எச்.முஜீப் ரஹ்மான்
பின்நவீனத்துவ சிந்தனைகள் அனைத்தும் ஒரு விதத்தில் தோற்றாதாரíகளை சந்தேகப்படுகிறது.முதல் காரணம் அல்லது அடிப்படை,தோற்றம் ஆகியவை இயல் கடந்த தளத்தில் தொடர்நிகழ்வாக கடவுளின் மரணத்துக்கு பின்பு சந்தேகத்துக்கு உள்ளாயின.இந்த சந்தேகபடுதல் கூடியவிரையில் முடிவுகளை நோக்கி நகர்ந்தன.பின் நவீனத்துவம் அறிவிக்கும் முடிவுகள் அனைத்தும் இனியும் அவை இயíக சாத்தியமில்லை என்ற நிலையிலேயே அமைந்தன. இந்த அறிவிப்பில் தற்கொலை செய்து கொள்ள எதுவாக தத்துவத்தின் நிலை அமைந்து கடைசியில் தத்துவத்தின் முடிவை சொல்லிக்கொண்டது.தத்துவத்துடன் பின் நவீனத்துவம் உரையாடல் நடத்திய போது பின்னை நீட்சேவின் தத்துவ தளம் தத்துவத்தின் இருப்பை குலைக்க அடி யெடுத்து கொடுத்தது. Friedrich Nietzsche, “On Truth and Lie in an Extra-Moral Sense,” in Walter Kaufmann (ed.), The Portable Nietzsche (New York: Random House, 1980),p. 46.
தத்துவம் தனது மூச்சை கடைசியாக விடுமளவுக்கு அதன் குரல்வளையை பின்நவீனத்து முடிவு அறிவிப்பாளர்கள் விட்டு விடவில்லை என்பதும் முக்கியமானதாகும். பிரஞ்ச் தத்துவசிந்தனையாளர்கள் தான் தத்துவத்தின் முடிவை வெளிப்படையாக அறிவித்தார்கள். லூசி இரிகாரே சொல்லும் போது மாண்பு மிகு மதிபீடுகள் முடிவுற்றன என்றார். Luce Irigaray, An Ethics of Sexual Difference, trans. Carolyn Burke and Gillian C. Gill (Ithaca, NY: Cornell University Press, 1993), p. 5.
கில்ஸ் டெல்லுயூஸ் மற்றும் பெலிக்ஸ் காத்தேரி தத்துவம் மீண்டெழுவதை நாíகள் விரும்பவில்லை.அது எíகளுக்கு பிரச்சனையாக அமைந்தன என்றனர். Gilles Deleuze and F´elix Guattari, What is Philosophy?, trans. Hugh Tomlinson and Graham Burchell (New York: Columbia University Press, 1994), p. 9.
தெரிதா சொல்லும் போது நான் தத்துவம் மரணமடைந்ததாக நம்பவில்லை மற்ற விஷயíகளை போல அதாவது புத்தகம்,மனிதன்,கடவுள் ஆகியவை மரணமடைந்ததை போல.என்னை கேட்டால் அதிகாரம் மரணமடைந்தால் தான் தத்துவம் மரணமடையும் என்றார்.அவரின் இந்த விவாதம் புத்தகத்தின் முடிவும் எழுத்தின் துவக்கமும் என்ற பொருளில் அமைந்தது. Jacques Derrida, Positions, trans. Alan Bass (London: Athlone, 1972), p. 6.பின் நவீனத்துவம் கோலோட்சிய நிலையில் பின்வரும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
1.தத்துவத்தின் முடிவு
2.இயíகாவியலின் முடிவு
3.மனிதனின் முடிவு
4.விளக்கத்தின் முடிவு
5.தன்னிலையின் முடிவு
6.உலகத்தின் முடிவு
7.உண்மையின் முடிவு
தத்துவ பின் நவீனத்துவம் மேற்கத்திய வைதீகíகளுக்கு எதிரான தாக்குதல்களை வேகமாக தொடுத்தன.அறிவு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தத்துவத்தின் வேலையை தொடரவிடாமல் தடுத்தது.மேலும் மனித தன்னிலையை குலைக்கும் வகையாக அதன் இருப்பையும் தத்துவ கருத்தியல் மூடுபனியையும் மனிதாபிமானம் என்ற பெயரில் நடைபெறும் கூத்தாட்டíகளையும் விலக்க ஆரம்பித்தபின் ஒடுக்குதலுக்கு எதிரான குரல்கள் இருப்பது வெளிக்காட்டப்பட்டன.விவரணை தர்க்கம் உடைய ஆரம்பித்ததும் மேற்கத்திய மத்திய அமைப்பின் சிந்தனைதளம் தகரத்துவíகியது.எதார்த்த உலகம் என்ற கருதுகோள் மேற்கோளில் மாத்திரம் நல்லவையாகவும் பாலின வித்தியாசíகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் சிந்தனைதளம் இயíகுவது கண்டுணரப்பட்டது.மொத்தத்துவம் என்ற பெயரில் மேற்கத்திய சிந்தனைமரபு ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக இயíகியல் தளத்தில்,கருத்தியல் தளத்தில்,விவரணை முறையில் செயல்பட்டது.தத்துவ மரபில் டெக்கார்டோவும்,ஹெகலும் முன்வைத்த தீவிர ஐயவாதம் அடிக்கட்டுமானத்தின் சரியான நோக்கினை புரிந்து கொள்ள உதவியது. Martin Heidegger, Basic Writings, ed. David Farrell Krell (London: Routledge,1978), p. 348.
