தமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

பி.கே. சிவகுமார்


அன்புள்ள நண்பர்களுக்கு,

2005 மார்ச்சில் எனிஇந்தியன் இணைய புத்தகக் கடை தொடங்கப்பட்டது. 2005 டிசம்பரில் எனிஇந்தியன் பதிப்பகம் பிறந்தது. இரண்டைப் பற்றியும் நான் பேசுவதைவிட அவற்றின் செயல்பாடுகள் பேசிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு நன்கு அறிமுகமான ஓர் அம்சமாக எனிஇந்தியன் மாறியிருக்கிறது என்பதுடன் மேற்செல்கிறேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஒரு மாத இதழை அச்சில் கொண்டுவருவது பற்றி எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், அதைக் கொண்டுவருவதில் இருக்கிற நடைமுறைகள், சவால்கள் ஆகியவற்றை மென்று மென்று பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது செயல்படுத்தும் துணிவும் அனுபவமும் வந்திருக்கிறது. ஏப்ரல் 2008-லிருந்து புதிய தமிழ்மாத இதழ் வெளிவரவிருக்கிறது. பிப்ரவரி 2008 மாத உயிர் எழுத்து, உயிர்மை, காலச்சுவடு, தமிழினி ஆகிய இதழ்களில் இந்த இதழ் பற்றிய முதல் விளம்பரம் வெளிவரவிருக்கிறது. எனிஇந்தியனைப் பொருத்தவரை அதன் அனைத்து அறிவிப்புகளும் முதலில் இணையத்தில் செய்யப்பட்டவை என்ற பெருமை உடையது. அதனால் இந்த அறிவிப்பையும் இணையத்தில் முதலில் செய்வதில் பெருமைப்படுகிறோம். இதழின் ஆசிரியராக நண்பர் ஹரன்பிரசன்னா செயற்படுவார். ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பு / இதழ் நிர்வாகம் ஆகியவை என் பொறுப்பில் இருக்கும். (இதற்குப் பெயர் நிர்வாக ஆசிரியரா பொறுப்பாசிரியரா?). ஆசிரியர் குழுவில் கோபால் ராஜாராம், துகாராம் கோபால்ராவ், பாரி பூபாலனோடு நண்பர் பிரசன்னாவும் நானும் இருப்போம். இதழைப் பதிவு செய்யும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆதலால் அது முடிந்ததும் இதழின் பெயர் அறிவிக்கப்படும்.

இந்த மாத இதழ், எந்தக் கருத்தாக்கத்தையும் சாராது, எல்லாக் கருத்தாக்கங்களுக்கும் இடம் தருவதாக இருக்கும். யார் எழுதுகிறார்கள் என்பதைவிட என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று உள்ளடக்கத்திற்கும் அதன் கனத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும். பிரசுரத்திற்கு வருகிற எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியாது. ஆனால் பிரசுரிக்கப்படுபவை அதற்கேற்றமாதிரி இருக்கும் என்று சொல்ல முடியும். ஆதலால், இதில் எழுத அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். உங்களின் நல்ல எழுத்துகளை இதழுக்கு அனுப்பி வையுங்கள்.

இதழைப் படித்துவிட்டு விமர்சியுங்கள். கடிதம் எழுதுங்கள். முதல் இதழில் நீங்கள் அறிந்த பலர் எழுதுகிறார்கள். அவர்கள் விவரங்களையும் இதழ் விலை/சந்தா குறித்த விவரங்களையும் கீழ்கண்ட படத்தில் காணலாம். படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கப் படத்தின்மீது சொடுக்கவும். நன்றி.


pksivakumar@gmail.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்