமையான இலக்கியமாக கருதும் பட்சத்தில், ரிக் வேத காலத்து சிந்தனையாளர்களே அவர்களுக்கும் மிகப்பழமையான சட்டங்களைப்பற்றி பேசும்போது, இந்தச் சட்டங்களின் பழமையை நாம் சிந்தித்துப்பார்க்கலாம். ஆகவே ‘அறம் ‘ (தர்மா) என்ற கருத்துருவாக்கம், நினைவு தெரியாத காலம் தொட்டு நம்மோடு இருந்துவருகிறது. அறம் (தர்மா) என்பதன் பொருளென்ன ? தர்மா என்ற வார்த்தை நிச்சயமாக அதன் மூல வார்த்தையான ‘த்ர் ‘ என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இதன் பொருளாக கொள்ளுதல், உயர்த்திப்பிடித்தல், ஆதரவு செய்தல், வளமைப்படுத்தல், காப்பாற்றுதல் போன்றவற்றைச் சொல்லலாம். அது உயர்த்திப்பிடிக்கப்படுகிறதோ அதுவே அறம்.

மஹாபாரதத்தின் கர்ணபர்வத்தில் அத்யாயம் 69, செய்யுள் 58இல்

‘சமூகத்தின் உறுதிக்காக தர்மா, சமூக ஒழுங்கை நடைமுறைப்படுத்த தர்மா, பொதுவாக மனித குலம் நன்றாக இருக்கவும், முன்னேறவும் தர்மா, எதெல்லாம் இந்த நோக்கங்களை நிறைவேற்றுகிறதோ அதெல்லாம் தர்மா, இது நிச்சயம் ‘ என்று கூறுகிறது.

பிரிஹதரண்யாகோபநிஷத் அறத்தை உண்மையோடு அடையாளப்படுத்துகிறது. இதனையே மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கிறது.

அறத்தைவிட உயர்ந்தது வேறெதுவுமில்லை. தவறிழைத்தனை எவ்வாறு அரசனின் உதவியோடு தண்டிக்கமுடிகிறதோ அது போல பலமற்றவனும் பலசாலியை அறத்தின் காரணத்தாலேயே தண்டிக்க முடியுமென நம்புகிறான். ஆகவே அறம் என்று சொல்லப்படுவது நிச்சயமாக உண்மையையே. ஆகவே உண்மையைச் சொல்பவனை அறத்தைச் சொல்பவன் என்றும் அறத்தைச் சொல்பவனை உண்மையைச் சொல்பவன் என்றும் மக்கள் கூறுகிறார்கள். இந்த இரண்டுமே (அறம் என்பதும் உண்மை என்பதும்) ஒன்றுதான்.

இதே போன்ற சிந்தனையே வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் சர்கம் 109, செய்யுள் 10இல் வருகிறது.

‘மிகப்பழமையான காலம் தொட்டு, உண்மையின் அடிப்படையிலும், சமூக அனுதாபத்திலுமே சட்டரீதியான ஆட்சிமுறை விளங்கி வருகிறது. உண்மையே ஒரு அரசின் அடிப்படை. ஏன் இந்தப் பேரண்டமே உண்மையிலேயே நிலைத்து நிற்கிறது. ‘

ரிக் வேதம் சட்டமும் உண்மையும் தியாகத்திலும் sublimationஇலும் பிறந்தவை என்று கூறுகிறது.

ரிக் வேதம் 190-1

நிதி வாக்யாமிருத் இந்த சொற்தொடரோடு தொடங்கினார்

யஞ்னவால்க்ய ஸ்மிருதி கூறுகிறது

ஸ்ருதி, ஸ்மிருதி, ஒப்புக்கொள்ளப்பட்ட உபயோகங்கள், ஒருவனின் உள்ளார்ந்த ஆன்மாவுக்கும், மனசாட்சிக்கும் ஒப்புக்கொள்ளப்படக்கூடியவை, தீர சிந்தித்து உருவானவை, இவை எல்லாமே தர்மத்தின் ஊற்றுக்கண்களாக நிச்சயம் செய்யப்படுகின்றன.