பெரிய தத்துவ சிந்தனைகளை பின் நவீனத்துவம் சர்ச்சைக்கு உட்படுத்தியன் வாயிலாக இடைவெளிகள்,முரண்படுகள்,பலகீனíகள் ஆகியவை முடிவினை நோக்கி நகரச்செய்தன.பின்நவீனத்துவமும்,தத்துவமும் அடையாளப்படுத்துதலின் பேரில் மோதின.தத்துவம் கோட்பாடு என்ற நிலையில் சமூகவியல்,வரலாற்றெழுத்தியல்,மனோதத்துவம்,அரசியல்,மானுடவியல்,புராணவியல் மற்றும் இலக்கியத்தை அணுகியது.ஆனால் பின்நவீனத்துவம் பின்னமைப்பியலை ஏற்றுகொண்டதால் தத்துவநிலைபாடுகளுக்கும்,பின் நவீனத்துக்குமான முரண்பாடை துல்லியமாக காணலாம்.தத்துவ சிந்தனைகளுக்கும்,மொழி வெளிப்பாட்டுக்கும் இடையில் தர்க்கரீதியான உறவே உள்ளது.பின் நவீனத்துவ சிந்தனையில் ஒரு நாவலோ அல்லது கவிதையோ தத்துவ சிந்தனைகளை வெளிப்படுத்த கூடியதுதான் என்பது தத்துவத்தின் ஆக பிரமாண்டத்தை அசைப்பதாக அமைந்தது.
தத்துவம் எது என்ற பெயரிடுதல் பிரச்சனைக்கு பின் உள்ளடக்க ரீதியாகவும் தத்துவத்தின் முடிவினை பின்நவீனத்துவம் சொல்லத்தொடíகியது.தத்துவத்திற்க்கும் மற்ற துறைகளுக்கும் உள்ள உறவு யாது என்பதை தத்துவத்தினால் துல்லியமாக கோடிட்டு காண்பிக்க முடியவில்லை என்பது முக்கியமாகும்.இதற்கு முக்கியகாரணம் தத்துவத்தின் அபவிதிகவாதமும்,தர்க்கவுமே ஆகும்.காண்ட் தத்துவமரபை தூயகாரண விமர்சனம் நூலில் இயíகாநிலைவாதத்தை பிரித்து இயற்கை விஞ்ஞானíகளை தனியே அணுகினார்.பின்னை காண்டிய சூழலில் பின்நவீனத்துவ சிந்தனையும் அதையே செய்தது.இருபதாம் நூற்றாண்டில் மொத்த அர்த்தíகளும் மாறத்துவíகியது.இயற்கையிலிருந்து மனிதனை பிரித்து வைதீகமனிதாயம் புதியசெயல்திட்டத்தை உருவாக்கியது.கார்டீசியன் அடிக்கட்டுமானமும்,ஹெஹலிய சிந்தனைகளும் இதற்கு உதவின.டெக்கார்டெ அறிவை மரமாக சித்தரித்து அபவுதிகத்தை அதன் வேராக காட்டினார்.எனினும் அவர் அபவுதிகத்தை தோற்றாதார கோட்பாடாகவே கருதினார்.அதே சமயம் ஹெகலின் மனதின் நிகழ்வுகளில் அதை முழுமையான அறிவை நோக்கிய பயணமாக கருதினார்.மனம் மனதை மனமாகவும் அறிவை சுய அறிவின் அறிதலாகவுமே பார்க்கிறது.
