தமிழ் – தமிழர் – தேசப்பற்று: சில எண்ணங்கள்:

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

கோவிந்த்


( கலிபோர்னியாவில் தோன்றிய புதிய தமிழ் சங்கம் தொடர்பாக, என்னை நேரில் பார்க்கும் போதும் , தொலைப் பேசி, மின்னஞ்சல் மூலமாக ,
– ஏன் கலிபோர்னியா தமிழ்ச் சங்கம் உடைந்தது…
– நீங்கள் தான் ஆரம்பித்து உள்ளீர்களா ( காரணம் தொடங்கிய பெரிய கூட்டத்திற்கு தலைமை ஏற்றவரின் பெயர் : கோவிந்தராஜன் ” ) என்பதற்கு
விடையாக இந்த கட்டுரை.
****
காக்கா உட்கார பனம்பழம் என்பது போன்றோ என்னவோ, மீண்டும் அங்காங்கே துண்டித்துப் போவது பற்றி குரல் ஒலிக்க ஆரம்பித்து உள்ளன….
இதோ மலேசியாவிலும் தமிழர்கள் தாக்கப்படுவதாக கொந்தளிப்பு…
அந்த வார்த்தையே…. தவறு…
சரியான வார்த்தை…. ” இந்திய பூர்வீக, மலேசியர்கள்” என்றே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் உரிமைக்கு இந்திய அரசாங்கமும், இங்கிலாந்து அரசியும் சரியான வாழும் உரிமையை நிர்ணயிக்க முயற்சிக்க முடியும்.
மேலும் , இந்திய பூர்வீக.. எனும் வார்த்தை அவர்களுக்கு இந்தியாவில் வாழும் உரிமையை தொடர்ந்து நிர்ணயிக்கும்.
அந்தக்கால பர்மா பிரச்சனையை மறந்துவிடக் கூடாது.
நாம் சில தவறான அரசியல் சூழ்ச்சியில் மலேசியாவில் குடிஅமர்ந்த , தமிழ், தெலுங்கு, இந்தி என ஏதோவொரு மொழி ஏன்;; மலாய் மொழியாகக் கூட இருக்கட்டும், “இந்தியர்கள்” எனும் நோக்குடன் தான் அவர்களுக்கு உதவ வேண்டும்.
இல்லையெனில் அவர்களுக்கும் , தூர இருந்து கல்லெறிந்து அவர்களின் வாழ்வை தொலைத்த கதை ஆகக்கூடாது.
இந்த சமயத்தில், இந்திய அரசியல் அமைப்பின் ஒரு மாநில பொறுப்பு நிர்வாகியின் – தமிழக முதல்வர் -, ஆதங்கம் நிறைந்த கோரிக்கையை, மிக தடித்த வார்தைகளுடன் மிரட்டல் தொணியுடன் பிரயோகித்த , மலேய அமைச்சருக்கு கடும் கண்டணத்தை இந்திய பாராளுமன்றம் தெரிவிக்க வேண்டும்.
மலேய தூதர் அழைக்கப்பட்டு நடப்பது பற்றிய விளக்கம் பெற வேண்டும்.

பாசாங்கு அற்ற விதமாக, அங்கு வழிபாட்டுத்தளங்கள் இடிப்பது பற்றிய விவரமும் கேட்டுப் பெற வேண்டும்.

ஆனால், இந்தச் சம்பவங்கள் ஒன்றைத் தெளிவாக்குகின்றன. இந்த உலகின் இரு பெரும் சுதந்திர தேசங்களான, இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைவதன் அவசியம் பற்றி கட்டியம் கூறுகிறது.
இதை , நினைக்கையில், அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே ( தமிழ் மாநிலம் சேர்தவர்களும் தான் ), மற்றும் அமெரிக்கரிடையே, தமிழ்ச் சங்கங்கள் மீதான இந்திய – அமெரிக்க தேசப் பற்று பற்றிய சிறு வினா இருப்பது உண்மையே….
அதற்கு காரணம் தமிழ்ச் சங்கங்களில் பொறுப்பற்ற சிலருக்கு தமிழ் / தமிழர் / இந்திய – அமெரிக்க தேசப் பற்று பற்றிய தெளிவு இன்மையே…
இது பற்றி நான் கலிபோ·ர்னியா தமிழ்ச் சங்கத்தில் இருந்த போது, திண்ணையில் எழுதி அதற்கு சில எதிர் வாதங்களும் வந்தன.
தமிழ்ச் சினிமா சிவாஜி, விருமாண்டி போன்றவற்றிற்கு 2500+ கூட்டம் வந்த போதும், தமிழ்ச் சங்கம் நடத்தும் விழாக்களுக்கு 200 பெருக்கே முக்கி முனகுவோம்.
காரணமாக நான் நினைத்து, தமிழ் சங்கத்தில் உறுப்பினர், பொறுப்பாளர்களின் துவேஷ மற்றும் பயமுறுத்தும் கருத்துக்களே….!
சிவாஜி, விருமாண்டி பட அழைப்புகளை தேர் இழுக்கும் திருவிழா கயிறு போன்று கருதி வரும் தமிழர்கள், தமிழ் சங்கக் கூட்டங்களையோ, எமன் எறியிம் பாசக்கயிறு போல் பார்த்தது… பயந்து விலகினார்கள்.
அதிலும் மணிவண்ணன் போன்றவர்கள் தலைமைப் பொறுப்பு காலத்திற்கு பின், கலிபோர்னியா தமிழ்ச் சங்கம் ஒரு மாதிரியான சுழலில் மாட்டியது.
பிரச்சனையை பலமுறை என்போன்றவர்கள் சொல்லியும், ஒன்றும் நடக்காமல்……. விலக ஆரம்பித்தார்கள்.
அதிலும் யார் தமிழர் என்பது பற்றிய வார்த்தாயாடல், தமிழுக்கு எந்த பங்களிப்பும் செய்யாமல், தமிழ்நாட்டில் தங்களது முன்னோர் இருந்ததாலேயே….. தமிழர்கள் என்ற நினைப்புடன், ஏதேதோ சொன்னார்கள்.