சாணக்யர் (சாணக்கிய சூத்திரம் 234) ‘சட்டமும் ஒழுக்கமும் உலகை நிலைத்திருக்கச் செய்கின்றன ‘ என்று கூறுகிறார்.

வைஷேசிக சூத்திரம் அறம் என்பதை ‘எது உண்மையான மகிழ்ச்சியை விளைக்கிறதோ அது ‘ என்று நிர்ணயப்படுத்துகிறது.

பகவத் கீதையும் இதனையே கூறுகிறது.

தர்மா என்பதை தன் அர்த்தசாஸ்திரத்தில் கெளடில்யர் ‘அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், அதனை நிலைத்திருக்கச் செய்வதற்கும் அறமே அடிப்படை ‘ என்று குறிப்பிடுகிறார்.

தர்மத்தின் தன்னிகரற்ற இடம், அதற்கு சமூகத்தில் இருக்க வேண்டிய இடம் ஆகியவற்றின் அங்கீகாரமுமே நம் மூதாதையர்களின் சட்டம் நீதி பற்றிய சிந்தனைகளில் முக்கிய அங்கம். இது நவீன யுகத்தில் Rule of Law என்னும் சட்டப்படியான ஆட்சி எல்லா உயிர்களையும் கட்டுப்படுத்துபவையாக கருதப்படுவதை ஒத்தது.

மஹாபாரதம் இதனை தெளிவாக உரைக்கிறது. சாந்திபர்வத்தின் அத்யாயம் 90, செய்யுள் 3(1) சொல்கிறது.

ஒரு அரசனின் முக்கியமான வேலை சட்டத்தைப் பாதுகாப்பது; வாழ்க்கையின் சுகத்தை அனுபவிப்பது இல்லை.

மேலும் அது,

சாந்தி பர்வம், அத்யாயம் 90, பாடல் 20இல்

சட்டம் மட்டுமே உச்சமானது. ஆகவே சட்டப்படி ஆளும் அரசன் தன் வேலைகளை சரியாகச் செய்கிறான்

என்றும்,

ஆஸ்ரம வாசிக பர்வத்தில், அத்யாயம் 5, செய்யுள் 9 இல்

அரசு அறத்தால் மட்டுமே காப்பாற்றப்படக்கூடியது- சட்டரீதியான ஆட்சியால் மட்டுமே

என்றும் கூறுகிறது.

சட்டப்படி ஆட்சி பற்றிய இந்த பார்வைகள் பழங்கால மேற்கத்திய சிந்தனையாளர்களாலும் எதிரொலிக்கப்படுகிறது. அரிஸ்டாட்டில், ‘அரசுக்கும் சட்டத்துக்கும் இடையே உண்மையான உறவு, சட்டத்தை உச்சமானதாகவும், அரசை அதன் அடிமையாகவும் ஆக்கும் போதே ‘ என்று கூறுகிறார். ப்ளாட்டோ இதையே மீண்டும் வலியுறுத்துகிறார். ‘சட்டங்கள் ‘ என்ற தன் புத்தகத்தில் சிஸரோ, ‘உச்சமானதும், நிலையானதுமான ஒரு சட்டம் இருக்கிறது. அதில் உண்மையும் நிச்சயமும் இருக்குமாயின் அதற்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் ‘ என்று கூறுகிறார்.

1628இல் ஸர் எட்மண்ட் கோக், பிரபுக்களின் பேரவையில் உரிமைகளுக்கான பிரேரணையின் போது கூறியது எண்ணத்துக்கு வருகிறது. ‘மாக்னா கார்ட்டாவுக்கு சுயாதீனம் கிடையாது ‘ ( ‘Magna Carta is such a fellow that he will have no sovereign ! ‘ )

அகஸ்டின், ஆஸ்டின், ஃப்ரோடெஸ்க் இன்னும் பலர் இதே பார்வையையே கொண்டிருந்தார்கள்.