பின்நவீனத்துவம் அபவுதிகத்தை மறுப்பதோடு அதை ஒரு மொழிவிளையாட்டாகவே கருதுகிறது. Jacques Derrida, Of Grammatology, trans. Gayatri Chakravorty Spivak (Baltimore, MD, and London: Johns Hopkins University Press, 1976), p. 18.
பொதுவாக தத்துவ சொல்லாடல்கள் உருவாக இரு வழிமுறை உண்டு.ஒன்று ஆய்வும்,மற்றொன்று எதிர் ஆய்வும் என்பவையாகும்.ஆய்வு மரபில் லுத்விக் விட்கென்ஸ்டின் தனது புதிய தத்துவ ஆய்வில் மொழிவிளையாட்டு,குடும்ப ஒருமித்தல்,வாழ்வின் வடிவíகள்,தொன்மை மொழி தர்க்கம் போன்ற சொல்லாடல்களை உருவாக்கினார்.தத்துவ பின்நவீனத்துவம் இதை சுவிகாரம் செய்து கொண்டது.மார்டின் ஹைடெக்கரின் நவீன ஆன்மீக நெருக்கடி பற்றிய குறிப்புகளில் சில நவீன ஜெர்மானிய கவிஞர்களை குறிப்பிட்டு படைப்பாக்கம்,மொழி பற்றிய தத்துவ விசாரணை ஆகியவை மொழியியலின் திருப்பம் என்று தத்துவத்தால் வர்ணிக்கப்பட்டது.ஆய்வு பரப்பில் மொழியியலின் திருப்பம் தத்துவத்தில் உண்மை எவ்வாறு மொழியால் உருவாக்கப்பட்டது என்ற தளத்துக்கு இட்டு சென்றது.ஹைடெக்கர் மற்றும் லுத்விக் ஆகியோரின் தத்துவத்தில் மொழியியலின் திருப்பம்“linguistic turn” தத்துவத்தில் புது வரையறைகளை ஏற்படுத்தியது. Richard Rorty, Philosophy and the Mirror of Nature (Oxford: Blackwell, 1980), ch. 6.
விட்கென்ஸ்டின் மறைவுக்கு பின் வந்த தத்துவ விசாரணை என்ற நூலில் மொழியின் புறவய அமைப்பு பற்றிய விமர்சனத்தை முன்வைத்தார். Emmanuel Levinas, Totality and Infinity: An Essay on Exteriority, trans.Alphonso Lingis (The Hague: Martinus Nijhoff, 1979), p. 48.
விமர்சன தத்துவம் மொழியியல் திருப்பத்தை மனிதமையவாத “anthropocentric.”தளத்துக்கு இட்டு சென்றது.இதற்கு பின்நவீன சிந்தனைகள் ஆதரவு நல்கின. Emmanuel Levinas, Humanisme de l’autre homme (Montpellier: Fata Morgana,1972), p. 95. Quoted in Colin Davis, Levinas: An Introduction (Cambridge:Polity, 1996), p. 124
மொழியியலின் திருப்பம் என்பது மொழியில் புதைந்துள்ள “mobile army of metaphors, metonyms, and anthropomorphisms,” ஆகியவற்றால் ஆனது.இதைஏற்கனவே நீட்சே முன்மொழிந்து வைத்துள்ளார். Perry Anderson, In the Tracks of Historical Materialism (London: Verso, 1983),
p. 37.
மொழியில் வார்த்தைகளின் செயல்பாடுகள் வெறும் அர்த்த உற்பத்தியை மாத்திரம் சார்ந்தது அல்ல.மாறாக அதிக மொழியியல் தன்மைகள் வார்த்தைகளுக்கு உண்டு.ஆனால் பின்நவீனத்துவம் எளிமையாக இப்படி சொல்லியது மனிதனின் அடையாளமாகவும் எல்லாவுமாக மொழி இருக்கிறது.ஹைடெக்கர் சொல்லும் போது “Man acts as though he
were the shaper and master of language, while in fact language remains the master of man.”மொழியியலின் திருப்பம் பின்நவீன நிலைமையோடு தொடர்புடையது.மனிதனை மறுப்பது,மனிதாயத்தை எதிப்பது போன்ற பின்நவீனநிலைபாடுகளுக்கு இது காரணமாகியது.தற்போது உள்ள சூழலில் மொழி உருவாக்கி வைத்துள்ள மனிதன் இயíகாநிலைமனிதன் “metaphysical man.” என்பது மட்டுமே.இதனால் தான் மனிதனின் முடிவை சொல்ல பின்நவீனத்துவம் ஆரம்பித்தது.