இன்றும், அறிஞர் அண்ணா, பாரதியார், வீராமாமுனிவர், தந்தை பெரியார், எம்.ஜி.ஆர், எஸ்.பி.பி , எம்.எஸ் , எம்.எஸ்.வி, சோ, சுஜாதா, கமலஹாசன், ரஜினி, தமிழுக்கு பல தளங்களில் பங்களிப்பு செய்தது நினைவு கொள்ளத்தக்கது…

இப்படியான சுழலில் சமீபத்தில் கலிபோ·ர்னியாவில் உருவான புதிய தமிழ் பேசும் இந்தியர்களுக்கான சங்கம் தோன்றியது. அக்கினிக் குஞ்சொன்று கண்ட பாரதியின் பெயராலே…. ” பாரதி தமிழ்ச் சங்கம்” உருவாகி தனது முதல் பொதுக்கூடலை, தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் சன்னதியிலே கண்டது.

வந்தவர்களிடையே.. துவேஷமின்றி தமிழ்ப் பேசும் சந்தாஷ மின்னலே தெரிந்தது.
அந்தப் பக்கமாக வந்த ஒரு தமிழர் (தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ), இது கண்டு உள்வந்து, “தமிழர்கள் என்றாலே கலகம் செய்பவர்கள் என்ற நினைப்பு பலரிடமும் வந்து விட்ட சூழலில் இந்த சங்கம் நல்லது செய்யும்… ” நானும் சேர்கிறேன் என்று உறுப்பினரானார். வலிய வலிய ஓடி உறுப்பினர் ஆக்க சரவணபவன் வாசலில் காத்து நின்ற பழைய தமிழ்ச் சங்கத்து பணியிலிருத்து விலகிய இந்த சம்பவம் -சங்கதி…. சங்கநாதம் போன்றது என, அதன் முக்கிய அமைப்பாளர், கோவிந்தராஜன் வி.எஸ் – சொன்னாராம்.
தமிழில் பக்தி இலக்கியம் உண்டு, தேசப்பற்று உண்டு…. என்பதை இந்த உலகிற்கு உரக்கச் சொல்கிறது இந்த அமைப்பு.
இருண்டு போன வான்நிலையை , மழைத்தரப்போகும் கார்மேகம் என்று ஏமாந்து வாழும் தமிழ் நிலை மாற்ற…. இது வானில் தெரிந்த புதிய மின்னல்… கேட்ட புதிய வரவு சொல்லும் இனிய இடி….
தேசப்பற்றுடன் தமிழ் மழையில் நனைய……. வாருங்கள் என அழைக்கிறார்கள்…..
பிற பகுதியிலும் , தன் போன்ற கிளைகள் அமைய அழைக்கிறார்கள்…..
மேலும் விவரங்களூக்கு…. bharatitamilsangam.org
***
அது இருக்கட்டும்:
எனது எண்ணம்:
தமிழ் மொழியையும், தமிழர் குறியீட்டையும் போட்டுக்க் குழப்பாதீர்கள்.
அமெரிக்க குடியுரிமை பெற்றால் , அமெரிக்க சாசனத்திற்கு உண்மையாக இருங்கள்.
இந்தியாவில் இந்தியாராக இருங்கள். போகும் இடத்தில் அந்த மண்ணிற்கு உண்மையாக இருங்கள்.

இந்தி கற்றுக் கொள்ளத் தயங்காதீர்கள். அந்த தெளிவு கலைஞருக்கும் , மருத்தவ சின்ன அய்யாவிற்கும் இருப்பது அறியுங்கள். அவர்கள் நல்ல நிலை எடுக்கும் போது நய்யாண்டி செய்யாதீர்கள்.
ஆங்கிலம் தொடருங்கள்.
தமிழ் இலக்கியும் படியுங்கள். அதன் சாரம்சம் பிற மொழியில் வர உறுதி பூணுங்கள்.
பாரதியாரை விட தமிழ் நாட்டில் வாழ்ந்த வாழும் எந்த ஜீவனும் உண்மையா இருந்திட முடியாது. அவர் சொல்வது உணர்ந்து உன்னத நிலை அடையுங்கள்.
தொலைந்து போன தமிழர்கள் அடையாளம் திரும்ப பெற பாசாங்கற்ற சுய விமர்சனத்திற்கு உள்ளாகி, மாறுங்கள்.


govind.karup@gmail.com

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்