நமது பழமையான சிந்தனையின்படி, சட்டப்படி ஆட்சி என்பது சமூகநலத்தை பேணுவதற்காக இறுக்கமான உறவு கொண்டது.

கெளடில்யர் தன் அர்த்தசாஸ்திரத்தில் (கெளடில்ய அர்த்தசாஸ்திரம் 1-9-39)

‘மக்களின் மகிழ்ச்சியே மன்னனின் மகிழ்ச்சி. அவர்களின் நலமே அவன் நலம். அவனுக்கு நல்லது அவனை மகிழ்ச்சி அடையவைப்பது அல்ல, அவனது மக்களுக்கு மகிழ்ச்சி தருவது தான் ‘ என்று கூறுகிறார்.

மார்க்கண்டேய புராணம் அறத்தின் நோக்கத்தை கூறுகிறது:

(அத்யாயம் 188, பாடல் 12-17)

‘எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதும், மற்றவர்களிடம் தன் மகிழ்ச்சியை கூறுவதும், எல்லோரும் நலமுற்று வாழவும், எல்லா உயிர்களும் பயத்திலிருந்து விடுபடவும், வியாதிகளிலிருந்து விடுபடவும், நல்ல உணர்வுகளை வளர்த்துக்கொள்வதும், சகோதரத்துவம், ஒற்றுமை, நட்பு ஆகிய உணர்வுகளை வளப்படுத்தவுமே ‘

அறத்தை உண்மையோடும், சமூக நலத்தோடும், கடமையோடும், சேவையோடும் இறுக்கமாக அடையாளப்படுத்துவதையே யுதிஷ்டிரர், தர்மராஜராக தன்னுடைய குரலை வெளிப்படுத்துகிறார்.

‘நான் அரசையோ, சொர்க்கத்தின் சுகத்தையோ, என் தனி மனித விடுபடலையோ விரும்பவில்லை. ஏனெனில் மனித குலத்தின் பலதரப்பட்ட புண்களிலிருந்தும், சோகங்களிலிருந்தும் விடுவிப்பதே ஒரு மனிதனின் முக்கியமான நோக்கம் ‘

இந்த சூழ்நிலையிலேயே ‘தர்மத்தின் வெற்றி ‘ என்ற பதமும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மெளர்ய பேரரசரான அசோகர் தன் கல்சி கல்வெட்டுகளில், தன்னுடைய சாதனைகளை ஒழுக்கரீதியான வெற்றிகளாகவும் தர்மத்தின் வெற்றிகளாகவும் கருதி, அதனை தன் குறிக்கோள் வாசகமாக எழுதியிருக்கிறார்.

‘எங்கே சட்டம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது ‘ (Where there is Law, there is Victory).