Claude L´evi-Strauss, The Savage Mind (London: Weidenfeld and Nicolson,1966); Jacques Lacan, Ecrits: Selections, trans. Alan Sheridan (London: Routledge, 1989);Louis Althusser, Lenin and Philosophy and Other Essays,trans. Ben Brewster (London: New Left Books, 1971), p. 160.
தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும் என்ன என்று ஹைடெக்கர் சொல்லும் போது தத்துவம் எப்படி முடிவுக்கு வருகிறது என்றால் அவை சுமக்கும் இயíகாவியல்,தருக்கம்,தொழிற்நுடபம்,விஞ்ஞானம்,இயந்திரமனிதன் மற்றும் இருப்புகளின் ஞாபகமின்மை ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு இயíகாவியலை முடிவுக்கு கொண்டுவந்து விடும்.தத்துவம் முடிவுக்கு வந்து விடும்.சிந்தனை தொடரும்.பூரணம் என்பதற்க்கு பதிலாக இடம் இடம் பிடித்துக்கொள்ளும்.பழைய மரபார்ந்த அணுகுமுறைகள் வாயிலாக வரலாற்றில் தத்துவம் நடத்திய பயணம் இடம் என்ற சாத்தியத்தில் முடிவை கண்டுவிடும்.இந்த இடம் என்பது காலத்தின் ஒரு கட்டாயமான இடம் என்பதாகும்.அதே சமயம் சிந்தனை முக்கிய இடம் வகிக்கும்.
Hubert L. Dreyfus and Paul Rabinow, Michel Foucault: Beyond Structuralism and Hermeneutics (Brighton: Harvester, 1982), p. 30. Michel Foucault, The Order of Things: An Archaeology of the Human Sciences (London: Routledge, 1970), p. 387.
ஹைடேக்கர் மற்றும் விதென்ஸ்ட்டினைத்தொடர்ந்து ரிச்சர்டு ரோட்டி பின்னை காண்டிய மேற்கத்திய தத்துவத்தை விளக்கவுரை நிர்ணயத்திலிருந்து இயíகாவியலை விமர்சனப்படுத்தினார்.நவீனத்துவ தத்துவத்தை மறுவாசிப்புச் செய்து அவை அறிவு பற்றிய கோட்பாட்டுக்கே முக்கியத்துவம் தருகிறது என்றார்.விளக்கவுரையின் முடிவுக்கு அவரை அது கொண்டு சென்றது.அதுவே தத்துவத்தின் முடிவாகவும் அவருக்கு தோன்றியது.
தத்துவம் அறிவு கோட்பாடாக மாறி அது பிரதிபலித்தல் கோட்பாடாகி மனதுக்கும்,உலகத்திற்குமான கண்ணாடியாக மாறியது.இயற்கையின் கண்ணாடி என்ற நிலையிலிருந்து விளக்கவுரை மாறியவிதம் அதன் முடிவாக விளíகியது.
தத்துவம் அறிவை தேடுதலை உத்தியாக மாற்றி கற்பிக்க தொடíகியது.புதிய புதிய விஷயíகளை கண்டுபிடித்து யாவரும் விரும்பும் விதமாக போதனைச் செய்யும் நிலைக்கு தத்துவமும்,விளக்கவுரை வந்தது தான் அவற்றின் முடிவுக்கும் காரணமாகியது.
Michel Serres, The Natural Contract, trans. Elizabeth MacArthur and William Paulson (Ann Arbor, MI: University of Michigan Press, 1995), p. 4
ரிச்சர்டு ரோட்டியின் பின்னை தத்துவ செயல்த்திட்டம் மனிதத்தின் முடிவை சுட்டிக்காட்டத் தொடíகியது.அது எதிர் மனிதத்தையும் சொல்லியது.
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4
- தந்தை- மகள் – தமிழ் உறவு
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.
- எழுத்து எழுதுகிறது
- அந்த கொடிய பகலின் வேதனை
- பூனைகள்…
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )
- அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..
- குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது
- தமிழ் மீடியாவும் கூப்பாடும்
- தமிழ் ஸ்டுடியோ.காம்
- காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு
- ஏ ஜே நூல் வெளியீடு
- இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…
- கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)
- வேத வனம் விருட்சம் 16
- கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி
- விட்டு விடுதலையாகி….
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>
- தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !
- தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்
- மீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)
- டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2
- ‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது
- நான் நிழலானால்
- கிறிஸ்துமஸ் பரிசு
- காலிமண்டபமும், கடவுள்களும்…..
- ஞயம் பட உரை