நம் பழமையான சிந்தனையாளர்கள், சட்டரீதியில் மிகவும் துல்லியமான வழிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார்கள். பிருஹஸ்பதி, யஞ்னவல்கியர், நாரதர் போன்றோரும் இன்னும் பல அறிவாளிகள் இது சம்பந்தமாக பல முக்கிய பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள். வழக்கு சம்பந்தமான நான்கு படிகளை நாரதர் விளக்குகிறார். வழக்கு எவ்வாறு முழு சட்ட அமைப்புக்கும் தொடர்புடையது, வழக்குக்கு நேரடித் தொடர்புடைய சட்டம், வழக்குக்கான நேரடித்தொடர்புடைய தீர்வைகள், adjudicationஇன் சாராம்சம் ஆகியவை. அவர் பலதரப்பட்ட நிரூபணங்களைப் பற்றி பேசுகிறார். தடயங்களைபற்றிய சட்டங்கள், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தல், எப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்தரப்பாளிகளிடம் போட வேண்டும் என்பது பற்றி பேசுகிறார் ( நீதி தருவற்கு முன்னர் செய்யப்படும் நவீன நடைமுறைகளான சிறை, கைது போன்றவைகளை ஒத்தது இந்த விவரணங்கள்). நாரதர் இத்தோடு, நீதிபதி தன் மனத்தில் தீர்வு பற்றி சிந்தித்தல், வழக்காடுபவரின் மனநிலை போன்றவற்றையும் பேசுகிறார். குற்றம்சாட்டப்பட்டவர் எப்படி எதிர்த்து வாதாடுவார் போன்றவற்றையும் பேசுகிறார். (இவை மறுப்பு, ஒப்புக்கொள்ளுதல், தனிப்பட்ட வாதாடுதல், முன்பு கொடுத்த நீதி போல கொடுக்க வேண்டு கேட்டுக்கொள்ளுதல் ஆகியன)

காத்யாயன் ஸ்மிருதி பழைய இந்திய சட்டவியலின் உச்சம் என்று கூறலாம். இதில் சட்ட முறைகளில் நான்கு படிகளை குறிப்பிடுகிறது. குற்றவியலையும், நிரூபணத்தின் சுமையைப்பற்றியும், நிரூபிப்பது எவ்வாறு என்பதைப்பற்றியும் பேசுகிறது. ஒரு நீதிமன்றம் எவ்வாறு நிரூபணத்தை கையாளவேண்டும் என்பதைப்பற்றியும், நீதி கொடுக்கப்படுவது எவ்வாறு என்பதைப்பற்றியும், ஒழுங்கு நிலைநிறுத்தப்படுவது எவ்வாறு என்பதைப்பற்றியும் பேசுகிறது. தடயங்களின் தரம் பற்றியும், சாட்சிகளை நீதியின் பொருட்டு விசாரணை செய்வது பற்றியும் பேசுகிறது.

நம் எல்லோருக்கும் சொந்தமான மாபெரும் பாரம்பரியத்திலிருந்து சில விஷயங்களை நினைவுகூர்ந்தேன். நம் பழைய விஷயங்களை திரும்பிப்பார்த்து பெருமைப்படுவதற்காக அல்ல. ஆனால், அதிலிருந்து பாடங்களைக் கற்று, எதிர்காலத்தை நோக்கிய நடையில் வழிகாட்டியாக இருக்க. நம் மூதாதையரின் ஞானம், அவர்களது சட்டம் பற்றிய கொள்கைகளும் கருத்துருவாக்கங்களும், சட்ட அமைப்புகளும், நடைமுறைகளும், வழிமுறைகளும், அறத்தின் நோக்கமும், அறத்தை நிலை நாட்ட நம் வைராக்கியம் இருக்கும் வரைக்குமே அவை நம் நாட்டில் வெற்றிபெறும். வெறும் சட்டமும், கொள்கையும் இருந்தால் மட்டும் போதாது; பொது மக்களிடையே சட்டப்படி நடக்கவும், அதனை பாதுகாக்கவுமான பொதுக்கருத்தும் வைராக்கியமுமே, சட்டரீதியான ஆட்சியின் பலனை சமூகம் முழுமையும் பெற தேவையான விஷயம். இதனாலேயே, உங்களது கல்வி நிறுவனத்தின் குறிக்கோள் வாக்கியமான, ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷதா ‘ என்ற வாக்கியம் (மனுஸ்மிருதி, 8 ஆவது அத்யாயம், 15 செய்யுள்) பொருள் நிறைந்ததாகவும், தேவையானதாகவும் இருக்கிறது. ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷதா ‘, யார் அறத்தை காப்பாற்றுகிறார்களோ அவர்களை அறம் காப்பாற்றுகிறது.

பொது நோக்கில் திரிபுகளும், நமது தரக்குறைவும் , நம் நம்பிக்கைகளும், நமது வாழ்க்கை முறையும், நமது புராதனமான நீதியியலின் அழுகலுக்கும், அழிவுக்கும் காரணமாகி விட்டன.

காலத்துக்கேற்றபடியான அரசியல் சிந்தனைகளை பேசும் சிந்தனையாளர்களில் ஒருவரான கெளடில்யர், சூழ்நிலையையும், பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டவராக, சாணக்கிய சாஸ்திரத்தில் கூறுகிறார்:

‘எல்லா உயிர்களையும் ஒன்றாகப்பாவிப்பவனே கற்றறிந்தவனாகக் கொள்ளப்படுவான் ‘ . இது முக்கியமான அடிப்படை கொள்கை. அரசின் வலிமை அந்த அரசுக்குள் இருப்பவர்களின் ஒருமைத்தன்மையிலேயே வருகிறது என்பதை அரசுக்கலையின் மிகச்சிறந்த உபயோகிப்பாளரான அவரது நாக்கிலிருந்தே வருகிறது. ஆனால் நம் நாட்டுக்கு என்ன நடந்து விட்டிருக்கிறது ? அறத்துக்கும், சட்டத்துக்கும் புறம்பாக, நம் மக்களின் ஒருமைத்தன்மை அழிக்கப்பட்டு, பல்வேறு வித்தியாசங்களாலும், ஜாதிகளாலும், உப ஜாதிகளாலும் பிரிக்கப்பட்டு, சமூக மனச்சாய்வுகளால் சிக்கலாக்கப்பட்டு, தேவையற்ற அடிமைத்தனமும், பேராசை கொண்ட சுரண்டலாலும், மனிதநேயமற்ற அரசாங்கங்களாலும் சிதிலமாக்கப்பட்டு வருகிறது. இவற்றின் ஒட்டுமொத்தமான விளைவு, நம் பாரம்பரிய கலாச்சாரத்தின் அடிப்படை கொள்கைகள் தங்கள் சுத்தமும், வலிமையும் மறைக்கப்பட்டு, நம் மக்களின் அடிமைத்தனத்துக்கும் வித்திட்டது.

தைத்ரிய உபநிஷத்தில் வரும் ‘சிக்ஷாவளி ‘ என்ற வார்த்தைகளை கூறி இந்தப்பேச்சை முடிவு செய்கிறேன். இந்த வாக்கியங்களே நம் கல்விக்கு வலிமை சேர்த்தவை. இவை கல்வி நிறுவனத்திலிருந்து வெளியே வரும் மாணவர்களுக்கு விலை மதிப்பிட முடியாத சிறந்த அறிவுரைகள்

சத்யம் வத; தர்மம் சர;

ஸ்வாத்யாயன்மா ப்ரமதா

ஸத்யானா ப்ரமாதித்வயம்

தர்மானா ப்ரமாதித்வயம்

பூத்யய் ந ப்ரமாதித்வயம்

ஸ்வாத்யய ப்ரவசனாப்யாம் ந ப்ரமாதித்வயம்

எவாமுபசித்வயம் எவாமுசியைதுப்யாஸ்யம்

உண்மையையே பேசுங்கள்; அறத்தைப் பின்பற்றுங்கள்

உண்மையான கல்வியையும் முன்னேற்றத்தையும் நோக்கி போராடுங்கள்

வளமைக்கு நேர்மையான வழியையே பின்பற்றுங்கள்

கூர்ந்து படித்ததைப் போலவே கூர்ந்து படிப்பியுங்கள்

இதே போலவே ஒவ்வொரு நாளும், வாழ்நாள் முழுவதும் நடங்கள்

இது போல நடப்பதே உருவாக்கமும், முன்னேற்றமும்

Series Navigation

ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா

ஜனாதிபதி டாக்டர் சங்கர் தயாள் சர்மா